நில ஒதுக்கீடு மோசடி வழக்கில் காங்., தலைவர்களிடம் விசாரணை| Dinamalar

நில ஒதுக்கீடு மோசடி வழக்கில் காங்., தலைவர்களிடம் விசாரணை

Added : ஏப் 20, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

புதுடில்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தும் அசோசியேடட் ஜர்னல் லிமிடெட் நிறுவனத்தை, காங்கிரஸ் தலைவர் சோனியா, துணை தலைவர் ராகுல் உள்ளிட்டோர் நிர்வாகிகளாக உள்ள, 'யங் இந்தியா' நிறுவனம் வாங்கியது. கடந்த, 2008ல் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை
நிறுத்தப்பட்டது.

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில், அசோசியேடட் ஜர்னல் நிறுவனத்துக்கு, 1982ல் நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதை பயன்படுத்தாததால், ஒப்பந்த காலம் முடிந்ததும், 1996ல், அப்போது முதல்வராக இருந்த, ஹரியானா விகாஸ் கட்சித் தலைவர் பன்சிலால் தலைமையிலான அரசு, திரும்ப எடுத்துக் கொண்டது. இந்த நிலையில், 2005ல், மீண்டும் காங்கிரஸ் அரசு அமைந்தபோது, அப்போது முதல்வராக இருந்த பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான அரசு, அந்த நிலத்தை, மீண்டும் அசோசியேடட் ஜர்னல் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்தது.
இந்த ஒதுக்கீட்டில், முறைகேடுகள் நடந்துள்ளதாக, முன்னாள் முதல்வர் ஹூடா உள்ளிட்டோர் மீது, பா.ஜ.,வைச் சேர்ந்த மனோகர் லால் கட்டார் முதல்வராக உள்ள ஹரியானா அரசு, 2016ல் வழக்கு தொடர்ந்தது.இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை தனியாக வழக்கு தொடர்ந்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொருளாளரான மோதிலால் வோரா, ஹரியானா முன்னாள் முதல்வர் ஹூடா ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகும்படி, அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.'முதுமையின் காரணமாக நேரில் ஆஜராக முடியாது' என, வோரா, 88, விடுத்த கோரிக்கையை ஏற்று, டில்லியில் உள்ள அவரது வீட்டில், சமீபத்தில், அமலாக்கத் துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அதே நேரத்தில், சண்டிகரில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில், ஹூடா நேரில் ஆஜரானார்.
நிலம் ஒதுக்கப்பட்டது தொடர்பாக, பல்வேறு ஆவணங்களையும், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்துள்ளதாக, அமலாக்கத் துறை நேற்று தெரிவித்துள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnan - chennai,இந்தியா
21-ஏப்-201713:36:46 IST Report Abuse
Krishnan செத்தாண்டா சேகர் இந்த கும்பலை ஒழித்து கட்ட vendunm
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை