என்.டி.பி.சி., - வாரியம் மோதல்: மின் தேவை பூர்த்தியாவதில் சிக்கல் Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மோதல்
என்.டி.பி.சி., - வாரியம்...
மின் தேவை பூர்த்தியாவதில் சிக்கல்

என்.டி.பி.சி., என்ற, தேசிய அனல் மின்கழகத் துக்கும், தமிழக மின் வாரியத்துக்கும் இடையே, திடீர் மோதல் ஏற்பட்டுள்ளதால், கோடை காலத்தில், மின் தேவையை பூர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

என்.டி.பி.சி.,,வாரியம், மோதல், மின்  தேவை, பூர்த்தி,சிக்கல்

திருவள்ளூர் மாவட்டம், வல்லுாரில், என்.டி .பி.சி., - தமிழக மின் வாரியத்துக்கு, கூட்டு அனல் மின் நிலையம் உள்ளது. இங்கு தலா, 500 மெகாவாட் திறனில், மூன்று அலகுகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

அதில், தமிழகத்துக்கு, 1,070 மெகாவாட் மின் சாரம் ஒதுக்கப்பட்டு உள்ளது. மின் தேவையை பூர்த்தி செய்வதில், வல்லுார் மின் நிலையம் முக்கிய பங்கு வகிக்கிறது. மின் வாரியம், 1,156 கோடி ரூபாய் நிலுவைத் தொகை தராததால், வரும், 26ல் இருந்து, மின் சப்ளையை நிறுத்த போவதாக, என்.டி.பி.சி., தெரிவித்துள்ளது.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: வல்லுாரில் கூட்டு மின் நிலையம், 10 ஆயிரத்து, 80 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது. அதில், 70 சதவீத தொகையை, என்.டி.பி.சி., நிறுவனம், மத்திய நிதி நிறுவனத்திடம் இருந்து, கடன் வாங்கி

செலவு செய்தது. எஞ்சிய, 30 சதவீத நிதியில், மின் வாரியம், 15 சதவீதம் முதலீடு செய்துள்ளது. கூட்டு ஒப்பந்தத்தின்படி, மின் நிலைய எரிபொருள், உற்பத்தி, பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து பணி களையும், என்.டி.பி.சி., தான் மேற்கொள்ள வேண்டும்.

வல்லுார் மின் நிலையத்துக்கு, ஒடிசாவில் உள்ள, மகாநதி சுரங்கத்தில் நிலக்கரி ஒதுக்கப்பட்டு உள்ளது. அங்கிருந்து, அந்நிறுவனத்துக்கு நிலக்கரி வர தாமதமாகிறது. இதனால், கடன் அடிப்படை யில், மின் வாரியத்தின் வட சென்னை மின் நிலை யத்தின் நிலக்கரி, வல்லுார் மின் நிலையத்துக்கு வழங்கப்பட்டது. எண்ணுார் துறைமுகத்தில் இருந்து, வல்லுார் மின் நிலையத்துக்குநிலக்கரி கொண்டு செல்ல, ஒரு, 'கன்வேயர் பெல்ட்' மட்டுமே உள்ளது;அதுவும் சரியான வழியில் இல்லை.

இதனால், அடிக்கடிகன்வேயர் பெல்ட் அறுந்து, நிலக்கரி எடுத்து செல்ல முடியாததால், வல்லுாரில் மின் உற்பத்தி பாதிக்கிறது.தற்போது, வட சென்னை மின் நிலையத்துக்கு, நிலக்கரி தேவைப்படுவதால், வல்லுார் மின் நிலையத்துக்கு தர முடியவில்லை. எனவே, அந்த மின் நிலையத்தில் உற்பத்தி பாதிக் கும் சூழல் உள்ளது. அதை மறைக்கவே, பணம் தரவில்லை எனில், மின் சப்ளை நிறுத்த போவதாக, என்.டி.பி.சி.,தெரிவிக்கிறது.

மின் வாரியம், 2016 நவம்பரில் இருந்து தான், என்.டி. பி.சி.,க்கு, பணம் தர வேண்டும்.தனியார் நிறுவனங் களே, மின் கொள்முதலுக்கான பணத்தை கேட்டு நெருக்கடி தரவில்லை. ஆனால், பொதுத் துறை நிறுவனமான, என்.டி.பி.சி., பணம் தரவில்லை எனில், மின் சப்ளை நிறுத்த போவதாக கூறுவது ஏற்கத் தக்கதல்ல. அந்த நிலை ஏற்பட்டால், மின்

Advertisement

தேவையை பூர்த்தி செய்வதில் நெருக்கடி ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து, என்.டி.பி.சி., அதிகாரி ஒருவர் கூறியதாவது:


வல்லுார் மின் நிலையத்தில் இருந்து, தமிழகம், தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங் களுக்கு, மின் சப்ளை செய்யப்படுகிறது. எரி பொருள், கடனுக்கான வட்டி உள்ளிட்ட செலவி னங்களை மேற்கொள்ள பணம் தேவை. மின்சாரம் வாங்கிய மாநிலங்கள், பணம் தந்தால் தான் மட்டுமே, அந்த செலவை சமாளிக்க முடியும். ஆனால், கூட்டு நிறுவன மான தமிழ்நாடு மின் வாரியம் பணம் தராமல் உள்ளது.

என்.டி.பி.சி., உயரதிகாரிகள் நெருக்கடியால் தான், மின் வாரியம் உட்பட, பணம் தராத மாநிலங் களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. இதனால், 89 கோடி ரூபாய் நிலுவை வைத்தி ருந்த கர்நாடகா, 49 கோடி ரூபாயை உடனடி யாக வழங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
20-ஏப்-201716:52:43 IST Report Abuse

ganapati sbதவணை முறையில் செலுத்துகிறேன் என ஒரு முன்பணம் கொடுத்து emi கட்டுவது போல நிலுவை பணத்தை கட்டலாம்

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-ஏப்-201709:26:12 IST Report Abuse

Srinivasan Kannaiyaபணம் தரவில்லை என்றால் என்ன செய்வது... என்னை கேட்டல் இந்த மின்சார வாரியம் கடனில் மூழ்கியதற்கு முக்கிய காரணம் எம் ஜி ஆர் தொடங்கி ஜெயலலிதா வரை உள்ள திராவிட தலைவர்கள்தான்... அவர்கள் குடும்ப சொத்து போல எல்லாவற்றையும் இலவசம் என்று கொடுத்து விட்டால் கடன் வராது என்ன செய்யும்... அவர்களிடம் இருந்துதான் இந்த கடனை வசூல் செய்யவேண்டும்... அன்றே எப்பிடி பராமரிப்பு செலவை பார்ப்பது... நிலக்கரி எப்பிடிவாங்குவது... என்று கொஞ்சம் மாவது நினைத்து பார்த்து இருந்தால்.. இந்த நிலை வந்து இருக்குமா... ஒன்று மட்டும் இந்த அரசியல்வாதிகள் அறிவுக்கு தெரியவேண்டியது.. எந்த ஒரு பொருளையும் உற்பத்தி விலைக்கு விக்கவில்லை என்றால் நிறுவனத்தை இழுத்தது மூட வேண்டியதுதான்... அதுதான் தமிழ் நாடு மின்சார வாரியத்திலும் நடந்தது... இலவசங்கள் கொடுத்தது யார்.. பொறுப்பு யார் என்று பொதுமக்களே முடிவு செயது கொள்ளட்டும் ...இதில் அந்த நிறுவனத்தின் அதிகாரிகளோ...தொழிலாளர்களோ முற்றிலும் பொறுப்பாளி ஆக மாட்டார்கள்..

Rate this:
sam - Doha,கத்தார்
20-ஏப்-201707:58:36 IST Report Abuse

samஇந்த ஆட்சியில் எல்லாமே தட்டுப்பாடு. இப்போது மின்சாரமும் சரியாய் கிடைக்க போவது இல்லை. வாழ்க நம் மாநிலம்.

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
20-ஏப்-201704:36:02 IST Report Abuse

Kasimani Baskaranவாவ்... தமிழகம் திரும்பவும் மின் மிகை மாநிலமாகப் போகிறதா?

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement