ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க உ.பி., முதல்வர் நடவடிக்கை Dinamalar
பதிவு செய்த நாள் :
ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க
உ.பி., முதல்வர் நடவடிக்கை

லக்னோ: உ.பி.,யில், தொடர்ந்து பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வரும், முதல்வர் யோகி ஆதித்யநாத், தற்போது, அரசு நில ஆக்கிரமிப்பாளர்கள் மீது, தன் கவனத்தை திருப்பியுள்ளார்.

 ஆக்கிரமிப்பு, நிலம் மீட்க, உ.பி.,, முதல்வர், நடவடிக்கை

அரசு நிலங்களை ஆக்கிரமித்துள்ளோர், ஒரு மாதத்திற்குள் அந்த இடங்களை காலி செய்யாவிட்டால், கடும் நடவடிக்கைக்கு ஆளாகக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள் ளார்.

உத்தர பிரதேச முதல்வராக, பா.ஜ.,வைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்ற பின், மாநில நலன் கருதி பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இவரது தடாலடி நடவடிக்கைகளால், அரசு அலுவலர் கள், தாமதமாக வருவோர், தவறு செய்வோரை
தண்டித்துவருகின்றனர்.முதல்வர்அமைச்சர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.


திடீர் விசிட்:


முதல்வர் மட்டுமின்றி, இவரது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர் கள்பலரும், தங்கள் துறை சார்ந்த அலுவலகங்க ளில் திடீர் விசிட் அடித்து, ஆதித்யநாத்தின் அதிரடி நடவடிக்கைகளுக்கு, அம்மாநில மக்கள் பெரும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ஆக்கிரமிப்பா ளர்களின் பிடியில் சிக்கியுள்ள அரசு நிலங்களை மீட்கும் நடவடிக்கையில், அவர் இறங்கிஉள்ளார்.

இதற்காக, அரசு அதிகாரிகள் அடங்கிய சிறப்பு படையை நிறுவ உத்தரவிட்டுள்ள முதல்வர், ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள நில மாபியாக்களுக் கும் அவகாசம் வழங்கியுள்ளார்.

அவகாசம்


இது குறித்து, உ.பி., அரசு உயர் அதிகாரிகள் கூறிய தாவது:மாநிலத்தில், அரசுக்கு சொந்தமான ஏக்கர் கணக்கிலான நிலம், பல ஆண்டுகளாக ஆக்கிரமிப் பாளர்கள் பிடியில் சிக்கியுள்ளது. இதில், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், ரவுடிகள் என பலருக்கும் பங்கு உண்டு. இதனால், அரசுக்கு பெரு மளவு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு நிலங்களில், அரசு நலத்திட்டங்களை நிறைவேற்ற

Advertisement

முடியாத சூழல் நிலவுகிறது. இதற்கு முடிவு கட்டும்வகையில், முதல்வரின் உத்தரவு அமைந்துள்ளது. ஆக்கிரமிப்பாளர் களுக்கு, ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

அதற்குள் அவர்கள் ஆக்கிரமித்த நிலங்களை விட்டு சென்று விட வேண்டும். அப்படி செய்ய தவறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என, முதல்வர் எச்சரித்துள்ளார்.
இதன் மூலம், அரசுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலம் மீட்கப்படும். அந்த இடங்களில் அரசு நலத் திட்டங்களை செயல்படுத்த முடியும். இதனால், ஏராளமானோர் பயனடைவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (77)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
20-ஏப்-201723:06:05 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்//ஆக்கிரமிப்பாளர்களுக்கு, ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.// கமிஷன் பேசவா? ஆளும்கட்சிக்கு நிலஆக்கிரமிப்பு வழக்கு தான் ஒரு ஆயுதம். தமிழ்நாட்டிலும் அதே தான் நடந்தது. ஆனால் நிலம் எதுவும் மீட்கப்பட்டதா சரித்திரம் இல்லை. எல்லாம் பட்டா போட்டு நாலு கை மாறியிடிச்சி. ஒன்னொன்னும் சிவில் கேஸாக மாறியிடிச்சி. அதிரடி நியூஸுக்கு வேண்டுமானால் இது சரியாக இருக்கலாம். கடைசியில் என்ன மிஞ்சுது என்பதை வைத்தே இவரின் அதிரடியை கணிக்க முடியும். அதுவரை சொம்படிப்பதை நிறுத்திவிட்டு பிள்ளைகுட்டிகளை படிக்கவையுங்களேன். முதலாறு மாதம் இப்படித் தான் தேனிலவு..

Rate this:
நரி - Chennai,இந்தியா
20-ஏப்-201721:38:37 IST Report Abuse

நரி///பெரில்லி : சுங்கவரி செலுத்துமாறு கூறியதுடன், 10 வினாடிகள் காத்திருக்க செய்த டோல்கேட் ஊழியரை பா.ஜ., எம்.எல்.ஏ., ஒருவர் அடித்து உதைத்த சம்பவம் உ.பி.,ல் நடந்துள்ளது.///..... உ பி முதல்வர் யோகி அவர்களே இதற்கு உங்கள் நடவடிக்கை என்ன ?...

Rate this:
Krishna - Dindigul,இந்தியா
20-ஏப்-201722:57:38 IST Report Abuse

KrishnaUP முதல்வரே எங்க வீட்டு குழாயில் தண்ணி வரலை அதுக்கு உங்க நடவடிக்கை என்ன.... எங்க ஊர் நாட்டாமைக்கும் எனக்கும் பிரச்சனை அதுக்கு உங்க நடவடிக்கை என்ன....கேளு இன்னும் என்ன வேணும்னாலும் கேளு.......

Rate this:
நரி - Chennai,இந்தியா
21-ஏப்-201712:53:43 IST Report Abuse

நரிகுழாய்ல தண்ணி வராததும் ... டோல் கேட் சார்ஜெஸ் கட்டாமல் பொது இடத்தில ஒரு ஊழியரை பா ஜ சட்ட மன்ற உறுப்பினர் தாக்கியதும் தாக்கியதும் ஒரே பிரச்சனையா ...இப்ப புரியுதா இந்தியா சுதந்திரம் அடைந்தும் 70 வருடமாக முன்னேறாமல் இருப்பது...

Rate this:
Krishna - Dindigul,இந்தியா
21-ஏப்-201721:10:44 IST Report Abuse

Krishnaஒரு முதல்வர் ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கும்போது முதல்ல பாராட்ட பழகு.....அதுக்கப்புறம் நொட்டை சொல்லு. பிஜேபி mla அடிச்சான்னா அதுக்கு அவங்க கட்சில கூப்டு கண்டனம் தெரிவிக்கலாம். என்ன செஞ்சாலும் அதை உன்கிட்ட சொல்லிட்டு செய்யணுமா என்ன? இங்க செய்தி என்ன வந்துருக்கு. இதுவரை அவர் செய்த நல்ல காரியம் என்ன அதெல்லாம் உன் கண்ணுக்கு தெரியாது.... எப்படா மத்தவன் தப்பு பண்ணுவான் அதை நொட்டை சொல்லலாம்னு அலையாத.... உன்ன மாதிரி ஆளு தான் இந்த நாட்டை தூக்கி நிறுத்த போறாங்க....போய் கான் கிராஸ் DMK க்கு ஜால்ரா அடி.... நாடு சீக்ரம் முன்னேறிடும்........

Rate this:
நரி - Chennai,இந்தியா
21-ஏப்-201722:22:24 IST Report Abuse

நரிஇவரை பாராட்டிய என்னுடைய பழைய கருத்துக்களை படித்து பாருங்கள்...இது நொட்டை அல்ல ...அவருடைய நடவடிக்கை என்ன என்பதை ஆவலோடு எதிர்பார்த்தால்...

Rate this:
நரி - Chennai,இந்தியா
21-ஏப்-201722:32:01 IST Report Abuse

நரிபாராட்டுக்கள் அண்ணா .... தலை வணங்குகிறேன்...

Rate this:
Karuthukirukkan - Chennai,இந்தியா
20-ஏப்-201718:56:34 IST Report Abuse

Karuthukirukkanதினம் ஒரு அறிவிப்பு , ஒரு புதிய நாடகம் என்று சிறப்பாக அரங்கேறுது .. அதுக்கு பத்திரிகைகள் ஜால்ரா தாங்க முடியல .. பல மாநிலங்களிலும் எடுக்கும் சாதாரண நிர்வாக அறிவிப்புகள் போன்று தான் இதுவும் .. ஆக்கிரமிப்புகள் எல்லா மாநிலத்திலும் அகற்ற பட்டு இருக்கு.. வெறும் அறிவிப்புக்கு இத்தனை பில்ட் அப் தாங்க முடியல .. இதுல அல்லக்கைகள் பிஜேபி தமிழ்நாட்டுக்கு வரணும் என்பதெல்லாம் செம சிரிப்பு .. இருக்குற ஒரு எம்.பி மத்திய அமைச்சர் இது வரை என்னத்த கொண்டு வந்து கிழிச்சு இருக்காரு அல்லக்கைகளா ?? குஜராத் போன்ற போலி வளர்ச்சி ட்ராமா உத்தர பிரதேஷில் எல்லாம் பலிக்காது .. அது கொஞ்சம் வளர கூட இன்னும் 100 வருஷம் ஆகும்.. பொருளாதாரத்திலும் சமூகத்திலும் சிறந்து வளர்ச்சி பெற்றுள்ள தமிழகத்தை எல்லாம் நெருங்க கூட முடியாது .. குஜராத் போல நாலு தொழிற்சாலை தொடங்குனா அது வளர்ச்சி இல்ல கண்ணுகள .. தொழிற்சாலை, கல்வி அறிவு , சமூக திட்டங்கள் என்ன எல்லாத்திலயும் குஜராத் எல்லாம் தமிழகத்தின் கிட்ட வர முடியாது .. நீங்க கதை வேனா அடிச்சு விடலாம் .. வேற ஒன்னும் பண்ண முடியாது ...

Rate this:
ganesha - tamilnadu,இந்தியா
20-ஏப்-201716:43:46 IST Report Abuse

ganeshaபிஜேபி க்கு நாமும் ஒட்டு போட்டு இந்த மாதிரியான ஒரு நல்ல ராமராஜ்யம் தமிழ்நாட்டிலேயும் ஏற்படனும். முஸ்லிம்கள் ஒட்டு போட்டு உத்தர பிரதேசத்தில் இந்த நல்லது நடக்கிறது. தமிழர்களை பிஜேபி க்கு ஒட்டு போடா விடாமல் இங்கு அல்லக்கைகள் கருத்து தெரிவித்து மக்களை குழப்புவர்கக சிலர் இங்கு அசடானவன் வம்பானவன் பல்பானவன் என்ற பெயரில் இருக்கிறார்கள். அவர்களும் திருந்திட வேண்டுகிறேன்.

Rate this:
Karuthukirukkan - Chennai,இந்தியா
20-ஏப்-201718:40:59 IST Report Abuse

Karuthukirukkanஅடேங்கப்பா அல்லக்கையே எப்பிடி எப்பிடி தமிழிசை , எச். ராஜா போன்ற மகான்கள் ஆட்சிக்கு வரணுமா ?? சரி பொன். ராதா என்ற ஒருத்தருக்கு ஓட்டு போட்டோமே , அவர் இதுவரை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து கிழிச்ச திட்டம் என்னனு கொஞ்சம் சொல்றியாமா ??...

Rate this:
PENPOINT,INKLAND - ZEN EYE,இந்தியா
20-ஏப்-201722:20:17 IST Report Abuse

PENPOINT,INKLANDநண்பர் கருத்து கிறுக்கன் உங்கள் கருத்துக்களை கிறுக்குவதற்குமுன் தயவு செய்து முதிர்ச்சியுடன் நாள்தோறும் பத்திரிக்கை படியுங்கள்...

Rate this:
samuelmuthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
20-ஏப்-201715:17:54 IST Report Abuse

samuelmuthiahrajஇதுபோன்ற உணர்வு உள்ளவர்கள் எவரேனும் தமிழக அரசியல் தலைவர்களாகவோ ஆட்சியாளர்களாகவோ அல்லது அரசியல்வாதிகளோ அதிகாரிகளோ என்றேனும் குரலாவது கொடுத்திருப்பார்களா இங்குள்ள பா ஜா க சார்ந்தோர் கூட குரல் கொடுக்கவும் மாடடார்கள் ஏனெனில் எப்படியாவது ஆக்கிரமிப்புகளை துணைபோய் அவர்களிடமிருந்து அவ்வப்போது அடையவேண்டியதை அடைந்து கொண்டே இருக்கவேண்டும் கோடி கோடியாய் சம்பாதிக்கவேண்டும் கேடுகளை செய்யும் கேடிகளை தம் அடியாட்களாக வைத்துக்கொண்டு மிரட்டிடவேண்டும் புதுப்பிணியை உருவாக்கி வரும் பொதுப்பணி துறை நெடுங்கவலையை உருவாக்கும் நெடுஞ்சாலை துறை நரகராட்சி செய்யும் நகராட்சி ஊழலாட்சி செய்யும் ஊராட்சி கண்டுகொள்ளா காவல் துறை வருவாய் காணும் வருவாய்த்துறை என எல்லோரையும் ஆங்காங்கு ஆய்வு செய்தால் எவரெவர் எல்லைகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளனவோ அவர்கள் அனைவரையும் கண்டித்து தண்டிக்கவேண்டும் பொதுவாக ஆக்கிரமிப்புகள் அதிகம் ஆக்க காரணமே அரசு அலுவலர்களும் ஆங்காங்கு சாலைகள் வாய்க்கால் புறம்போக்கு மற்றும் நீர் ஆதார ஆக்கிரமிப்புகள் செய்துவருகின்றனர் ஊடகங்களும் நடவடிக்கை எடுக்கப்படட பிறகே தாங்கள் சொல்லித்தான் நடவடிக்கை எடுக்கப்படுவது போல வர்ணம் பூசிக்கொள்ளுவர் ஊடகங்கள் மற்றும் பத்திரிகை நடத்துவோரும் ஆங்காங்கு ஆக்கிரமிப்புகள் செய்திருப்பர் போலும் அதனால் அவர்களும் இது பற்றி எவ்வித கருத்துக்களும் வழங்குவதில்லை காஞ்சிபுரம் காஞ்சிப்போன புறமாக மாறிக்கொண்டு வருகிறது நகராட்சியே நிறைய இடங்களை ஆக்கிரமித்து கட்டியுள்ளது

Rate this:
Snake Babu - Salem,இந்தியா
20-ஏப்-201714:10:11 IST Report Abuse

Snake Babuநன்றி தேசநேசன் அவர்களே கடுமையான வெயிலை கூலா பழரசம் குடிச்சத போல இருக்கு. இவ்வளவு பேர், அரசியல்வாதிகள் செய்த தவறுகளை எல்லாம் மொத்தமாக பொதுவாக திராவிடன், தமிழன், என்று பேசி வருத்தி கொண்டிருந்த வேளையில் நீங்கள் மட்டும் தமிழும் திராவிடமும், மேன்மை பெரும் படி பதினெண் சித்தர், அகத்தியர், போகர் வெள்ளியங்கிரி என்று புல்லரிக்க வைத்துவிட்டிர்கள், அய்யா உடனே அவ்வளவு பேரையும் தமிழர்கள் இல்லை, என்று ஒரே போடு போட்டுவிடாதீர்கள்......... அடுத்து யோகி ஆதித்யநாத் நன்றாக ஆட்சி செய்கிறார், அவர்க்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள். நல்லதை பாராட்டுங்கள், அதை விடுத்து இதிலும் தமிழன் திராவிடன் வெறுப்புகளை ஏன் உமிழ்கிறீர்கள். அரசியல் வாதிகளை வறுத்தெடுங்கள் அதில் யாரும் தலை இடவில்லை. ஒட்டுமொத்தமாக தமிழன் என்று கேவலப்படுத்தாதீர்கள். மக்களையும் கேவலப்படுத்தாதீர்கள் உங்களுக்கு புண்ணியமாக போகும். நன்றி வாழ்க வளமுடன்.

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
20-ஏப்-201713:57:27 IST Report Abuse

Nallavan Nallavanஆட்சிக்கு வந்த ஜோரில் நில அபகரிப்பு மீது நடவடிக்கை ???? எங்க ஊருலயும் ஒரு அம்மா இப்படித்தான் 2011 -ல ஆரம்பிச்சுது ..... அப்புறம் பிசுபிசுத்துப் போச்சுது .....

Rate this:
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
20-ஏப்-201712:26:01 IST Report Abuse

Nakkal Nadhamuniஇது தமிழ்நாட்டுலயும் சீக்கிரம் நடக்கும்.. பெரியார் மண்ணு புண்ணெல்லாம் காணாமப்போயிடும்.. எப்படி தீவிரவாத கும்பலை இன்னிக்கு அமெரிக்கா போட்டு மிதிக்கறானோ அதே போல் இந்த திருட்டு கும்பலை மிதிக்க மோடி தலைமையிலான பிஜேபிதான் சரியான கட்சி...

Rate this:
Anu Raja - Chennai,இந்தியா
20-ஏப்-201712:59:08 IST Report Abuse

Anu RajaWill he save forest?...

Rate this:
PENPOINT,INKLAND - ZEN EYE,இந்தியா
20-ஏப்-201713:31:37 IST Report Abuse

PENPOINT,INKLANDNO ONE CAN DO ALL THINGS IN ONE DAY...

Rate this:
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
20-ஏப்-201710:26:44 IST Report Abuse

Agni Shivaஅறுசுவை உணவோடு அடுத்தவன் சாப்பிடும் போது பார்க்கும் ஏழையின் வாயில் எச்சில் ஊறுவது போல, உத்தர் பிரதேச மாநிலத்தில் யோகி செய்கின்ற அதிரடியை பார்க்கும் போது எங்களுக்கும் இது போன்ற காவி துறவி தமிழக முதலமைச்சராக வர மாட்டாரா என்று ஆசையாக தான் இருக்கிறது. ஆனால் அவ்வாறு நல்லது நடந்து விடுவதற்கு தமிழன் என்ன இளிச்ச வாயனா அல்லது புளிச்ச வாயனா? தமிழகத்தில் பிஜேபி கை பதிக்கவோ கால் பதிக்கவோ நாங்கள் விடமாட்டோம். நாங்கள் கழுத்தில் கயறு போட்டு தூங்கி தற்கொலை செய்வோமே தவிர தேன் எறும்பு எங்கள் வீட்டிற்குள் நுழைய விடமாட்டோம்.

Rate this:
20-ஏப்-201712:56:54 IST Report Abuse

thomas.எங்க தமிழ் நாட்டிற்கும் ஒருவர் கட்டாயமாக முதல்வராக வேண்டும்....

Rate this:
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
20-ஏப்-201713:41:51 IST Report Abuse

திண்டுக்கல் சரவணன்எப்பா அக்கினி, பொன்னர், கணேசன், தமிழிசை, ராதாகிருஷ்ணன் போன்றோர் எல்லாம் தமிழர் தான். தமிழன் என்று சொல்ல பெரியார் சீடர்கள் செர்டிபிகேட் தேவை இல்லை. மேலும், பொன்னர் வென்றிருக்கும் தொகுதி தமிழ்நாட்டில் தான் உள்ளது....

Rate this:
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
20-ஏப்-201709:28:50 IST Report Abuse

Rangarajan Pgஇதை போன்ற நடவடிக்கைகள் பாராட்ட தகுந்தவை. இவரை போன்ற ஆளுமை திறன் கொண்ட தன்னலம் கருதாத ஆட்சி செய்யும் திறன் கொண்டவர்கள் தான் நம் தமிழகத்துக்கு தேவை. இப்படிப்பட்ட நடவடிக்கைகள் முதலில் அரசியல் மற்றும் ஆதிக்க பின்புலம் கொண்டவர்கள் மீது பாய வேண்டும். அவர்களை ஒடுக்கி விட்டு அராஜகம் செய்யும் மக்களை அடக்கி ஒடுக்க வேண்டும். ஆதிக்க பின்புலம் உள்ளவர்களை அடக்கினாலே மற்றவர்கள் அடங்கி விடுவார். பணி சுலபமாக முடிந்து விடும்.

Rate this:
மேலும் 56 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement