முதலில் ஆட்சி... அடுத்து கட்சி... அதிமுக அணிகள் திடீர் ஆலோசனையில் முடிவு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
முதலில் ஆட்சி... அடுத்து கட்சி...
அதிமுக அணிகள் திடீர் ஆலோசனையில் முடிவு
மீண்டும் முதல்வர் ஓ.பி.ஸ்., துணை முதல்வர் எடப்பாடி

சென்னை: கட்சியின் நலன் கருதி அ.தி.மு.க.,வில் இரண்டு அணிகளும் இணையலாம் என செய்திகள் வெளியான நிலையில், அதற்கு முன்னோட்டமாக நேற்று (ஏப்.,17) இரவு திடீரென அமைச்சர் தங்கமணி வீட்டில் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.

அதிமுக ,அணிகள் திடீர் ஆலோசனை ,பன்னீர், எடப்பாடி

சசிகலாவையும் தினகரனையும் ஓரம்கட்டி விட்டு, மீண்டும் பன்னீர்செல்வத்தை முதல்வராகவும், எடப்பாடி பழனிசாமியை துணை முதல்வராகவும் தேர்வு செய்ய பேச்சு வார்த்தை நடந்துள்ளது.

தங்கமணி வீட்டில் ஆலோசனை


சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைச்சர் தங்கமணி வீட்டில் தீவிர ஆலோசனை நடக்கிறது. இதில் மூத்த அமைச்சர்கள் ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன், விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, வேலுமணி, செங்கோட்டையன் உள்ளிட்ட 25 அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த ஆலோசனையில் இரு அணிகள் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.
இரு அணிகளும் இணைவதற்கு அழைப்பு விடுத்தால் பேச்சுவார்த்தைக்கு தயார் என இணக்கமான கருத்தை இன்று ஓ.பி.எஸ்,

தம்பிதுரை ஆகியோர் ஏற்கனவே வெளியிட்டிருந்தனர். இரட்டை இலையை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டால், பிரிந்திருந்தவர்கள் மீண்டும் இணைய ஒரு வாய்ப்பு ஏற்படும். இதை சரியான முறையில் பயன்படுத்த கட்சி தலைவர்கள் நினைக்கின்றனர்.

இரட்டை இலை சின்னம்:


அதிமுக ஒன்று சேர்ந்தால் தான், இரட்டை இலை சின்னத்தை தக்க வைக்க முடியும். ஏற்கனவே அமைச்சர் வீட்டில் வருமான வரி துறையினர் சோதனை, அமைச்சர்கள் மீது எப்ஐஆர் என அடுத்தடுத்து கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. முன்பு தான் தினகரனின் தலையீடு இருக்கும் என்ற பயம் இருந்தது.
இப்போது தினகரன் கைது செய்யப்படும் சூழ்நிலையில், கட்சி இணைய வேண்டும் என்று ஓபிஎஸ் அழைப்பு விடுத்ததை காரணம் காட்டி, இணைப்பு முயற்சிகள் வேகமாக நடந்து வருகின்றன.

தினகரன், தானாக கட்சியை விட்டு ஒதுங்க மாட்டார். ஆட்சியை முதலில் கைப்பற்றி, பின்பு கட்சியை கைப்பற்றலாம் என்பது தான் அமைச்சர்களின் திட்டம். தினகரனால் தான் எல்லா பிரச்னைகளும் ஏற்பட்டுள்ளன என்று இரண்டு நாட்களுக்கு முன்பு அமைச்சர்கள் தங்கமணியும், வேலுமணியும் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
இன்னும் சொல்லப் போனால் பூனைக்கு மணி கட்டியது இவர்கள் தான். அதனால் தான், தங்கமணி வீட்டில் ஆலோசனை நடந்துள்ளது. இதுவும் முதல்வரின் ஒப்புதலுடன் தான் நடந்துள்ளது.

Advertisement


தினகரனுக்கு திகார்:


கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் இதுபற்றி கூறும்போது, லஞ்ச வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டால் அவர் டில்லி திகார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு விடுவார். அப்படி நடந்தால், அவரது தொடர்பே துண்டிக்கப்பட்டு விடும். இவர்கள் இடைஞ்சலாக இல்லாத பட்சத்தில் மீண்டும் முதல்வராக ஓபிஎஸ்சும், துணை முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியும் பதவியேற்பார்கள்.
தினகரனின் தீவிர ஆதரவாளர்களாக 20 எம்.எல்.ஏ.க்கள் வரை இருப்பார்கள் நினைக்கிறோம். கட்சி ஒன்று சேர்ந்து விட்டால் இவர்களையும் சரி செய்து விடலாம். அவர்கள் தி.மு.க.வுக்கு செல்வதை தடுத்து விடலாம். எம்.எல்.ஏ.,க்கள் ஒன்று சேர்ந்து விட்டால் சசிகலாவால் ஒன்று செய்து விடமுடியாது.
கவர்னர் சென்னையில் இருப்பதால் இன்று (18.04.17) பதவியேற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
எல்.கே.மதி - Lalgudy,இந்தியா
18-ஏப்-201719:28:30 IST Report Abuse

எல்.கே.மதிலஞ்ச வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டால் அவர் டில்லி திகார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு விடுவார். அப்படி நடந்தால், அவரது தொடர்பே துண்டிக்கப்பட்டு விடும். அப்படி நினைக்காதீர்கள்.பாசமிக்க தமிழக முதல்வரும்,அமைச்சர்களும் பெங்களுரு சென்று சின்னம்மாவிடமும், திகார் சென்று சின்னய்யா விடமும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து,ஆசி வாங்கியே, ஆட்சியை (அலங்கோலமாக) நடத்துவார்கள் இது நிச்சயம் இந்த நாய்களின் வாலை யாரும் நிமிர்த்தவே முடியாது.....

Rate this:
Tamilnesan - Muscat,ஓமன்
18-ஏப்-201718:57:38 IST Report Abuse

Tamilnesan "கட்சியின் நலன் கருதி அ.தி.மு.க.,வில் இரண்டு அணிகளும் இணையலாம்" ..........கவனிக்கவும் ........தமிழக மக்கள் நலன் கருதி அல்ல..........நாதாரிகள்.

Rate this:
18-ஏப்-201714:43:41 IST Report Abuse

எப்போதும் வென்றான் பன்னீருக்கு முதல்வர் பதவி தரக்கூடாது....இப்போது பிஜேபி மூலமாக நடக்கு அத்தனையும் இவர் சொல்லித்தான் நடக்கிறது...அதிமுகவின் முதல் துரோகி இவர்....

Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
18-ஏப்-201714:08:12 IST Report Abuse

A.George AlphonseIn old Hindi movie" Bobby" the hero Rishi kapoor and heroine Dimple Kabadia in one Love duet song First you,first you like they sang and the train passes away without carrying any one of them.The same way here also they loose every thing.First Aatchi next Katchi slogans won't come true for this AIADMK party in future at any time.This is merely "Kannal Neer" for this party in Tamil nadu forever and ever.

Rate this:
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
18-ஏப்-201713:47:57 IST Report Abuse

தமிழர்நீதி பன்னீர் முதல்வர் ,எடப்பாடி துணை முதல்வர் . கொள்ளையில் இரு பங்கு . மீதி mLA களுக்கு . இனி பெரும்பங்கு வாங்கும் சசி ,தினகரன் கிடையாது . கட்சியும் உடையாது . நலன் ரோசனை .

Rate this:
velimalaya - Chennai,இந்தியா
18-ஏப்-201712:48:40 IST Report Abuse

velimalayaஜெயலலிதா அம்மா எல்லாம் சும்மா தான ? எல்லாம் காசு தான் இந்த நாதாரிகளுக்கு ?

Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
18-ஏப்-201712:31:23 IST Report Abuse

Visu Iyer"மூ"டி மறைக்கிறார்

Rate this:
S.R.TAMILVANAN - siliguri, west Bengal,இந்தியா
18-ஏப்-201711:51:57 IST Report Abuse

S.R.TAMILVANANசரியான முடிவு ஓபிஎஸ் எடப்பாடி பழனிச்சாமி அம்மாவின் திட்டங்களை தொடருங்கள்

Rate this:
P R Srinivasan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஏப்-201711:48:07 IST Report Abuse

P R Srinivasanமக்களை பற்றி அக்கறையில்லை. பதவியே முக்கியம். கட்சியும், சின்னமும் பதவிக்கு மூலாதாரணம்.

Rate this:
18-ஏப்-201710:38:41 IST Report Abuse

ரங்கன்முதலில் கோட்டை அடுத்தது வேட்டை கடைசியில் ஆட்டை

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
18-ஏப்-201711:25:56 IST Report Abuse

தேச நேசன்ரசிக்கவைத்தாலும் உண்மையிலும் உண்மை...

Rate this:
18-ஏப்-201711:53:08 IST Report Abuse

AshokOrbitSariyaaga sonneergal...

Rate this:
மேலும் 47 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement