பதிவு செய்த நாள் :
தினகரன் பதவியை பறிக்க
பன்னீர் அணி புது முயற்சி

'ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், சின்னம் தொடர்பான விசாரணையை நிறுத்தி விட்டு, சசிகலா பொதுச் செயலரானது செல்லாது என, அறிவிக்க கோரி கொடுக்கப்பட்ட மனுவை விசாரிக்க வேண்டும்' என, பன்னீர்செல்வம் தரப்பினர், இன்று தேர்தல் கமிஷனில், புதிய மனு அளிக்க உள்ளனர். இது, தினகரனுக்கு மேலும், நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

தினகரன், பதவி, பறிக்க, பன்னீர், அணி ,புது முயற்சி

அ.தி.மு.க., இரு அணிகளாக பிரிந்துள்ள நிலையில், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற விசாரணை, தேர்தல் கமிஷனில், இன்று நடக்கிறது. பன்னீர் தரப்பில், ஏற்கனவே,

42 லட்சம் உறுப்பினர்களின் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சசிகலா தரப்பில், 20 லட்சம் உறுப்பினர்களின் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய, எட்டு வார கால அவகாசம் கோரப் பட்டுள்ளது. இருப்பினும், அதற்கு எந்த பதிலும் தரப்படவில்லை.

இந்நிலையில், சின்னம் தொடர்பான விசாரணை, தேர்தல் கமிஷனில் இன்று நடப்பதால், இரு அணி களின் முக்கிய நிர்வாகிகள் ,வழக்கறிஞர்கள், டில்லி விரைந்துள்ளனர்.

புதிய மனுக்கள்


அதேநேரத்தில், பன்னீர் அணியினர், புதிய முயற்சி மேற்கொண்டுள்ளனர். அதாவது,
* ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ரத்துசெய்யப் பட்டுள்ளதால்,சின்னம் தொடர்பான விசாரணையை நிறுத்தி விட்டு, சசிகலா பொதுச்செயலரானது செல் லாது எனக்கோரி, கொடுக்கப்பட்டுள்ள மனுவை விசாரிக்க வேண்டும்
* ஆர்.கே.நகர் தொகுதியில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரம் குறித்து விசாரித்து,

Advertisement

தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இந்த இரு கோரிக்கைகள் அடங்கிய புதிய மனுக்களை, தேர்தல் கமிஷனில், இன்று தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

சசிகலா பொதுச்செயலரானது செல்லாது என, அறிவிக்கப்பட்டால், அவரால், துணை பொதுச் செயலராக நியமிக்கப்பட்ட, தினகரனின் கட்சி பதவியும் காலியாகி விடும். அத்துடன், வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், தினகரன் தேர்தலில் போட்டியிடவும் முடியாது.


Advertisement

Advertisement

மேலும் முதல் பக்க செய்திகள்:



வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajasekaran - Vizg,இந்தியா
17-ஏப்-201720:53:22 IST Report Abuse

Rajasekaranஎன்னப்பா சிங்கப்பூர் சேகரனை கொஞ்சநாளா காணவில்லை

Rate this:
Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ
17-ஏப்-201716:45:59 IST Report Abuse

Maverickசாமி...இது ரெம்ப ஓவரா இல்ல...?

Rate this:
Bala Subramanian - Los Angeles CA,யூ.எஸ்.ஏ
17-ஏப்-201715:15:22 IST Report Abuse

Bala Subramanianதற்போது வரும் செய்திகள் மற்றும் கவர்னர் சென்னை வருகை எல்லாம் பார்த்தால் தினகரன் லஞ்ச லாவண்யத்துக்கு கைது செய்ய படுவது உறுதி. மந்திரி சபை மாற்றத்தில் விஜய பாஸ்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் பதவி பறிபோகும் RK நகர் மக்களுக்கு Rs 4000 கொடுத்தது உறுதி செய்யப்பட்டு தினகரன் வேட்பு மனு நிராகரிக்கப்படும் சசிகலா பதவி பறிக்கப்பட்டு அவர் நியமனமும் செல்லாது அவர் அறிவித்த மற்ற நியமனங்களும் செல்லாது. IT raid பலரின் கனவுகளை காவு வாங்கும் ஸ்வாமி அனாவசியமாக இதில் தலை இட்டு மூக்கு உடை படுவார். சசி அணி அவமான பட்டு துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடி ஒளிந்து விடுவார்கள். மூன்று தேவியர்கள் OPS புகழ் பாட ஆரம்பிப்பார். (வெட்கம் மானம் எல்லாம் மறந்திடிச்சு) இந்த நடப்பில் மன்னார்குடி குடும்பத்தில் சிலருக்கு பைத்தியம் பிடிக்கலாம்

Rate this:
Balaji - Khaithan,குவைத்
17-ஏப்-201713:45:54 IST Report Abuse

Balajiசதிகாரி பொ.செ. பதவிக்கு வந்தது செல்லாது என்று அறிவித்தாலே போதும் கட்சியில் அவரால் எடுக்கப்பட்ட நியமனங்களும் நீக்கங்களும் செல்லாதவையாக ஆகிவிடும்........ அப்படியென்றால் தினகரன் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டது காலாவதியாகிவிடும்...... அதனால் அவரை மீண்டும் கட்சி சார்பாக மீண்டும் தேர்தல் அறிவிக்கப்படும் போது நிறுத்த முடியாது....... வேண்டுமானால் சுயேட்சையாக வேண்டுமானால் போட்டி போடலாம்........ அப்படியிருக்க எதற்காக தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோருகிறார்கள் என்று தெரியவில்லை...... எது எப்படியோ, சதிகாரியும் அவரது மாபியா பட்டாளங்களும் அனுமதிக்கப்படாமல் இருந்தால் சரி............

Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
17-ஏப்-201713:33:42 IST Report Abuse

Visu Iyerகட்சியை தடை செய்ய யாரும் சொல்ல மாட்டாங்களா. (நல்லவர்களுக்கு) மோடி சப்போர்ட் இருக்கு பார்க்கலாம்

Rate this:
@a_Vailankanni - Mumbai ,இந்தியா
17-ஏப்-201711:35:37 IST Report Abuse

@a_Vailankanniரொம்ப சிம்பிள் குறிப்பிடும் நபரின் பதவி கொஞ்சம் கொஞ்சமாக தன்னாலே வெம்பி யாருக்கும் உதவாத நிலைகளை அடைய இருக்கிறது. பறிக்க அவசியம் இருக்காது

Rate this:
ஜெயந்தன் - Chennai,இந்தியா
17-ஏப்-201710:14:03 IST Report Abuse

ஜெயந்தன்ஒபிஸ் ரொம்ப புத்தி சாலி என்று எண்ணி கொண்டிருக்கிறார்...

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-ஏப்-201708:51:21 IST Report Abuse

Srinivasan Kannaiyaசின்ன துரும்பை தூக்கி போட இவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள்... மனதில் துணிவு இல்லையா... அல்லது அடிமை வாழ்வு பழகிவிட்டதா...

Rate this:
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
17-ஏப்-201708:30:02 IST Report Abuse

JEYAM தமிழன் JEYAMமணல் மாபியாவுக்கு விரைவில் பாரத ரத்னா விருது கொடுக்க தேசபக்த ஆட்சி தீர்மானித்திருக்கிறதாம்... ஊர்ல பேசிக்கிறாங்களாம்...

Rate this:
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
17-ஏப்-201708:06:18 IST Report Abuse

தங்கை ராஜாசிங்கத்தை கூண்டில் அடைத்து விட்டு சிறுநரிகள் கொண்டாடடம்.

Rate this:
Balaji - Khaithan,குவைத்
17-ஏப்-201713:48:19 IST Report Abuse

Balajiஅசிங்கத்தை சிங்கமாக ஏற்றுக்கொண்டாரா திமுக அனுதாபி???? அப்படியென்றால் அங்கு இருப்பவர்கள்??????...

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
மேலும் செய்திகள்