'டாஸ்மாக்' கடையை மூடணும்: 7 வயது சிறுவன் போராட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'டாஸ்மாக்' கடையை மூடணும்: 7 வயது சிறுவன் போராட்டம்

Updated : ஏப் 20, 2017 | Added : ஏப் 19, 2017 | கருத்துகள் (17)
Advertisement
'டாஸ்மாக்' கடையை மூடணும்: 7 வயது சிறுவன் போராட்டம்

படூர்: படூரில், புதிதாக திறக்கப்பட்டுள்ள, 'டாஸ்மாக்' மதுக் கடையை மூடக்கோரி, அப்பகுதியைச் சேர்ந்த, 7 வயது சிறுவன், மதுக் கடை அருகே, படிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டான்.

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்தில், மாநில நெடுஞ்சாலைகளில் செயல்பட்ட, டாஸ்மாக் கடைகள், நீதிமன்ற உத்தரவின் படி மூடப்பட்டதால், ஒன்றியத்தின் பல பகுதிகளில் புதிதாக மதுக் கடைகள் அமைக்கப்படுகின்றன.

அடித்து உடைப்பு : அவற்றில், கேளம்பாக்கம் அடுத்த படூர் கிராமத்தில், துலுக்காணத்தம்மன் கோவில் தெருவில், 15ம் தேதி புதிய மதுக் கடை திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பகுதிவாசிகள், அன்றிரவே அக்கடையில் உள்ள மது பாட்டில்களை அடித்து, உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால், அப்பகுதியைச் சேர்ந்த, 60 பெண்கள் உட்பட, 132 பேர் மீது கேளம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஒன்பது பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், படூர், சிவன் கோவில் தெருவை சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மகன் ஆகாஷ், 7, என்ற சிறுவன், மதுக் கடையை மூடக்கோரி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டான். இரண்டாம் வகுப்பு முடித்து, 3ம் வகுப்பிற்கு செல்லும் அச்சிறுவன், பள்ளி சீருடையில், தன் புத்தக பையை எடுத்துக்கொண்டு, பிரதான சாலையிலிருந்து, 3 கி.மீ., நடந்து சென்றான்.

நாசமாகின்றன : மதுக் கடைக்கு அருகே சென்று, அப்பகுதியில் அமர்ந்து படிக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்றான். அதுகுறித்து அறிந்த, கேளம்பாக்கம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர், சிறுவனை வழி மறித்து, பேச்சு நடத்தி, திருப்பி அனுப்பினர். அங்கிருந்து நகர்ந்த அச்சிறுவன், சிறிது தொலைவு சென்றதும், மீண்டும் தரையில் அமர்ந்து, புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தான்.

அப்போது, அச்சிறுவன், ''எங்கு வேண்டுமானாலும் மதுக் கடைகளை திறக்கின்றனர். ஆனால், என்னை மட்டும், இங்கு அமர்ந்து படிக்கக்கூடாது என்கின்றனர்.
''மதுக் கடைகளால் பல குடும்பங்கள் நாசமாகின்றன. அதனால் தான் இக்கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளேன்,'' என்றான். பின், மீண்டும் அப்பகுதிக்கு வந்த போலீசார், சிறுவனை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பினர். சிறுவனின் போராட்டத்தால், 12:00 மணிக்கு திறக்க வேண்டிய மதுபானக் கடை, 3:00 மணி வரை திறக்கப்படவில்லை.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Senthilkumar Yadav - Ramnad(dt),Thathankudi.,இந்தியா
20-ஏப்-201722:54:34 IST Report Abuse
Senthilkumar Yadav Congratulations boy..
Rate this:
Share this comment
Cancel
Muthukumaran - Kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ
20-ஏப்-201721:26:37 IST Report Abuse
Muthukumaran இந்த சிறுவன் போராட்டம் தமிழக அரசை செருப்பால் அடித்ததற்கு சமம். மானம் கெட்ட தமிழக அரசே இனியாவது திருந்து????????????????????????????
Rate this:
Share this comment
Cancel
bala -  ( Posted via: Dinamalar Android App )
20-ஏப்-201721:12:44 IST Report Abuse
bala சிறந்த முயற்சி மது இல்லாத தமிழ்நாடு உருவாக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Rajamanickam - Madurai,இந்தியா
20-ஏப்-201717:30:43 IST Report Abuse
Rajamanickam முயற் சிக்கு நன்றி, இந்த அரசுக்கு இல்லாத அக்கறை உனக்கு , இனி யாவது இந்த அரசு திருந்தட்டும்
Rate this:
Share this comment
Cancel
raman - Madurai,இந்தியா
20-ஏப்-201711:30:08 IST Report Abuse
raman ஆகாஷுக்கும் அவரது பெற்றோருக்கும் வணக்கங்கள். கவலைப்பட வேண்டாத இந்த வயதில், சமூகத்துக்காக கவலைப்படவைத்த, அரசும், போலீசும் , மதுக்கடை வைப்பவர்களுக்கும், தண்டனைக்குரியவர்கள். அச்சிறுவனின் படத்தைப் பார்த்தால் பெருமிதமும், அழுகையும் வருகின்றன. ஆகாஷ், உனக்காகவாவது, மதுக்கடையை வைக்கவேண்டாம்.
Rate this:
Share this comment
Cancel
A shanmugam - VELLORE,இந்தியா
20-ஏப்-201710:52:45 IST Report Abuse
A shanmugam சின்ன சிறு வயதில் சமுதாய சீர்கேடுக்கு(மதுக்கடை ஒழிப்பு) குரல் கொடுக்கும் அச் சிறுவன் வாழ்க பல்லாண்டு.
Rate this:
Share this comment
Cancel
R.Nagarajan - CHENNAI,இந்தியா
20-ஏப்-201706:59:51 IST Report Abuse
R.Nagarajan ஒரு சிறந்த புதல்வனை பெற்றெடுத்த அந்த பெற்றோருக்கு என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். வயிற்றில் இருக்கும் சிசு வந்து மதுவிற்கு எதிராக போராடினால் கூட இந்த மானங்கெட்ட போலீசும் அரசும் விழித்துக்கொள்ளாது.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
20-ஏப்-201706:08:04 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் குட்டி காந்திடா நீ.. சாராய புட்டிக்கு பாதுகாப்பு தரும் பொறம்போக்கு அரசும், போலீசும் இருக்கு.. பாவம்டா நீ.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
20-ஏப்-201706:06:44 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் /அப்போது, அச்சிறுவன், ''எங்கு வேண்டுமானாலும் மதுக் கடைகளை திறக்கின்றனர். ஆனால், என்னை மட்டும், இங்கு அமர்ந்து படிக்கக்கூடாது என்கின்றனர். // பிஞ்ச செருப்பால் அடித்தான் பாரு இந்த பிஞ்சு..
Rate this:
Share this comment
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
20-ஏப்-201706:04:36 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN நாடு குட்டு சுவராகி போய்ட்டது. படிக்கும் காலத்தில் படிக்காமல் இந்த ஊடகங்களும் அரசியல்வாதிகளும் பிள்ளைகளை தவறான பாதைக்கு அழைத்து ஊக்கபடுத்துகிறார்களே என்னங்க. ஓட்டு கேட்க மூன்று வயது சிறுவர்கள் கள்ளுக்கடை மூட ஏழு வயது சிறுவன் வேடிக்கையாக உள்ளதே. இனி நாட்டுக்கு தேவை இராணுவம்.
Rate this:
Share this comment
v sreenivasan - chennai,இந்தியா
20-ஏப்-201709:21:25 IST Report Abuse
v sreenivasanஅந்த சிறுவன் எதெற்காக செய்தான் என்று நன்றாக படித்துவிட்டு கமெண்ட் பண்ணுங்க சார் நல்லது செய்தால் பாராட்ட வேண்டும்...
Rate this:
Share this comment
Siva - Chennai,இந்தியா
20-ஏப்-201720:36:02 IST Report Abuse
Sivaஏழு வயது பையனுக்கு எப்படி தெரியும் போராட்டம் நடத்த வேண்டும் என்று இது வெறும் விளம்பரத்திற்காக பின்னே இருந்து யாரோ செய்யும் வேலை இது .......
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-ஏப்-201722:59:33 IST Report Abuse
தமிழ்வேல் 4 வயசு பையன் தண்ணி அடிக்கிற வீடியோவை சாரு பார்க்கலப் போல....
Rate this:
Share this comment
Siva - Chennai,இந்தியா
24-ஏப்-201715:18:21 IST Report Abuse
Sivaநான் பாத்ததில்லை ஆனா அதை ஊத்தி கொடுத்த ஒரு கயவன் இருந்திருப்பான் இல்ல .... உண்மை எது விளம்பரம் எது அப்படின்னு சிந்திக்க தெரியாம உணர்ச்சி வசப்பட்டு இன்னைக்கு என்னன்னவோ ஆளாளுக்கு பேசறாங்க ..... மத்தபடி நல்ல விஷயம் தான் ......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை