அமைச்சர்கள் கைது எப்போது? போலீஸ் அதிகாரிகள் மும்முரம் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அமைச்சர்கள் கைது எப்போது?
போலீஸ் அதிகாரிகள் மும்முரம்

சென்னை:வருமான வரித்துறை அதிகாரிகளை மிரட்டியது உள்ளிட்ட வழக்குகளில், அமைச்சர் களை கைது செய்ய, போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அமைச்சர்கள், கைது, எப்போது?, போலீஸ், அதிகாரிகள், மும்முரம்

சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், ஏப்., 7ல், வருமான வரித்துறை அதிகாரிகள்

சோதனை நடத்தினர். அப்போது, இடைத்தேர்தல் நடக்க இருந்த ஆர்.கே.நகர் தொகுதியில், ஓட்டுக்கு, 89 கோடி ரூபாய், பணம் பட்டுவாடா செய்வதற்கான ஆதாரங்கள் சிக்கின.

அப்போது, அமைச்சர்கள்காமராஜ், ராதாகிருஷ்ணன், ராஜு மற்றும் டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர், விஜயபாஸ்கர் வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்தனர். வருமான வரித்துறை அதிகாரிகளை மிரட்டியதோடு, பறிமுதல் செய்த ஆவணங்களையும் கிழித்து எறிந்து உள்ளனர்
.
இது குறித்து, வருமான வரித்துறைஅதிகாரிகள் கொடுத்த புகாரை அடுத்து, அபிராமபுரம் போலீசார், அமைச்சர்கள் உள்ளிட்ட நான்கு பேர் மீதும், அரசு ஊழியர்களை மிரட்டியது உட்பட, நான்கு பிரிவு களில் வழக்கு பதிவு செய்துஉள்ளனர். அவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி

Advertisement

வருகின்றனர்.அதற்காக, போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உள்ள னர்.

இதையறிந்த, அமைச்சர்கள் உள்ளிட்ட நான்கு பேரும்,முன் ஜாமின் பெறும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
23-ஏப்-201713:44:38 IST Report Abuse

Barathanஅமைச்சர்கள் கைது எப்போது என்பது வெங்க்கையாவுக்கு தெரிய வாய்ப்புகள் உண்டு. ஏன் என்றால் அவர்தான் ADMK வின் செய்தி தொடர்பாளர் போன்று செய்திகளை அல்லி விடுகிறார். இன்றைய செய்தி, தமிழ் மக்கள் அம்மாவுக்கு ஒட்டு போட்டார்களாம் DMK வும் ADMK வும் கிட்டத்தட்ட சமமான % ஓட்டுகளை பெற்றது என்பதை அமைச்சர் மறந்துவிட்டாரோ DMK கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸுக்கு 48 MLA சீட்டுகளை ஒதுக்காமலிருந்திருந்தால், அம்மா ஆட்சிக்கீ வந்திருக்க முடியாது. என்ன மோ அம்மாவா ஆட்சியில் பாலாற்றில் பால் ஒண்டிமாத்ரி அம்மா ஆட்சிக்கு வக்காலத்து வேறு. பாற்றில் தண்ணீரையே காணோம்

Rate this:
Pasupathi Subbian - trichi,இந்தியா
18-ஏப்-201714:21:35 IST Report Abuse

Pasupathi Subbianதேர்தல் கமிஷனையே விலைக்கு வாங்க முயற்சிக்கும் நாட்டில் , நீதியை விலைக்கு வாங்க முடியாதா? அது ஏற்கனவே பல ஆட்சிகளில் விலை போன சரக்குதான்.

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
17-ஏப்-201717:36:39 IST Report Abuse

இந்தியன் kumarஆட்டம் போட்டவர்கள் அடங்கித்தான் ஆகா வேண்டும் அது விரைவில் நிட்சயம் நடக்கும்

Rate this:
Cheran Perumal - Radhapuram,இந்தியா
17-ஏப்-201716:24:05 IST Report Abuse

Cheran Perumalஇவர்களது பெயர் டைரியில் சிக்கிவிடப்போகிறதே என்ற கவலையில் ஓடிப்போயிருப்பார்கள். இவர்களையும் வருமான வரித்துறை விசாரிக்க வேண்டும்.

Rate this:
17-ஏப்-201715:07:22 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்நம்ம ஆட்சியில் நம்ம விரும்புகிற உதவாத பிரிவுகளில் கைது செய்ய முயற்சிப்பது போலவும், ஜாமீன் பெறுவது போலவும் நடித்து திறமையை வெளிக்காண்பிக்க வேண்டும். என்னா சரியா ?

Rate this:
Balaji - Khaithan,குவைத்
17-ஏப்-201713:56:39 IST Report Abuse

Balajiஇவர்கள் நடந்து கொண்டது மிகவும் அப்பட்டமான அத்துமீறல். அரசு அதிகாரிகளை அவர்களது பணியை செய்யவிடாமல் தடுத்தல் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை.. கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

Rate this:
karunchilai - vallam,இந்தியா
17-ஏப்-201712:40:51 IST Report Abuse

karunchilaiகைதாக வாய்ப்பில்லை. பேருக்கு உப்புச் சப்பில்லாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்கள். கைதுக்கு முன்னரே முன் ஜாமீன் ஏற்று வெளியில் சுதந்தரமாக ஆண்டுக்கணக்கில் திரிவார்கள்.

Rate this:
17-ஏப்-201712:27:58 IST Report Abuse

கார்த்திகேயன்அனைவரும் ருபாய் தாள்களை குடிக்கவும் உண்ணவும் பழகி கொள்ளுங்கள், மானங்கெட்ட அமைச்சர்களே

Rate this:
christ - chennai,இந்தியா
17-ஏப்-201712:00:05 IST Report Abuse

christஇந்த மூஞ்சிகளுக்கு எல்லாம் அமைச்சர் பதவி ஒரு கேடு ? இவனுக பதவியை புடுங்கி முட்டிக்கு முட்டி ரெண்டுதட்டு தட்டி உள்ளபோட்டு பத்து நாளைக்கு களி திங்க வைக்கணும்

Rate this:
Shanmuga Sundaram - Bangalore,இந்தியா
17-ஏப்-201711:50:34 IST Report Abuse

Shanmuga Sundaramso what is the big deal.?..politician life is not going to change...they will apply bail, import highly paid advocates...their life will continue... judiciary will do what they can do ... The monthly tax payers will make payment to judiciary , elected politicians, income tax, and govt officials, hospitals,police...etc....

Rate this:
மேலும் 31 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement