கனடாவில் தோன்றிய திடீர் ராட்சத பனிப்பாறை| Dinamalar

கனடாவில் தோன்றிய திடீர் ராட்சத பனிப்பாறை

Added : ஏப் 20, 2017 | கருத்துகள் (14)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கனடா, தோன்றிய, திடீர்,  ராட்சத, பனிப்பாறை

நியூபவுண்ட்லாந்து:கனடாவின் கிழக்குக் கடற்கரை பகுதியான நியூபவுண்ட்லாந்து- லேப்ராடோர் பகுதிக்கிடையில் 150 அடி உயர ராட்சத பனிப்பாறை திடீரென தோன்றியதால், மக்கள் பார்வையிட்டு ஆச்சர்யமடைந்து வருகின்றனர்.
பொதுவாக கடலுக்கடியில் அல்லது கடலின் மேற்பரப்பில் மிகவும் சிறிய அளவிலான பனிப்பாறைகள் வெளியில் தெரியும். தற்போது அங்கு வசந்தகாலம்.சீசனின் தொடக்கத்தில் பெர்ரிலேன்ட் கடற்பகுதியில் 150 அடி உயரத்திலான ராட்சத பனிப்றை நகர்ந்து வந்திருக்கிறது.இது அப்பகுதியில் உள்ள மக்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது. மக்கள் வசிக்கும் பகுதியில் மிகவும் அருகில் உள்ளதால், அவர்கள் தங்களது கேமராவில் பனிப்பாறையை படம் பிடித்து வருகின்றனர்.


616 பனிப்பாறைகள்


புவி வெப்பமயமாதல் போன்ற காரணத்தினால் ஆர்ட்டிக் கடற்பகுதியில் உள்ள பனிப்பாறைகள் உருகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த வருடம் 387 பனிப்பாறைகள் இதுபோல நகர்ந்து வந்துள்ளன. இந்த ஆண்டில் 616 பனிப்பாறைகள் இதுவரை நகர்ந்து வந்துள்ளன.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
21-ஏப்-201708:44:29 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> பூமியின் மேல்பரப்புலே நாம் செய்யும் விபரீதங்கள் எவ்ளோ என்று எவனும் கூறவே இல்லீங்களே மேலும் மேலும் சுதடாக காரணமே மனுஷன்தானுங்கோ வீட்டுக்குள்ளே சூடுத்தெறியவேண்டாமின்னு ac போடறோம் வீட்டுக்குள்ளாற கூல் ஆவுது ஆனால் வெளியே தான் அதிலிருந்து வெளியேறும் சூட்டக்காரரு சூழ்நிலையிலே கலாக்குத்துளிதான் பலானேதான் இவ்ளோ சூடு ,அன்று நாம் ஏசி எல்லாம் அறியாலே அரிஞ்சாலும் போட்டுக்க vaasadhiye இல்லீங்க்களே நாமெல்லா சின்னாவாளாயிருக்கச்சா மின்விசிறியை கூடா இல்லீங்க என்பதுதான் உண்மை கோடை காலம்னா நாடு முற்றத்திலே தென்னங்கீற்றால் கோட்டை போடுவாங்க்க மாலைவரை இருக்கும் அது காற்றும் கூலா வீசும் , இப்போ கள்ளர்பயம் காரணமா முற்றமெல்லாம் இல்லீங்களே பல் வீடுகளில் என்பதுதான் உண்மை த்ரைலெல்லாம் கார்பார்க்கிங் பத்துமாடிகள் வரை அதுக்கும் மேலே கட்டுறாங்கோ எல்லா பிளாட்களிலும் ஏசி இருக்கு அப்போ அதன் பாலான யோசிக்கவும் நாமே வசதிகள் என்று எல்லா தீமைகளும் செய்துட்டு சூறையானுக்கே பாஇத்தூயம் பிடிச்சுட்டுது அதான் இவ்ளோ கொளுத்துறான் என்று கூவரோம்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-ஏப்-201708:25:33 IST Report Abuse
Srinivasan Kannaiya நீரின் அடர்த்தியை விட பனிப்பாறையின் அடர்த்தி குறைவாக ஆனதால் பனிப்பாறை வெளிய வந்து உள்ளது... இதில் ஆச்சர்ய படுவதற்கு ஏதும் இல்லை
Rate this:
Share this comment
Cancel
kundalakesi - VANCOUVER,கனடா
21-ஏப்-201707:00:59 IST Report Abuse
kundalakesi ஒரு வீட்டு திண்ணையில் ஒரு பரதேசி படுத்திருந்தான். வீட்டின் பின் கட்டில் தீ பிடித்து விட்டது. அவனை உதவிக்கு கூப்பிட்டார்கள். அவன் அசுவாரஸ்யமாக பின்னாலதான , பார்த்துக்கலாம் என்றான். நடு காட்டுக்கு தீ பரவியது, புரண்டு படுத்துக்கொண்டு நடு கட்டுதானே என்றான். முன் கட்டுக்கு வந்த தீயிலும் அசரவில்லை. திண்ணை இரவாணம் வரை வந்ததும், இனிமே முடியாதப்பா என்று எழுந்து சென்றானாம். உலக வெப்ப மயமாதலை கடந்த 60 வருஷங்களாக வளர்ந்த நாடுகள் காதில் ஊதிய சங்கு ஆனது.
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
21-ஏப்-201704:18:15 IST Report Abuse
Kasimani Baskaran பனி உருகும் காலக்கட்டத்தில் இருக்கிறோம்... பனி உருகி நீர் மட்டம் உயரும்... கடல் அதிக நிலப்பரப்பை ஆக்கிரமிக்கும்... சிறிது சிறிதாக இது நடக்கும்... ஆகவே அவ்வளவு எளிதில் மனித குலத்தால் மட்டுமே வந்த பலன் என்று மட்டும் சொல்லி விட முடியாது...
Rate this:
Share this comment
Cancel
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
21-ஏப்-201701:37:26 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) இதெல்லாம் சிலருக்கு விளையாட்டாக உள்ளது. பலரும் தங்கள் வருங்கால சந்ததியினரை பற்றி சிறிதும் கவலைப்படாமல் உள்ளார்கள். எரிபொருளை கைவிட்டு, மின்சார அடுப்புகள் மின்சார வாகனங்கள் போன்றவற்றை பயன்படுத்தினால் புவி வெப்பத்தை கட்டுப்படுத்தலாம். இல்லையேல், நம் வருங்கால சந்ததிகளை மறந்துவிடுங்கள்.
Rate this:
Share this comment
suresh - Chennai,இந்தியா
21-ஏப்-201710:40:42 IST Report Abuse
sureshமின்சாரம் தயாரிக்கவும் கோடிக்கணக்கான டன் நிலக்கரி எரிக்கப்படுகிறது. புவி வெப்பமயமாவதற்கு இதுவே முக்கிய காரணம். எனவே காற்று, சூரிய, அணு மின்சாரம் போன்றவை தற்போதைய தேவை....
Rate this:
Share this comment
Cancel
Naz Malick - London,யுனைடெட் கிங்டம்
21-ஏப்-201701:18:00 IST Report Abuse
Naz Malick இயற்கையின் பல அதிசயங்களில் இதுவும் ஒன்று. நல்ல காலம் இது இந்தியாவில் நடக்கவில்லை. புது புது தெய்வங்களில் இதுவும் ஒரு தெய்வமாகி , அருள்மிகு பனி லிங்க பெருமான் என்று பெயரெடுத்து அர்ச்சனை. பூஜை என்று தொடங்கி ஒரு பெரிய தெய்வீக பிசினஸ் ஆகி இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
yaaro - chennai,இந்தியா
20-ஏப்-201723:41:19 IST Report Abuse
yaaro ஆர்க்டிக் க்ளாஸியர் ஏதாவது உடைஞ்சு வந்திருக்கும் ..புவி வெப்ப அறிகுறி . தல ட்ரம்ப் இத வெச்சி வேற மாதிரி சொல்லிடும் - பாருங்க ஐஸ் கட்டி தானா உருவாவுது ..புவி குளிருது .அப்படின்னு
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
21-ஏப்-201702:57:36 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்ஹோமகுண்டம் வளத்து அதிலே ரெண்டு ஸ்பூன் பசு நெய்யை விட்டா ஒரு டன் ஆக்சிஜன் புயல் போல பிச்சிக்கிட்டு வரும்ன்னு இங்கே இருக்குற சயண்டிஸ்டுங்க.. ஓசோன் ஓட்டையெல்லாம் நல்லா அடைச்சு பூசி மொழுகிடுமாம்.. ஹோமத்தில் அம்புட்டையும் போட்டு எரிச்சு விடுற பசு நெய்க்கு அம்புட்டு பவர் தெரியுமா.....
Rate this:
Share this comment
Cancel
Karthik - Chennai,இந்தியா
20-ஏப்-201723:24:10 IST Report Abuse
Karthik மிகவும் அழகா உள்ளது. இங்கு குளங்கள் முற்றிலும் freeze ஆகி அதில் காரை ஒட்டி மீன் பிடிப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
kuppuswamykesavan - chennai,இந்தியா
20-ஏப்-201722:39:55 IST Report Abuse
kuppuswamykesavan இப்படி பனிப்பாறைகள் உருகுவதும் உடைவதும் அதிகரிக்குமானால், கடல் மட்டம் ஓரிரு இன்ச் உயர்வதும், கடற்க்கரைகள் அலைகளால் அரிக்கப்படுவதும் நிகழும்.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
20-ஏப்-201722:20:11 IST Report Abuse
K.Sugavanam புதியன பிறக்கும்,பழையன கழியும்..இது உலக நடப்பு..
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
20-ஏப்-201723:13:14 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்இது வெறும் கழித்தல் தான்.. We are on the verge of irreversible damage....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை