குறைந்த விலையில் உயிர் காக்கும் மருந்துகள் மோடி உறுதி: பார்லி.,யில் புதிய சட்டம் கொண்டுவர திட்டம் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மோடி உறுதி!
குறைந்த விலையில் உயிர் காக்கும் மருந்துகள்
பார்லி.,யில் புதிய சட்டம் கொண்டுவர திட்டம்

சூரத் : ''ஏழை மக்கள் நலன் கருதி, டாக்டர்கள், குறைந்த விலையிலான, உயிர் காக்கும் மருந்துகளை பரிந்துரைக்க வேண்டும் என்ற வகையில், புதிய சட்டம் அமல்படுத்தவும் மத்திய அரசு தயார்,'' என, பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

குறைந்த விலை, உயிர் காக்கும், மருந்துகள், மோடி, உறுதி, பார்லி, புதிய சட்டம், கொண்டுவர, திட்டம்

பிரதமர் நரேந்திர மோடி, தன் சொந்த மாநிலமான, குஜராத்துக்கு, இரண்டு நாள் பயணம் மேற்கொண்டார். சூரத்தில், தொண்டு நிறுவனத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள மருத்துவ
மனையை திறந்து வைத்து, பிரதமர் மோடி பேசியதாவது: நம் நாடு, அரசர்களாலோ, தலைவர்களாலோ உருவாக்கப்பட்டதல்ல. இது, ஒரு ஜனநாயக நாடு.
நாட்டின் பல பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், கோவில்கள், அன்னதான சத்திரங்கள் போன்றவை, அரசால் உருவாக்கப்பட்டவை அல்ல; மக்கள் நலன் கருதி, மக்களால், கொடையாளர்களால் உருவாக்கப்பட்டவை.
இது, ஏழைகள் நிறைந்த நாடு. நம் நாட்டில், டாக்டர்களின் எண்ணிக்கை குறைவு; மருத்துவமனைகள் குறைவு; ஆனால், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம். எனவே, ஏழை, நடுத்தர வர்க்கத்தினரின் நலன் கருதி, குறைவான விலையில் மருந்துப் பொருட்கள் தயாரிக்கப்பட வேண்டும்.

குறைந்தவிலை மருந்துகள்


குறைந்த விலையில் மருந்துப் பொருட்கள், மருத்துவக் கருவிகள் கிடைக்கும் வகையில்,

மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு, மருத்துவ திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. உயிர் காக்கும் மருந்துகளை, அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை மாற, மத்திய அரசு சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தயார்.
அந்த வகையில், நோயாளிகளுக்கான மருந்து சீட்டில், டாக்டர்கள், குறைந்த விலையிலான உயிர் காக்கும் மருந்துப் பொருட்களைமட்டுமே பரிந்துரைக்கும் வகையில், சட்டம் இயற்றவும் மத்திய அரசு தயங்காது. இது குறித்து ஆலோசித்து வருகிறோம். மத்திய அரசின் அதிரடி நடவடிக்கையால், பல உயிர் காக்கும் மருந்துகளின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.நாட்டில், ஏழைகளின் சுகாதார வசதிக்காக, தொண்டு நிறுவனங்கள் சார்பில், இலவச மருத்துவமனைகள் அமைக்கப்பட வேண்டும். வசதி படைத்தோர் இதற்கான பணிகளில் ஈடுபட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

'நகை வடிவமைப்பில் ஜொலிக்க வேண்டும்'


குஜராத் மாநிலம், சூரத்தில், வைரம் பட்டை தீட்டும் தொழிற்சாலையை துவக்கி வைத்து, பிரதமர் மோடி பேசியதாவது:வைரம் பட்டை தீட்டுவதில், உலகளவில், சூரத் வைரமாக திகழ்கிறது. வைரத்தை அறுத்தல், பட்டை தீட்டுதலோடு நிற்காமல், நகை வடிவமைப்பிலும், நாம் ஜொலிக்க வேண்டும்.
இந்திய பாரம்பரிய, 'டிசைன்' நகைகளுக்கு, உலகளவில் நல்ல வரவேற்பு உள்ளது. காலத்திற்கு ஏற்றார் போல், வகை வகையான டிசைன்களை, நம் முன்னோர்கள் வடிவமைத்து உள்ளனர்.அவர்களின் பெருமையை உலகறிய செய்யும் வகையில், இக்கால வடிவமைப்பாளர்கள் செயல்பட வேண்டும்.
அதே போல், இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட நகைகளுக்கென, உலகளவில் தனி இடத்தை உருவாக்கும் நோக்குடன் பணியாற்ற வேண்டும். இளம் வடிவமைப்பாளர்கள், தங்கள் திறமையை வெளிப்படுத்த, மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யத் தயார். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisementகாரை விட்டு இறங்கி சிறுமியிடம் பேச்சு


குஜராத்தில், பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, நேற்று சூரத் சென்றார். மோடி காரில் செல்வதை காண, சாலையின் இருபுறமும் ஏராளமானோர் திரண்டனர். காருக்குள் அமர்ந்தபடி, அனைவருக்கும் கை காட்டியபடி, மோடி சென்றார். அப்போது, 4 வயது சிறுமி நான்சி, மக்கள் கூட்டத்திலிருந்து விலகி, மோடியை காண ஓடி வந்தாள்.
மோடியின் வாகனத்திற்கு முன் சென்ற பாதுகாப்பு படை வீரர்கள், அந்த சிறுமியை, ஓரமாக அழைத்துச் சென்றனர். இதை பார்த்த மோடி, தன் காரை நிறுத்தி, அந்த சிறுமியை தன்னிடம் அழைத்து வரும்படி கூறினார்; காரை விட்டு இறங்கி, அந்த சிறுமியுடன் சில வார்த்தைகள் பேசிவிட்டு, பின் காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.
இதனால், அந்த சிறுமி மற்றும் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். நாட்டின் பிரதமரான மோடி, பாதுகாப்பு அம்சங்களை மீறி, காரை விட்டு இறங்கி, சிறுமியுடன் பேசியது, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian - TN,இந்தியா
18-ஏப்-201715:33:41 IST Report Abuse

Indianவிவசாய மண்ணில் கெமிக்கல்களை கொட்டி அதன் வளத்தை அழிப்பதை நடத்தி, மாட்டு சாணம், கோமியம், வேம்பு இவற்றை பயன்படுத்தி மண் வளத்தை மீட்டு எடுங்கள். கெமிக்கல் உரங்களை அடியோடு அழியுங்கள். வியாதிகள் மெல்ல காணாமல் போகும். நாடு உங்களுக்கு கடமைப்பட்டதாகும்.

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
18-ஏப்-201714:45:12 IST Report Abuse

Nallavan Nallavan\\\\ நோயாளிகளுக்கான மருந்து சீட்டில், டாக்டர்கள், குறைந்த விலையிலான உயிர் காக்கும் மருந்துப் பொருட்களைமட்டுமே பரிந்துரைக்கும் வகையில், சட்டம் இயற்றவும் மத்திய அரசு தயங்காது. //// குறைந்த விலையிலான மருந்தை எழுதி தரத்தில் காம்ப்ரமைஸ் செய்து கொள்ள வாய்ப்பிருக்கிறது .... ஆகவே இது அர்த்தமற்ற பேச்சு ......

Rate this:
Joy Louis - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஏப்-201713:52:50 IST Report Abuse

Joy Louisமுதலில் டாக்டர்கள் க்ளினிக்கினுள் மருந்து விற்பனை செய்வதை தடுக்க வேண்டும், அங்குதான் லாபம் கருதி விலை உயர்வான , தரம் மலிவான மருந்துகள் விற்கப் படுகின்றன, இது போன்ற பல இடங்களில் மருந்தாளுனர் கூட இல்லாமல் செவிலியரை வைத்து மருந்து கொடுக்கப்படுகிறது. அரசு உத்தரவு படி மருந்தை நோயாளிக்கு கொடுக்கும் உரிமை மருந்தாளுனருக்கே உள்ளது.. அரசு உத்தரவு காற்றில் பறக்கிறது...

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
18-ஏப்-201713:15:27 IST Report Abuse

இந்தியன் kumarநல்ல முயற்சி, வாழ்த்துக்கள் மோடிஜி , விவசாயிகள் போராட்டத்தை முடித்து வையுங்கள் உங்களுக்கு புண்ணியமா போகும் ,

Rate this:
Jamesbond007 - Nagercoil,இந்தியா
18-ஏப்-201711:47:49 IST Report Abuse

Jamesbond007அனைத்து இந்திய மக்களிடயேயும் உள்ள ஊழலை ஒழிக்க முதற்படி தரமான மருத்துவமனைகளையும் இலவச மருந்துகளையும் மக்களுக்கு கொடுப்பதே.... மனிதனுக்கு பெரும்பாலும் மருத்துவமனைகள்தான் பணத்தின் மீதான அருமையை புரிய வைக்கின்றன... மனிதன் மரணத்திற்கு பயந்தே பணத்தை எந்த குறுக்கு வழியிலாவது சம்பாதித்து வாழ நினைக்கிறான்... அதை தரமாக இலவசமாக கொடுத்து விட்டால் ஓரளவுக்கேனும் ஊழல் குறைய வாய்ப்பு இருக்கிறது..

Rate this:
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஏப்-201710:25:46 IST Report Abuse

Swaminathan Nathநல்ல முடிவு.மக்கள் நலன் கருதி, டாக்டர்கள், குறைந்த விலையிலான, உயிர் காக்கும் மருந்துகளை பரிந்துரைக்க வேண்டும் என்ற வகையில், புதிய சட்டம் அமல்படுத்தவும் மத்திய அரசு தயார்,'' என, பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

Rate this:
Jaya Prakash - Medan,இந்தோனேசியா
18-ஏப்-201710:11:39 IST Report Abuse

Jaya Prakash' குறைந்த விலையிலான உயிர் காக்கும் மருந்துப் பொருட்களைமட்டுமே பரிந்துரைக்கும் வகையில், சட்டம் இயற்றவும் மத்திய அரசு தயங்காது ' ..... புரியவில்லை..... அது மருத்துவரின் வேலை அல்லவே..... அது சுகாதாரத்துறையின் வேலை.... ஒரு மருந்து தயாரிக்கும் நிறுவனம் அளவுக்கு அதிகமாக விலை வைத்து விக்கிறது என்றால்.. அதை நிலைப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை..... மருத்துவருக்கு விலையை பற்றி என்ன தெரியும்?.... இந்த மருந்தைதான் பறித்துரைக்கவேண்டும் என்று அரசாங்கம் கூறினால் அது ஊழலுக்கே வழி வகுக்கும்..... மேலும் இந்தியாவில் தயாராகிராத சில உயிர் காக்கும் மருதிற்கும் அதை இறக்குமதி செய்வதற்கு 20 சதவீகிதம் கலால் வரி ஆறு மாதம் முன்பு வகிக்கப்பட்டுள்ளது.... அது மிகவும் கொடுமை..

Rate this:
Shriram - Chennai,இந்தியா
18-ஏப்-201713:01:28 IST Report Abuse

Shriramமுட்டாள் தனமான கருத்து ,, அவர் சொல்வது ஒரு குறிப்பிட்ட கம்பெனியின் மருந்தை எழுதாதீர்கள்,,ஜெனிரிக் மெடிசின் அதாவது குறிப்பிட்ட மருந்தின் கெமிக்கல் பெயரை எழுதினால் அது 25 ரூபாய் என்பதை வேறு கம்பெனிகளில் 1 ரூபாய்க்கு கூட கிடைக்கும் என்பதே ,, மோடியை திட்ட வேண்டும் என்பது உமது லட்சியம் ,, உயிர்களை கொல்வது மூர்க்கத்தின் லட்சியம் என்பதை போல ,, ஆனால் நல்லதா இல்லையா என்பதை அறிவுள்ளவன் ஆய்ந்து அறிந்துகொள்வான் , நீ . அறிவிலி என்பதை வெளிப்படுத்தாதே...

Rate this:
Jaya Prakash - Medan,இந்தோனேசியா
19-ஏப்-201705:41:22 IST Report Abuse

Jaya Prakashயப்பா அறிவாளி ஸ்ரீராம்..... அவர் சொல்வது உயிர் காக்கும் மருந்துகளை..... அதில் 90 சதவிகிதம் பேட்டண்ட் செய்யப்பட்டிருக்கும்..... அது எல்லாம் ஜெனிரிக்கிள் கிடைக்காது கண்ணா.... மேலும் அது என்ன கண்ணா ... ஒரு நியாயமான கருத்தை கூறினால் கூட மோடி கூட அதை கோத்து விடுறே.... . நாடே உன்னை மாதிரி..... சரி உடு.... உன் பேரை பார்த்து திட்ட விரும்பவில்லை..... சரி அந்த 20 சதவிகித கலால் வரியை விட்டுட்டேயே கண்ணா.... அது எதுக்கப்பா?........

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
18-ஏப்-201709:13:37 IST Report Abuse

Srinivasan Kannaiyaவாயால் சொன்னால் போதாது... திட்டம் செயல்படுத்த பட வேண்டும்... நீங்கள் சொல்லுவீர்கள்.. ஆனால் மருந்து கடைக்காரர்கள் இருப்பு இல்லை என்று சொல்லிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்..

Rate this:
RAJ - chennai,இந்தியா
18-ஏப்-201708:15:43 IST Report Abuse

RAJBad luck for Indians. Modi has now eyed on Medicines. Found a new way for revenue for Government. Mr.Kasi Baskaran. Medicine prices were increased abnormally in the past 5 years. May be reduced a little bit

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
18-ஏப்-201706:58:46 IST Report Abuse

தேச நேசன் டாக்டர் சீட்டுகளில் கம்பெனி பிராண்டு பெயர்களுக்குப் பதில் அவற்றின் உண்மையான வேதியியற் பெயரையும் சேர்த்து எழுத கட்டாயப்படுத்த வேண்டும் எல்லா மருந்துக்கடைகளில் அதற்கீடான குறைந்த விலை பிராண்டுகள் கிடைக்கும் எனவும் எழுதிவைக்கவும் உத்தரவிடலாம் மோதிக்கு நன்றி

Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement