மாணவன் ஓட்டிய கார் ஏறி ஒருவர் பலி; 3 பேர் காயம்| Dinamalar

மாணவன் ஓட்டிய கார் ஏறி ஒருவர் பலி; 3 பேர் காயம்

Added : ஏப் 20, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: டில்லியில், பிளஸ் 2 மாணவன் ஓட்டிய கார் ஏறி, பிளாட்பாரத்தில் துாங்கிக் கொண்டிருந்த ஒருவர் பலியானார்; மேலும், மூன்று பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது: வடக்கு டில்லியில், நேற்று காலை பிளாட்பாரத்தில் துாங்கியவர்கள் மீது, ஒரு கார் ஏறியதில், ஒருவர் உயிரிழந்தார்; மூன்று பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.காரை ஓட்டி வந்தது, மதுரா ரோடு டில்லி பப்ளிக்ஸ்கூலில் படிக்கும், பிளஸ் 2 மாணவன் என்பது தெரியவந்தது. அவனுடன் காரில் வந்த அவனுடைய நண்பர்கள் இருவர்,அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்கு அவர்களாகவே ஆஜராகினர்.மாணவன் ஓட்டி வந்த கார், அவன் நண்பனின் தந்தைக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது. இந்தக் காரை ஓட்டுவதற்கு அவர் அனுமதி அளித்தாரா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். அவர் அனுமதி அளித்திருந்தால், அவர் மீதும் வழக்கு தொடரப்படும். விபத்தை ஏற்படுத்திய மாணவன், சமீபத்தில் தான், 18 வயதை பூர்த்தி செய்துள்ளான். ஆனால், வாகனம் ஓட்டுவதற்கான லைசென்ஸ் பெறவில்லை. மாணவர்கள் இணைந்து, ஒரு நண்பனின் வீட்டில் படித்ததாகவும், பள்ளிக்கு சென்ற போது, விபத்து ஏற்பட்டதாகவும் விசாரணையில் கூறிஉள்ளனர். ஆனால், அவர்கள் யூனிபார்ம் அணியவில்லை. இந்த மாணவர்கள் மது குடித்திருந்ததனரா என்பதற்கான மருத்துவப்பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளது.இவ்வாறு போலீசார் கூறினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karunchilai - vallam,இந்தியா
21-ஏப்-201711:13:26 IST Report Abuse
karunchilai பாலிவ்யூட் நடிகர் முன்னுதாரணம். வழக்கு 30 ஆண்டுகள் நீடிக்கும். முடிவு வழக்கம் போலத்தான்.
Rate this:
Share this comment
Cancel
karunchilai - vallam,இந்தியா
21-ஏப்-201708:17:28 IST Report Abuse
karunchilai ஒருவர்தான் பலி. நடிகர் வழக்கு முன்னுதாரணமாக அமையும். அடுத்த 25 ஆண்டுகளுக்கு கவலை இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை