'எச் -- 1பி' விசா கட்டுப்பாடு அரசாணை; அமெரிக்க அதிபர் கையெழுத்து Dinamalar
பதிவு செய்த நாள் :
'எச் -- 1பி' விசா கட்டுப்பாடு அரசாணை
அமெரிக்க அதிபர் கையெழுத்து

வாஷிங்டன்: வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் வேலை பார்ப்பதற்காக அளிக்கப்படும் 'எச் - 1பி' விசா முறையில் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வரும் புதிய அரசாணையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார்; இது, இந்தியர்களுக்கு மிகப் பெரிய பாதிப்பாக அமையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

'எச் -1பி', விசா, கட்டுப்பாடு, அரசாணை,  அமெரிக்க, அதிபர் கையெழுத்து

'வேலை வாய்ப்பில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை' என்ற கோஷத்துடன், அதிபர் தேர்தலில் வென்றார் டொனால்டு டிரம்ப். அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின், அகதிகளுக்கு தடை உட்பட, பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். மேலும், 'அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்காக

வழங்கப் படும், எச் - 1பி விசா முறையிலும் பல்வேறு கட்டுப் பாடுகள் கொண்டு வரப்படும்' என, அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன், எச் - 1பி விசா வழங்கும் திட்டத்துக்கான அரசாணை யில், டொனால்டுடிரம்ப் நேற்று முன்தினம் கையெழுத்திட்டார்.இந்த புதிய திட்டத்தின்படி, மிக உயர்ந்த தொழில்நுட்ப தகுதி தேவைப்படும் பணியிடங்கள், அதிக சம்பளம் அளிக்கப்படும் பதவி இடங்கள் ஆகியவற்றுக்கு மட்டுமே, வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.

தற்போது அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்காக, ஒவ்வொரு ஆண்டும், 65 ஆயிரம் எச் - 1பி விசா வழங்கப்படுகிறது.இதைத் தவிர, அமெரிக்க பல்கலைகளில் உயர் கல்வி படித்தவர்கள், அங்கேயே வேலை பார்ப்பதற்காக, 20 ஆயிரம் விசாக்கள் வழங்கப்படுகின்றன.

இந்த விசாக்களை பெறுவதில், இந்தியர்களே முதலிடத்தில் உள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் அமெரிக்காவில் உள்ள இந்திய நிறுவனங்களில் பணிபுரியும் வெளிநாட்ட வர்களில் இந்தியர்களே அதிகமாக உள்ளனர். பல் வேறு கணக்குகளின்படி, வெளிநாட்டவர்களுக்காக

Advertisement

வழங்கப்படும் விசாக்களில், கீழ்நிலை ஊழியர்கள் பணி யிடங்களுக்கு மட்டும், 80 சதவீதம் பேர் விண்ணப்பிக்கின்றனர்.

ஏற்கனவே, விசா பெறும் நடைமுறைகளில், பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ள டொனால்டு டிரம்ப் அரசு, தற்போது, வெளி நாட்டவர்களுக்காக அளிக்கப்படும் பணியிடங் களுக்கு கட்டுப்பாடு கொண்டு வந்துள்ளது. இது, இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையினர் உட்பட, பல்வேறு துறையினருக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என, எதிர்பார்க்கப் படுகிறது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A shanmugam - VELLORE,இந்தியா
22-ஏப்-201713:35:01 IST Report Abuse

A shanmugamமன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ரொனால்ட் டிரம்ப்இன் அதிரடி நடவடிக்கையானால் பல ஆண்டு காலமாக இந்திய மண்ணை புறக்கணித்து விட்டு "பணத்துக்காக" அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த இந்தியர்கள் மரியாதையை வல்லரசு நாட்டல் விட்டு வளரும் தாய் நாடான இந்தியாவுக்கு திரும்புவதுதான் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு இல்லையேல் உயிரை பணயம் வைக்கவேண்டியதுதான். என்னெனில் டிரம்ப் ஆட்சி இருக்கும் வரை அமெரிக்காவில் ஒருஇந்தியனும் தலை நிமிர்ந்து வாழமுடியாது. "மெண்டல் டிரம்ப்" ஒழிக

Rate this:
Anandan - chennai,இந்தியா
25-ஏப்-201705:47:38 IST Report Abuse

Anandanஇந்தியாவில் வேலை வாய்ப்பு குறைவு என்றுதான் பலர் வெளிநாடு செல்கிறன்றனர். இப்போது இருக்கும் நிலையில் வெளிநாட்டில் இருக்கும் அனைவரும் தாய்நாடு திரும்பினால் இந்தியா தாங்காது....

Rate this:
Manian - Chennai,இந்தியா
25-ஏப்-201723:17:52 IST Report Abuse

Manianஅதுவும் அவர்கள் திறமை குறைந்தவர்கள், மண்டை கர்வம் அதிகமானவர்கள், ஆளுமை திறன் அற்றவர்கள் (இதெல்லாம் இல்லாவிட்டால் அவர்களை ஏன் கிராம்பு வெறட்டுவார்?) போலி வேலை சான்றிதழ் - இல்லாத கம்பெனியெல்லாம் மூடிட்டானுங்கன்னு பொய் சொல்லி, அடிப்படை மென்பொருள் கூட எழுத தெரியாத பயலுக. அனுபவம் பற்றி பொய்யா அனுபவன்ங்களில் எழுதின பயலுக, அதை பத்தி தோண்டியெடுக்க தெரியாத பயலுகல்ல அவனுக), இந்தியாவில் மட்டம் தட்டி பேசுவதை போலவே அங்கேயும் பேசுவது, தன் குறைகளை தெரிந்து கொள்ள தவறுவது போன்ற காரணங்களால் பாலார்ம் விரட்டபடுகிறார்கள். தலை சிறந்த ஐஐடி மாணவர்களுக்கு அவர்கள் கதவு திறந்தே இருக்கிறது. அவர்களது ஆராச்சி மூளை வேண்டும் என்கிறார். அவர்கள் இங்கே பொறாமை, தாழ்வு மனப்பான்மை, ஜாதி, மதம், இட ஒதுக்கீட்டில் விரட்டபடுபவர்கள். அவர்கள் திறமையை உபயோகிக்கும் புதிய தொழில்கள், ஆராய்ச்சி கூடங்கள் இல்லை. ஜனாதிபதி அப்துல் கலாமும் தான் படட சோதனைகளை சொல்லியிருக்கிறாரே காற்றவர்க்கு (போலி கல்வி இல்லை) சென்ற இடம் எல்லாம் சிறப்பு மாறவில்லை....

Rate this:
JEYAPRAKASH - LONDON,யுனைடெட் கிங்டம்
20-ஏப்-201723:16:02 IST Report Abuse

JEYAPRAKASHவண்டை தேடி தேன் போவதில்லை. தேனை தேடி தான் வண்டு போகும். அதே போல, இந்தியர்களின் அறிவுக்கூர்மை, திறமை இருப்பதால் தானே அமெரிக்க நிறுவனங்கள் அவர்களை தேடுகின்றன. அதே போல, அமெரிக்கர்களின் வருமானத்தை விட இந்தியர்களுக்கு குறைவான வருமானமே தரும் அமெரிக்க நிறுவனங்கள், மிச்சம் இருக்கவே இந்தியர்களை நியமனம் செய்கின்றன. இந்தியர்களும் அமெரிக்காவில் வருமானம் அதிகம் என்ற நிலையிலேயே அங்கு செல்ல விரும்புகின்றனர். எனவே வண்டும், தேனும், ஒருவருக்கொருவர் சமரசமாக செல்லுதல் அவசியம். இருவருக்குமே ஒருவருக்கொருவர் தேவை. எனவே வீண் பிதற்றல் செய்யாமல் அமெரிக்காவும் இந்தியர்களை எப்போதும் போல நியமனம் செய்தல் அவர்களுக்கு காலத்தின் கட்டாயம், இந்தியர்கள் அற்ற எந்த வெளிநாடுகளும் முன்னேறியதாக சரித்திரம் இல்லை. இந்தியர்கள் இறைவனின் விசேஷ படைப்புக்கள்.

Rate this:
Manian - Chennai,இந்தியா
21-ஏப்-201711:54:58 IST Report Abuse

Manianதவறு நண்பரே. சமீபத்திய ஆராச்சிப்படி 4 .77 % இந்தியர்களை திறமை பெற்றவர்கள், மற்றய இன்சினியர்கள் லெட்டர்பேடு என்று கண்டுள்ளார்கள். அமெரிக்கா கம்பெனிகள் முதன்முதலில் காந்திக்கே சென்ற ஐஐடி 1 % இன்ஜினீயர்களை கண்டு, இந்தியாவில் நிறைய பேர்கள் அவர்கள் போல் இருப்பார்கள், குறைந்த சம்பளத்திற்கு அவர்களை கொண்டு வந்தார்கள். ஆனால் பின்னல் தன தெரிந்தது , இவர்களில் வெகு சிலரே திறமை சாலிகள் . மற்றவை, எங்குமே உபயோகமில்லாத காகித பட்டதாரிக்கள் என்று. முதலில் சென்ற விதை அறிவாளிகளை 1 % ஜட்டி-மதம்-இட ஒதுக்கீட்டில் விரட்டி விட்டொம். அவர்களு தகுந்த மையடை, சம்பளம் கொடுத்து வைத்திருந்தால் அவர்கள் ஏராளமான புத்திசாலி இன்ஜினீயர்களை உருவாக்கி இருப்பார்கள். இங்கிருந்து போனவர்களை பெரும்பாலும் நடுத்தர பணம் பண்ண சென்றவர்கள. ஆகவே இங்கே இருந்தோ போவார்கள் மரம் துளைக்கும் வண்டுகள் ....

Rate this:
VELAN S - Chennai,இந்தியா
20-ஏப்-201722:15:36 IST Report Abuse

VELAN Sமுன்னாடி 2000 ஆம் ஆண்டின் போது , Y2K என்ற கம்ப்யூட்டர் இஸ்ஸுயு வந்தபோது, எவெனெல்லாம் இங்கிலீஷில் Y2K என்று சொன்னானோ அவனுகளுக்கெல்லாம் அமெரிக்கன் விசா கொடுக்க அந்த முட்டாள்களெல்லாம் அமெரிக்காவிலே வந்து Y2K வை பற்றி தட்டி தடவி தெரிந்து கொண்டு அங்கே அமெரிக்காவிலே செட்டில் ஆகிவிட்டார்கள், அது மாதிரி டிரம்புக்கு இன்னமும் ரெண்டு வருடத்தில் அமெரிக்காவிலே ஒரு வேலை ஒழுங்கா நடக்கலை என்பது தெரிய வரும், அப்ப இந்தியாவில், எவனெல்லாம் USA என்றால் United states of America என்று சொல்லுகிறானோ அவனுகளுக்கெல்லாம் டிரம்பு ,விசா கொடுத்து எவ்வளவு சம்பளம் கேட்டாலும் கொடுக்கிறேன், அமெரிக்கா வாங்க என்று காலில் விழாத குறையாக கூக்குரல் போட்டு, இந்தியர்களை அழைத்து செல்வார், வேற வழி டிரம்புக்கு இல்லை , இந்தியர்களின் கடின உழைப்பால்தான், அமெரிக்காவிலே எல்லா வேலைகளும் நடக்கிறது என்பதை டிரம்பு உணரும் காலம் விரைவில் வரும், இந்த விசா ப்ராபளம்கள் அப்போது சரியாகும், ஜெய்ஹிந்த்.

Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
20-ஏப்-201720:33:48 IST Report Abuse

Sathish வேற்றுநாட்டவருக்கு அமெரிக்க குடியுரிமை அளிப்பதை அந்நாடு நிறுத்திக்கொள்ளவேண்டும்.

Rate this:
Mahendra Babu R - Chennai,இந்தியா
20-ஏப்-201715:21:23 IST Report Abuse

Mahendra Babu Rதெரியாம தான் கேக்கறேன் அமெரிக்கா மட்டும்தான் நாடா? இங்க 134 கோடி பேரு இருக்கோம் நாங்கல்லாம் மனுஷங்க இல்லையா? எல்லா இளைஞர்களும் திரும்ப வாங்க 10 வருஷத்துல நம்ம நாட்டை ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வந்துடலாம். அதற்கு மூன்று விஷயங்கள் - 1) தேவையை நோக்கி செயல்படனும். நம் தயாரிக்கிற பொருளின் தரம் அல்லது செயல் அது எதற்காக திட்டமிடப்பட்டதோ அதை 100% நிறைவு செய்யணும். 2) பொதுவான விஷயங்கள் பொதுவுல வெக்கணும் 3) என் கிராமம், என் ஊர், என் நாடு என்ற பொறுப்பு வரணும்.

Rate this:
Nandha - Madurai,இந்தியா
20-ஏப்-201718:40:10 IST Report Abuse

Nandhaஅது சரி. மொதல்ல இந்தியால இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்போம். அப்புறம் எல்லாரையும் இந்தியாவுக்கு கூப்பிடுவோம்....

Rate this:
Jonson Sabaratnam - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஏப்-201719:30:49 IST Report Abuse

Jonson Sabaratnamசரியாக சொன்னிர்கள் Nandha, மதுரை. படித்து முடித்த பட்டதாரிகளுக்கே இன்னும் முழுவதுமாக வீலை இல்லை, இதுல வெளி நாட்டில் உள்ளவர்கள் திரும்பி வந்தால், ஐயோ ஐயோ சிரிப்பு தான் வருது...

Rate this:
dino - chennai,இந்தியா
20-ஏப்-201721:13:11 IST Report Abuse

dinoநம் நாட்டில் நம் உழைப்பால் நாம் வாழ்வதை விட முதலாளிகள் வாழ்வதே அதிகம். நம் உழைப்பில் பத்து சதவிகிதம் பலன் கூட நமக்கு கிடைப்பதில்லை....

Rate this:
Manian - Chennai,இந்தியா
25-ஏப்-201723:32:17 IST Report Abuse

Manianமகேந்திரன் பாபு: நீங்கள் சொல்வது சரி. ஆனால் அதற்கு தேவையான உள்கட்டமைப்பு, அரசியல் அமைப்பு, காப்புரிமை அமைப்பு, பல அடுக்கு இல்லாத சுலபமாக தொழில் ஆரம்பிக்கும் முறை, லஞ்சம் கொடுக்காமல் தொழில் செயதால் போன்றவை இருந்தால் யாரும் நம்ம ஊரை விட்டு போக மாட்டாங்க. உண்மையா ஏன் அறிவாளிகள் நாட்டை விட்டு ஓடுகிறர்கள்/ ஓட்டபடுகிறார்கள்என்ற புள்ளி விவரம், வெளிநாட்டில் வாழும் பிந்தைய விஞ்ஞானிகள் செயதால், உண்மையை உணருவோம். தலை சிறந்த 1% அறிவாளிகள் மூலமே அறிய கண்டுபிடிப்புகள் காப்புரிமை பெற்று அமெரிக்க முன்னேறியது. ஆராச்சி என்பது வேலை இல்லை. ஒரு தவம். அது எல்லோராலும் முடியாது. அதற்கான மரபணு வேண்டும். அவர்கள் ஆதரிக்க படவேண்டும். கிருஷ்ண தேவராயர் காலத்தில் 9 நவ ரத்தினங்கள் போல மந்திரிகள் - அல்லாசானி பெத்தண்ணா, நந்தி திம்மண்ண, ராமராஜ பூஷண, தெனாலி ராமண்ணா .. அவர்கள் ஏன் நாட்டை விட்டு ஓடவில்லை. அவர்கள் ஆதரிக்கப்பட்டார்கள். அறிவுக்கு மதிப்பு கொடுக்கப்படாது. இங்கோ, தாய், மதம், இட ஒதுக்கீடு என்ற (நல்ல நினைப்புதான்) பெயரால் ஆராய்ச்சிகள் வெறும் வேலை என்றும் நல்ல பணம் கைக்கும் வழி என்றும் தகுதி இவர்கள் லஞ்சம் முலம் வந்து எதையும் செய்ய விடுவதில்லை. எனவே, நம் குறிகோள்கள் மாற்றாத வரை எதுவும் மாறாது....

Rate this:
VELAN S - Chennai,இந்தியா
20-ஏப்-201714:31:31 IST Report Abuse

VELAN Sஅதுசரி அங்கே உள்ள அமெரிக்கர்களுக்கு உடம்பு வளையாதே , அமெரிக்கர்கள் ஈகோ பார்த்து வேலை செய்யாமல் பொழுதை ஓட்டும் சோம்பேறிகள் , அதாவது அங்கு ட்ரெண்ட் எப்படி என்றால் , அமெரிக்க சிட்டிசன் ஆகும் வரை கடுமையாக உழைப்பார்கள் , அப்போது உழைக்கும் அந்த உழைப்புகள்தான் , அமெரிக்காவை உயர தூக்கி நிறுத்திக்கொண்டிருக்கும் ,அதன்பின் அமெரிக்க சிட்டிசன் ஆன பின் சுத்த சோம்பேறி ஆகி சுகவாசி ஆகிவிடுவான் ,அப்புறம் ஒரு வேலை நடக்காது ,அப்புறம் அந்த வேலைகளை யார் பார்க்கிறது ,இவர் இப்படி செய்ததினால் அமேரிக்கா நாற போகிறது , பொருளாதாரத்தில் தலை குனிய போகிறது , அதன் பின் , திரும்பவும் அமெரிக்காவில் நடுத்தரமான வேலைகளை செய்து அமெரிக்காவை கழுவி துடைக்க வெளிநாட்டவர்களை தாங்குவார்கள் , தெரியாதா .

Rate this:
Swamidoss John - Baltimore,யூ.எஸ்.ஏ
20-ஏப்-201720:26:06 IST Report Abuse

Swamidoss Johnஇந்த சோம்பேறி இந்தியர்களை கூப்பிடும் ....

Rate this:
Manian - Chennai,இந்தியா
25-ஏப்-201723:40:38 IST Report Abuse

Manianவேலன் நீங்கள் சொல்வது ஒருபடி தகுதி பெற்றவர்கள் செய்வது. தலை சிறந்த இந்தியர்கள் இன்றும் கடுமையா உழைக்கிறார்கள். அவர்கள் தங்கள் வழியில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற மனப்பான்மையோடு உழைக்கிறர்கள். நீங்கள் சொல்பவர்கள், இங்கே நடுத்தர குடும்பத்தில் பிறந்து, பின் வசதியான நடுத்தர குடும்பமாக்க அமெரிக்காவில் வாழவே விரும்பும் மனப்பான்மை இல்லாதவர்கள், மேல் கல்வியில் விருப்பம் இல்லாதவர்கள், நான் ஏற்கனவே படித்துவிட்டேனே, இன்னும் எதற்கு படிக்க வேண்டும், என் சிந்தனையை ஏன் வளர்க்க வேண்டும் என்று என்னும் திறமை அற்றவர்களே. இவர்களே, இந்தியா வந்து ராஜ போக வாழக்கை வேண்டும், ச்சீய் இவ்வளவு அழுக்கா, சுத்த பிளாடி பியூல்ஸ் என்றெல்லாம் புலம்பும் மனோ வியாதி உள்ளவர்கள். அவர்கள் திரும்ப வந்தாலும் எந்த வித புதிய தொழில் ஆரம்பிக்க மாட்டார்கள் 0 அனுபவம் இருந்தால்தானே. எதற்கும் நான் அப்படி இல்லை என்று தன் தாழ்வு மனப்பான்மையை வெளிப்படுத்தும் நபர்கள். அவர்கள் நம் நாடு முன்னேற்றது....

Rate this:
Ganesh Tarun - Delhi,இந்தியா
20-ஏப்-201711:42:44 IST Report Abuse

Ganesh Tarunபொதுவாக உலகத்தில் உள்ள எல்லா நாடுகளுமே தங்கள் நாட்டு மக்களின் நலனுக்கு தான் முக்கியத்துவம் குடுக்கும். இதை அமெரிக்கா செய்வதில் தவறு இல்லை.

Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
20-ஏப்-201713:44:27 IST Report Abuse

Sanny உண்மை கணேஷ், இவரை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் 457 என்று அழைக்கப்படும் வெளிநாட்டு தொழிலாளர் Skill Migrant visa வும் தடைசெய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் மட்டும் 95,000 பேருக்கு வழங்கப்பட்டது....

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
20-ஏப்-201710:52:00 IST Report Abuse

K.Sugavanamகட்டுரை இன்னும் விளக்கமாக இருந்திருக்க வேண்டும்..

Rate this:
Manian - Chennai,இந்தியா
25-ஏப்-201723:46:11 IST Report Abuse

Manianவிளக்காமாக இருந்தாலும், அங்குள்ள அரசியல், நாகரிகம், வேலை செய்யும் முறை, சட்டங்கள் என்று பலவும் தெரிந்திருந்தால் மட்டுமே அந்த மாதிரி கட்டுரையை புரிந்து கொள்ள முடியும். இது உங்களை குறை சொல்ல எழுதவில்லை. பூரா சுற்று சூழலையும் புரிந்துகொள்ள அங்கே வாழ வேண்டும், அங்கே வாழ்ந்தாலும் அவற்றிற்கு கற்றுக்கொள்ள ஆர்வம் வேண்டும். இதை சந்தைப்பம் சார்ந்த context sensitive செய்தி என்பார்கள். அவற்றை அறிய பல காலம் ஆகும்....

Rate this:
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
20-ஏப்-201709:34:04 IST Report Abuse

Rangarajan Pgஅவர் நாட்டை வளப்படுத்த சீர்படுத்த அவர் சில பல முயற்சிகள் செய்கிறார், முடிவுகள் எடுக்கிறார்.

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-ஏப்-201709:08:41 IST Report Abuse

Srinivasan Kannaiyaஅமெரிக்க மோகம் குறையும்... நெறைய பெற்றோர்கள் தனது பிள்ளைகளுடன் இருப்பார்கள்... முதியோர் இல்லங்களில் ஓரளவு எண்ணிக்கை குறையும்... நெறைய குழந்தைகளுக்கு தாத்தா பாட்டி எல்லாம் தெரியும்...

Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement