நெஞ்சை நெகிழ வைத்த போட்டோகிராபர்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

நெஞ்சை நெகிழ வைத்த போட்டோகிராபர்

Added : ஏப் 19, 2017 | கருத்துகள் (13)
Advertisement

புதுடில்லி: சிரியா குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது போட்டோகிராபர் ஒருவர், பலரின் உயிரைக் காப்பாற்றிய சம்பவம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.
சிரியாவின் அலிப்போ பகுதியில் கடந்த வாரம், பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த தாக்குதலில் 126 பேர் பலியாகினர். இவர்களில் 80 க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள். இச்சம்பவத்தை போட்டோ எடுப்பதற்காக பத்திரிக்கையாளர்கள் பலர் அங்கு குவிந்தனர்.


சிரியாவின் அலிப்போ நகரில் கடந்த வாரம் பஸ்களில் நடத்தப்பட்ட பயங்கர குண்டுவெடிப்பில் 80 குழந்தைகள் உட்பட 126 பேர் பலியாயினர்.

நெகிழ வைத்த போட்டோகிராபர் :


அவர்களில் அப்த் அல்கதர் ஹபக் என்பவர், யாரும் எதிர்பாராத விதமாக தனது கேமிராவை தூக்கி எறிந்து விட்டு, அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குழந்தைகளை தூக்கிக் கொண்டு ஓடி, ஆம்புலன்சில் சேர்த்தார். முதலில் அவர் ஓடிச் சென்ற தூக்கிய குழந்தை உயிரிழந்திருந்தது. அடுத்து அவர் தூக்கிய குழந்தைக்கு உயிர் இருந்தது. முகம் மண்ணில் புதைந்தபடி கிடந்த குழந்தையை அவர் தூக்கிய போது, அக்குழந்தை முகம் சிதைந்து உயிரிழந்தது.
இதனைக் கண்ட ஹபக், அக்குழந்தையில் அருகில் மண்டியிட்டு கதறி அழுதார். பின்னர் தொடர்ந்து தனது சக நண்பர்களையும் அழைத்து பலரையும் மீட்டார். சிறிது நேரத்தில் மீண்டும் தனது கேமிராவை எடுத்து, அங்கிருந்தவற்றை போட்டோ எடுக்க துவங்கினார்.
பத்திரிக்கையாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டு கேட்ட போது, அது மிகவும் பயங்கரமான காட்சி. அதுவும் அந்த குழந்தைகள் ரத்தம் சொட்ட, செத்துக் கொண்டிருந்தனர். கன் முன் உயிருக்கு போராடும் குழந்தையை விட எதுவும் பெரிதாக தெரியவில்லை என்றார். ஹபக்கின் இந்த செயல்களை அருகில் இருந்த ஒருவர் போட்டோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். தற்போது சமூக வலைதளங்களில் ஹபக்கின் புகைப்படங்கள் வைரலாக பரவி வருவதுடன், அவருக்கு பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளது.Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-ஏப்-201708:51:48 IST Report Abuse
Srinivasan Kannaiya மனித நேயம் சிறிது உயிருடன் இருக்கிறது என்பதற்கு ஹபக் ஒரு சாட்சி..
Rate this:
Share this comment
Cancel
குண்டுத்தமிழன் - Chennai,இந்தியா
20-ஏப்-201707:47:23 IST Report Abuse
குண்டுத்தமிழன் இந்த போருக்கு காரணமானவர்கள் எத்துனை ஜென்மம் எடுப்பினும் நாசமாய் போக வேண்டுகிறேன். இந்த புகைபட கலைஞரவர்க்கு அணைத்து நன்மையையும் கிடைக்க வேண்டுகிறேன்.. இந்த போர் முற்றிலுமாக நின்றிட வேண்டுகிறேன்... குழந்தைகள், அப்பாவிகளை கொன்று நிறைவேற்றப்படும் கோரிக்கை மற்றும் இதனால் கிடைக்கும் அனைத்தும் கொடிய சாபமே....
Rate this:
Share this comment
Cancel
sam - Doha,கத்தார்
20-ஏப்-201707:32:18 IST Report Abuse
sam இப்படி பட்ட மீடியா ஆட்கள் நம் நாட்டில் உள்ளார்களா?
Rate this:
Share this comment
Cancel
tree - chennai  ( Posted via: Dinamalar Windows App )
19-ஏப்-201718:08:55 IST Report Abuse
tree பின்ன ஏன்டா உடாம சண்டை போடறீங்க சண்டைக்கு இழுக்குறீங்க?
Rate this:
Share this comment
Cancel
Mohamed Sherif - Madurai,இந்தியா
19-ஏப்-201717:37:54 IST Report Abuse
Mohamed Sherif மனிதநேயம் சாகவில்லை.இது போன்ற துயர சம்பவம் இனி நிகழக்கூடாது.
Rate this:
Share this comment
Cancel
Manithan - Tirupur,இந்தியா
19-ஏப்-201717:12:49 IST Report Abuse
Manithan மதம் இல்லா மனித நேயம் வாழ்க..
Rate this:
Share this comment
Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ
19-ஏப்-201719:37:39 IST Report Abuse
Maverickஇந்து மதம் ...கொல்லாமை ... புலால் உண்ணாமை ... அன்பு ... நன்னெறி ஆகியவற்றை அடிப்படியாக கொண்டது...... உண்மையான இந்து எந்த உயிருக்கும் கெடுதல் நினைக்க மாட்டான்......
Rate this:
Share this comment
எமன் - எமபுரம்,அன்டார்டிகா
20-ஏப்-201709:50:42 IST Report Abuse
எமன்mr maverick, அப்போ இங்க வாராவாரம் கறிக்கடைலயும் மீன்கடைலயும் நிக்கறவன் யாரு? இந்து என்பது மதம் அல்ல, அது ஒரு வாழ்க்கைக்குரிய மார்க்கம்....
Rate this:
Share this comment
Cancel
19-ஏப்-201717:01:39 IST Report Abuse
குமரன். இதயம் உள்ள மனிதன்..🙏
Rate this:
Share this comment
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
19-ஏப்-201716:42:54 IST Report Abuse
JeevaKiran மனித நேயம். வாழ்க.
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
19-ஏப்-201716:11:53 IST Report Abuse
Cheran Perumal குழந்தைகளை ஈவு இரக்கமின்றி மதத்தின் பெயரால் கொன்ற அந்த கொடூரன்கள் உலகிலிருந்தே அழிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு எதிரான கண்டனக்கணைகள் உலகம் முழுதும் இருந்து எழுகின்றன. ஆனால் இந்தியாவில் அவர்களுக்கான ஆதரவு பெருகி வருவதாக தோன்றுகிறது.
Rate this:
Share this comment
எமன் - எமபுரம்,அன்டார்டிகா
19-ஏப்-201716:42:33 IST Report Abuse
எமன்ஐயா சேரன் பெருமாளு, அங்கே நடக்கும் சண்டை மதத்தின் பெயரால் இல்லை. அரசாங்கத்துக்கு எதிராக, ஒரு பிரிவினர் போராடி வருகின்றனர். குண்டு வீசியது யார்? போராளிகளா? அல்லது ராணுவத்தினரா? என்பது தெரியாமல் நாம் கருத்து சொல்வது எவ்வகையில் நியாயம்? குண்டு வீசுவது யாராக இருந்தாலும் அது கண்டிக்கப்படவேண்டும். அவர்கள் தண்டிக்கப்படவேண்டும். குழந்தைகளை பாதிக்கும் இச்செயலுக்கு உடனே உலக நாடுகள் கண்டனம் தெரிவிப்பதோடு, அங்கு நடக்கும் போரை தடுக்க வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
M Ranjith Kumar - Chennai,இந்தியா
19-ஏப்-201716:10:04 IST Report Abuse
M Ranjith Kumar நம்ம ஊர் பத்திரிகையாளர் ஆகா இருந்து இருந்தால் எவன் செத்த நமக்கு என்ன என்று சாக கெடந்தவானை போட்டோ எடுத்து அதை பெரிய செய்தி ஆக்கீ இருப்பார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை