புவனேஸ்வர்: நாட்டின் மேற்கு, மத்திய, வடக்கு மற்றும் வட கிழக்கு பகுதிகளில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றியுள்ள, பா.ஜ., கிழக்கு பகுதியில் கால் பதிக்கும் எண்ணத்துடன், அதன் தேசிய செயற்குழு கூட்டத்தை, ஒடிசாவில் நடத்துகிறது.
இரண்டு நாட்கள் நடக்கும், பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டம், மாநில தலைநகர் புவனேஸ்வரில் நேற்று துவங்கியது. இதில், கட்சித் தலைவர் அமித் ஷா,பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள குஜராத் மாநில வளர்ச்சியை முன்னிறுத்தி, அந்த மாநில முதல்வராக இருந்த, நரேந்திர மோடி, 2014 லோக்சபா தேர்தலில், பா.ஜ., சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
குஜராத் மாடல் வளர்ச்சி, அயராத பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், மோடியின் புகழ், நாடு முழுவதும் வேகமாக பரவியது. இதன் பலனாய், லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெற்று, பெரும்பான்மை பலத்துடன் மத்தியில் ஆட்சி அமைத்தது.இதையடுத்து நடந்த, பல மாநில தேர்தல்களிலும், பா.ஜ., அமோக வெற்றி பெற்று, ஆட்சியைகைப்பற்றியது.
குறிப்பாக, 2014 லோக்சபா தேர்தலுக்குப் பின் நடந்த பெரும்பாலான தேர்தல் வெற்றிகள்
மூலம், நாட்டின் அசைக்க முடியாத அரசியல் கட்சியாக, பா.ஜ., உருவாகிஉள்ளது.
தீவிர முயற்சி
நாட்டின் மேற்கு, மத்திய, வடக்கு மற்றும் வட கிழக்கு பகுதி மாநிலங்களில் பெரும்பாலான வற் றில், ஆட்சியை கைப்பற்றியுள்ள, பா.ஜ., தற்போது, தன் கவனத்தை,கிழக்கு பகுதி மாநிலங்களின் பக்கம் திருப்பியுள்ளது. குறிப்பாக,
திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக உள்ள மேற்கு
வங்கத்திலும், பிஜு ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த முதல்வர் நவீன் பட்நாயக் ஆட்சி செய்யும்
ஒடிசா விலும், பா.ஜ., கால் தடம் பதிப்பதற் கான பணிகளில் முயற்சி
மேற்கொண்டுள்ளது.
கடந்த, 2014ல் நடந்த லோக்சபா
தேர்தலில், ஒடிசா மாநிலத்தில், மொத்தமுள்ள, 21 இடங்களில் வெறும் ஒரு
தொகுதியில் மட்டுமே, பா.ஜ., வெற்றி பெற்றது. எனினும், கட்சித் தலைவர்களின்
அயராத உழைப்பு மற்றும் தொடர் பிரசாரங்களால், மாநில மக்கள் மனதில்,
பா.ஜ.,வுக்கு நற்சான்று கிடைத்தது.
மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளால், ஒடிசா மக்களை, பா.ஜ., தன் பக்கம் ஈர்த்தது.இதன் பலனாய், பிப்ரவரியில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளம், 400 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், பா.ஜ., 300 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று, பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள் ளது. மாநிலத்தில் ஓரளவு மக்கள் செல்வாக்குடன் இருந்த காங்., 100 இடங்களுக்கும் குறைவான இடங்களில் வெற்றி பெற்று, பெரும்பின்னடைவை சந்தித்தது.உள்ளாட்சி தேர்தலில் கிடைத்த வெற்றி, பா.ஜ., மேலிடத்திற்கு நம்பிக்கையை அளித்துள்ளது. இதையடுத்து, கிழக்கு மாநிலங்களின் நுழைவாயி லாக, ஒடிசாவை தேர்ந்தெடுத்துள்ளது, பா.ஜ., மேலிடம்.
ஆலோசனை
வரும், 2019ல் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுடன் சேர்ந்தே, மாநில சட்டசபை தேர்தலும் நடக்க விருப்பதால், மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்று வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும், பா.ஜ., தலைமை இப்போதே துவங்கி
விட்டது. அதன் ஒரு
பகுதியாக, கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம், மாநில
தலைநகர் புவனேஸ்வரில் நேற்று துவங்கியது.இதில், கட்சியின் தேசிய தலைவர்
அமித் ஷா, பிரதமர்நரேந்திர மோடி, பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்கள்,
கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இரண்டு நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்தில், மாநிலத்தில் கட்சியை வளர்ப்பது குறித்தும், வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுஆட்சியை கைப்பற்றுவது குறித்த செயல் திட்டம் குறித்தும் ஆலோசிக்கப்படும் என, பா.ஜ., வட்டாரங்கள்தெரிவித்துள்ளன.
பிரம்மாண்டவரவேற்பு
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் வந்த, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷாவுக்கு, கட்சித் தலைவர்கள் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். மாநிலத்தில் மொத்தமுள்ள, 21 லோக்சபா தொகுதிகள் மற்றும் 147 சட்டசபை தொகுதிகளை குறிக்கும் வகையில், அதே எண்ணிக்கை உடைய தாமரை மலர்களால் ஆன, இரு மாலைகள் அவருக்கு அணிவிக் கப்பட்டன.புவனேஸ்வர் விமான நிலையம் வந்திறங்கியபிரதமர் மோடி, அங்கிருந்து கூட்டம் நடக்கும் அரங்குக்கு, காரில் புறப்பட்டு சென்றார். அவரை வரவேற்க, வழி நெடுக காத்திருந்த கட்சித் தொண்டர்களை உற்சாகப் படுத்தும் வகையில், காருக்குள் அமராமல், கார் கதவுகளை திறந்து, படிக்கட்டில் நின்ற படி கைகளை அசைத்தபடி பயணித்தார். பின், காரிலிருந்து இறங்கிய மோடி, சிறிது துாரம் நடந்தே சென்றார். வழியில் அவரை சந்தித்த கட்சிப் பிரமுகர்கள், தொண்டர்களை பார்த்து கையசைத்தும், அவர்களுடன் பேசியபடியும் நடந்து சென்றார்.
பா.ஜ.,ஆட்சி செய்யும் மாநிலங்கள்
மேற்கு - குஜராத், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், கோவாமத்தியில்- ம.பி., சத்தீஸ்கர், ஜார்க்கண்ட்வடக்கு - உ.பி., ஹரியானா, உத்தரகண்ட்,ஜம்மு - காஷ்மீர் (கூட்டணி)வட கிழக்கு - அசாம், மணிப்பூர், அருணாச்சல பிரதேசம்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (18)
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply