சபாஷ்! வி.ஐ.பி., கைதிகளும் இனி 'களி' சாப்பிட வேண்டும் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு Dinamalar
பதிவு செய்த நாள் :
சபாஷ்!
வி.ஐ.பி., கைதிகளும் 'களி' சாப்பிட வேண்டும்
உ.பி., முதல்வர் யோகி அதிரடி உத்தரவு

லக்னோ: உ.பி.,யில், ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் செயல்பாடுகள் அதிருப்தி அளிப்பதாக கூறிய, மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், காவல் துறையில் அதிரடி மாற்றங்க ளை அமல்படுத்த, பல்வேறு உத்தரவு களை பிறப்பித்துள்ளார். 'சிறையில் அடைக்கப் பட்டுள்ள கைதிகள் அனைவரும் ஒரே மாதிரி யாக நடத்தப்பட வேண்டும். பிக்பாக்கெட் திருடர்கள் முதல், வி.ஐ.பி., கைதிகள் வரை, அனைவருக்கும், ஒரே மாதிரியான உணவு வழங்கப்பட வேண்டும்' என, அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

சபாஷ்!,வி.ஐ.பி.,, கைதி, இனி ,'களி' சாப்பாடு,யோகி , அதிரடி

உத்தர பிரதேசத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதல்வர் பொறுப்பேற்ற திலிருந்து, அரசு நிர்வாகத்தில் பல்வேறு மாற் றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அரசு அலுவலர் கள் நேரம் தவறாமல் பணிக்கு வருவது, கோப்பு கள் தேக்கம் அடையாமல், விறுவிறுப்பாக பணிகள் நடப்பது உள்ளிட்ட செயல்பாடுகளால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

களையெடுப்பு


மாநிலத்தில், விவசாய கடன்களை தள்ளுபடி செய்து, மக்களின் அமோக ஆதரவை பெற்ற ஆதித்யநாத், பொதுப் பணித்துறை, கல்வி, சுகா தாரம், மின் துறை உள்ளிட்ட எந்தத் துறையை யும் விட்டு வைக்காமல், கறுப்பு ஆடுகளை களையெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் காவல் துறை மற்றும் சிறைத் துறையில் சீர்திருத்தம் செய்ய, முதல்வர் ஆதித்யநாத் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

லக்னோவில் நேற்று நடந்த, உள்துறை, காவல் கண்காணிப்பு மற்றும் சிறைத்துறை அதிகாரி கள் கூட்டத்தில், யோகி ஆதித்யநாத் பேசியதாவது:

மாநிலத்தில், சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதே அரசின் தலையாய கடமை. மக்கள் அச்சமின்றி,

நிம்மதியுடன் வாழ, போலீசார் விழிப்புடன் செயல்பட வேண்டும். காவல் துறை நியமனத் தில் இதுவரை கடைபிடிக்கப்பட்ட நடைமுறை கள் முற்றிலும் மாற்றப்பட வேண்டும். தகுதி வாய்ந்த நபர்கள் மட்டுமே போலீஸ் பணியில் நியமிக்கப்பட வேண்டும். நேர்மை, ஒழுக்கம், கடமை உணர்வு மிகுந்த நபர்களை ஊக்குவிக் கவும், அவர்களை கவுரவிக்கவும் மாநில அரசு தயாராக உள்ளது.

லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க, இந்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. எனினும், லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்புத் துறை போலீசாரின் செயல்பாடுகள் அதிருப்தி அளிக்கும் வகையில் உள்ளன. எனவே, அந்த துறையில் பல மாற்றங்களை செயல்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அந்த துறையின் கட்டமைப்பு மாற்றி அமைக்கப்படும். அதே போல், சிறைத் துறை யிலும் பல அதிரடிமாற்றங்கள் செயல்படுத்தப் படும்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் அனை வரும் ஒரே மாதிரியாக நடத்தப்பட வேண் டும். பிக்பாக்கெட் திருடர்கள் முதல், ரவுடிகள், மிகப் பெரிய குற்றங்களுக்காக சிறை தண்டனை பெற்ற வர்கள் வரை அனைவருக்கும், ஒரே மாதிரியான உணவு வழங்கப்பட வேண்டும். சிறை வளாகத் திற்குள் மொபைல் போன் பயன்பாட்டை தடுக்கும் வகையில், ஜாமர்கள் பொருத்தப்பட வேண்டும்.

மருத்துவப் பரிசோதனை என்ற பெயரில், செல்வாக்கு மிகுந்த சிறைக் கைதிகள் சலுகைகள் பெறுவது தடுக்கப்பட வேண்டும். அந்த உத்தரவுகள் அனைத்தும் உடனடியாக அமல்படுத்தப்படும். காவல், சிறைத் துறையில் கறுப்பு ஆடுகள் களையெடுக்கப்பட வேண்டும்.

கறுப்பு ஆடுகள் பீதி


மாநிலத்தில் குற்றங்களை தடுக்க, 'அவசர போலீஸ் 100'க்கு தகவல் தரும் நபர்களை, விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தப்படக் கூடாது. பொதுமக்களின் நண்பர்களாக போலீசார் செயல்பட வேண்டும்; அவர்களின் வேலை கலாசாரம் மாற்றப்பட வேண் டும். குற்றவாளிகள் தவிர, வேறு யாரையும் பய முறுத்தும் வகையில் அவர்கள் நடந்து கொள்ளக் கூடாது.இவ்வாறு அவர் பேசினார்.அரசு ஊழியர்கள், அதிகாரிகளுக்கு சிம்ம சொப்பன மாக விளங்கும் முதல்வர் ஆதித்ய நாத், தற்போது, காவல் துறை பக்கம் தன் கவனத்தை திருப்பியுள்ள தால், தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகளுக்கு சாதகமாக செயல்படும் கறுப்பு ஆடுகள் பீதியடைந்து உள்ளனர்.

'குரூப் அட்மின்'களுக்கு எச்சரிக்கை:

உ.பி.,யில், பிரதமர் மோடியின்

Advertisement

வாரணாசி லோக்சபா தொகுதியில், 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதள குரூப் களில், சர்ச்சைக் குரிய வதந்திகள் பரப்பப்படு கின்றன. இந்த வதந்தி கள், மக்கள் மத்தியில், ஜாதி, மத ரீதியிலான பிளவை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால், 'குரூப் அட்மின்' களுக்கு, மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து, மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் எஸ்.பி., இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது: பேஸ்புக், வாட்ஸ் ஆப் பயன்பாட்டாளர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவற்றில், மக்கள் மத்தியில் மோதல்களை ஏற்படுத்தும் வகையிலான தேவையற்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன.

வாட்ஸ் ஆப், பேஸ்புக் குரூப் அட்மின்கள், தங்களுக்கு நேரடியாக தெரிந்த நபர்களை மட்டும், குரூப்பில் சேர்க்க வேண்டும். முகம் தெரியாத நபர்களை சேர்ப்பதன் மூலம், யார் எந்த வதந்தியை கிளப்புகின்றனர் என தெரியா மல் போக வாய்ப்புள்ளது. தவிர, இவ்வகை வதந்திகளுக்கு, குரூப் அட்மின்களே பொறுப் பேற்க நேரிடும்.

மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தும் வகையிலான வதந்திகளை பரப்பும் குரூப்களை
நிர்வகிக்கும் குரூப் அட்மின்கள் மீது, சட்ட நட வடிக்கை பாயும்; அவர்கள் கைது செய்யப்பட வும் வாய்ப்புள்ளது.இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

முலாயமும் தப்பவில்லை


உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசின் அதிரடி நடவடிக்கைகளுக்கு, முன்னாள்
முதல்வரும், சமாஜ்வாதி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவும் தப்பவில்லை.

உ.பி.,யில் முலாயமின் சொந்த ஊரான எடவாவில் உள்ள பங்களாவில், மின்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, முலாயம், நான்கு லட்சம் ரூபாய் மின் கட்டண பாக்கி வைத்துள்ளது தெரிய வந்தது. மேலும், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மின்சாரம் பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

'ஒரு மாதத்துக்குள் நிலுவையை செலுத்த வேண்டும். அதிக அளவு மின்சாரம் பயன்படுத்த கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப் படும்' என, மின்வாரிய அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s t rajan - chennai,இந்தியா
21-ஏப்-201722:00:31 IST Report Abuse

s t rajanமுலாம் போயிறுச்சே முலயாமு - 4 லக்ஷம் EB due ? அது சரி எத்தனை போண்டா டீ, குழந்தைள், cup & saucer, எண்ணிக்கை தெரியா பேரக் குழந்தைகள், செலவு ஆகுமில்ல ? இன்னும் எத்தனை குடும்பமோ? என்னெனன்ன பாக்கியோ?

Rate this:
Shanu - Mumbai,இந்தியா
21-ஏப்-201720:05:41 IST Report Abuse

Shanuஅப்போ இவருக்கும் களி காத்து இருக்கிறது. இவர் மேல் பல புகார்கள் உள்ளன. பிற்காலத்தில் இவருக்கும் களி கிடைக்கும்.

Rate this:
21-ஏப்-201717:54:20 IST Report Abuse

பிரபு.பல்லடம்யோகி ஆதித்யாநாததின் கொள்கைகளை எங்கள் இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் நன்கு கூர்ந்து கவனித்து கொண்டு இருக்கிறார்கள்

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
21-ஏப்-201716:49:43 IST Report Abuse

Endrum Indianஎடுக்கும் முடிவு சாதாரணனனுக்கு ஒன்றும் வித்தியாசமாக தோன்றவில்லை. இதனால் பாதிக்கப்படப்போகும் தண்டங்களுக்கு இது அதிரடி முடிவு போலத்தான் தெரியும். செல்லும் பாதையில் சில்வண்டுகள் ரீங்காரம் செய்திடுனும், நரிகள் ஊளையிடினும், நல்லதை செய்வதற்காக எடுக்கும் ஒவ்வொரு அடியும், நன்றே நன்றே, நன்றே. அடியின் பலம் அடிபடப்போபவனுக்கு சிம்ம அடியாக இருக்கும், தூரத்தில் நின்று பார்ப்பவனுக்கு அதன் தாக்கம் புரியும். இனியும் நல்லதே செய்வான் எவனும் இதன் வலி உணர்ந்தால்.

Rate this:
guru - Trichy,இந்தியா
21-ஏப்-201719:12:24 IST Report Abuse

guruயோகிஜி நீங்கள் தமிழ் நாட்டையும் சேர்த்து ஆள வேண்டும். கொடுத்து வைத்த UP மக்கள்...

Rate this:
samuelmuthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
21-ஏப்-201715:40:40 IST Report Abuse

samuelmuthiahrajபாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் பல படிக்கும்போதே புல்லரிக்கிறது இந்திய நாட்டில் இப்படியும் ஆட்சி புரியும் ஓர் நபர் அதுவும் ஓர் துறவியால் முடிகிறது என்றால் எல்லா இடங்களிலும் இப்படிப்படட நபர்களை குறிப்பாக தமிழகம் பெறவேண்டும் ஆனால் தமிழக பா ஜா க வில் கூட எவரும் இல்லையே இதுவரை செயல் படுத்தாத நல்ல திட்ட்ங்கள் இதனை மோடி அவர்களும் அனைத்து மாநிலங்களிலும் அமுல்படுத்த அதிரடி ஆணை பிறப்பிக்க வேண்டும் நான்கு லட்ச்ச ரூபாய் பாக்கி வைத்திருப்பவரிடம் எட்டு லட்ச்சமாக கடடனம் வசூலிக்கவேண்டும் ஆக்கிரமிப்புகள் எங்கிருப்பினும் எவர் இருப்பினும் அகற்றப்பட வேண்டும் தமிழக அரசியல்வாதிகள் எழுபது சதவீதம் அதில் மாட்டிக்கொள்ளுவர்

Rate this:
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
21-ஏப்-201715:18:36 IST Report Abuse

N.Kaliraj ஆட்டம் அதிகமாக இருக்கே......அரசியல் தெரியவில்லையோ....

Rate this:
Sandru - Chennai,இந்தியா
21-ஏப்-201715:17:01 IST Report Abuse

Sandruசசிகலா உடன் இளவரசியையும் உ.பி சிறைக்கு உடனடியாக மாற்ற வேண்டும். தினகரனையும் உ. பி சிறையில் அடைக்கலாம்.

Rate this:
Kalyani S - Ranipet,இந்தியா
21-ஏப்-201713:32:50 IST Report Abuse

Kalyani Sபாவம் அத்வானி மற்றும் உமாபாரதி, பாபர் மசூதி வழக்கில் தண்டனை கிடைத்தால் களி தின்ன வேண்டியதிருக்கும்.

Rate this:
ravichandran - avudayarkoil,இந்தியா
21-ஏப்-201713:15:04 IST Report Abuse

ravichandranமக்கள் அச்சமின்றி வாழ்வதற்கு வழி செய்வதே அரசின் தலையாய கடமை , மக்கள் பாதுகாப்பாக இருக்க போலீஸ் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் ஆஹா எப்பேர்ப்பட்ட உத்தரவு வாழ்க யோகி

Rate this:
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
21-ஏப்-201711:30:03 IST Report Abuse

Nakkal Nadhamuniநான்.. நான்... எங்க இருக்கேன்....

Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement