கற்றுக்கொடுக்க வந்தோம், கற்றுக்கொண்டு திரும்புகிறோம்...
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

கற்றுக்கொடுக்க வந்தோம், கற்றுக்கொண்டு திரும்புகிறோம்...

நல்லா படிக்கணும் தங்கம் என்று சொல்லி வெள்ளரிக்காய் விற்கும் ஒரு பெண்மணி தன் பெண் குழந்தைக்கு அன்பு முத்தங்களை வழங்கி ஒரு பள்ளியின் வாசலில் இறக்கிவிடுகிறார், மடியைவிட்டு இறங்கிய அந்தக் குழந்தை வஞ்சகமின்றி தன் தாய்க்கு வாஞ்சையுடன் நிறைய முத்தங்களை வழங்கிவிட்டு அந்தப் பள்ளிக்குள் குஷியுடன் குதித்து ஒடுகிறது.

இவரைப் போல கீரை விற்கும் பெண்,ஆட்டோ ஒட்டுபர்,மாட்டுவண்டி ஒட்டிவருபவர் என்று சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழும் மனிதர்கள் தங்கள் வாழ்க்கையின் நம்பிக்கை நட்சத்திரமாக கருதும் தங்கள் பிள்ளைகளை படிப்பதற்காக அந்தப் பள்ளியில் விட்டுச் செல்கின்றனர்.

அந்தப்பள்ளிதான் ஏழை ஏளிய மக்களுக்கு பைசா செலவு இல்லாமல் கல்வியை தொண்டாக வழங்கிவரும் சேவாலயா பள்ளி.சென்னை திருநின்றவூர் பக்கம் உள்ள காசுவா கிராமத்தில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் இந்தப் பள்ளியில் முதியோர் இல்லம்,ஆர்கானிக் தோட்டம் மற்றும் தெருவில் விடப்படும் மாடுகளை பராமரிக்கும் கோசாலையும் இயங்கிவருவது சிறப்பு.
சேவாலயாவில் படிக்கும் குழந்தைகள் வெறும் படிப்பை படிப்பதுடன் நின்றுவிடாது இங்குள்ள முதியோர்களுடன் பேசவேண்டும்,இயற்கை உரம்கொண்டு காய்கறிகள் பயிரிடுவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளவேண்டும் மேலும் இங்குள்ள கால்நடைகளிடம் அன்பு செலுத்தி உயிரினங்களை நேசிக்க பழகிக்கொள்ள வேண்டும்.

பிளஸ் டூ போன்ற பள்ளி படிப்பை முடித்தவர்கள் கல்லுாரியில் காலடி எடுத்துவைக்க நீண்ட இடைவெளி கிடைக்கும் அந்த இடைவெளியில் பெரும்பாலான குழந்தைகள் எங்கெல்லாம் சுற்றுலாவாக சென்று இன்பமாக இருக்கமுடியும் என்று தேடித்தேடி செல்வர்.
இதே நிலைதான் வெளிநாடுகளிலும் ஆனால் லண்டனைச் சேர்ந்த அபிஷா மர்பி,ரூபி ஸ்வேடல் ஆகிய இரு பள்ளித் தோழிகளுக்கு தங்களது நீண்ட விடுமுறையை இந்தியாவில் செலவழிக்க வேண்டும் அதுவும் ஒரு கிராமத்து குழந்தைகளுடன் என்பதில் ஆர்வமாக இருந்தனர்.அவர்களது தேடலுக்கு சரியான தீர்வாக இருந்ததுதான் சேவாலயா.

கடந்த சில மாதங்களுக்கு முன் இங்கு வந்தவர்களுக்கு குழந்தைகள் இவர்கள் மீது காட்டிய அன்பு மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்திவிட்டது.ஸ்போக்கன் இங்கிலீஷ் என்று சொல்லக்கூடிய ஆங்கில உரையாடல் படிப்பினை பாடமாக சொல்லிக்கொடுத்தனர், கூடுதலாக நடனம் விளையாட்டு என்று தங்களுக்கு தெரிந்ததை எல்லாம் கூட கற்றுக்கொடுத்தனர்.

அபிஷாவுக்கும்,ஸ்வேடலுக்கும் இங்குள்ள கோசாலை நிரம்பப் பிடித்துப் போன விஷயமாகிப் போனது இங்குள்ள கன்றுகளுடன் விளையாடுவதை பெரிதும் விரும்புகின்றனர்.அதே போல வயதில் மூத்த பெரியோர்களின் அன்பிலும் பெரிதும் வசப்பட்டுவிட்டனர்.

எளிய உணவு,பெரியோர்களின் அன்பு,விலங்குகளிடம் நட்பு என்று பல விஷயங்களை கற்றுக்கொண்ட சந்தோஷத்துடன் இருந்தாலும் விரைவில் நாடு திரும்பவேண்டும் என்ற வருத்தமும் இருக்கிறது...
இப்போது போனாலும் இன்னும் ஒரு பெரிய விடுமுறை எடுத்துக்கொண்டு திரும்ப வருவோம் அப்படி வரும்போது எங்கள் குழு இன்னும் பெரிய குழுவாக இருக்கும் ஏனேனில் இங்கே கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது என்றனர் இருவரும்...

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.inAdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
cvgeetha - calicut,இந்தியா
26-ஏப்-201711:07:10 IST Report Abuse
cvgeetha ஒரு கட்டத்தில் மனுஷனுக்கு மிகுதி திருப்தி தருவது எடு போன்ற செயல்களே. வாழ்க தினமலர். தினமலர் நல்ல விஷயங்கள் நெறைய செய்கிறது.
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
22-ஏப்-201706:14:47 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே நன்றி சார்
Rate this:
Share this comment
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
21-ஏப்-201702:31:08 IST Report Abuse
கதிரழகன், SSLC சாதாரண வெள்ளைக்காரங்க நம்ம பண்பாடு கலாசாரம் எல்லாத்திலையும் மரியாதை வைக்க தொடங்கிட்டாக. ஆனா பாரின் மதம் மதம் புடிச்சவுங்களுக்கு தெரிய மாட்டேனுது நம்ம அருமை. வெளிநாட்டு மதகுருமார்கள் அவுங்களுக்கு காசுக்கோ மோகத்தினாலையோ சிங்கிசா அடிக்கிற உள்ளூர் கூட்டம். இவிங்க திருந்தணும். திருத்தணும்.
Rate this:
Share this comment
Cancel
Paranthaman - kadappa,இந்தியா
20-ஏப்-201719:33:37 IST Report Abuse
Paranthaman உலகத்தின் இன்றைய மனித நாகரிகங்களில் மிக சிறந்த நாகரிகம் இந்திய நாகரிகம். அதில் மிகவும் சிறந்தது தமிழனின் நாகரிகம். உணவு உடை தெய்வ வழிபாடு குடும்ப வாழ்க்கை தொழில் உழைப்பு பாசம் நேசம் தர்ம தானம் நேர்மை ஆகியவற்றில் சிறந்தவன் தமிழன். தமிழனாக பிறந்ததற்கு ஒவ்வொருவரும் பெருமை படவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
20-ஏப்-201710:23:23 IST Report Abuse
SENTHIL NATHAN நிறைவான மனிதமே தெய்வீகம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்