தினகரனின் நடவடிக்கைகளால் சசி தரப்பு எம்.எல்.ஏ.,க்கள் வெறுப்பு: கட்சி குலைந்து போனதால் பகிரங்க போர்க்கொடி Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
வெறுப்பு!
தினகரனின் நடவடிக்கைகளால் சசி தரப்பு
எம்.எல்.ஏ.,க்கள்... பகிரங்க போர்க்கொடி

தினகரனின் நடவடிக்கைகளால், சசிகலா தரப்பு எம்.எல்.ஏ.,க்கள் வெறுப்படைய
துவங்கியுள்ளனர்.

 தினகரன், நடவடிக்கை, சசி, தரப்பு, எம்.எல்.ஏ., வெறுப்பு,

ஜெ., அறிவித்த திட்டங்கள் எதுவும் நிறைவேற வில்லை என்பதால், கடுப்பான பெருந்துறை எம்.எல்.ஏ., தோப்பு வெங்கடாசலம், அரசுக்கு எதிராக வெளிப்படையாக புகார் தெரிவித்துள் ளார். சசிகலா குடும்பத்தினரால், கட்சி சீர்குலைந்து வருவதால், கோபமடைந்துள்ள அவர், பகிரங்கமாக போர்க்கொடி துாக்கி உள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின் அவர் தீட்டிய திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அந்த திட்டங்களிலும், சசி குடும்பத்தினரின் தலையீட்டால் மாற்றம் செய்யப்படுகிறது.
அதனால், பாதிக்கப்படும் எம்.எல்.ஏ.,க்கள், அதிருப்தி கொடி பிடிக்க துவங்கி உள்ளனர்.
இந்த வரிசையில் நேற்று, முன்னாள் அமைச்சரும், பெருந்துறை எம்.எல்.ஏ.,வுமான, தோப்பு வெங்கடாசலமும், அரசுக்கு எதிராக பரபரப்பு புகார்களை அடுக்கி உள்ளார்.

அவர் கூறியதாவது:

எங்கெங்கெல்லாம் குடிநீர் இல்லையோ, அங்கு ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, ஊராட்சி ஒன்றிய பகுதியில், திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.
ஆனால், ஊராட்சி ஒன்றிய நிதியை பொறுத்த வரை, இன்றைக்கு கூடுதலாக குடிநீருக்கு என,

தனியாக நிதி ஒதுக்கப்படவில்லை. ஜெ., அரசு இருக்க வேண்டும்; அவரின் திட்டங்கள் முழுமை யாக, மக்களை சென்றடைய வேண்டும் என்பதால் தான், கூவத்துார் விடுதியில் தங்கி, ஜெ., அரசு நீடிக்க ஆதரவு அளித்தோம். பெருந்துறையில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைய வேண்டும் என்பது, ஜெ., யின் கனவு திட்டம். அதற்காக, பரிந்துரை செய்தது அவர் தான்.

தற்போது, தஞ்சாவூர் தொகுதியில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, முதல்வர் பரிந்துரை செய்துள்ளதாக அறிகிறோம். வறட்சி காலத்தில், கூடுதல் நிதி ஒதுக்கும் போது தான், மக்கள் என்ன நோக்கத்தோடு ஓட்டளித்தனரோ, அந்த நோக்கத்தை நிறைவேற்ற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்தில், சூலுார் எம்.எல்.ஏ., கனகராஜ், ஆட்சிக்கு எதிராக பகிரங்கமாக குரல் எழுப்பினார். 'திருப்பூர் மாவட்டம், சாமளாபுரத்தில், பொது மக்கள் கோரிக்கையை ஏற்று, 'டாஸ்மாக்' கடையை அகற்ற வேண்டும்; இல்லையெனில் பதவியை ராஜினாமா செய்வேன். 'அவ்வாறு செய்தால், தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும். தேர்தல் வந்தால் மக்களுக்கு பணம் கிடைக்கும்; அவர்கள் சந்தோஷமாக இருக்கட்டும்' என்றார்.

அவரை தொடர்ந்து, திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., குணசேகரன், 'வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்ற, அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை. பொது மக்கள் எதிர்ப்பை மீறி, ஊருக்குள் டாஸ்மாக் கடை வைக்க முயற்சிக்கின்றனர்.' என, உண்ணா விரதம் இருந்தார். இவ்வாறு எதிர்ப்பு வலுப்பதால் தினகரன் தரப்பு அதிர்ச்சியில்உள்ளது.

ஆட்டம் காணும் சசி தரப்பு


இப்படி அடுத்தடுத்து ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்குவதால் தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினர் ஆடிப்போயுள்ளனர். பழனிசாமியை நீக்கி விட்டு முதல்வராக திட்டமிட்ட தினகரனுக் கும், அவரது ஆதரவாளர்களுக்கும், இதுசிக்கலைஏற்படுத்தி உள்ளது. சசிகலா

Advertisement

குடும்பத்தின் தலையீடு காரணமாக தான், ஜெ., அறிவித்த திட்டங்கள் நிறைவேற்றப் பட வில்லை என்ற எண்ணம், எல்லா எம்.எல்.ஏ.,க் களிடமும் ஏற்பட்டுள்ளது. எனவே, கட்சியை விட்டு தினகரன் வெளியேற வேண்டும் என, பெரும்பாலான அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சசி அணியில் சலசலப்பு


அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், சமீபத்தில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்; சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி யில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற் கான ஆவணங்கள் சிக்கின. ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரை சரி செய்ய, விஜய பாஸ்கரை ராஜினாமா செய்யும்படி, முதல்வர் மற்றும் அவரது ஆதரவு அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அவர் மறுத்து வருகிறார்; அவருக்கு, தினகரன் ஆதரவாக உள்ளார். இந்நிலையில், நேற்று அமைச்சர் விஜயபாஸ்கர், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை வீட்டிற்கு சென்று, அவருடன் தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து, ஆலோசனை நடத்தினார். அமைச்சர் விஜயபாஸ்கர், பதவியில் நீடிப்பாரா; நீக்கப்படு வாரா என்பது, ஓரிரு நாளில் தெரிந்துவிடும்.

- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aboobacker Siddeeq - Singapore,சிங்கப்பூர்
16-ஏப்-201723:00:24 IST Report Abuse

Aboobacker Siddeeqஇவைகளை எல்லாம் முன்னரே தெரிந்த பின்பும் பணத்திற்கு ஆசை பட்டு ... பின்னால் கைகட்டி, கை கோர்த்து நின்றீர்கள் .. இப்போது குத்துதே குடையுதே என்றால் எப்படி? இனி அரசியல் வாழ்க்கை அஸ்தமித்து போய் விடும் என்கிற பயம் தானே?

Rate this:
Jamesbond007 - Nagercoil,இந்தியா
16-ஏப்-201712:38:41 IST Report Abuse

Jamesbond007சசிகலா தரப்பு எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி என்றால் ஒரே காரணம்தான், கொடுத்த பணம் தீர்ந்து விட்டது, இன்னும் வேண்டும்.....

Rate this:
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா
16-ஏப்-201711:26:17 IST Report Abuse

அம்பி ஐயர்இப்படியே சொல்லிட்டிருக்கீங்களே... தவிர.. “ஒண்ணும்” நடக்க மாட்டாங்குதே....

Rate this:
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
16-ஏப்-201711:17:33 IST Report Abuse

D.Ambujavalliஒப்பந்தங்கள் இவர்களுக்கு வரவில்லையோ, அதைத்தான் 'மாற்றம்' என்கிறார்களோ? கூவத்தூர் பாக்கி இன்னும் செட்டில் ஆகவில்லையா ? அன்று அந்தம்மாவிடம் வாங்கித்திண்றது ஜெரித்துவிட்டது போலிருக்கிறது இவர்கள் தான் 'அம்மா ஆட்சியை' காப்பாற்றினார்களாம்

Rate this:
rajan - kerala,இந்தியா
16-ஏப்-201710:23:28 IST Report Abuse

rajanபாருடா இந்த தோப்புகாரனை. கூவத்தூர்ல கும்மியடிச்சு கும்மாளம் போட்டு கட்சி பிளவுபடாம பாதுகாத்தானாமே. நாதாரி பணம் காசுன்னு கண்ட இடமெல்லாம் போய் பாரின் சரக்கை அடிச்சு பண்ணுன மொள்ளமாரிதனம் கொஞ்மாடோய். இப்போ ஐ.டி ரைடுக்கு பயந்து கட்சி மாற இடம் தேடுறானுங்கடோய். வடிவேலு அலர்ட் ஆயீக்கோடா.

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
16-ஏப்-201709:09:14 IST Report Abuse

Srinivasan Kannaiyaமன்னார்குடி குடும்பம் அடி வருடியது தவற வேறு என்ன வேலை அவர்களுக்கு தெரியும்...ஜெயலலிதா ஏதோ காரணத்திற்க்காக சசியின் கபட நாடகங்களை தெரிந்து கொள்ளாமல் விட்டு விட்டாரா...அல்லது சசியால் ஏதாவது பிரச்சினை வரும் என்று நினைத்தாரா. என்று தெரியவில்லை...ஆனால் நாட்டில் ஜெயலலிதா விஷக்கிருமிகளை வளர்த்து விட்டு சென்று விட்டார்..அதன் பலனை தமிழக மக்கள் அனுபிவிக்கிறார்கள்..

Rate this:
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
16-ஏப்-201708:31:22 IST Report Abuse

JEYAM தமிழன் JEYAMஇதுபோன்ற கட்டுரைகள் ஆட்சி கலையும் வரை வரக்கூடும்...

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
16-ஏப்-201707:51:25 IST Report Abuse

Kasimani Baskaranவிலைபோன வெள்ளாடுகளுக்கு கசாப்பு போடும் முன் கத்த உரிமை உண்டு

Rate this:
Suresh - Nagercoil,இந்தியா
16-ஏப்-201702:28:21 IST Report Abuse

Sureshகூவத்தூரில் ஆட்டம் போட்ட எம் எல் ஏ களுக்கு பணம் கொடுத்தால் எதை வேண்டுமானாலும் செய்வார்கள் அவர்களை நம்ப முடியாது, மக்களின் விருப்பத்திற்கு மாறாக செயல்படுபவர்கள் யாரும் அரசியலில் நிலைத்து நிற்க முடியாது..

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement