ஓட்டுக்கு ரூ.6,000 வினியோகம் சுற்றுலா செல்லும் ஆர்.கே.நகர் மக்கள் | ஓட்டுக்கு ரூ.6,000 வினியோகம் சுற்றுலா செல்லும் ஆர்.கே.நகர் மக்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுக்கு ரூ.6,000 வினியோகம் சுற்றுலா செல்லும் ஆர்.கே.நகர் மக்கள்

Added : ஏப் 16, 2017 | கருத்துகள் (65)
Advertisement
ஓட்டுக்கு, ரூ.6,000, வினியோகம், சுற்றுலா, செல்லும், ஆர்.கே.நகர், மக்கள்

ஆர்.கே.நகரில், ஓட்டுக்கு பணம் வாங்கிய வாக்காளர்கள், சுற்றுலா சென்று வருகின்றனர்.மறைந்த முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்ட, சென்னை, ஆர்.கே.நகரில், ஏப்., 12ல் இடைத்தேர்தல் நடக்க இருந்தது. இதில், தி.மு.க., சார்பில் மருதுகணேஷ், சசிகலா அணியில் தினகரன், பன்னீர் அணியில் மதுசூதனன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, தினகரன் தரப்பு, ஆர்.கே.நகரில், ஒரு ஓட்டுக்கு, 4,000 ரூபாய் வழங்கியது. மேலும்,குத்து விளக்கு, புடவை உள்ளிட்ட பரிசு பொருட்களையும் வழங்கியது. தி.மு.க., தரப்பு, ஓட்டுக்கு, 2,000 ரூபாய் வழங்கியது.இதனால், ஆர்.கே.நகரில் உள்ள ஒரு வாக்காளருக்கு, 6,000 ரூபாய் கிடைத்தது.

பணம் பட்டுவாடா தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து, தேர்தல் கமிஷன், திடீரென தேர்தலை ரத்து செய்தது.இதையடுத்து, கட்சிகள் வழங்கிய பணத்தில், வாக்காளர்கள், நீலகிரி மாவட்டம், ஊட்டி; திண்டுக்கல், கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்கின்றனர்.

பண வினியோகம் சுற்றுலா செல்லும் ஆர்.கே.நகர் மக்கள்


இது குறித்து, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது: எங்கள் குடும்பத்தில், எட்டு பேர் உள்ளனர். ஒரு ஓட்டுக்கு, 6,000 ரூபாய் என, மொத்தம், 48 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. அந்த பணத்தை எடுத்து கொண்டு, குடும்பத்துடன், சேலம், ஏற்காடுக்கு சுற்றுலா செல்கிறோம். எங்களை போல் பலரும், ஊட்டி, கொடைக்கானல் என, சுற்றுலா சென்று வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


கல்வி கட்டணம்பள்ளிகளில், ஆண்டு இறுதி தேர்வுகள் முடிந்து, அடுத்த கல்வி ஆண்டு துவங்க உள்ளது. இதற்காக, மே, ஜூன் மாதங்களில், கல்வி கட்டணம் வசூலிக்கப்படும். ஆர்.கே.நகரில், அரசியல் கட்சிகளிடம் இருந்து ஓட்டுக்கு வாங்கிய பணத்தை, தங்களது குழந்தைகளுக்கான கல்வி கட்டணமாக, பலர் செலுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக, 'கல்வி கட்டணம் செலுத்த உதவிய கட்சிகளுக்கு நன்றி; இப்படிக்கு, ஆர்.கே.நகர் மக்கள்' என, 'வாட்ஸ் ஆப்பில்' தகவல் பரவுகிறது.

- நமது நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
16-ஏப்-201719:34:37 IST Report Abuse
Lion Drsekar அவர்கள் நாலாயிரம் இவர்கள் இரண்டாயிரம், மொத்தத்தில் இவர்கள் அவர்களுக்கு எதிராக பந்த் நடத்த இருக்கிறார்கள், அதாவது இவர்கள் அவ்வளவு நல்லவர்களாம் கூட்டாளிகள் யார் யார் பாருங்கள், ??? வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
16-ஏப்-201719:07:56 IST Report Abuse
Nakkal Nadhamuni எல்லார் கிட்டயும் காசை வாங்கிக்கொண்டு நல்லவருக்கு ஒட்டு போடணும்.. காசு கொடுத்தாலும் வெற்றி பெறமுடியாது என்கிற நிலைமை வந்தால்தான் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.. இவையெல்லாம் மக்களிடம் கொள்ளையடிச்ச காசு...
Rate this:
Share this comment
Cancel
Sambasivam Chinnakkannu - paris,பிரான்ஸ்
16-ஏப்-201717:42:15 IST Report Abuse
Sambasivam Chinnakkannu யாரும் பணம் காசு ,, பரிசு பொருட்கள் கொடுக்கவில்லை ,,,எல்லாம் பொய் ,, மக்களை எதிர்கட்சிக்காரர்களும் ,,சுயேச்சை வேட்பாளர்களும் இப்படி சொல்ல சொல்லி இருக்கிறார்கள் ,,,இதற்க்கு கண்டனம் தெரிவித்து தொடர் போராட்டம் ஸ்டாலின் ,,சீமான் ,,வை கோ ,திருமா ,,முத்தரசன் ,, சமூக ஆர்வலர்கள் ,, சினிமா நடிகர்கள் ,, வக்கீல்கள் சங்கத்தினர் ,,மாணவர்கள் ,,என தனி தனியாக போராட்டம் ,,மீடியாக்கள் சரியாக கவரேஜ் செய்து ,,மக்களிடம் உண்மை நிலையை சொல்லவேண்டும் ,,,,,,
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
16-ஏப்-201717:28:21 IST Report Abuse
Endrum Indian இலவசம் கொடுத்து மனிதனை அடிமை ஆக்கியது இந்த திராவிட கட்சிகள்? திராவிட கட்சி என்பது அழகான நாகம் போன்றது அதன் விஷம் கூட கான்செர் பேஷண்டுகளுக்கு மருந்தாக உபயோகம் ஆகும், ஆனால் அதன் வழியில் சென்றாலோ அதை எதிர்த்தாலோ மனிதனை குளோஸ் செய்து விடும், அதை அடக்கி நம் வழிக்கு கொண்டு வந்தால் மட்டுமே அது மனித குலத்துக்கு உதவும். இது தான் திராவிட கட்சியின் உள்மந்திரம். ஆகவே டாஸ்மாக்னாட்டு மக்களே நீங்கள் தமிழர்கள் ஆகுங்கள் முதலில், டாஸ்மாக்கை ஒழித்தால் தான் டாஸ்மாக் நாட்டு குடி மகன் தமிழ் குடிமகன் ஆவான். அப்பொழுது தான் நாக விஷத்தின் நல்ல பலனை அனுபவிக்க முடியும். டாஸ்மாக்னாட்டு மக்கள் இப்பொழுது கான்செர் பேஷண்ட்டுகள்.
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
16-ஏப்-201717:03:50 IST Report Abuse
jagan அப்போ தினகரனும் ஒரு 'கல்வி தந்தை' தான்...
Rate this:
Share this comment
Cancel
Dynamo - Den Haag,நெதர்லாந்து
16-ஏப்-201716:36:57 IST Report Abuse
Dynamo மக்களை போலவே அவர்களின் தலைவர்களும்...நாடும் நாட்டு மக்களும் - போகட்டும்
Rate this:
Share this comment
Cancel
Amma_Priyan - Bangalore,இந்தியா
16-ஏப்-201716:36:50 IST Report Abuse
Amma_Priyan அல்லாம் அப்பவே டாஸ்மாக்கிற்கு போயாச்சு..
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
16-ஏப்-201715:55:53 IST Report Abuse
Sanny இங்கே ஓர் விடயம் கேட்கிறேன், எல்லோரும் ஓட்டுக்கு பணம் வாங்கியதை தவறு என்று சொல்லுகிறார்கள். உண்மையானது, ஆனால் இதே பணம் கருத்து எழுதும் நண்பர்களின் தொகுதியில் பணம் கொடுத்தால் நீங்கள் வாங்க மாடீர்களா? அடுத்தது AR நகர் நபர் எவராவது இந்த பகுதியில் கருத்து எழுதினார்களா? பணம் வாங்கியது சரியா? தவறா? என்று இல்லையே. தனக்கு வந்தால்........ தனக்கு வராவிட்டால்....
Rate this:
Share this comment
Manian - Chennai,இந்தியா
16-ஏப்-201722:41:04 IST Report Abuse
Manianநானோ என் குடும்பமோ இதுவரை ஒரு பைசா கூட லஞ்சம் வாங்கவில்லை- ஓட்டை விலைக்கு விற்கவில்லை. எனவே அரசியல் கொலைகாரர்களே எங்களுக்கு பதில் ஒட்டு போட்டுவிடுகிறார்கள். நாங்கள் சென்றதும், நீங்கள் ஏற்கனவே ஒட்டு போட்டாசு, ஆனா எப்படி விரல் மையை அழிச்சிங்கன்னு கேட்கிறார்கள். எங்களை பிழைக்க தெறியாத முட்டாள்கள் என்கிறார்கள். நல்ல வேலை நாங்கள் இதுவரை அடி படவில்லை....
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
17-ஏப்-201700:39:09 IST Report Abuse
Sanny நன்றி மணியன், அடுத்த தடவை முதல் ஆளாக ஓட்டு போட போய் பாருங்கள் என்ன பதில் சொல்லுவாங்க என்று பாருங்க. அறிய ஆவல்....
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
17-ஏப்-201707:39:15 IST Report Abuse
K.Sugavanamஅரசியல் கொலைகாரர்கள் உபியில் கூட நெறைய பேரு இருக்காங்க போல..ஓட்டுப்போட காலையிலேயே முதல் நபராக சென்று ஒட்டு போடுங்கள் இனியாவது.....
Rate this:
Share this comment
Cancel
Sivagnanam - Pollachi ,இந்தியா
16-ஏப்-201715:45:51 IST Report Abuse
Sivagnanam We have to amand the act, such that giving amount for vote is an offence and taking /getting is NOT an offence .Then the people will vote without any guilty
Rate this:
Share this comment
Cancel
X. Rosario Rajkumar - TRICHY,இந்தியா
16-ஏப்-201714:58:36 IST Report Abuse
X. Rosario Rajkumar அடுத்த பரிசு எப்போ வரும் ? இந்த நிகழ்வு தொடருமா? அல்லது எலெக்ஸ்சன் கமிசன் தனது பணியை முறைகேடு வராமல் செயல் படுமா?
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
17-ஏப்-201700:40:33 IST Report Abuse
Sanny நிட்சயம் தொடரும். நம்ம அரசியல், ஆளுங்க திருந்துவார்களா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை