பல முனை தாக்குதலால் அ.தி.மு.க.,விலிருந்து தினகரன் ஓட்டம்: சசிகலாவை சந்தித்த பின் கட்சி பதவியை துறக்கவும் முடிவு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பலமுனை, தாக்குதல், அ.தி.மு.க.,தினகரன்,ஓட்டம்!

அமைச்சர்கள் எதிர்ப்பு, பொது மக்கள் வெறுப்பு, வழக்குகள் குவிப்பு என, பல முனை தாக்குதலால், அ.தி.மு.க.,வில் இருந்து, தினகரன் ஓட்டம் பிடித்தார்.போட்டி, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை கைவிட்டு, கட்சியில் இருந்தே ஒதுங்கி விட்டதாக அறிவித்தார். சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்த பின், துணை பொதுச் செயலர் பதவியை துறக்கவும் முடிவு செய்துள்ளார். அவருக்கு கூஜா துாக்கிய, கூவத்துார் புகழ், எம்.எல்.ஏ.,க்கள், இப்போது பன்னீர் புகழ் பாடத் துவங்கி உள்ளனர்.

பலமுனை, தாக்குதல், அ.தி.மு.க.,தினகரன்,ஓட்டம்!


சசிகலா சிறைக்கு சென்றதும், அவரால், அ.தி.மு.க., துணைப் பொதுச் செயலராக நியமிக்கப்பட்ட தினகரன், கட்சியை தன் வசம் கொண்டு வந்தார். முதல்வராக ஆசைப்பட்ட அவர், பொது மக்கள் எதிர்ப்பை மீறி, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் களமிறங்கினார். பண பலத்தால் வெற்றி பெற்று விடலாம் என, கணக்கு போட்ட தினகரன், பணத்தை வாரி யிறைத்தார். ஓட்டுக்கு, 4,000 ரூபாய் வீதம், வீடு வீடாக வினியோகித்தார். அதற்கான ஆதாரம், அமைச்சர் வீட்டில் சிக்கியதால், தேர்தல் ரத்தானது.

வெடித்தது


இதையடுத்து, இரட்டை இலை சின்னத்தை பெற, தேர்தல் கமிஷனுக்கு, தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரம் பெரிதாக வெடித்தது. டில்லி போலீசார், அவர் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்ய காத்து இருக்கின் றனர்.அவரால், தொடர்ந்து கட்சிக்கும், ஆட்சிக் கும் அவப்பெயர் ஏற்பட்ட தால், அமைச்சர் களும், மூத்த நிர்வாகிகளும் கடும் அதிருப்தி அடைந்தனர். தினகரன் தலையீட்டை தவிர்த் தால் தான், கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற முடியும் என்ற முடிவுக்கு வந்தனர்.
அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததும், தினகரன் அதிர்ச்சி அடைந்தார். எனினும், தனக்கு குறைந்தது, 20 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தெரிவிப்பர்; அவர்கள் மூலம் ஆட்சியை கவிழ்க்கலாம் என, திட்டமிட்டார். எனவே, தன் ஆதரவாளர்கள் மூலம், நேற்று மாலை, 3:00 மணிக்கு, அ.தி.மு.க., தலைமை அலுவலகத் தில், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெறும் என,

அறிவிக்க செய்தார். ஆனால், எட்டு எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே, அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும், கட்சி அலுவலகத்தில், அவர் போட்டி கூட்டம் நடத்த வந்தால், கடும் எதிர்ப்பு தெரிவிக்க, கட்சியினர் தயாராக இருந்தனர். இந்த தகவல் தெரிய வந்ததும், தினகரனை போலீசார் எச்சரித்தனர். 'நீங்கள் கட்சி அலுவலகம் வந்தால், உங்களுக்கு எதிர்ப்பு அதிகமாக இருக்கும்' என, கூறினர்.

ரத்து செய்தார்


ஒரு பக்கம் வழக்குகள், கட்சியிலும் கடும் எதிர்ப்பு, பொது மக்கள் வெறுப்பு என, பல முனை தாக்குதல் தொடர்ந்ததால், விரக்தி அடைந்த தினகரன், போட்டி கூட்டத்தை ரத்து செய்தார். கட்சியில் இருந்தே ஒதுங்கி விட்டதாக அறிவித்தார். தன்னை துணைப் பொதுச்செயலராக, சசிகலா நியமித்ததால், அவரை சந்தித்த பின், கட்சி பதவியில் இருந்து விலகுவதாகவும் கூறியுள்ளார். அவரது அறிவிப்பை தொடர்ந்து, பன்னீர் அணியுடனான இணைப்பு வேகமெடுத்துள்ளது. அதன் காரணமாக, தினகரனுக்கு கூஜா துாக்கிய, எம்.எல்.ஏ.,க்கள், இப்போது பன்னீர் புகழ் பாடத் துவங்கி உள்ளனர்.

பன்னீர்செல்வம்முதல்வராக இருந்த போதே, சசிகலா முதல்வராக வேண்டும் என, முதலில் குரல் கொடுத்த, அமைச்சர் உதயகுமார், நேற்று அளித்த பேட்டியில், ''விசுவாசம் என்றால் என்ன என்பதை, நாங்கள் பன்னீர்செல்வத்திடம் இருந்து தான் கற்றுக் கொண்டோம்,'' என்றார்.

பன்னீர்செல்வத்தை கடுமையாக எதிர்த்து வந்த, எம்.எல்.ஏ., தங்கதமிழ்செல்வன், ''தினகரன் ஆலோசனைப்படி, பன்னீர் அணியுடனான இணைப்பை ஏற்றுக் கொள்கிறோம்,'' என்றார். இப்படி, தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் அடுத்தடுத்து, பன்னீர் புகழ் பாடத் துவங்கி உள்ளனர்.

நானே ஒதுங்கி விட்டேன்!


''கட்சிக்கு இடையூறு ஏற்படும் வகையில், நான் நடந்து கொள்ள மாட்டேன். ஒதுங்கி இருக்கும் படி, என்னிடம் கூறியிருந்தால், நானே அறிவித் திருப்பேன்,''என, தினகரன் நேற்று தெரிவித்தார். அவர் அளித்த பேட்டி:
திடீரென இத்தகைய முடிவு எடுக்க, என்ன காரணம் என, தெரியவில்லை. ஏதாவது பயம் காரணமாக இருக்கலாம். ஏப்., 14 வரை என்னை வந்து பார்த்தனர். நான் பொதுச்செயலரை பார்க்க சென்ற போது, மாலை, 5:00 மணிக்குள் சென்றிருக்க வேண்டும். நேரமாகி விட்டதால், அவரை சந்திக்காமல் திரும்பினேன். சென்னை

Advertisement

வந்த பின், செங்கோட்டையன், சீனிவாசன் வந்து பேசினர். அப்போதும், வெளிப் படையாக பேசவில்லை. என்னை ஒதுக்குவ தாக, அமைச்சர்கள் கூறிய பின், என்னை பார்க்க எம்.எல்.ஏ.,க்கள் வந்தனர். அவர்களிடம், 'பொறுமையாக இருங்கள்; ஒற்றுமையாக இருங்கள்' என்று தான் கூறினேன்.
ஒதுங்கு எனக் கூறியதால், ஒதுங்கி விட்டேன். சகோதரர்களிடம் சண்டை போட விருப்பம் கிடையாது. கட்சியை பலவீனப்படுத்த விரும்பவில்லை. அனைவரும் சேர்ந்து ஒதுக்கி விட்டதாகக் கூறினர்; ஒதுங்கிக் கொண்டேன்.
நான் சண்டை போட்டு, இயக்கம் பாதிக்கக் கூடாது. இயக்கத்திற்கு எதிராக என்றும் நடக்க மாட்டேன். இவர்கள் அதிருப்தியாலோ, பயத்தாலோ செய்யும் செயல், கட்சி மற்றும் ஆட்சிக்கு எதிராக அமைந்து விடக்கூடாது. கட்சிக்கு இடையூறு ஏற்படும்படி, நான் நடந்து கொள்ள மாட்டேன்.கட்சியையும், ஆட்சியை யும் காப்பாற்றுவதற்காக, இந்த முடிவை எடுத்ததாக கூறும் நண்பர்கள், பயப்படாமல், தைரியமாக, கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்தி செல்ல வேண்டும்.இவ்வாறு தினகரன் தெரிவித்தார்.

தினகரன் ஓட்டமெடுத்தது ஏன்?


எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தெரிவிக்க மறுத்த தால், கட்சிப் பணியில் இருந்து ஒதுங்குவதாக, தினகரன் அறிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட தும், அமைச்சர்கள் எதிர்ப்பை மீறி, களம் இறங்கினார். தனக்கு தேர்தல் பணியாற்றுவதற் காக, அனைத்து அமைச்சர் களையும், தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்தார். முதல்வர் பெயரையும், அந்த பட்டியலில் சேர்த்தார்.
தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்க, ஒவ்வொரு அமைச்சரும் குறிப்பிட்ட தொகை வழங்க வேண்டும் என்றார். பணத்தை கையாளும் பொறுப்பை, தன் விசுவாசியான அமைச்சர், விஜயபாஸ்கரிடம் ஒப்படைத்தார். அவரது வீட்டில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், பணம் பட்டுவாடா ஆதாரங்கள் சிக்கின. கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டதால், விஜயபாஸ்கரை, அமைச்சர் பதவியில் இருந்து விலக்க, முதல்வர் முடிவு செய்தார். அதற்கு, தினகரன் முட்டுக்கட்டை போட்டார்.
இந்நிலையில், தேர்தல் கமிஷனர்களுக்கு லஞ்சம் கொடுக்க, இடைத்தரகர் மூலம் முயற் சித்ததாக, தினகரன் மீது, டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அடுத் தடுத்து, தினகர னால் சிக்கல் வருவதால், அவரை கட்சியில் இருந்து, ஒதுங்கி இருக்கும் படி வலியுறுத்த, அமைச்சர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி, ஏப்ரல், 14ல், தினகரன் வீட்டிற்கு சென்று, அவரிடம் கட்சிப் பணியில் இருந்து ஒதுங்கும்படி, அமைச்சர்கள் தெரிவித்துள்ள னர். ஆத்திரமடைந்த தினகரன், அமைச்சர் களை கடுமையாக திட்டி அனுப்பி விட்டார். அதன்பின், அமைச்சர்கள் கூடி பேசி, தினகரன் குடும்பத்தை விலக்குவதாக அறிவித் தனர். அப்போதும் தினகரன், தனக்கு ஆதரவாக, சில அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் வருவர் என, நம்பினார். எனவே, எம்.எல்.ஏ., வெற்றி வேல் மூலம், நேற்று முன்தினம் இரவு, எம்.எல்.ஏ.,க்களை, மொபைல் போனில் தொடர்பு கொண்டார்; யாரும் எடுக்கவில்லை.
அதைத் தொடர்ந்து, ஜெ., உதவியாளர் பூங்குன்றன் மொபைல் போனில் இருந்து பேசி உள்ளார்; அவரது பேச்சை கேட்ட பிறகும், யாரும் முன்வரவில்லை. வெறும், எட்டு எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே, தன் பக்கம் வந்தததால், தினகரன் ஏமாற்றமடைந்தார்; ஒதுங்குவதாக அறிவித்தார்.

தினகரனுக்குசம்மன்

நேற்று(ஏப்19) இரவு 11மணியளவில் சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீட்டிற்கு வந்த டில்லி போலீசார் சம்மனை கொடுத்து விட்டு உடனடியாக புறப்பட்டு சென்றனர்.

- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (111)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vasanth - Jurong west,சிங்கப்பூர்
20-ஏப்-201723:47:38 IST Report Abuse

vasanthOPS is not enough knowledge like TTV Dhinakaran. OPS supports BJP. TTV Dhinakaran is the only person fighting against BJP. Real Tamilan are against BJP that's why i support Dhinakaran. BJP is trying to rule Tamilnadu​ but TTV is not accepting that's why BJP wants him to go away

Rate this:
Neelaa - Atlanta,யூ.எஸ்.ஏ
20-ஏப்-201719:38:57 IST Report Abuse

Neelaaஇளைஞர் திரு சுடாலின் அவர்கள், அல்லது, இளைஞர் திரு ராகுல் காந்தி அவர்கள், இந்த இளைஞரை தம் கட்சியில் சேர்த்துக் கொள்ள கூடிய சீக்கிரம் ரெடியாகி விடுவார்கள் தினகரன் பத்தரை மாத்து தங்கம் அல்லவா??? ஒரு ஊழல் எலி, மற்ற ஊழல் பெருச்சாளிகள் கூட்டத்தில் தானே அடைக்கலம் ஆகும்?

Rate this:
Basic Instinct - Coimbatore,இந்தியா
20-ஏப்-201722:41:01 IST Report Abuse

Basic Instinctஇந்தியாவில் உள்ள ஒரே ஊழலற்ற கட்சி தாங்கள் ஊழலற்றவர்கள் என்று தேர்தல் பிரச்சாரத்தில் சொல்லுகிறார்கள். மக்களிடம் சொன்னால் தானே அவர்களுக்கு தெரியும், மற்ற ஊழல் கட்சிகளை புறம் தள்ளிவிட்டு இவர்களுக்கு ஓட்டு போட. இவர்கள் தங்கள் மிக பெரிய பலத்தை சொல்ல மறுப்பது ஏன்?...

Rate this:
Madurai Raja - Madurai,இந்தியா
20-ஏப்-201719:15:44 IST Report Abuse

Madurai Rajaநீங்களும் தமிழ் நாட்டை விட்டு ஓடும் நாள் வெகு தொலைவில் இல்லை.

Rate this:
மோகன் வைத்தியநாதன் - சுலவ்,யுனைடெட் கிங்டம்
20-ஏப்-201716:48:19 IST Report Abuse

மோகன் வைத்தியநாதன்வெக்கம் கேட்ட ஜனநாயகம்... வோட்டுக்கு பணம் கொடுப்பது குற்றம் என்றால் வாங்குவதும் குற்றம்..... இனி வரும் காலங்களில், அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் எடுத்தல் மட்டும் போதாது.. பொது மக்களுக்கு இனிமேல் ஆதார் அட்டைகள் கொடுக்கும் முன் சத்தியப்பிரமாணம் எடுக்க சொல்லவேண்டும்..அதாவது, இந்திய பிரஜையாகிய நான் தேர்தல் சமயத்தில் என்னுடைய ஜனநாயக கடமை ஆற்றுவதற்கு லஞ்சம் வாங்கமாட்டேன் என்றும், என்னுடைய தொகுதி MLA தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அதை உடனடியாக முறையாக அரசுக்கு (?????) தெரிவிப்பேன் என்றும், மற்றும் அரசு அதிகாரிகள் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உடனடியாக அரசுக்கு தகவல் தெரிவிப்பேன் என்றும் உறுதிகொள்கிறேன்... இதை நான் தவறினால் நான் அரசிடம் இருந்து பெரும் சலுகைகளை திருப்பி செலுத்துவேன் என்றும் உறுதிகொள்கிறேன்... இப்படி ஒன்று நடந்தால் நன்றாக இருக்கும்.....

Rate this:
Balaji - Khaithan,குவைத்
20-ஏப்-201715:44:32 IST Report Abuse

Balajiஅரசியல் திருப்பமாக தானே கட்சியை விட்டு ஒதுங்கிக்கொள்கிறேன் என்று சொன்னது அமைந்துவிட்டது....... மக்கள் தங்களை விரும்பவில்லை என்பதை உணர்ந்ததால் தான் இந்த முடிவுக்கு வந்திருக்க முடியும்....... கட்சி சின்னத்தை பெறவே ஐம்பது கோடி பேரம் பேசியவருக்கு கட்சி உறுப்பினர்களை வளைக்க தெரியாதா என்ன?????? ஆக இவர்கள் இல்லாமல் எஞ்சியுள்ள காலம் ஆட்சி நடந்தால் சரி தான்..........

Rate this:
Snake Babu - Salem,இந்தியா
20-ஏப்-201714:42:35 IST Report Abuse

Snake Babu//தமிழர்களுக்கு தைரியம் இல்லாததால் நேரடியாக எதிர்க்க முடியவில்லை....// இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் Sivramkrishnan Gk - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள் , எப்படியாவது தாக்கிடனும் என்கிற நோக்கம் உங்களை போட்றோருக்கு இருப்பது நன்றாக தெரிகிறது. அதுக்காக உடனே என்னை அய்யாவுக்கு சசிகலாவுக்கு சப்போர்ட் என்று கூறிவிடாதீர்கள். நான் கூறவிரும்புவது ஏன் தமிழர் விரோதமாக இருக்கிறீர்கள். ஒரு தேர்ந்தெடுக்க பட்ட கட்சி. ஜெய என்ற பெயருக்காக போடப்பட்ட ஒட்டு. அது முடிந்துபோன ஒன்று, தலைமை இல்லதாதல் குழப்பம் இன்னும் நீடிக்கிறது, இதுக்கும் தமிழர் தைரியத்திற்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை. தமிழர் திராவிடர் விரோத போக்கை தவிருங்கள், தவறு செய்த ஊழல் அரசியவாதிகளை கண்டியுங்கள், அதற்கு எந்த மாற்று கருதும் இல்லை நன்றி வாழ்க வளமுடன்

Rate this:
Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா
20-ஏப்-201714:17:25 IST Report Abuse

Rajamani Ksheeravarneswaranஅதிமுக என்ற மாபெரும் இயக்கம் புரட்சித்தலைவர் மறைவிற்கு பின் அம்மாவிற்கு சசிகலா குடும்பத்தின் ஆதரவு உறுதுணை காரணமாக மாபெரும் இயக்கமாக மாறியது அதிமுகவினரும் தமிழக மக்கள் அறிந்த ஓன்று . தீயசக்தி அம்மாவின் மீதும் அம்மாவிற்கு அரணாக நின்ற ஒரே காரணத்திற்காக சசிகலா குடும்பம் மீதும் பல்வேறு பொய் வழக்குகளை போட்டது .இந்த வழக்குகளை போட்டதே ஊழலின் ஊற்றுக்கண் , ஊழல் விஞ்ஞானி ஒருவரால்தான் என்பதும் தமிழக மக்கள் அறிந்த ஓன்று அதன் காரணமாக அதிமுக தொடர்ந்து மக்கள் ஆதரவு பெற்று வருகிறது. அந்நிய செலாவணி வழக்குகள் , பொருளாதார குற்ற வழக்குகள் என்று போட்ட ப. சிதமபரமும் இந்த கருணாவின் கூட்டுக்களவாணிதான் . இந்த வழக்குகள் எல்லாம் 1991 -96 சமயத்தில் நடந்ததாக போடப்பட்ட வழக்குகள் .இவற்றை கீழமை நீதிமன்றம் எந்த ஆதாரமும் இல்லை என்று தள்ளுபடி செய்துவிட்டன. 19 வருடங்கள் கழித்து அம்மா மறைவிற்கு பின் சசிகலா சிறை சென்ற பின் தினகரன் அதிமுகவின் துணை பொது செயலாளர் ஆன பின் இந்த வழக்குகளை அமலாக்க துறை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி அந்த மனுவை ஏற்றுக்கொண்டு இப்போது பொருளாதார குற்றம் பற்றி விசாரிக்கும் எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றது. சசிகலாவை பொது செயலாளராக நியமித்ததும், தினகரனை துணை பொதுச்செயலாளராக வழிமொழிந்த அதிமுக அமைச்சர் கூட்டம் இன்று மத்திய அரசின் நெருக்கடியால் வேறுவழியின்றி தினகரனை ஒதுக்கவேண்டிய நிலையில் உள்ளது. அதாவது எந்த உச்சநீதிமன்றம் திமுக -காங்கிரஸ் மத்திய அரசை கண்டித்து 'சிபிஐ ஒரு கூண்டுக்கிளி ' என்று விமர்சித்ததோ அதே உச்ச நீதிமன்றம் உட்பட அணைத்து நீதிமன்றங்கள் , தேர்தல் ஆணையம் , சிபிஐ , அமலாக்கத்துறை , வருமானவரித்துறை இன்று மோடி-அமித்ஷா மாபியா கும்பலின் கூண்டுக்கிளி யாக இருப்பது நிதர்சனம். அதிமுக - இப்போது பன்னீர்செல்வம் வைத்திருக்கும் 12 சட்டமற்ற உறுப்பினர்களுக்கு பயந்து சசிகலா குடும்பத்தை ஒதுக்குவதாக யாரும் கருதவில்லை. வருமானவரித்துறை, சிபிஐ , அமலாக்கத்துறை ,தேர்தல் ஆணையம் ,மற்றும் நீதிமன்றங்கள் அதிமுகவின் எந்த நியாயமான கோரிக்கைகளை பொருட்படுத்தப்போவதில்லை. சட்டசபையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபட்டது மக்கள் அறிந்த ஓன்று .நம்பிக்கை வாக்கெடுப்பில் ரகளையில் ஈடுபட்ட திமுகவே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அனைத்து வீடியோ பதிவுகளும் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு முதல்வரும் அவரது பதிலறிக்கையை தாக்கல் செய்துவிட்டார். அந்த வீடியோ பதிவுகள் தெளிவாக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் செய்த ரகளைகளை நீதிபதிகள் கவனத்திற்கு எடுத்து சென்றிருக்கும் .ஆனால் நீதிபதிகள் அதுகுறித்து எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை. அதே போன்று அம்மாவின் உருவபொம்மையை சவப்பெட்டியில் எடுத்து சென்று அதன் மீன் தேசியக்கொடியை போர்த்தி அம்மாவிற்கும் நமது தேசிய கொடிக்கும் ஒருசேர அவமதிப்பு செய்த மாபியா பாண்டியராஜனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒரு கண்டனம் கூட தெரிவிக்காது முன் ஜாமீன் வழங்கியுள்ளது. தெளிவாக ஆங்கிலம் பேசும் தினகரனுக்கு 'ஆங்கிலம் தெரியுமா ? என்று நீதிபதி கேட்கிறார். முறையாக விசாரணையை எதிர்கொள்ளும் அவர் மீது வழக்கு விசாரணையை தாமதம் செய்வதாக கண்டனம் செய்கிறார். 19 வருடம் வாளாவிருந்த அமலாக்கத்துறை பற்றி எந்த கருத்தும் இல்லை. தினகரன் தன்னால் அம்மா வளர்த்த அதிமுக கட்சி மற்றும் கடும் முயற்சியால் அம்மா பெற்ற ஆட்சி கவிந்து விடக்கூடாது என்று விலகி நிற்கிறார். சிலரின் சுயநலம் , வழக்குகளை சந்திக்க பயப்படும் அமைச்சரவை ,அதனால் ஆட்சி கவிழ்ந்துவிடுமோ தங்கள் பாதைகள் போய்விடுமோ என்று மோடி-அமித்ஷாவின் மிரட்டலுக்கு பயந்து , அம்மாவிற்கு உறுதுணையாக இருந்து சிறைவாசங்களை அனுபவித்த கட்சிக்கு விசுவாசமான சசிகலா என்ற அதிமுகவின் முதுகெலும்பை முறிக்க பார்க்கிறார்கள். .இவர்கள் உண்மையில் மோடியின் அடிமை பன்னீர்செல்வத்திடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. பொறுப்பு ஆளுநர் , மோடி -அமித்ஷா மாபியா கும்பல் என்ன சொல்கிறதோ , யாரை எங்கே எந்த பொறுப்பில் வைக்கவேண்டும் என்று சொல்கிறதோ அந்த வேலையை செய்யப்போகிறார்கள். அதாவது அம்மாவின் அதிமுகவை . மோடியின் அதிமுக (மோதிமுக ) ஆக மாற்றப்போகிறார்கள் .இதற்கு ஊடகங்கள் தாளம் போடும். தமிழகத்தில் பல ஊழல் குடும்பங்கள் இருக்கின்றன. அதில் முதலிடம் கருணாவின் குடும்பம் ,இரண்டாவது இடம் ப. சிதம்பரத்தின் குடும்பம், மூன்றாவது ராமதாஸ் குடும்பம் , மூப்பனார் குடும்பம் , விஜயகாந்த் குடும்பம் , குமாரி அனந்தன் குடும்பம் பன்னீர்செல்வம் குடும்பம்இ வற்றை விட தர வரிசையில் கீழே இருப்பது சசிகலா குடும்பம். திமுக குடும்பம் , ராமதாஸ் குடும்பம் மீதும் பல வழக்குகள் உள்ளன. அனால் சசிகலா குடும்பம் அழியவேண்டும் என்று இந்த ஊடகங்கள் மற்றும் மாற்றுக்கட்சியினர் விரும்புவது அதிமுக என்ற கட்சி அழியவேண்டும் என்ற தீய எண்ணத்தை தவிர வேறு ஒன்றுமில்லை. மற்ற குடும்பங்கள் இவர்களை நன்றாக கவனித்துக்கொள்ளும் . ஆனால் சசிகலா குடும்பம் சிறை செல்வதற்கோ அஞ்சாத குடும்பம் . யாருக்கும் பணியாத குடும்பம் . அம்மாவும் , சசிகலா மற்றும்அ அவர் குடும்பத்தினர் மட்டுமே அதிமுகவின் விரோதிகளால் பல கஷ்டங்களை ,சிறைவாசங்களை அனுபவித்துள்ளனர். பன்னீர் செல்வம் உட்பட எந்த அமைச்சர்களும் தீயசக்தியால் துன்புறுத்தப்படவில்லை. அம்மா மருத்துவமனையில் இருந்தபோது எந்தவித ஆதாரமின்றி சசிகலா மீது தொடுக்கப்பட்ட விஷம பிரச்சாரம் அதனால் வெறுப்பில் இருந்த மக்கள் , அவர் சிறை சென்றபின் ,அடுத்தடுத்து மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் மூலம் 'அம்மாவை பெங்களூரு சிறையில் தள்ளியது யார் ? அப்பல்லோவில் வீழ்த்தியது யார் ? அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை பன்னீர்செல்வம் என்ற 'பொம்மையை வைத்து ஆட்டிப்படைத்து கபளீகரம் செய்யப்போவது யார் ? என்ற உண்மை அறிந்து , அதிமுகவில் சசிகலா மற்றும்தி னகரன் தலையெடுத்தபின் தங்கள் நினைப்பது நடக்காது என்றறிந்து, அவர்களை சிறைக்கு அனுப்ப நடவடிக்கைகள் எடுப்பது யார் என்பதையும் தெளிவாக உணர்ந்தபின் சசிகலா மற்றும் தினகரன் மீது மக்களின் நம்பிக்கை பெருகியுள்ளது. தினகரன் பன்னீர்செல்வம் போல் கட்சியையும், ஆட்சியையும் சீர்குலைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காது சசிகலா போல் சிறை செல்லவும் தயங்காது நிற்பது அதிமுக தொண்டர்களுக்கு நம்பிக்கை ஊட்டியுள்ளது. இன்னும் சில வருடங்களில் இந்த மோடி அரசு ஒழிந்து போகும் .மாக்களுக்கு எந்த நம்மையும் செய்யாது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அம்மக்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வர்களை விலைக்கு வாங்குவது அல்லது மிரட்டல் உருட்டல் மூலம் தன வயப்படுத்துவது போன்ற ஜனநாயக விரோத அரசு அதிக நாள் நீடிக்காது.என்பது வரலாறு

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
20-ஏப்-201718:00:54 IST Report Abuse

இந்தியன் kumarஎன்ன சொல்ல வருகிறீர்கள், தினகரன் ரொம்ப நல்லவர் என்றா ???...

Rate this:
mangaibagan - bangalore,இந்தியா
20-ஏப்-201718:02:31 IST Report Abuse

mangaibagan100 % கரெக்ட்....

Rate this:
Paranthaman - kadappa,இந்தியா
20-ஏப்-201713:55:07 IST Report Abuse

Paranthamanசி.ஆர்,.சரஸ்வதி கோகுல இந்திரா வளர்மதி செந்தில் குண்டு கல்யாணம் இவர்கள் எல்லாம் எங்கே பேச்சு மூச்சையே காணோம்.

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
20-ஏப்-201718:01:42 IST Report Abuse

இந்தியன் kumarபதுங்கி இருக்கிறார்கள் பின் பாய்வதற்காக ???...

Rate this:
Paranthaman - kadappa,இந்தியா
20-ஏப்-201713:45:58 IST Report Abuse

Paranthamanதமிழ் நாட்டில் மட்டும் தான் திராவிடத்தால் சம உரிமை கிடைத்ததா..மற்ற மாநிலங்களில் சம உரிமைகள் இல்லையா. எத்தனை நாளைக்கு இப்படி இல்லாததை பேசி திராவிடத்தை வளர்ப்பீர்கள்.குண்டு சட்டியில் குதிரை ஒட்டுவீர்கள்.

Rate this:
S ANBUSELVAN - AL JUBAIL,சவுதி அரேபியா
20-ஏப்-201713:45:05 IST Report Abuse

S ANBUSELVANஇவர்கள் அனைவரும் இணைந்ததற்கு காரணம் இரட்டை இலையை பற்றி கூட கவலை இல்லை... கட்சியை பற்றிய கவலை இல்லை... மக்களை பற்றி கவலை சிறிதும் இல்லை... ஆட்சி தற்போது கவிழ்ந்தால் தங்கள் தேர்தலுக்கு செலவழித்த பணம் கூட இன்னும் கொள்ளை அடிக்க வில்லையே என்ற கவலை தான்... அதனால் தான் கூவத்தூரில் இருக்கும்போது தினகரன் பக்கமும் தற்போது OPS + எடப்பாடி பக்கமும் நின்றார்கள்..... நாளையே வேறு ஒரு ஆள் வந்தால் அவர்கள் பக்கமும் செல்ல தயங்க மாட்டார்கள்.... இவர்களில் யார் யோக்கியன் ? எடப்பாடி, வைத்தியலிங்கம்,விஜயபாஸ்கர்,OPS , நத்தம் இவர்கள் அனைவரும் கொள்ளை அடித்த பல ஆயிரம் கோடி ரூபாயையும், தினகரன், சசிகலா இவர்கள் கொள்ளை அடித்த பல ஆயிரம் கோடி ரூபாயையும் பாதுகாக்கவே தற்போது நாடகம் ஆடுகின்றனர்...... இவர்களை மிரட்ட மோடி வருமான வரி துறையினரையும், அமலாக்க துறையினரையும் ஏவி விட்டுள்ளார்.... சசியின் சிறை தண்டனையும் முன்னரே கிடைக்க வேண்டியது.... இப்போது கிடைத்திருப்பதற்கு காரணம் அவரின் முதல்வர் பதவி ஆசைதான்.... இல்லாவிட்டால் இன்னும் பல வருடம் கழித்து சிறைக்கு சென்றிருப்பார்...

Rate this:
Sitaramen Varadarajan - chennai,இந்தியா
20-ஏப்-201719:42:31 IST Report Abuse

Sitaramen Varadarajanதிரு அன்பு செல்வன் அவர்களே..........."இவர்கள் கொள்ளை அடித்த பல ஆயிரம் கோடி ரூபாயையும் பாதுகாக்கவே தற்போது நாடகம் ஆடுகின்றனர்.." என்ற உங்கள் பதிவு அருமை அருமை அருமை. தமிநாட்டு மக்களை நிரந்தரமாக முட்டாளாக்க முடியாது. அனைவரும் விழித்துக் கொண்டு விட்டனர். ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமான துரோகிகளை கண்டுபிடித்து அந்தமான் சிறையில் அடைக்க வேண்டும். சிறிது சிறிதாக சாக வேண்டும். அப்போதுதான் நீதி நிலைக்கும்....

Rate this:
மேலும் 96 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement