கவர்னருடன் தம்பிதுரை சந்திப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கவர்னருடன் தம்பிதுரை சந்திப்பு

Added : ஏப் 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தமிழகத்தில், ஆளுங் கட்சியான, அ.தி.மு.க., இரண்டாக பிளவு பட்டுள்ளது; அதை ஒன்றிணைக்க, முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்று காலை, 11:00 மணிக்கு, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, ராஜ்பவன் சென்று, கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார். இது குறித்து, அவர் கூறுகையில், ''நான் மரியாதை நிமித்தமாக கவர்னரை சந்தித்தேன்; அவர் என் நண்பர். இதில், அரசியல் முக்கியத்துவம் இல்லை,'' என்றார்.

பின், தம்பிதுரை, அங்கிருந்து தலைமை செயலகம் சென்றார்; முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசினார். தமிழக அரசியல் நிலவரம் குறித்து, கவர்னரிடம் பேசிவிட்டு, அவர் கூறிய தகவலை, முதல்வரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை