யானை நடமாட்டம்: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

யானை நடமாட்டம்: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

Added : ஏப் 19, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சத்தியமங்கலம்: கடம்பூர் மலையில், தண்ணீர் பற்றாக்குறையால், சாலையில் யானைகள் நடமாடுகின்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சத்தியமங்கலத்தை அடுத்த, கடம்பூர் மலைப் பகுதியில், 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இங்கு வனத்தில், யானை, மான், குரங்கு உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசிக்கின்றன. ஓராண்டாக போதிய மழையின்றி, தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் மட்டுமின்றி, வன விலங்குகளும் தவிக்கின்றன. தற்போது கடம்பூர் மலைப்பகுதியில், கடும் வறட்சியால் தீவனத்துடன் தண்ணீருக்கும் கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவில் இரை மற்றும் தண்ணீர் தேடி, சாலைகளுக்கு யானைகள் வரத் தொடங்கியுள்ளன. எனவே, இரவில் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்ல வேண்டும். ஏதோ ஒரு ஆர்வத்தில், செல்பி எடுத்து ஏடாகூடமாக மாட்டிக்கொள்ள வேண்டாம் என்றும், வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X