கோவையில் அசத்தும் தாய்ப்பால் வங்கி : பச்சிளங் குழந்தைகளுக்கு வரப்பிரசாதம்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் அசத்தும் தாய்ப்பால் வங்கி : பச்சிளங் குழந்தைகளுக்கு வரப்பிரசாதம்!

Updated : ஏப் 21, 2017 | Added : ஏப் 20, 2017 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
கோவையில் அசத்தும் தாய்ப்பால் வங்கி : பச்சிளங் குழந்தைகளுக்கு வரப்பிரசாதம்!

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் செயல்படும், தாய்ப்பால் வங்கியால் பயன்பெறும் பச்சிளங் குழந்தைகளின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பச்சிளங்குழந்தை கள் பலரின் உயிரை காப்பதில், இந்த தாய்ப்பால் வங்கி முக்கிய பங்கு வகிக்கிறது.

தமிழகத்தில், கோவை உட்பட ஏழு மாவட்ட அரசு மருத்துவமனைகளில், தாய்ப்பால் வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. கோவையில், 2015 செப்டம்பரில் துவங்கப்பட்ட தாய்ப்பால் வங்கி திட்டம், இன்று பல தளிர்களின் உயிர்களை காப்பாற்றும் மகத்தான திட்டமாக மாறியுள்ளது.

இயற்கை உணவு : கோவையில் இந்த திட்டத்தை துவங்கியபோது, 138 தாய்மார்கள் பாலை தானமாக வழங்கினர். இதனால், 46 குழந்தைகள் பயன் பெற்றன. இந்த எண்ணிக்கை அதிகரித்து, இந்தாண்டு, மார்ச் நிலவரப்படி, 1,265 தாய்மார்கள் பால் வழங்கியுள்ளனர்; 1,135 குழந்தைகள் பயன் அடைந்துள்ளனர்.

அரசு மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் பூமா கூறியதாவது: தாய்ப்பால் போல், ஒரு பச்சிளங் குழந்தைக்கு சிறந்த இயற்கை உணவு, வேறில்லை. உடலின் சமச்சீரான வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் தாய்ப்பால் தான் சிறந்தது. தாய்ப்பாலில் உள்ள, 'இம்யூனோகுளோ புலின்' எனும் புரதம், நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. ஆனால், சர்க்கரை நோய், புற்றுநோய், நுரையீரல் பாதிப்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட தாய்மார்களால், உடனடியாக தாய்ப்பால் கொடுக்க முடியாது.

பிரசவத்தில் அறுவை சிகிச்சைக்கு உள்ளாகும் சில தாய்மார்களாலும், உடனடியாக தாய்ப்பால் கொடுக்க முடியாது. இது போன்ற தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகளும், தாய்ப்பாலினால் கிடைக்கும் நன்மைகளை பெற வேண்டும் என்பதற்காகவே, 'தாய்ப்பால் வங்கி' திட்டம் துவங்கப் பட்டது. தாய்மார்களிடம் சேகரிக்கப்படும் பால், முதலில் சூடாக்கப்படுகிறது. பின், தகுந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பாக்டீரியாக்கள் நீக்கப்பட்டு, குறிப்பிட்ட வெப்ப நிலையில், 'ப்ரீசரில்' பாதுகாக்கப்படுகிறது. இந்த பாலை, ஆறு மாதங்கள் வரை கூட, கெடாமல் வைத்திருக்க முடியும்.


10 முறை ஊட்டுகிறோம் :


பிற குழந்தைகளை விட, சில தாய்மார்களால் விட்டுச் செல்லப்படும் ஆதரவற்ற குழந்தை களுக்கு, ஒரு நிஜ தாய் ஆகவே இந்த திட்டம் உள்ளது. அதே போல், எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளுக்கும், இந்த பால் சிறந்த ஊட்டச்சத்து ஆக உள்ளது. பகலில் ஏழு முறையும், இரவில் மூன்று முறையும் என, ஒரு நாளைக்கு, 10 முறை பச்சிளங்குழந்தைகளுக்கு சங்கு அல்லது டியூப் மூலம் பாலுாட்டுகிறோம்.

தற்போது, மருத்துவமனையில், 90 பச்சிளங் குழந்தைகள் உள்ளனர். 50 குழந்தைகளுக்கு மட்டுமே தாய்ப்பால் கிடைக்கிறது. மீதமுள்ள, 30 குழந்தைகளும் தாய்ப்பால் வங்கியை தான் நம்பி வளர்கின்றன. பெற்றோரால் விட்டுச் செல்லப்பட்டு, மருத்துவமனையில் பராமரிக்கப் படும் பச்சிளங் குழந்தைகளுக்கு, இது பெரிய பரிசு. பால் தானம் வழங்க விரும்பும், ஆரோக்கிய மான எந்த தாயும், மருத்துவமனையை அணுகி பால் வழங்கலாம். இவ்வாறு, டாக்டர் பூமா கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Senthilkumar Rajamanikam - Coimbatore,இந்தியா
21-ஏப்-201719:39:58 IST Report Abuse
Senthilkumar Rajamanikam Jiku your opinion regarding different types of milk for male and female babies is wrong and unscientific
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Indumathi - chennai city,இந்தியா
21-ஏப்-201716:24:32 IST Report Abuse
Srinivasan Indumathi idhu oru nalla vizhayam. actually, there was no hospital like this when i gave birth to my son. i lost my son after one and a half month by my own husband - yes he killed the baby while it was only small baby even was drinking mother's milk. i do not have a child to feed with my milk. this happened for my first girl child also. i was in Bangalore and my child was in chennai. i was suffering. now i am happy to read such a news. thank u mothers. hats off. yes mothers are really great who have this pure mind to give milk to some other children.
Rate this:
Share this comment
A. Sivakumar. - Chennai,இந்தியா
22-ஏப்-201711:38:17 IST Report Abuse
A. Sivakumar.வெள்ளந்தியான மனசு உங்களுக்கு. உங்க கவலை மற்றும் மனக்காயத்தை முழுதுமாக ஆற்றும் சக்தியைக் காலம் உங்களுக்கு வழங்கட்டும்....
Rate this:
Share this comment
Cancel
மந்தணைசில்லசெவனன் .நடமாடும் தெய்வங்களை வணங்குகிறேன்.
Rate this:
Share this comment
Cancel
A. Sivakumar. - Chennai,இந்தியா
21-ஏப்-201713:03:51 IST Report Abuse
A. Sivakumar. தேச சேவை, தெய்வ சேவை எல்லாத்தையும் விடப் பெரியது, குழந்தைகளைக் காக்கும் இந்த சேவை. சம்பந்தப்பட்ட அனைத்துத் தாயுள்ளங்களுக்கும் அளவற்ற நன்றிகள்
Rate this:
Share this comment
Cancel
jiku mathew - Coimbatore ,இந்தியா
21-ஏப்-201712:14:42 IST Report Abuse
jiku mathew Mother delivering male child produces a different type of milk and mothers delivering female child gives milk of a different quality. Mothers both male and female child as twins, one side of the breast produces different milk and the other side of the breast produces a different milk. Hope ppl don't mix milk and give randomly to all babies. Let there be at least separate banks for male and female child.
Rate this:
Share this comment
Cancel
Revathi Archana - madurai,இந்தியா
21-ஏப்-201711:41:13 IST Report Abuse
Revathi Archana தன் பாலை தானமாக குடுக்கும் மனசு தெய்வத்திற்கு நிகரானது ,அதனை செய்த அனைத்து பெண் தெய்வங்களையும் மனமார வணங்குகிறேன் .வாழ்க உங்கள் சேவை .
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-ஏப்-201708:59:41 IST Report Abuse
Srinivasan Kannaiya குடிகார கணவன்,.,, பிழைப்புக்கு வழி இல்லாத .... குழந்தை பெற்ற மகராசிகளுக்கு இதன் மூலம் வருமானம் வரும்...
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
21-ஏப்-201701:45:51 IST Report Abuse
மலரின் மகள் பொலிக, பொலிக. அனைவருக்கும் பகிர்வோம். சரி தாய்ப்பால் தானம் தரும் தாய்மார்களின் ஆரோக்கியம் மற்றும் நவீன முறையில் பாலின் தன்மையை சோதிக்க கருவிகளும், தேவைப்பட்டால் சுத்திகரிக்கும் முறைகளும் வேண்டும். தாய் மார்களுக்கு பால் நிறைய சுரக்க ஊட்டச்சத்தான உணவுகள் பிரத்தியேகமாக வழங்கப் படவேண்டும். பல்கி பெருகட்டும் சேவை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை