ரூ.45 கோடி மோசடி: கார்த்திக்கு 'நோட்டீஸ்' | ரூ.45 கோடி மோசடி: கார்த்திக்கு 'நோட்டீஸ்' Dinamalar
பதிவு செய்த நாள் :
ரூ.45 கோடி மோசடி:
கார்த்திக்கு 'நோட்டீஸ்'

புதுடில்லி: அன்னிய செலாவணி பரிமாற்றத்தில், 45 கோடி ரூபாய் மோசடி நடந்தது குறித்து விளக்கம் கேட்டு, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு, அமலாக்கத் துறை, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.

ரூ.45 கோடி, மோசடி, கார்த்திக், நோட்டீஸ்

சென்னையைச் சேர்ந்த, வாசன் ஹெல்த் கேர் நிறுவனம், அன்னிய செலாவணி சட்ட விதிகளை மீறி, 2,262 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக, அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.
இதில், 'அட்வான்டேஜ் ஸ்ட்ராடஜிக் கன்சல்டிங்' என்ற நிறுவனம், 45 கோடி ரூபாய் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டது குறித்து, ஓராண்டாக அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.

காங்கிரஸ் மூத்தத் தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்காக, இந்தப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதைத் தொடர்ந்து, இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி, கார்த்தி சிதம்பரம் மற்றும் அந்த நிறுவனத்துக்கு, அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சிதம்பரம் குறித்து விசாரணை:


ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தத்துக்கு, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்ததில் முறைகேடு நடந்துள்ளதாக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. விதிமுறைகளை மீறி, இந்த ஒப்பந்தத்துக்கு, அப்போது நிதியமைச்சராக இருந்த, சிதம்பரம் ஒப்புதல் அளித்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து, அமலாக்கத் துறை நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தத்துக்கு, அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்தது குறித்தும், அதில் அப்போதைய நிதி அமைச்சர்

Advertisement

சிதம்பரத்தின் பங்கு குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
வழக்கமாக, 600 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட ஒப்பந்தங்களுக்கு, மத்திய அமைச்சரவை தான், ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால், 3,500 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்துக்கு நிதி அமைச்சரை தலைவராக கொண்ட அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதில் பண மோசடி உள்ளிட்ட குற்றங்கள் நடந்துள்ளதா என்பது குறித்த விரிவாக ஆராய்ந்து வருகிறோம். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement

மேலும் முதல் பக்க செய்திகள்:



வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
anuthapi - dubai,டென்மார்க்
18-ஏப்-201714:57:08 IST Report Abuse

anuthapiசிதம்பரத்தின் பங்கு என்ன என்றுதான் விசாரிக்க போகிறார்கள். 2G வழக்கில் எப்படி ராசா செயலாளர்கள் கையொப்பம் இட்டு அனுப்பிய கோப்புகளில் கையொப்பம் இட்டதினால் அவருக்கு எந்த வித நேரடியான தொடர்பு இல்லை என்று கூறப்படுகிறதோ அதே போல் தான் இதிலும் நடக்கும்.

Rate this:
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
18-ஏப்-201714:34:32 IST Report Abuse

Agni Shivaஊருக்கு உபதேசம் என்று தினம் ஒரு கட்டுரை எழுதி கொண்டு, " நா இன்னும் அரசியலில் இருக்கிறேனே அம்மா" என்று கத்திக்கொண்டு இருக்கிற ஒரு ரகம் இந்த கொள்ளைக்காரன். நான் சைவ கொக்கு என்று கூறிக்கொண்டு திரிகிற ரகம். அமைச்சகங்களில் முக்கிய பதவிகளில் தனக்கு வேண்டியவர்களை அமர்த்தி வைத்து கொண்டு தனக்கும் தனது மகனுக்கும் எதுவும் ஆபத்து வராது என்று அல்ப தைரியத்தோடு நடந்து கொண்டு திரியும் ஒரு ரகம். கூடிய விரைவில் மகனும் அப்பனும் திகாருக்குள் நுழைவார்கள்..அங்கு களியின் ருசியை இவர்களும் அறிவார்கள்.

Rate this:
Prabaharan - nagercoil,இந்தியா
18-ஏப்-201713:20:03 IST Report Abuse

Prabaharanநல்ல விஷயம் சீக்கிரம் செய்யுங்கள்

Rate this:
Venkat - Coimbatore,இந்தியா
18-ஏப்-201712:00:23 IST Report Abuse

Venkatஅப்பன் கேடி நா பையன் அது விட பயங்கர கேடியா இருக்கான்.டேய் நீங்க எல்லாம் மித்தவங்க காசுல வாழுற பணக்கார பிச்சைக்கார குடும்பம்

Rate this:
rajan - kerala,இந்தியா
18-ஏப்-201710:53:19 IST Report Abuse

rajanஊம் எத்தனையோ கோடிகள் ஆட்டைய போடுறப்ப கொஞ்சம் ஒழுகும் அது அடிச்சு மாத்தின அத்தனையும் புரட்டி போட்டு அழகு பார்க்கோணுமுல்ல. அண்ணே இது தான் காலம் போடும் கோலம்ணு உங்க ஊர் பக்கம் சொல்லுவாகல்ல. பைனான்ஸ் நிபுணர் சட்ட நிபுணி என எத்தனை இருந்தாலும் இது என்ன குடும்பமுன்னு ஊர்ல கேப்பாகள்ள.

Rate this:
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
18-ஏப்-201709:41:27 IST Report Abuse

Rajendra Bupathiநீங்க எத வேண்டுமென்றாலும் அனுபுங்க ஆனா அது எங்களுக்கு இன்னும் வரல?

Rate this:
skv - Bangalore,இந்தியா
18-ஏப்-201708:24:20 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>சுத்தம் ரொம்பவே சுத்தம் ரொம்பரொம்பரொம்பவே சுத்தம் ர்வாலுக்குமே இந்த தேசம் நம்ம தேசம் நம்ம நாடு என்று எண்ணமே வரலீங்களே எதனால் இந்த அளவுக்கா அன்று பல தலைவராகள் போராடி சுதந்திரம் வாங்கி தந்தாங்க உள்ளம் வெறுத்துபோகிச்சுங்க இவால்லெல்லாம் பெரியமனுஷா சிறந்த பாய்நான்ஸ் மந்திரி என்று பெத்தபெரு தான் கண்ராவி இன்னாத்துக்கு இவ்ளோ பணவெறி பிடிச்சு நம்மளையே நாம் கொள்ளை அடிச்சுண்டுவாளனும் இதுக்கு மேலேயும் சொல்லனும்னா காசுக்குவேண்டி எது செய்வானுகளோ என்னவோ மனாய்வி டான்சர் அப்பாக்கு முன்னாள் நிதி அம்மனதிரி அம்மா வக்கீலு ,வாங்கிகுவிச்ச சொத்துக்கள் எவ்ளோ போறச்ச என்னாத்தை கொண்டுபோவானுக எல்லோரும் அளவுக்கு அதிகமானால் எல்லாமே பாரம்னு சொல்லுவாங்க mmmmmmmmmmmmmmmmmmmm

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
மேலும் செய்திகள்