வீட்டிற்குள் வெளியேறிய ரசாயன கலவை : மெட்ரோ ரயில் பணியால் தொடரும் விபரீதம்| Dinamalar

வீட்டிற்குள் வெளியேறிய ரசாயன கலவை : மெட்ரோ ரயில் பணியால் தொடரும் விபரீதம்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
வீட்டிற்குள் வெளியேறிய ரசாயன கலவை : மெட்ரோ ரயில் பணியால் தொடரும் விபரீதம்

சென்னை: மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணியால், வண்ணாரப்பேட்டையில் வீட்டிற்குள், 3 அடி உயரத்திற்கு, ரசாயன கலவை பீறிட்டு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் விம்கோ நகர் இடையே, 9.5 கி.மீ., மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதில், வண்ணாரப்பேட்டையில் - கொருக்குப்பேட்டை வரை, 2 கி.மீ., பாதை சுரங்கப் பாதையில் அமைக்கப்படுகிறது. வண்ணாரப்பேட்டை, கிழக்கு முத்தையா தெருவில் உள்ள முகமது யூசுப் என்பவருக்கு சொந்தமான, மூன்றடுக்கு மாடி வீடு உள்ளது. இந்த வீட்டின் தரைதளத்தில் உள்ள இரண்டு வீடுகளில், நேற்று அதிகாலை, 6:00 மணியளவில், திடீரென ரசாயன கலவை பீறிட்டு, வீடு முழுவதும், மூன்றடி உயரத்திற்கு நிரம்பியது.
பிரிட்ஜ், கட்டில், மேஜை, போன் உள்ளிட்டவை இதில் மூழ்கின. ரசாயன கலவை வெளியேறி, தெருவில், 300 மீட்டர் வரை பரவியதால், பரபரப்பு ஏற்பட்டது. இப்பகுதிவாசிகள் அதிர்ச்சியடைந்து, மெட் ரோ நிர்வாகத்திற்கும், வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்திலும் புகார் தெரிவித்தனர். மெட்ரோ ரயில் உதவி பொது மேலாளர் யாசின், ஆப்கான் திட்ட மேலாளர் வெங்கட்ராமன், ஆப்கான் உதவி பொது மேலாளர் சங்கர் உட்பட அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். உடனடியாக, சுரங்கப்பாதை பணியை நிறுத்தியதோடு, அங்கு ஆய்வு நடத்தினர்.
மேலும், 25க்கும் மேற்பட்ட மெட்ரோ ஊழியர்கள், வீட்டில் பரவியிருந்த ரசாயன கலவையை அப்புறப்படுத்தினர். இதன் பிறகே பரபரப்பு ஓய்ந்தது.

ஆழ்குழாய் கிணறுகள் : மெட்ரோ ரயில் உதவி பொது மேலாளர் கூறியதாவது: இந்த வீட்டின் கீழ் பகுதியில், சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. சுரங்கம் தோண்டப்பட்டு, மேல் பகுதியில் மண் பலப்படுத்தப்பட, சிமென்ட் கலந்த ரசாயன கலவை, கம்பரஷர் கொண்டு, உயர் அழுத்த காற்றுடன் கலந்து மேற்பகுதியில் பூசப்பட்ட போது, ரசாயன கலவை வெளியேறி உள்ளது.
ரசாயன கலவை வெளியேறியது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இதனால், பாதிக்கப்பட்டோருக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். சுரங்கப்பாதை அமைக்க வேண்டிய பகுதியில், மண்ணின் திடத்தன்மை குறித்து முன்பே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பாதை அமைக்கும் போது அதிர்வுகள், விரிசல் ஏற்பட்டால், கண்காணிப்பதற்கு நவீன கருவிகள் இப்பகுதிகளிலும் பொருத்தப்பட்டுள்ளன. இப்பாதையில், ஆழ்துளை கிணறுகள் குறித்து மீண்டும் ஆய்வு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

அலட்சியப்படுத்தும் அதிகாரிகள்! : இதுகுறித்து, வீட்டின் உரிமையாளர் முகமது யூசப் கூறியதாவது: சில தினங்களுக்கு முன், இதே பகுதியில் ரசாயன கலவை வெளிவந்ததோடு, கட்டடங்கள் அதிர்ந்தன; இதனால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று வரை மெட்ரோ அதிகாரிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. மெட்ரோ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-ஏப்-201713:09:19 IST Report Abuse
தமிழ்வேல் முடிவா , வீடுங்க முட்டை ஓடு மேல இருக்கு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.