தாக்குதல் நடத்த முயன்ற 10 பயங்கரவாதிகள் கைது : 5 மாநில போலீசார் நடவடிக்கை| Dinamalar

தாக்குதல் நடத்த முயன்ற 10 பயங்கரவாதிகள் கைது : 5 மாநில போலீசார் நடவடிக்கை

Added : ஏப் 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

மும்பை: நாட்டின் பல்வேறு இடங்களில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட முயன்ற, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய, 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; மேலும்
பலரிடம் விசாரணை நடந்து வருகிறது.

இது குறித்து, இந்த அதிரடி வேட்டையில் ஈடுபட்ட அதிகாரிகள் கூறியதாவது: நாட்டின் பல்வேறு பகுதி களில், ஒரு பயங்கரவாத கும்பல், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக, டில்லி சிறப்பு போலீஸ் படைக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, உத்தர பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு அமைப்புகளும், ஆந்திரா, பஞ்சாப், பீஹார் போலீசாரும் இணைந்து, பல்வேறு இடங்களில் நேற்று அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர்.
மஹாராஷ்டிராவின் தானேயில் உள்ள மும்ப்ரா, பஞ்சாபின் ஜலந்தர், பீஹாரின் நர்காடிகஞ்ச், உத்தர பிரதேசத்தின் பிஜ்னுார், முசாபர் நகர் உள்ளிட்ட இடங்களில் இந்த அதிரடி சோதனைகள்
நடந்தன. இந்த அதிரடி சோதனையில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய, 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதைத் தவிர, பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட முயற்சி செய்த சந்தேகத்தின் அடிப்படையில், 10க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்து வருகிறது.
இவர்களிடம், தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அதன்பிறகே, இவர்கள் எங்கெங்கு சதி வேலையில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர்; இவர்களை இயக்குவது யார் என்பது தெரிய வரும்.
மஹாராஷ்டிராவில் கைது செய்யப்பட்டவன், உத்தர பிரதேசத்தின் பிஜ்னுாரைச் சேர்ந்த நாசிம்
ஷம்ஷாத் அகமது என்பது விசாரணையில் தெரிய வந்துஉள்ளது.நாட்டின் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ள இவர்களுக்கு இடையே தொடர்பு இருப்பதும், தங்களுக்கு ஆதரவாக மேலும் பலரை சேர்க்கவும் இவர்கள் திட்டமிட்டுள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள மற்றும் விசாரணைக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ள அனைவரும், 18 - 25 வயதுக்கு உட்பட்டவர்கள். பல்வேறு விரக்தியில் உள்ள இவர்கள், இணையதளம் மூலம்
கிடைக்கும் விஷயங்களால் ஈர்க்கப்பட்டு, பயங்கரவாத பாதைக்கு திரும்பியுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள இவர்கள், தங்களுக்குள் இணைப்பை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.இது போன்றவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தகுந்த
நேரத்தில், ஐந்து மாநில போலீசாரும் இணைந்து செயல்பட்டு, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால், மிகப் பெரிய அளவில், நடக்கவிருந்த அசம்பாவித சம்பவங்கள் தடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை