லண்டனுக்கு தப்பி ஓடிய விஜய் மல்லையா சிக்கினார்: வங்கிகளுக்கு 'தண்ணி' காட்டிய வழக்கில் அதிரடி Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
சிக்கினார்!
லண்டனுக்கு தப்பி ஓடிய விஜய் மல்லையா...
வங்கிகளுக்கு 'தண்ணி' காட்டிய வழக்கில் அதிரடி

லண்டன்: 'வங்கிக் கடன் வாங்கி, திருப்பி செலுத்தாமல் மோசடி செய்த வழக்குகள் தொடர்பாக, லண்டனில் உள்ள பிரபல தொழிலதிபர், விஜய் மல்லையாவை ஒப்படைக்க வேண்டும்' என்ற, மத்திய அரசின் கோரிக் கையை ஏற்று, ஸ்காட்லாந்து யார்டு போலீசார், அவரை கைது செய்தனர்; சில மணி நேரங் களில், அவருக்கு நிபந்தனை ஜாமின் அளிக்கப்பட்டது.

லண்டன், தப்பிய ,விஜய் மல்லையா, சிக்கினார், மல்லையா

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த, பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, 61. இவரது 'கிங்பிஷர் ஏர்லைன்ஸ்' நிறுவனம், பல்வேறு வங்கிகளில் வாங்கிய, 9,000 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தவில்லை.
இது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், மல்லையா, 2016, மார்ச்சில் பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு தப்பிச் சென்றார்.

மல்லையா மீது, வருமான வரித் துறை, சேவை வரித் துறை மற்றும் பண மோசடியில் ஈடுபட்ட தாக அமலாக்கத் துறை, சி.பி.ஐ., என, பல்வேறு அமைப்புகள், பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகளை தொடர்ந்துள்ளன.
இந்த நிலையில், இந்தியா - பிரிட்டன் இடையே, குற்ற வாளிகளை ஒப்படைக்கும் வகையில் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, லண்டனில் உள்ள விஜய் மல்லையாவை நாடு கடத்தி, தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என, மத்திய அரசு மூலம் பிரிட்டனுக்கு மனு கொடுக்கப் பட்டது.

இந்த ஆண்டு, பிப்ரவரியில் கொடுக்கப்பட்ட அந்த மனுவில், 'பல்வேறு வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்த மல்லையாவை, கோர்ட் வழக்கு களில் ஆஜர்படுத்தவும், இது தொடர்பாக விசாரணை நடத்தவும் ஒப்படைக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், லண்டனில் உள்ள மெட்ரோ பாலிடன் போலீஸ் ஸ்டேஷனில், நேற்று காலை, மல்லையா ஆஜரானார். அதைத் தொடர்ந்து, அவரை போலீசார் கைது செய்தனர். இது தொடர் பாக, மத்திய அரசுக்கும், வழக்குகளை நடத்தி வரும், சி.பி.ஐ.,க்கும், பிரிட்டன் அரசு தகவல் தெரிவித்தது.
அதைத் தொடர்ந்து, லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர்மாஜிஸ்திரேட் கோர்ட்டில், மல்லையா ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு நிபந்தனை ஜாமின் அளித்து, கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, கைது செய்யப்பட்டது, மல்லையா மீதான வழக்குகளில் முக்கிய திருப்பமாக கருதப்படுகிறது.

'மிகப் பெரிய வெற்றி'


''விஜய் மல்லையா கைது செய்யப்பட்டுள்ளது, சி.பி.ஐ., உட்பட, நம் விசாரணை அமைப்புகளின் முயற்சிக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றி,'' என, சி.பி.ஐ., முன்னாள் இயக்குனர் அனில் சின்ஹா கூறியுள்ளார்.
மல்லையா மீதான வழக்குகளில் முதல் வழக்கை, சி.பி.ஐ., பதிவு செய்தபோது, அதன் இயக்குனராக இருந்த அனில் சின்ஹா, இது குறித்து கூறியுள்ளதாவது: மல்லையா கைது செய்யப்பட்டது, இந்த வழக்குகளில், சி.பி.ஐ., உள்ளிட்ட நமது விசாரணை அமைப்புகளுக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றி யாகும். மல்லையாவை நாடு கடத்தும் நமது கோரிக் கைக்கு கிடைத்துள்ள முதல் வெற்றி. இவ்வாறு அவர் கூறினார்.

நாடு கடத்தல் எப்போது?


* பிரிட்டன் சட்டங்களின்படி, மல்லையா உடனடியாக நாடு கடத்தப்படுவதற்கான சாத்தியம்
இல்லை என்றே தெரிகிறது

Advertisement* பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக, ஐ.பி.எல்., எனப்படும், இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் தலைவராக இருந்த லலித் மோடி, 2012ல், லண்டனுக்கு தப்பினார். ஆனால், இதுவரை அவரை நாடு கடத்துவதற்கான எந்த நடவடிக்கையையும் பிரிட்டன் எடுக்கவில்லை
* அதே நேரத்தில், மல்லையா கைது செய்யப் பட்டுள்ளதன் மூலம், மத்திய அரசின் கோரிக் கையை பிரிட்டன் ஏற்று செயல்படத் துவங்கியுள்ளது தெளிவாகிறது
* பிரிட்டன் சட்டத்தின்படி, நாடு கடத்தப்படும் கோரிக்கையை அரசு பரிசீலித்து, சம்பந்தப்பட்ட மாவட்ட கோர்ட்டுக்கு அனுப்பி வைக்கும்
* அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக மாவட்ட கோர்ட், கைது வாரண்டை பிறப்பிக்கும். தற்போது மல்லையா வழக்கில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால், அவர் நேரில் ஆஜரானதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்
* அடுத்த கட்டமாக, நாடு கடத்துவது தொடர்பான விசாரணையை, கோர்ட் துவங்கும். அடுத்ததாக ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட்டுகளில் மேல்முறையீடு செய்வதற்கு மல்லையாவுக்கு வாய்ப்பு உள்ளது
* பிரிட்டன் குடியுரிமையை பெற்றுள்ளதால், வாழ்நாள் முழுக்க, அங்கேயே வசிக்க மல்லையாவுக்கு உரிமை உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மல்லையா விவகாரம் தொடர்பான அனைத்து முன்னேற்றங்களையும் தொடர்ந்து கவனித்து வருகிறோம். மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வந்து, கோர்ட் முன் விசாரணைக்கு நிறுத்துவதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது. இதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.

-சந்தோஷ் கங்க்வார், மத்திய இணையமைச்சர், பா.ஜ.,


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajarajan - bangalore,இந்தியா
19-ஏப்-201721:25:33 IST Report Abuse

rajarajanடிஎப்எல் லலித் மோடியும் லண்டனில்தான் இருக்கிறார். அவரைப் பிடிக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்.

Rate this:
Saudi_Indian_tamil - Khobar,சவுதி அரேபியா
19-ஏப்-201712:02:24 IST Report Abuse

Saudi_Indian_tamilஊரை அடிச்சி உலையில் போட்டாதான் இந்தியாவில் சொகுசா வாழலாம் என்பதை உணர்த்தியவன் இந்த மல்லையா எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணும் நல்லா அனுபவிச்சி வாழ்ந்துட்டான் இனிமே என்ன ஆகப்போகுது பணத்தை திருப்பியா வாங்க முடியும் ?

Rate this:
spr - chennai,இந்தியா
19-ஏப்-201711:05:08 IST Report Abuse

sprநாட்டின் நல்ல காலம் பிரதமர், பல மாநிலங்களின் முதலமைச்சர்கள் எல்லோரும் திருமணமாகாதவர்கள், சாமியார்கள் அல்லது விதவர்கள் அந்த வகையில் தலைமுறைக்கோ வாரிசுகளுக்கோ சேர்த்து வைக்க வேண்டிய தேவை இல்லாதவர்கள் வாரிசுகள் உள்ள சிலரும் அந்த ஆசையில்லாதவர்கள் என்பது வாய்ப்பு கிடைத்த காலத்து அவர்கள் முயற்சிக்கவில்லை என்பதால் தெரிகிறது முயற்சித்திருந்தால் ஊடகங்கள் இந்நேரம் கட்டம் கட்டி செய்தி வெளியிட்டிருக்கும் அந்த வகையில் பலருக்கு அடுத்த தேர்தல் குறித்து கூட ஆசையில்லை எனவே நாட்டுக்கு நலம் தரும் செயல்களை உடனடியாக செய்து குற்றங்களைக் குறைத்து நல்லாட்சி நாட்டு முன்னேற்றம் மக்களின் நலவாழ்வு குறித்து செயல்படலாம் செய்வார்களா? குற்றம் புரிபவர் அதன் ஆதாயத்தை இந்தக் காலத்திலும் அனுபவிக்க இயலாத வகையில் கடும் தண்டனை தர நீதிமன்றங்களும் முயற்சிக்குமா? இன்னமும் சில நேர்மையான விலைபோகாத நீதியரசர்கள் இருக்கிறார்கள் என எண்ணுகிறோம்

Rate this:
Chella Durai - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19-ஏப்-201710:43:53 IST Report Abuse

Chella Duraiநம்ம துரை சிங்கத்தை அனுப்பி மல்லையாவெய் இழுத்து வரணும்... சிங்கம்.. சிங்கம்...

Rate this:
sankar - trichy,இந்தியா
19-ஏப்-201721:11:33 IST Report Abuse

sankarஹரி காதில் விழுந்தால் மீண்டும் ஒரு முறை சூர்யா சர்ர்ர் பாழாக்க படும்...

Rate this:
(Original) Nakkeran - Coimbatore,இந்தியா
19-ஏப்-201709:33:46 IST Report Abuse

(Original) Nakkeran3 மணி நேரத்தில் ஜாமீன் இது மக்களை திசை திருப்ப வைக்கும் முயற்சி - அரசாங்கம் மக்களை ஏமாற்ற பார்க்கிறது

Rate this:
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
19-ஏப்-201710:17:58 IST Report Abuse

Yaro Oruvanஒனக்கு என்னதான்யா வேணும்? எதைச்செஞ்சாலும் குத்தம் சொல்லணும்?...

Rate this:
(Original) Nakkeran - Coimbatore,இந்தியா
20-ஏப்-201716:58:29 IST Report Abuse

(Original) Nakkeran100 ரூபாய் வங்கியில் கடன் கேட்டுப்பார் உன் குடும்ப சொத்தையே கேட்பார்கள் 9000 கோடிடா...

Rate this:
ஜெயந்தன் - Chennai,இந்தியா
19-ஏப்-201708:43:38 IST Report Abuse

ஜெயந்தன்அவனை JD (s ) மட்டும் mp yaaga ஆக்கவில்லை .. பிஜேபி காங்கிரஸ் எல்லோர் ஆதரவும் பெற்று தான் ஆனான்..அவன் ஊழலில் காங்கிரஸ் பிஜேபி இருவருக்குமே பங்கு உண்டு .. பிஜேபி க்கு பங்கு இல்லை என்றால் அவனை தப்பிக்க விட மாட்டார்கள்..appadiye அவனே தப்பி சென்றாலும் உடனே இங்கே கொண்டு வந்திருப்பார்கள் .. இப்போது மறுபடியும் தப்பிக்க விட்டதிலிருந்தே தெரிய வில்லையா?? இது நம் கண்ணை கட்டி விட்டு அவங்க ஆடும் கண்ணாமூச்சி ஆட்டம்

Rate this:
Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்
19-ஏப்-201708:12:59 IST Report Abuse

Raghuraman Narayananஇவரெல்லாம் பண முதலைகள். பணம் பத்தும் செய்யும். பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும். உச்ச நீதி மன்றம் சஹாரா நிறுவனத்தின் திரு சுப்ரதோ ராய் அவர்களுக்கு அளித்த கண்டிப்பான தண்டனை போல அளித்தால் ஒழிய இவர்கள் தங்களிடம் உள்ள பணத்தை வைத்து எதையும் யாரையும் வாங்கி விடுவார்கள்.

Rate this:
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
19-ஏப்-201707:23:34 IST Report Abuse

Samy Chinnathambiஅவன் இவன் என்ற ஏக வசனத்தை நாங்கள் வரவேற்கிறோம்...இந்த மாதிரி மக்கள் பணத்தை ஆட்டைய போட்டு பொருளாதார குற்றம் இழைக்கும் நாதாரிகளை நீங்கள் அப்படி அழைப்பதில் தவறு இல்லை...தினமலரை நான் சப்போர்ட் பண்ணுகிறேன் இந்த விஷயத்தில்.........

Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
19-ஏப்-201706:02:15 IST Report Abuse

Sanny இந்த நாடு கடத்துவது என்பது வெறும் கண்துடைப்பு, சில வருடங்களுக்கு முன், ஆஸ்திரேலியாவில் ஒரு இந்திய பஞ்சாப் மாநில மாணவன், புனீத் என்ற பெயர், வயது 17 குடிபோதையில், வாகன அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் ஓட்டி, ஒரு மாணவனை கொன்று, இன்னொருவரை காயப்படுத்தினான், அவனை பிடித்து ரிமாண்ட் செய்து, பெயிலில் விட்டார்கள். அவன் தனது நண்பனின் பாஸ்போர்ட்டை களவாடி இந்தியா தப்பி வந்தான், அவனை சென்ற வருடம் டெல்லியில் கைது செய்தனர், அவனை ஆஸ்திரேலியாவுக்கு நாடு கடத்த கேட்டபோது, இந்திய பாதுகாப்பு துறைக்கும், சட்டத்துக்கும், அவனது வக்கீல் மனித உரிமைகள் காட்டி அனுப்பாது இந்திய பீகார் ஜெயிலில் வைத்திருக்கு, சில சமயம் இப்போ விடுதலை ஆகியும் இருப்பான். மல்லையா போன்றவர்களுக்கு இது எல்லாம் சப்பை மேட்டர்.

Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
19-ஏப்-201703:20:50 IST Report Abuse

Mani . Vநேரமும், பணமும் விரயம். மல்லையா மேல் முறையீடு செய்து வெளியில் சுதந்திரமாக திரியப் போகிறான். மக்கள் வரிப் பணம் வீணாகப் போவது உறுதி.

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement