பதிவு செய்த நாள் :
மே 1 முதல் 'சிவப்பு சைரன்' கிடையாது
மத்திய அமைச்சரவை அதிரடி முடிவு

புதுடில்லி: வி.ஐ.பி., கலாசாரத்தை ஒழிக்கும் வகையில், ஜனாதிபதி, பிரதமர் முதற்கொண்டு எவருமே, வரும் மே, 1 முதல் 'சிவப்பு சைரன்' பயன்படுத்துவதற்கு தடை விதிப்பது என்று, மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

மே 1 முதல், 'சிவப்பு சைரன்,கிடையாது,மத்திய , அமைச்சரவை, அதிரடி, முடிவு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது:

காரில், 'சிவப்பு சைரன்' பொருத்தியபடி

செல்லும், வி.ஐ.பி., கலாசாரத்துக்கு பொது மக்கள் இடையே கடும் எதிர்ப்பு உள்ளது. எந்த வொரு ஜனநாயக நாட்டிலும், இந்த கலாசாரம் எடுபடாது. மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப, அவர்களுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ப, சிவப்பு சைரன் பொருத்திய வாகனங்களுக்கு தடை விதிப் பது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக் கப்பட்டது. அதன்படி, வரும், மே, 1 முதல், சிவப்பு சைரன் பயன்படுத்தக் கூடாது.

ஜனாதிபதி, பிரதமர், தலைமைநீதிபதிகள், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் உட்பட எவரும் பயன்படுத்தக் கூடாது. இதற்காக, மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே உள்ள சட்டத்தின் அடிப்படை யில், அரசாணை வெளியிட்டால் போதும்; விரைவில் இது வெளியிடப்படும்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில், எம்.எல்.ஏ.,க்கள் கூட, சிவப்பு சைரன் பொருத்திய காரில் வருவதாக புகார்கள் வந்தன. அமைச்சரின் காரில் கூட சிவப்பு சைரன் இருக்கக் கூடாது. அவருடைய காருக்கு முன்னால் செல்லும், 'பைலட்' காரில் தான் சிவப்பு

Advertisement

சைரன் இருக்க வேண்டும் என்று சட்ட விதிகள் கூறுகின்றன.ஆனால், இந்த விதிகளை பலரும்தவறாகப் பயன் படுத்தி வருவதாக புகார்கள் வந்ததால், அனைத்து வகை வாகனங்களிலும், சிவப்பு சைரன் பயன்படுத்த தடை விதிக்கும் வரலாற்று சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டுள் ளது.இது, ஜனநாயகத்தை மதிக்கும், பிரதமர் மோடி அரசின் மற்றொரு நடவடிக்கை. இந்த முடிவுக்கு மக்களிடையே பெரிய அளவில் ஆதரவு இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

விதி விலக்கு


அவசரகால வாகனங்களான, ஆம்புலன்ஸ், தீயணைப்பு துறை வாகனங்கள் உள்ளிட்ட வற்றில், சைரன் பொருத்துவதற்கு விதி விலக்கு அளிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார். சர்க்கரையின் விலை உயர்ந்து வருவதைத் தொடர்ந்து, சர்க்கரை இருப்பு வைக்க வியாபாரிகளுக்கு கட்டுப்பாடு விதிக் கும் உத்தரவை, வரும், அக்டோபர் மாதம் வரை, மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க வும், மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.


Advertisement

Advertisement

மேலும் முதல் பக்க செய்திகள்:



வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A shanmugam - VELLORE,இந்தியா
25-ஏப்-201709:15:22 IST Report Abuse

A shanmugamஇதே வழி முறையை கோவில்கள், ரயில்கள், ஆகாய விமானங்கள் ஆகிய இடங்களிலும் VViP இக்கான தனி சலுகையை "ரத்து" செய்ய உடனடியாக அமுல்படுத்தவேண்டும்.

Rate this:
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
23-ஏப்-201701:18:43 IST Report Abuse

மலரின் மகள் மே ஒன்னு முதல் சிவப்பு கூடாதா? ஏனிந்த கோபம் கம்யூனிஸ்ட்கள் மீது. அனாவசியமாக மக்கள் பிரதிநிதிகளுக்கு கொடுக்கப் பட்டிருக்கும் சலுகைகளை நீக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு எதற்கு. அவர்கள் ஏன் அதிக அளவில் ஸ்டாக் வைக்கிறார்கள். அங்கு மட்டும் என்ன டிஜிட்டல் பரிவர்த்தனை இல்லை.

Rate this:
20-ஏப்-201723:54:44 IST Report Abuse

MichaelRajஇதெல்லாம் 60 வருசத்துக்கு முன்னாடியே காமராஜர் ஐயா பண்ணிட்டாரு....

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
20-ஏப்-201721:59:52 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்வீணாய் போனவனுக்கெல்லாம் முன்னும் பின்னும் பைலட்டு, இஜட் பிளஸ்ன்னு வருசத்துக்கு பல்லாயிரம் கோடி பணம் வீணாய் போகுது. சிவப்பு விளக்கை நிறுத்திட்டா அது போயிடுமா? ரிட்டையர்டு தொழிலாளியின் வவுத்துலே அடிச்சி அவங்க சேமிப்பின் வட்டியை கொறைச்சி சுகம் காணும் அரசு நிர்வாகம். தேவையற்ற உப்புசப்பற்ற சங்கதிகளை என்னமோ மக்கள் நலத்திட்டம் போல விளம்பரம் செய்கிறார்கள்.

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
24-ஏப்-201711:10:58 IST Report Abuse

Malick Rajaஅனாவசியமான இதைத்தான் கேனத்தனம் என்று சொல்வார்களோ சிகப்பு விளக்கை நீக்கினால் நாற்பது சதவீத வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள ஏழைகளின் நிலை உயருமா .....

Rate this:
TamilReader - Dindigul,இந்தியா
20-ஏப்-201721:52:58 IST Report Abuse

TamilReaderவரவேற்கக்கூடிய ஓர் அம்சம் அதே போல் அரசியல் வாதிகளின் செக்யூரிட்டி - ஐயும் அகற்ற வேண்டும் ஒரு MLA வரும் போது 10 போலீஸ் காரங்க கூட வராங்க MLA என்பவர் மக்களின் பிரதிநிதி தான்... அப்படி இருக்கும் நபருக்கு எதற்கு 10 போலீஸ் காரங்க?

Rate this:
Meenu - Chennai,இந்தியா
20-ஏப்-201719:10:26 IST Report Abuse

Meenuகட்சி கொடிகளை காரில் கட்டிக்கொண்டு வளம் வந்து பந்தா காண்பிப்பதையும் தடை செய்ய வேண்டும். அதே போல், காரின் முன் புறம் "தலைவர்", "CHAIRMAN" என்றெல்லாம் போர்டு வைத்துக்கொண்டு பொது மக்களை பயமுறுத்துகின்றனர். இருசக்கர வாகனங்களில் " EX ARMY ", "EX chairman" "POLICE" அவரவர் இஷ்டத்துக்கு தான் வகிக்கும் பதவி அல்லது துறை பெயர்களை எழுதி வைத்துக்கொள்கின்றனர். நம்பர் பிளாட்டில் வண்டி நம்பரை தவிர வேறு எதுவும் இருக்கக்கூடாதுன்னு உத்தரவு போடவேண்டும்.

Rate this:
Dol Tappi Maa - NRI,இந்தியா
20-ஏப்-201717:57:24 IST Report Abuse

Dol Tappi Maaஇது வரவேற்க வேண்டிய ஒன்று. பா ஜ க ஆட்சிக்கு வந்து உருப்படியாக செய்தது இது ஒன்று தான் .

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
20-ஏப்-201715:48:02 IST Report Abuse

Endrum Indian3 வருடம் ஏன் வெய்ட் செய்தீர்கள். பதவிக்கு வந்தவுடனே செய்ய வேண்டியது இது பஞ்சாப் முதன் மந்திரி செய்த மாதிரி. இது மட்டும் போதாது அசிங்கமான அரசியல்வாதியோ, நாசமாப்போன நடிகர் கூட்டமோ, சாதாரண மனிதனோ சட்டம் ஒன்று தான் என்று கொண்டு வரவும் முதலில்.

Rate this:
Bava Husain - riyad,சவுதி அரேபியா
20-ஏப்-201715:19:45 IST Report Abuse

Bava Husainநல்ல விஷயம், வரவேற்கிறேன்.... அதேபோல், முதல்வர்கள், அமைச்சர்கள் போன்றோர் வரும்போது, அரை மணி நேரத்திற்கு முன்பாகவே, போக்குவரத்தை நிறுத்தி, நோயாளிகளுக்கும், மக்களுக்கும் இடையூறு செய்வதற்கும் ஒரு தடை போட்டால் நன்றாக இருக்கும்....

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
20-ஏப்-201722:01:42 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்அதை கேட்க நீங்க யாரு? ன்னு தான் கேட்பான் நம்ம தேசபக்தன்....

Rate this:
Brindha Sundar - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஏப்-201714:42:16 IST Report Abuse

Brindha Sundarநீதியின் முன் அனைவரும் சமம் என்பதை இந்த மத்திய அரசு உணர்ந்து நடைமுறை படுத்தியது பாராட்டுதலுக்கு உரியது. வாழ்க இந்தியா வளர்க இந்தியர்கள்

Rate this:
மேலும் 27 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
மேலும் செய்திகள்