மனைவி தற்கொலை: கணவனுக்கு 13 ஆண்டு சிறை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி தற்கொலை: கணவனுக்கு 13 ஆண்டு சிறை

Added : ஏப் 19, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுக்கோட்டை: மனைவி தற்கொலை வழக்கில், கணவனுக்கு, 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவன் முருகேசன், 30. இவனுக்கும், அம்சவள்ளி, 28, என்பவருக்கும், 2008ல் திருமணம் நடந்தது. முருகேசனுக்கு மது பழக்கம் இருந்தது. இதனால், கணவன், மனைவி இடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த, 2013 செப்., 21ல், முருகேசன் வழக்கம் போல், இரவு குடித்து விட்டு வந்தான். இரவு, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மனமுடைந்த அம்சவள்ளி, வீட்டு உத்திரத்தில் தூக்கு போட்டு, தற்கொலை செய்து கொண்டார். முருகேசனை போலீசார் கைது செய்து, புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி லியாகத்அலி நேற்று தீர்ப்பு அளித்தார்.அதில், 'தற்கொலைக்கு தூண்டிய குற்றத்திற்காக, 10 ஆண்டு சிறை, 1,000 ரூபாய் அபராதம், துன்புறுத்தியகுற்றத்திற்காக, மூன்று ஆண்டு சிறை, 1,000 ரூபாய் அபராதம் விதித்தார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும், ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், உத்தரவிட்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை