அமைச்சர்கள் மீது சாதாரண வழக்கு வருமான வரித்துறை கடும் அதிருப்தி Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அமைச்சர்கள் மீது சாதாரண வழக்கு
வருமான வரித்துறை கடும் அதிருப்தி

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்திய போது, அத்துமீறி நுழைந்து, ஆவணங்களை பறித்து செல்ல முயன்ற அமைச்சர்கள் மீது, சாதாரண பிரிவில், போலீசார் வழக்கு தொடர்ந்திருப்பது, வருமான வரித்துறையினரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அமைச்சர்கள், மீது, சாதாரண, வழக்கு, வருமான, வரித்துறை கடும், அதிருப்தி

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் ச.ம.க., தலைவர் சரத்குமார் வீடுகளில், 7ம் தேதி, வருமான வரித்துறை அதிகாரிகள், அதிரடி சோதனை நடத்தினர். தகவலறிந்து,

அமைச்சர்கள் காமராஜ், ராதாகிருஷ்ணன், ராஜு, டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர், அங்கு விரைந்தனர்.

அவர்களை, பாதுகாப்பு பணியில் இருந்த, மத்திய படையினர் தடுத்தனர். எதிர்ப்பை மீறி,அமைச்சர்கள் உள்ளே நுழைந்தனர். அங்கு, சோதனையில் ஈடுபட்ட, வருமான வரித்துறை அதிகாரிகளை மிரட்டியதோடு, ஆவணங்களை அழிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

பாதுகாப்பை மீறி, அத்துமீறி உள்ளே நுழைந்தது; பணி செய்ய விடாமல் தடுத்தது; ஆவணங்களை அழிக்க முயன்றது குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள், சென்னை போலீஸ் கமிஷனர், கரண் சின்ஹாவிடம், 12ம் தேதி புகார் அளித்தனர்.புகார் அடிப்படையில், அபிராம புரம்போலீசார், அமைச்சர்கள் மீது, நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நான்கு பிரிவுகளிலும், குற்றம் நிரூபிக்கப்பட்டால், சிறை தண்டனை இருந்தாலும், அபராதம் மட்டும்

Advertisement

செலுத்தி, விடுதலையாகவாய்ப்பு உள்ளது. மேலும், அவர்கள் எளிதாக முன்ஜாமின் பெற முடியும்.மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய அமைச்சர்களே, சட்டத்தை மீறி, அதிகாரிகளுக்கு இடையூறு செய்த நிலையில், அவர்கள் மீது, சாதாரண பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்தது, வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. - நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-ஏப்-201722:17:11 IST Report Abuse

தமிழ்வேல் பாதுகாப்பை மீறி உள்ளே நுழைந்ததை விட உள்ளே விட்டதுதான் பெரிய தவறு. அப்போ எதுக்குத்தான் ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு ? மத்திய பாதுகாப்புப் படை கமிஷ்னரையும் தண்டிக்க வேண்டும்.

Rate this:
karunchilai - vallam,இந்தியா
16-ஏப்-201718:22:46 IST Report Abuse

karunchilaiIt is a big achievement that Tamil Nadu Police was made to register an FIR. When that being the case how any can expect the Police to Register the cases under non-bailable section? As faithfuls, the Police have already diluted the case. Kudos.

Rate this:
krishnan - New York,யூ.எஸ்.ஏ
16-ஏப்-201717:33:54 IST Report Abuse

krishnanஒருஎன்போர்ஸ்மென்ட் அதிகாரியை அவர் பணி செய்ய விடாமல் தடுத்ததுக்கு கடுங்காவல் தண்டனை என்பதே சரி. இது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் .

Rate this:
Jaya Prakash - Medan,இந்தோனேசியா
16-ஏப்-201709:17:58 IST Report Abuse

Jaya Prakashஇந்தியாவில் எல்லா ஊரிலும் இதே கதைதான்.... விமான ஊழியரை அடித்ததாக இரண்டு வழக்கு பதிவானது..... ஒரு தடையாவது அவர் கூப்பிட்டு விசாரிக்கப்பட்டாரா? ... இத்தனைக்கும் அவர் வெறும் MP .... இப்ப கால் மேல் கால் போட்டு அதே விமானத்தில் அவர் பயணம் செய்கிறார்..... அரசியல்வாதிகெல்லாம் வேற்று கிரஹ வாசியப்பா... நம்ம சட்டம் அவர்களை ஒன்றும் செய்யாது.......

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
16-ஏப்-201709:15:46 IST Report Abuse

Srinivasan Kannaiyaஜனாதிபதி தேர்தலை மனதில் வைத்து மோடி ஏதாவது சொல்லி இருப்பார்...

Rate this:
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
16-ஏப்-201715:53:52 IST Report Abuse

Agni Shivaமோடியை மனதில் வைத்து பேசாமல் நீர் ஏதாவது கருத்து சொல்லி இருக்கிறீரா? ....

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
16-ஏப்-201707:56:19 IST Report Abuse

Kasimani Baskaranஏவல்த்துறை அவர்கள் கையில் FIR பதிவு செய்ததே ஆச்சரியமான விஷயம்...

Rate this:
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
16-ஏப்-201701:08:52 IST Report Abuse

Samy Chinnathambiஆட்சி அவங்களோடது. அவங்களுக்கு தெரியாதா எந்த சட்டத்துக்கு கீழ வழக்கு பதியரதுன்னு...அப்படியே ஜால்றா அடிக்கிற போலீஸ் இல்லாமலாமா போயிடுவாங்க ..

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement