பாகுபலியை எதிர்க்காதீங்க: இயக்குனர் கெஞ்சல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பாகுபலியை எதிர்க்காதீங்க: இயக்குனர் கெஞ்சல்

Added : ஏப் 20, 2017 | கருத்துகள் (1)
Advertisement
பாகுபலியை எதிர்க்காதீங்க: இயக்குனர் கெஞ்சல்

ஐதராபாத்: பிரபல இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில், 2015ல் வெளியான படம் பாகுபலி. பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட இந்த படம், திரைஉலக ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. பல விருதுகளை அள்ளிய இந்த படத்தின், இரண்டாவது பாகம், மிக பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு, வரும், 28ல் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகர் சத்யராஜ், காவிரி பிரச்னையின் போது, ஒன்பது ஆண்டுகளுக்கு முன், கன்னடர்களுக்கு எதிராக தெரிவித்த கருத்து, பாகுபலி - 2 படத்திற்கு வில்லனாக அமைந்துஉள்ளது.
'கன்னடர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த, சத்யராஜ் நடித்துள்ள பாகுபலி - 2 படத்தை, கர்நாடகாவில் வெளியிட விடமாட்டோம்' என, கன்னட இயக்க தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார். படம் வெளியாகும், 28ல், 'பெங்களூரு பந்த்' அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும், பாகுபலி - 2 படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், சத்யராஜின் கருத்துக்கும், படக்குழுவிற்கும் எந்த தொடர்பும் கிடையாது என, படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, பாகுபலி - 2 பட இயக்குனர் ராஜமவுலி கூறியதாவது: கன்னடர்களுக்கு எதிராக, நடிகர் சத்யராஜ் பேசியது அவரின் தனிப்பட்ட கருத்துகளே. அதற்கும், எங்கள் படக்குழுவிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இதை காரணம் காட்டி, பாகுபலி - 2 படத்தை வெளியிடுவதில் இடையூறு செய்வது நியாயம் அற்றது. இதன் மூலம், சத்யராஜ் எந்த வகையிலும் பாதிக்கப்பட போவதில்லை; தயாரிப்பாளரும், இயக்குனருமே பாதிக்கப்படுவர். படத்தில் நடித்த ஏராளமான நடிகர்களுள் அவரும் ஒருவர். எனவே, அவரது தனிப்பட்ட கருத்துக்களை மனதில் வைத்து, எங்களை தண்டிப்பது நியாயம் ஆகாது. யாரையும் புண் படுத்தும் வகையில் பேசுவதை ஏற்க முடியாது.
ஆனால், சம்பந்தமற்ற முறையில் யாரும் பாதிக்கப்பட கூடாது. 2015ல், வெளியான பாகுபலி படத்திலும், சத்யராஜ் நடித்திருந்தார். அந்த படத்தை ஆதரித்தது போல், இதன் இரண்டாம் பாகத்தையும் மக்கள் ஆதரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

பாகுபலி படக்குழுவினர் எங்கள் எதிரி கிடையாது. கண்மூடித்தனமாக அந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் எங்கள் எண்ணம் கிடையாது. கன்னடர்கள் மனம் புண்படும் வகையில் பேசிய சத்யராஜ், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அதுவரை, எங்கள் போராட்டத்தை கைவிடுவது குறித்து சிந்திக்க கூட முடியாது.

வாட்டாள் நாகராஜ், கன்னட இயக்க தலைவர்

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
21-ஏப்-201714:09:54 IST Report Abuse
Pasupathi Subbian அந்த விட்டால் நாகராஜுக்கு , சந்தன கடத்தல் வீரப்பன் மாதிரி ஒருத்தர் தேவை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை