பா.ஜ., தலைவர்கள் அத்வானி, உமா பாரதியிடம் மீண்டும் விசாரணை: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு Dinamalar
பதிவு செய்த நாள் :
விசாரணை!
அத்வானி, உமா பாரதியிடம் மீண்டும்...
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் கோர்ட் உத்தரவு

புதுடில்லி: பாபர் மசூதியை இடிக்க சதித் திட்டம் தீட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து, பா.ஜ., மூத்த தலைவர்கள், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை, சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளது. இந்த வழக்கை தினமும் விசாரித்து, இரு ஆண்டுகளுக்குள் தீர்ப்பளிக்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு உத்தரவு களையும் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ளது.

பா.ஜ., தலைவர்கள், அத்வானி, உமா பாரதி, மீண்டும், விசாரணை

உ.பி.,யின் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, 1992 டிச., 6ல் இடிக்கப்பட்டது. இது தொடர்பாக, இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அடையாளம் தெரியாத கரசேவகர்கள் மீது, லக்னோ கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப் பட்டது. மசூதியை இடிக்க சதித் திட்டம் தீட்டியதாக, பா.ஜ., மூத்த தலைவர்கள், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உட்பட, 21 பேர் மீது, ரேபரேலி சிறப்பு கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதில், அத்வானி உட்பட, 13 பேர் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்து, விடுவித்தது ரேபரேலி கோர்ட். வழக்கில் குற்றஞ்சாட்டப் பட்ட, எட்டு பேர் உயிரிழந்துவிட்டனர். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ரேபரேலி கோர்ட் உத்தரவை, அலகாபாத் ஐகோர்ட், 2010ல் உறுதி செய்தது. இதை எதிர்த்து, சி.பி.ஐ., சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த, நீதிபதிகள், பினாகி சந்திர கோஸ், ஆர்.எப்.நாரிமன் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு, நேற்று அளித்த தீர்ப்பு:

இந்த வழக்கில் இருந்து, அத்வானி உள்ளிட் டோர் விடுவிக்கப்பட்டதை ஏற்க முடியாது. இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க வேண்டும்.

இந்த சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப் பட்டுள்ள இரு வழக்குகளையும், லக்னோ கோர்ட், ஒருசேர விசாரிக்க வேண்டும். இதற்காக, முதலில் இருந்து விசாரணை நடத்த வேண்டிய அவசிய மில்லை. வழக்கை விசாரிக்கும் நீதிபதியை மாற்றக் கூடாது.இந்த வழக்கில், அடுத்த நான்கு வாரத்துக் குள் விசாரணையை துவக்க வேண்டும்.

தினமும் விசாரணை நடத்த வேண்டும். இரு ஆண்டுகளுக்குள், இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப் பட வேண்டும். வழக்கின் விசாரணையில் தாமதம் ஏற்படுவதாக கருதினால்,எங்களை அணுகலாம். இவ்வாறு சுப்ரீம் கோர்ட் தன் உத்தரவில் கூறியுள்ளது.

தீர்ப்பை படித்த பின் கருத்து


சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்து, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய சட்ட அமைச்சருமான ரவி சங்கர் பிரசாத் கூறுகையில், ''பா.ஜ., மூத்த தலைவர் களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் மீது, கட்சி மிகுந்த மரியாதை வைத்து உள்ளது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை படித்த பின்பே, இதில் கருத்தை தெரிவிக்க முடியும்,'' என்றார். மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், ''இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய அமைச்சர் உமா பாரதி, பதவி விலக வேண்டிய அவசியம் ஏற்படவில்லை,'' என்றார்.

யார் யார் மீது வழக்கு?


பாபர் மசூதியை இடிக்க சதித் திட்டம் தீட்டியதாக வழக்கு தொடரப்பட்டோர் விபரம்: பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமா பாரதி, தற்போது ராஜஸ் தான் கவர்னராக உள்ள, அப்போதைய, உ.பி., முதல் வர் கல்யாண் சிங்,சிவசேனா தலைவர் பால் தாக்கரே (இறந்து விட்டார்), வி.எச்.பி., தலைவர் ஆச்சார்யா கிரிராஜ் கிஷோர் (இறந்து விட்டார்), வினய் கடியார், விஷ்ணு ஹரி டால்மியா, சதீஷ்

Advertisement

பிரதான், சி.ஆர்.பன்சால், அசோக் சிங்கால் (இறந்துவிட்டார்), சாத்வி ரிதாம்பரா, மஹந்த் அவைத்நாத் (இறந்து விட்டார்), ஆர்.வி. வேதாந்தி, பரம்ஹன்ஸ் ராம் சந்திர தாஸ் (இறந்துவிட்டார்), ஜகதீஷ் முனி மஹராஜ், பி.எல்.சர்மா, நிருத்ய கோபால் தாஸ், தரம் தாஸ், சதீஸ் நாகர், மோரேஷ்வர் சாவே (இறந்துவிட்டார்).

பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, உ.பி.,யில், பா.ஜ., தலைமையிலான அரசின் முதல்வராக இருந்த கல்யாண் சிங், தற்போது, ராஜஸ்தான் கவர்னராக உள்ளார். அரசியலமைப்பு சட்டப் பதவியை வகிப்பதால், அவர் மீது விசாரணை நடத்த முடியாது. அதனால், கவர்னர் பதவியில் இருந்து அவர் விலகியதும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கலாம் என, சுப்ரீம் கோர்ட் தன் உத்தரவில் கூறியுள்ளது.

தண்டிக்க வேண்டும்


சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்து, காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறியதாவது:பாபர் மசூதி இடிப்பு வழக்கில், குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். எவ்வித பயமோ, பாகுபாடோ இல்லாமல், இந்த வழக்கில் நேர்மையான முறையில் விசாரணை நடக்க வேண்டும். மதம், இனம், மொழி, பதவி ஆகியவை சட்டத்துக்கு கிடை யாது என்பதை நிரூபிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

அவசர ஆலோசனை


அத்வானி உள்ளிட்ட, பா.ஜ., தலைவர்கள் மீது விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தர விட்டுள்ளதையடுத்து, அந்த கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பிரதமர் மோடி, மூத்த மத்திய அமைச்சர்கள், பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா உள்ளிட் டோருடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். அயோத்தி இயக்கத்தில், எனக்கும் ஒரு பங்கு உள்ளது என்பதில் பெருமைப்படு கிறேன். இதற்காக, நான் மன்னிப்பு கேட்க வேண்டிய தில்லை. ராமர் கோவிலுக்காக, என் உயிரையும் தியாகம் செய்யத் தயாராக உள்ளேன். -உமா பாரதி, மத்திய அமைச்சர், பா.ஜ.,


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
20-ஏப்-201723:19:28 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்//தினமும் விசாரணை நடத்த வேண்டும். இரு ஆண்டுகளுக்குள், இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப் பட வேண்டும்// - ரெண்டு வருசத்துக்கு கிழ பாஜக தலைவர்களுக்கு செக். வாயை மூடிக்கிட்டு இருக்கணும் என்று திட்டம்.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
20-ஏப்-201716:53:36 IST Report Abuse

Endrum Indianபாவம் சுப்ரீம் கோர்ட்டுக்கு வேறு ஏதும் பெரிதாக வேலை இருப்பதக்கத்தெரியவில்லை. இதில் கொஞ்சம் தேறுமா என்று பார்க்கின்றது.

Rate this:
Sampath Kumar - chennai,இந்தியா
20-ஏப்-201716:36:51 IST Report Abuse

Sampath Kumarவேஷம் நல்லா காட்டுறாங்க இதில் நிச்சயம் உள்ள குத்து உள்ளது

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
20-ஏப்-201716:26:09 IST Report Abuse

ganapati sbஇப்போதாவது பாரத கலாச்சாரத்திற்கு நல் உதாரணமாக யுகம் கடந்தும் நிலைக்கும் ஸ்ரீராமரின் அவதார தலமான அயோத்தியில் ஆலயம் அமையட்டும் அந்நியர்களின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து நடக்கும் போராட்டம் அத்வானி ஆதித்யநாத் தலைமையிலாவது வெல்லட்டும்

Rate this:
Siraj Uddin - doha,கத்தார்
20-ஏப்-201718:08:12 IST Report Abuse

Siraj Uddinகணபதி அவர்களே வரலாற்றை கொஞ்சம் திரும்பி பாருங்கள் உண்மை எது பொய் எது என்பது புரியும், நாம் மதம் கடந்து வாழ்ந்தவர்கள், பள்ளி படிப்பிலேயும் சேர்த்து தான் சொல்கிறேன். பள்ளி தோழன் சிராஜ் அம்மாபேட்டை...

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
21-ஏப்-201711:41:17 IST Report Abuse

ganapati sbஇந்த பாரத மண்ணின் கலாச்சாரம் போற்றும் இந்துக்கள் சகோதரர்கள் ஆகையால் இயல்பான சில சகோதர சண்டை இங்குண்டு. அதனால அல்லது பொருள் தேடலால் விலகி சென்று அரேபிய ஆங்கிலேய கலாச்சாரம் போற்றும் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் நண்பர்கள். குடும்பத்திலிருந்து பெறுவது கலாச்சாரம் நட்பிலிருந்து பெறுவது அனுபவம். என்னை போல முக அமைப்பு கொண்ட வேறொருவர் உங்கள் நண்பராக இருந்திருக்க கூடும் நான் அவனில்லை ஆனால் எனக்கும் பள்ளி கல்லூரி அலுவலகம் ஆன்மிகம் வரை அனைத்து மதத்தினரின் நட்பு உண்டு நட்பிற்கு நன்மை செய்யும் அதே நேரம் நம் உறவினர்களையும் உயர்த்துவது நமது கடமைதான் தோழரே நண்பரின் கேளிக்கைக்கு உதவுவதை விட சகோதரரின் படிப்பிற்கு உதவுவதே மேன்மையானது....

Rate this:

திராவிடத்தால் விழிந்தோம் தேசியத்தால் எழுந்தோம் இதற்கெல்லாம் சுறுசுறுப்பு காட்டும் நீதிமன்றம் என் இந்த விஷயத்தில் கவனம்செலுத்துவதில்லை இஸ்லாமிய வந்தேறிகள், 1856 இந்து கோயில்களை இடித்து மசூதிகளை கட்டியுள்ளனர். அதாவது இஸ்லாமியர்களால் இடிக்கப்பட்ட கோயில்களின் எண்ணிக்கையல்ல 1856, கோயில்களை இடித்து கட்டப்பட்ட மசூதிகளின் எண்ணிக்கைதான் 1856. இஸ்லாமியர்களால் இடிக்கப்பட்ட கோயில்களின் பட்டியல் எடுத்தால் அது இன்னும் பல ஆயிரங்களை தாண்டும். மாநில வாரியாக கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் தமிழ்நாட்டில் மட்டும் 175 மசூதிகள் கோயில்களை இடித்தும், சிதைத்தும், கோயில் நிலங்களை ஆக்கிரமித்தும் கட்டப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேசம் - 299 கர்நாடகம் - 192 குஜராத் - 170 ராஜஸ்த்தான் - 170 மத்தியபிரதேசம் - 151 மகாராஷ்ட்ரா - 143 ஆந்திரா - 142 வங்காளம் - 102 பீகார் - 77 ஹரியானா - 77 டில்லி - 72 காஷ்மீர் - 52 ஒடிசா - 12 பஞ்சாப் - 14 கேரளா - 2 அசாம் - 2 லட்சத்தீவு - 2 ஹிமாச்சல் - 1 தமிழகம் - 175

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
20-ஏப்-201723:11:19 IST Report Abuse

K.Sugavanamகுறிப்பாக புத்த,சமண மத தலங்கள்.....

Rate this:
20-ஏப்-201711:22:08 IST Report Abuse

எப்போதும் வென்றான் @ ...தேச நாசா ... போய் வேற வேலை இருந்தா பாரு... நீ என்னதான் மோடிக்கு HMV ஆக இருந்தாலும் பிஜேபி இங்கே வேலைக்கு ஆகாது... ஆனால் தமிழ்நாட்டில் நடக்காது... பிஜேபி யின் சுய அரூபம் தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும்...

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-ஏப்-201709:04:56 IST Report Abuse

Srinivasan Kannaiyaநீதிமன்றம் நடக்கவேண்டாமா... ஏதாவது பரபரப்பானா வழக்கு வேண்டாமா... அதுதான் இந்த ஏற்பாடு...

Rate this:
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
20-ஏப்-201707:21:18 IST Report Abuse

தங்கை ராஜாவானளாவிய அதிகாரம் படைத்த அமெரிக்க அதிபரின் உத்தரவைக்கூட அந்நாட்டின் சாதாரண நீதிபதி கேள்வி கேட்க முடிகிறது. பாகுபாடு காட்டும் உத்தரவுகளை நிறுத்தி வைக்க முடிகிறது. பயங்கரவாதிகளின் சொர்க்கமான பாகிஸ்தானில் உள்ள கோர்ட்டுகளால் இன, மதவாதத்துக்கு எதிரான தீர்ப்புக்களை கொடுத்து சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க முடிகிறது. உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்து அனைவரின் கண் முன்னால் ஒளிவு மறைவின்றி நடத்தப்படட கொடூரத்துக்கு தண்டனை கிடையாது என்று குற்றவாளிகளை சுதந்தரமாக விடும் துணிச்சல் நம் நீதிமன்றங்களுக்கு மட்டுமே உண்டு. இந்த தீர்ப்பு அதை மாற்றிக் காட்டுமா........பார்க்கலாம், ஓரிரெண்டு நேர்மையாளர்களும் இருக்கத்தானே செய்வார்கள்.

Rate this:
kc.ravindran - bangalore,இந்தியா
20-ஏப்-201714:29:32 IST Report Abuse

kc.ravindranநடந்தது நடந்துவிட்டது. நடக்க கூடாததுதான் . எனக்கு இப்படி தோன்றுகிறது அதாவது பாபர் மசூதி தமிழ் நாட்டில் நிலைகொண்டு இருந்திருக்குமேயானால் இந்த அசம்பாவிதம் நடைபெற வாய்ப்பே இருந்திருக்காது. எல்லா தெய்வவும் ஒன்று என நினைப்பவர்கள் தான் தமிழ் நாட்டில் அதிகம். அதிருக்கட்டும். பிரச்சினை உள்ள நிலத்தில் மசூதியை கட்டாதே என்பார்கள் அந்த சமூகத்தில் பட்ட மூதறிஞர்கள். அந்த காலகட்டத்தில் என்ன நடந்தது என்பதை பற்றி இப்போது பேசி என்ன பயன். எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் யாமொன்றும் அறியோம் பராபரமே என்றார்கள் நம்மிடேயே வாழ்ந்த மூதறிஞர்கள்....

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
20-ஏப்-201704:16:16 IST Report Abuse

Kasimani Baskaranஆக்கிரமிப்புகளை அகற்றியது குற்றமா? இந்துக்கோவில் அங்கு இருந்ததாக தொல்லியல் ஆய்வு தெளிவாக காட்டுகிறது... காஷ்மீரில் இருந்த ஏராளமான இந்துக்கோவில்களை அழித்து விட்டார்களே அதற்க்கு நீதிமன்றம் என்ன செய்தது?

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
20-ஏப்-201709:33:24 IST Report Abuse

balakrishnanஅரைச்ச மாவையே அரைக்க்காதீங்க, ஏதாவது புதுசா சொல்லுங்க, உங்க ஆட்சி தானே இருக்குது எங்கெங்கு கோயில் பிடிக்கப்பட்டுள்ளது இடித்தது யார், இந்து அரசர்கள் எத்தனை கோயில்களை இடித்துள்ளார்கள், எத்தனை அரண்மனைகளை இடித்துள்ளார்கள் எல்லாம் கணக்கெடுங்கள், திரும்ப திரும்ப ஒரே பொய்யை எத்தனை தடவை பேசுவீங்க, எங்கள் சோழ மகாராஜாக்கள் வாழ்ந்த மாளிகைகள், அரண்மனைகள் எங்கே, பாண்டிய மன்னர்கள் வாழ்ந்த இடங்கள் எங்கே, அழித்தது யார் அதையும் கண்டுபிடியுங்கள்...

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
20-ஏப்-201709:35:30 IST Report Abuse

balakrishnanஇதுக்கு பெயர் தான் வடஇந்திய அரசியல், ஒருவர் முதுகில் ஒருவர் குத்துவது அவர்களுக்கு சகஜம்...

Rate this:
எமன் - எமபுரம்,அன்டார்டிகா
20-ஏப்-201710:07:13 IST Report Abuse

எமன்mr காசிமணி பாஸ்கரன், ஆக்கிரமிப்புனு எத சொல்றிங்க? இந்த அத்வானி எந்த ஊர்ல பிறந்தவர்? ஏற்கெனவே 25 வருஷம் முடிஞ்சிபோச்சு. இன்னும் எப்போ தான் தீர்ப்பு சொல்றது? நானும் இந்தியன் தான், இந்தியாவின் கலாச்சாரத்தையும் மாண்புகளை மதிக்கிறவன் தான். இதுபோல மக்களை தூண்டிவிட்டு லாபம் சம்பாதிக்கிற அரசியவாதிகளை முதல்லே ஒதுக்கி வெச்சாலே நமக்குள்ளாற பிரிவினை இருக்காது....

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
20-ஏப்-201710:42:02 IST Report Abuse

K.Sugavanamஇந்துக்கோயில் அங்கு முதலில் எதன் மீது கட்டப் பட்டது? கட்டாந்தரையாகவா இருந்து இருக்கும்.. எதையாவது அகற்றிவிட்டுதான் முதல் கோயில் கட்டப் பட்டு இருக்கும்? எனவே நதிமூலம், ரிஷிமூலம் பார்த்தல் சர்வ நாசம் தான் ஏற்படும்....

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
20-ஏப்-201710:53:39 IST Report Abuse

Kasimani Baskaran"திரும்ப திரும்ப ஒரே பொய்யை எத்தனை தடவை பேசுவீங்க" - திருட்டு கூட்டத்துடன் சேர்ந்தவுடன் பொய் சொல்ல உங்களுக்கு தைரியம் நிறைய வருகிறது.. சரித்திரத்தை அறிந்து கொண்டு பேசுங்கள்... இன்னும் 2500 கோவில்கள் பாதி ஆக்கிரமிப்புடன் அப்படியே இருக்கின்றன.... காஷ்மீரில் எண்ணிலடங்காத கோவில்கள் உடைக்கப்பட்டுள்ளது....

Rate this:
எமன் - எமபுரம்,அன்டார்டிகா
20-ஏப்-201711:28:54 IST Report Abuse

எமன்mr காசிமணி பாஸ்கரன் எனக்கு கோயில் கோயிலா அலையரத்துக்கு நேரமில்லையே. ஒரு வேளை உங்களுக்கு அது தான் வேலையாயிருந்தால் கொஞ்சம் எத்தனை கோயிலுன்னு லிஸ்ட் போட்டு குடுங்க...

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
20-ஏப்-201717:10:19 IST Report Abuse

Kasimani Baskaran"எதையாவது அகற்றிவிட்டுதான் முதல் கோயில் கட்டப் பட்டு இருக்கும்?" - இராமன் பிறந்த இடம்.. இதையே வந்தேறிகளிடம் அடிமையான மனிதர்களிடம் கேளுங்கள்......

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
20-ஏப்-201717:11:23 IST Report Abuse

Kasimani Baskaran"கோயில் கோயிலா அலையறத்துக்கு நேரமில்லையே" - அதனால்த்தான் இது போன்ற புத்தியில்லாத கருத்துக்கள்.......

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
20-ஏப்-201717:17:19 IST Report Abuse

Kasimani Baskaran"மக்களை தூண்டிவிட்டு லாபம் சம்பாதிக்கிற அரசியவாதிகளை" - இதில் மக்களை தூண்டி விட ஒன்றும் இல்லை... மசூதி வேண்டும் என்றால் வேறு இடத்தில் கட்டலாம் - அல்லது இஸ்லாமியரின் சொத்துக்களில் கட்டலாம்... கோவில்களை இடித்து கட்டுவது அக்கிரமம்... கோவில்கள் எங்கள் கலாச்சாரத்தின் அடையாளம்... கோவில்களை இடித்து கட்டப்பட்ட மசூதிகள் ஏராளம்... அத்தனையும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.. பல புத்தகங்கள், புகைப்படங்கள்... விஞ்ஞான ஆய்வுக்கட்டுரைகள் பல உண்டு. சரித்திரத்தை வெள்ளை அடிக்கலாம் ஆனால் உண்மைகளை மறைக்க முடியாது......

Rate this:
எமன் - எமபுரம்,அன்டார்டிகா
21-ஏப்-201710:10:31 IST Report Abuse

எமன்அப்டியா mr காசிமணி பாஸ்கரன் பரவால்லியே அப்போ "கோயில் கோயிலா சுத்தறது தான் உங்க வேலை போலருக்கு". வளர்க உங்கள் ஆன்மிக பணி. என்ன செய்ய "எங்களோட அறிவை தான் உங்களுக்கு தானமா தாரை வார்த்து கொடுத்துட்டோமே". எங்கள் சார்பாக எல்லா கோயில்களையும் மீட்டெடுக்கும் பணியை தாங்கள் தொடர "அனைத்து கடவுள்களும் தங்களுக்குள் சண்டை சச்சரவின்றி" உங்களுக்கு உதவிபுரிய வேண்டுகிறேன்....

Rate this:
Karthik - Chennai,இந்தியா
20-ஏப்-201703:05:18 IST Report Abuse

Karthikசீக்கிரமா முடிக்க பாருங்க. இன்னும் ஒரு தலைமுறைக்கு தள்ளி விடாதீர்கள்

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement