25ம் தேதி தமிழகத்தில் 'பந்த்'அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
25ம் தேதி தமிழகத்தில் 'பந்த்'
அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு

சென்னை: விவசாயிகளின் பிரச்னைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தீர்வு காணக்கோரி, வரும், 25ல், மாநிலம் தழுவிய, பந்த் நடத்துவது என, தி.மு.க., கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில், முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 25ம் தேதி, தமிழகம், 'பந்த்',அனைத்து, கட்சி, கூட்டம், முடிவு

விவசாயிகள் பிரச்னை தொடர்பாக, தி.மு.க., கூட்டிய அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம், சென்னை அறிவாலயத்தில், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில், நேற்று நடந்தது.

தீர்மானங்கள் என்ன?


இதில், விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காண, தமிழக அரசு சட்டசபையை கூட்ட வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்; குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். 'நீட்' தேர்வுக்கான தமிழக அரசின் சட்டத்திற்கு, மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

விவசாயிகளின் பிரச்னைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தீர்வு காணக்கோரி,

வரும், 25ல், பொது வேலை நிறுத்தம் நடத்துவது என்பது உட்பட, 15 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

கூட்டம் முடிந்தும், ஸ்டாலின் கூறுகையில், ''விவசாயிகள், தமிழர்களின் நலன் காக்கும் வகை யில், தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன. முழு அடைப்பின் அவசியம் குறித்து விளக்க, வரும், 22ல், சென்னையில், அனைத்து கட்சியினர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடத்தப்படும். அனைத்து கட்சி தலைவர்களும், பிரதமர் மோடியை சந்திக்க முடிவுசெய்துள்ளோம்,'' என்றார்.

அரசியல் இல்லை


தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர் கூறுகையில், ''விவசாயிகளின் பிரச்னைக்காக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளும் பங்கேற்றுள் ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இது, விவசாயிகளுக் கான கூட்டமே தவிர, அரசியல் ரீதியான கூட்டம் இல்லை,'' என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில தலைவர் முத்தரசன் கூறுகையில், ''விவசாயிகள் முழுமையாக வஞ்சிக் கப்படும் சூழலில், அனைத்து கட்சி கூட்டம் தேவை,'' என்றார்.

வி.சி., தலைவர் திருமாவளவன் கூறுகையில், ''விவசாயிகளுக்காக நடக்கும் பந்தில், பொதுமக்கள், வணிகர்கள் ஆதரவு தர வேண்டும்; தேர்தல் அரசியலோடு, அனைத்து கட்சி கூட்டத்தை பார்க்கக்கூடாது,'' என்றார்.

Advertisement


புறக்கணிப்பு: ஸ்டாலின்அப்செட்'


லோக்சபா தேர்தல் கூட்டணிக்கு அச்சாரம் போடும் வகையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தை, பா.ம.க., - தே.மு.தி.க., - ம.தி. மு.க., போன்ற கட்சிகள் புறக்கணித்ததால், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், 'அப்செட்' ஆகியுள்ளார்.
தி.மு.க., சென்னையில் கூட்டிய அனைத்து கட்சி கூட்டம், விவசாயிகளுக்கு ஆதரவாககூட்டமாக அறிவிக்கப்பட்டாலும், பேசிய தலைவர்களின் பேச்சுக்கள், லோக்சபா தேர்தல் கூட்டணிக்கு அச்சாரம் போடுவதாக இருந்தது. கடந்த முறை, தி.மு.க., கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்காத, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சி களும் பங்கேற்றன.
மேலும், சிறுபான்மையி னர் கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில், மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது, கிறிஸ்துவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நேரில் அழைப்பு விடுத்தும், பா.ம.க., பங்கேற்க வில்லை. அதே போல், தே.மு.தி.க., - ம.தி. மு.க., வும் கூட்டத்தை புறக்கணித்தன. லோக் சபா கூட்டணிக்கு அச்சாரம் போட திட்டமிட்ட ஸ்டாலின், இந்த கட்சிகளின் புறக்கணிப்பால், 'அப்செட்' அடைந்துள்ளதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gnanam - Nagercoil,இந்தியா
18-ஏப்-201700:10:36 IST Report Abuse

Gnanamஅனைத்து கட்சிகளையும் கூட்டி, ஒரு ஒப்புதல் பெறவேண்டும். அதாவது: அனைத்து காட்சிகளிலும் முடங்கிக்கிடக்கும் நிதியை ஒன்றுதிரட்டி, மக்களின் பொது பிரச்சினையான குடிநீர், போக்குவரத்து, மின்சாரம், விவசாயம் போன்ற தேவைகளை நிரந்தரமாக பூர்த்திசெய்ய வழிவகுக்க வேண்டும். நாட்டு மக்களுக்காக, நாட்டுநலனுக்காக நாமே நமது தேவைகளை பூர்த்தி செய்து விட்டோம் என்ற பெருமிதத்தோடு தலைநிமிர்ந்து நிற்கலாம். அப்படி ஒரு முயற்சி செய்து பாருங்கள் தலைவர்களே. கடையடைப்பு, பந்த் ஒன்றுமே தேவையில்ல.

Rate this:
sankar - trichy,இந்தியா
17-ஏப்-201723:02:00 IST Report Abuse

sankarதமிழனை சுரண்ட நினைப்பவர்

Rate this:
kusumban -  ( Posted via: Dinamalar Android App )
17-ஏப்-201722:39:24 IST Report Abuse

kusumbanfraud ellam sernthu pesi irukku. makkalay nambathinga.

Rate this:
Devanand Louis - Bangalore,இந்தியா
17-ஏப்-201721:47:53 IST Report Abuse

Devanand Louisஸ்டாலின் இதுவரைக்கும் செய்த அனைத்து போராட்டங்களும் & பந்தும் தோல்விகள்தான், இனிமேல் நடக்கும் பந்தும் தோல்வியில்தான் முடிவடையும் ,ஆகையால் அல்லக்கைகள் கட்சிகளே உஷார்

Rate this:
oliver - karimun,இந்தோனேசியா
17-ஏப்-201717:44:33 IST Report Abuse

oliverWHAT IS HAPPENING IN TAMIL NADU? STILL ALL THIS AIADMK CHEMBUS ARE TELLING YOU HAVE NO RIGHT TO DO ANYTHING BECAUSE YOU ASS IS NOT CLEAN, I AM ASKING THEM ALL THESE DAYS WHAT THEY DID? INCLUDING JAYALALITHA THEY LOOTED TAMIL NADU & THEY EXPECT DMK TO REMAIN SILENT AS PER AIADMK CHEMBUS WHO SCRIBBLE HERE , CORRUPTION & FRAUD IS THEIR BIRTH WRITE & NOBODY CAN QUESTION THEM, IF SOMEBODY ASK THEY WILL SHOW THEIR FINGERS YOUR DAYS ARE NUMBERED & DMK WILL COME TO POWER SOON

Rate this:
Snake Babu - Salem,இந்தியா
17-ஏப்-201714:44:19 IST Report Abuse

Snake Babuநண்பர்களே உங்களுடைய எல்லா எதிர் கருத்துக்கும் நான் ஒத்துப்போகிறேன். ஒன்றை எல்லாரும் நினைவு படுத்தி கொள்ளுங்கள். கொள்ளை அடித்த அல்லது கொள்ளைக்கு வித்திட்டவர்கள் தற்போது இல்லை. அதனால் முந்தையப்போல கொள்ளை இருக்காது. அதேநேரத்தில் தமிழத்தில் நிர்வாகம் கோமா நிலையில் ரொம்ப காலமாக இருக்கிறது. அது இயங்க வேண்டும். அடுத்து அதை முன்னிறுத்தி செய்ய எந்த தலைவனும் இல்லை. உண்மையில் தமிழத்தில் எந்த தலையும் இல்லை. அது வெற்றிடமாகவே இருக்கிறது. தற்போது இருக்கும் பிரச்சனைக்கு ஒரு படியாக யாராவது எதிர்க்கவேண்டும். வழக்கம் போல நீ யோக்கியமா அவன் யோக்கியமா என்று பேசி ஒரு போராட்ட கருத்தை நீர்க்க செய்யாதீர்கள். முந்தைய போல தற்போது இல்லை. ஸ்டாலின் கருணாநிதிபோல அல்ல. அப்படி இனிமேல் யாராலும் இருக்க முடியாது. அதே போல அம்மா ஒருவரே மறுபடியும் வேறொருவர் வரமுடியாது இருப்பவர்களை வைத்துதான் புது ரத்தம் பாய்ச்க்க படவேண்டும். நடக்கட்டும். நான் ஆதரிக்கிறேன். எதிர் கட்சிகள் தங்களுடைய வேலையை சரியாக செய்கின்றன. தயவு செய்து அதை நீர்த்து போகும்படி செய்யாதீர்கள் நன்றி வாழ்க வளமுடன்.

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
17-ஏப்-201714:38:43 IST Report Abuse

தேச நேசன் பந்தியில் பங்குகொள்பவர்களுக்கு சுடாலின் பிராண்டு மீத்தேன் இலவசமாகக் கொடுக்கப்படும்

Rate this:
mridangam - madurai,இந்தியா
17-ஏப்-201716:49:54 IST Report Abuse

mridangamஎல்லாவற்றிக்கும் காரணம் இந்த அண்ணா, பெரியார் , கருணை, ADMK , MDMK , திருமா etc தான்.. இதனை வருடம் காவிரி தண்ணீர் கேட்டு போராடினார்கள்.. ஆனால் ஒரு முறை கூட அணை, தடுப்பணை .. கட்டவோ போராடவில்லை..அதன் விளைவு தான் எல்லாம்.....

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
17-ஏப்-201714:37:21 IST Report Abuse

தேச நேசன் டம் டம் டம் எல்லோருக்கும் இதனால் அறிவிப்பது என்னவென்றால் 25 ஆம் தேதி திமுக வேலை நிறுத்தம் எனவே அன்று சன் டிவி கலைஞர் டிவி மற்றும் குழு நிறுவனங்கள் விடுமுறை ஒளிப்பரப்பும் கிடையாது நம்பினா நம்புங்க ஆனா விடுமுறையைக்கொண்டாட நாள்முழுவதும் சிறப்புத் திரைப்படங்கள் உண்டு

Rate this:
Balaji - Khaithan,குவைத்
17-ஏப்-201714:31:12 IST Report Abuse

Balajiபாமகவையும் தேமுதிகவையும் அனைத்துக்கட்சி கூட்டம் என்று தனது அணியில் கொண்டு வந்துவிடலாம் என்ற எண்ணம் தோல்வியுற்றது அவருக்கு வருத்தத்தை தந்திருக்கலாம் என்றாலும் இவர்களை நம்பித்தான் என்ற நிலைக்கு இன்னும் திமுக வந்துவிடவில்லை....... அதே போல அதிமுக சிதறிக் கிடப்பதைப் பயன்படுத்தவும் திமுக தவறி விட்டது.. இது திரு.ஸ்டாலின் அவர்களின் முழு தோல்வியைத்தான் காட்டுகிறது.. இதுவே இவரது தந்தை செயல்படும் நிலையில் இருந்திருந்தால் கதையே வேறு மாதிரி ஆகியிருக்கும்.. ஒரு அறிய வாய்ப்பை திரு.ஸ்டாலின் தவறவிட்டுவிட்டார் என்பதை திமுகவினர் வேண்டுமானால் மறைக்கலாம்.. ஆனால் அது தான் உண்மை.. எனினும் திமுகவிற்கான சதவீதம் (25 to 30%) என்பது இன்னும் அப்படியே தான் இருக்கிறது..

Rate this:
Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஏப்-201714:15:15 IST Report Abuse

Venkiஆட்சிக்கு வந்தால் டெல்லியில் தமிழகத்தை தமிழக நலன் சார்ந்த விஷயங்களை அடகுவைத்து அதற்க்கு பதிலாக குடும்ப உறுப்பினர்களுக்கு பதவி, ஊழல் விசாரணை அற்ற கொள்ளை எல்லாம் செய்து ஆட்சி போன பின் மக்களை முட்டாள் என்று நினைத்து இது போல அல்லகைகளை கொண்டு கூட்டம் நடத்துவது - திருந்தாத ஜென்மங்கள்

Rate this:
மேலும் 27 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement