பழமை வாய்ந்த 'மம்மி' கண்டுபிடிப்பு| Dinamalar

பழமை வாய்ந்த 'மம்மி' கண்டுபிடிப்பு

Added : ஏப் 19, 2017 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பழமை வாய்ந்த 'மம்மி' கண்டுபிடிப்பு

கெய்ரோ:எகிப்தில், 3,500ஆண்டுகள் பழமையான, 'மம்மிகள்' கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

பண்டைய எகிப்து நாகரிகத்தில், மன்னர்களின் உடலை பாதுகாப்பதை, வழக்கமாக வைத்திருந்தனர். பாதுகாக்கப்பட்ட அரச குடும்பத்தினரின் உடல்களை, பெரிய கல்லறைக்குள் வைத்து பாதுகாத்து வந்தனர். இவை, 'மம்மி' என, அழைக்கப்படுகின்றன.

இது போன்ற ஏராளமான மம்மிகள், இதுவரை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், இங்குள்ள லக்சர் நகருக்கு அருகில், 3,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த, அரச குடும்பத்தினரின் கல்லறை ஒன்றை, அந்நாட்டு தொல்லியல் அறிஞர்கள் கண்டறிந்து உள்ளனர்.அதில், சவ பெட்டி களையும், அதனுள் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த எட்டு மம்மிகளையும் கண்டுபிடித்து உள்ளனர்.

மம்மிகளுடன் சேர்ந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கால பொருட்களும், அங்கு கிடைத்துள்ளன.எகிப்திய மம்மிகள் குறித்த ஆராய்ச்சியில், இந்த கண்டுபிடிப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
20-ஏப்-201716:04:46 IST Report Abuse
Cheran Perumal எகிப்தில் சில நூறு வருடங்களுக்கு முன்னால் கூட சூரியனை வணங்கிவந்தார்கள் என்று சொல்லப்படுகிறதே? அதற்கான ஆதாரம் ஏதும் கிடைத்துள்ளதா?
Rate this:
Share this comment
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
19-ஏப்-201717:07:58 IST Report Abuse
JeevaKiran 3500 ஆண்டுகளானாலும் கலர் மங்கவில்லையே? புகைப்படம். காரணம் உண்மையான உழைப்பு. இந்த உழைப்புதான் இன்றளவுக்கும் நிலைத்து நிற்கும் பல சின்னங்களுக்கு ஆதாரம். - பிரமிட், கல்லணை, தஞ்சை பெரிய கோவில், தாஜ்மஹால், குதுப்மினார், அஜந்தா-எல்லோரா குகை கோயில், மலை ரயில்கள், சீனப்பெருங்சுவர், ஹவுரா - ராமேஸ்வரம் பாலம், கோட்டை கொத்தளங்கள்... இதுபோல் நீங்களே பட்டியலிட்டுக்கொள்ளுங்கள். எல்லாம் உண்மையான உழைப்பு. இப்போ எங்கே, எல்லாம் தன்னலம், லஞ்சம், அடாவடி,
Rate this:
Share this comment
Cancel
Bala -  ( Posted via: Dinamalar Android App )
19-ஏப்-201710:26:36 IST Report Abuse
Bala வெறும் 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மம்மியை இப்படி பெருமைபட்டு கொள்கிறார்கள் பூம்புகார் ஆராய்ச்சிகளும் கீழடி ஆராய்ச்சிகளும் இவைகளை விட பழமை வாய்ந்தவையே தமிழன் தான் முன்னோடிகெல்லாம் முன்னோடி என்று உரக்க சொல்வதற்கு இதன் ஆராய்ச்சிகளை மேற்கொண்டால் உண்மை உலகறியும் ஆனால் மத்திய தமிழகத்தின் தொல்லியல் ஆராய்ச்சிகளில் மெத்தனபோக்கே காட்டுகிறது என்பதற்கு சான்றாக அமைந்தது சமீபத்திய கீழடி ஆராய்ச்சியாளரின் வேலையிடமாற்றம் இதில் தமிழக அரசுக்கும் துளிகூட அக்கறையில்லை அனைத்து அமைச்சர்களும் தத்தம் செல்வத்தை பாதுகாத்துகொள்ள மாறிமாறி எந்த அணியில் என்று சிந்திக்கவே நேரம் போவதில்லை
Rate this:
Share this comment
19-ஏப்-201711:26:45 IST Report Abuse
ARUN.POINT.BLANKI agree with you Mr. Bala...
Rate this:
Share this comment
Ganesh Tarun - Delhi,இந்தியா
19-ஏப்-201713:48:28 IST Report Abuse
Ganesh Tarunதமிழன் தான் முன்னோடிகெல்லாம் முன்னோடி என்று உரக்க சொல்வதெல்லாம் கற்பனை. ஆதாரமற்ற தகவல்....
Rate this:
Share this comment
Gopi - Chennai,இந்தியா
19-ஏப்-201717:23:23 IST Report Abuse
Gopiநம்ம முன்னோர் எகிப்தியர்களுடன் கடல் வழி வாணிகம் செய்து மிளகுக்கு தங்கம் பெற்றனர் என்பது பொய்யா. யூப்ப்ரு மொழில் திராவிட சொற்களாலும் அவர்கள் மொழியில் உள்ள சில சொற்களும் நம்மில் கலந்திருப்பது பொய்யா ? ஹரப்பாவில் (ஹர - சிவன் + அப்பா ) கிடைத்த செப்பேடுகளும் இங்கு கிடைத்த செப்பாடுகளும் பொய்யா ? முதல் சுதந்திர கலகம் தெற்கே நடந்தது பொய்யா ? (இந்திய வரலாற்றில் வடக்கே பின்னைய ஆண்டுகளில் நடந்ததை மட்டும் கணக்கில் கொள்கின்றனர் ) பூம்புகார் துறைமுகம் செழித்தோங்கி பாலாடையை விட மெல்லிய ஆடைகளை உருவாக்கினார் என்ற குறிப்பெல்லாம் பொய்ய ?...
Rate this:
Share this comment
kundalakesi - VANCOUVER,கனடா
19-ஏப்-201718:06:44 IST Report Abuse
kundalakesiஅய்யா கோண்டுவானா கடலடி பூமி, குமரிக்கு கண்டம், அங்கு ஓடிய ஆறுகள், மலைகள், அரசு இவை பற்றிய முன்னைத் தமிழ் குறிப்புகளெல்லாம், அறியீர் போலும்....
Rate this:
Share this comment
Ganesh Tarun - Delhi,இந்தியா
19-ஏப்-201719:51:12 IST Report Abuse
Ganesh Tarun19-ம் நூற்றாண்டில் மேற்கத்திய நாடுகளில் பிரபலமான கற்பனை கதை தான் லெமுரியா. 20-ம் நூற்றாண்டில் இந்த கதை தமிழ்நாட்டில் உள்ள தமிழ் ஆர்வலர்களால் குமரிகண்டம் எனும் பெயரில் மொழி பெயர்க்கபட்டுள்ளது. இது முழுக்க கற்பனை கதை. சொல்லப்போனால் "குமரி" "கண்டம் " இந்த வார்த்தைகள் எல்லாம் சமஸ்க்ரித வார்த்தைகள். கோண்டுவானாவில் தமிழ் இருந்தாக யார் சொன்னார்கள்? கோண்டுவானா நிலப்பரப்பு இருநூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததாக சொல்லப்படுகிறது. இருநூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் மனிதர்கள் இருந்தார்களா இல்லையா என்று யாருக்கும் தெரியாது. அப்படி இருக்கும் போது அங்கே மனிதர்கள் இருந்திருப்பார்கள் தமிழ் பேசி இருப்பார்கள் என்று சொல்வதெல்லாம் அதீத கற்பனை....
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
19-ஏப்-201703:42:46 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் நமக்கு தெரிஞ்ச ஒரே மம்மி இப்போ மெய்யாலுமே மம்மியாயிட்டாங்க.. சின்னமம்மி வெறும் டம்மி ஆயிட்டாங்க..
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
19-ஏப்-201701:32:33 IST Report Abuse
மலரின் மகள் சின்ன மம்மி பெரிய மம்மி? நியூஸ் காணோமே?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை