திப்பு சுல்தான் காலத்தில் பயன்படுத்திய பீரங்கி கற்குண்டுகள் கண்டுபிடிப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திப்பு சுல்தான் காலத்தில் பயன்படுத்திய பீரங்கி கற்குண்டுகள் கண்டுபிடிப்பு

Added : ஏப் 20, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
திப்பு சுல்தான் காலத்தில் பயன்படுத்திய பீரங்கி கற்குண்டுகள் கண்டுபிடிப்பு

வேலுார்: திப்பு சுல்தான் காலத்தில் பயன்படுத்திய, பீரங்கி கற்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு
உள்ளன. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே, விவசாயி ஜோதி, 2015 பிப்., 9ல், தன் விவசாய நிலத்தில், வாழைக்கன்று நடுவதற்காக குழிகளை தோண்டினார். அப்போது, குழிகளுக்குள் சிறிய அளவில், 134 கற்குண்டுகள் கிடைத்தன.வருவாய்த் துறையினர் கற்குண்டுகளை கைப்பற்றி, திருவண்ணாமலை அரசு கருவூலத்தில் பாதுகாப்பாக வைத்தனர்.
இந்நிலையில், 'கற்குண்டுகளை வேலுார் அரசு அருங்காட்சியகத்தில் வைத்து ஆய்வு செய்து, பாதுகாக்க வேண்டும்' என, மாநில அரசு அருங்காட்சியக இயக்குனர் உத்தரவிட்டார். இதையடுத்து, 134 கற்குண்டுகளை செங்கம் தாசில்தார் நேற்று முன்தினம், வேலுார் அரசு அருங்காட்சியக காப்பாட்சியாளரிடம் ஒப்படைத்தார்.

கற்குண்டுகளை ஆய்வு செய்த பின், காப்பாட்சியாளர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
கற்குண்டுகள், 200 ஆண்டுகள் பழமையானது. இவை, 18ம் நுாற்றாண்டில் திப்பு சுல்தான் காலத்தில், பீரங்கியில் குண்டுகளாக பயன்படுத்தப்பட்டுள்ளன.ஒவ்வொரு கற்குண்டும், 350 கிராம் எடை உள்ளது. கோட்டை கதவுகளை உடைக்கவும், எதிரி படைகளை முன்னேறவிடாமல் தடுக்கவும், இவை பயன்படுத்தப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
21-ஏப்-201718:15:26 IST Report Abuse
JeevaKiran திப்புசுல்தானின் கண்டுபிடிப்புதான் பீரங்கி. இந்தியர்களாகிய நாம் பெருமை பட்டுக்கொள்ளலாம்
Rate this:
Share this comment
Cancel
J-Gun - chennai,இந்தியா
21-ஏப்-201717:28:54 IST Report Abuse
J-Gun வருவாய்த் துறையினர் கற்குண்டுகளை " கைப்பற்றி," என்பதற்கு பதிலாக " பெற்று " என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை