சசி குடும்பத்தை மொத்தமாக நீக்க வேண்டும் என பன்னீர் அணி...திட்டவட்டம்!:தேர்தல் கமிஷனில் கொடுத்த பத்திரத்தை வாபஸ் பெற வலியுறுத்தல் Dinamalar
பதிவு செய்த நாள் :
சசி,குடும்பம்,மொத்தமாக,நீக்க,வேண்டும்,பன்னீர்,திட்டவட்டம்!

சென்னை:'அ.தி.மு.க., அணிகள் இணைப்பு பேச்சு துவங்க வேண்டுமானால், ஜெ., மர்ம மரணம் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு, அரசு பரிந்துரை செய்ய வேண்டும். சசிகலா, தினகரன் உள்ளிட்ட ஒட்டுமொத்த குடும்பத்தையும், கட்சியை விட்டு நீக்க வேண்டும்; அவர்களது நியமனம் தொடர்பாக, தேர்தல் கமிஷனில் கொடுத்த பிரமாண பத்திரங்களை வாபஸ் பெற வேண்டும்' என, பன்னீர் அணியினர் திட்டவட்டமாக அறிவித்து உள்ளனர்.

சசி,குடும்பம்,மொத்தமாக,நீக்க,வேண்டும்,பன்னீர்,திட்டவட்டம்!

இதையெல்லாம் செய்ய முன்வராமல், பழனிசாமி அணியினர் நாடகம் ஆடுவதாகவும், பன்னீர் அணியினர் பகிரங்க புகார் தெரிவித்து உள்ளனர். அ.தி.மு.க., அணிகளை இணைப்பதற் கான நடவடிக்கைகளை, இருதரப்பினரும் துவக்கி உள்ளனர். இது தொடர்பாக, நேற்று, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலை மையில், அவரது அணியினர் ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனைக்கு பின், முன்னாள் அமைச்சர், கே.பி.முனுசாமி கூறியதாவது:

ஜெ., மரணத்தில் உள்ள மர்மம் விலக, சி.பி.ஐ., விசாரணை வேண்டும். சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரையும், கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பது தான், எங்கள் கோரிக்கை.அதன் அடிப் படையில், ஆட்சியில் உள்ளவர்கள், 'தினகரன் குடும்பத்தை ஒதுக்கி வைக்கிறோம்' என, கூறினர்; அதை நம்ப முடியவில்லை. ஆட்சி யில் இருப்பவர்கள், சசிகலா பொதுச் செயலர் எனக்கூறி, தேர்தல் கமிஷனில் பிரமாண பத்திரம் கொடுத்துள்ளனர். அதே போல, துணை பொதுச் செயலர் தினகரன் என்றும், பிரமாண பத்திரம் தந்துள்ளனர்.

அந்த பிரமாண பத்திரங்களை வாபஸ் பெற வேண்டும். அதன்பின், சசிகலா, தினகரன்
ஆகியோரிடம், ராஜினாமா கடிதம் பெற வேண்டும். பின், ஜெ., செய்வதை போல, சசிகலா, தினகரன் குடும்பத்தினரை வெளி யேற்றுவதாக, அறிக்கை வெளியிட வேண்டும்.

முதல்வராக உள்ள பழனி சாமி, ஜெ., மர்ம மரணத்திற்கு, சி.பி.ஐ., விசாரணை வேண்டும் என, மாநில அரசு சார்பில், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இந்த இரு கோரிக்கைகளையும், முதலில் நிறைவேற்ற வேண்டும். ஆனால்,அவர்கள் தரப்பில், தான்

தோன்றித்தனமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மூத்த அரசியல் வாதியான தம்பிதுரை, 'முதல்வராக பழனிசாமி தான் இருப்பார்' என்கிறார். நாங்கள் முதல்வர் பதவி, பொதுச்செயலர் பதவிகேட்கவில்லை.நாங்கள், கோடிக் கணக்கான மக்களின், தொண்டர்களின் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய, சி.பி.ஐ., விசாரணை கேட்டோம். கட்சியை அழிக்கும் நிலையில் உள்ள, சசிகலா குடும்பத்தை வெளி யேற்ற வேண்டும் என்று தான் கேட்டோம். தம்பிதுரை, எதற்கு இப்படி கூறுகிறார் என, தெரியவில்லை.

கிண்டலடிக்கிறார்


தினகரன், பல்வேறு வழக்குகளில் சிக்கி இருப்ப தால், அவரை காப்பாற்ற, சசிகலா குடும்பம், இவர்களை பயன்படுத்துவதாக தகவல் வருகி றது. தினகரன் விலகுவதாக அறிவித்தது, எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி என, கூறி னோம். அதை, அமைச்சர் ஜெயகுமார் கிண்டல டிக்கிறார். 'அமெரிக்க அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றதும், நான் சொன்னதால் தான் என கூட, பன்னீர்கூறுவார்'என்கிறார்.

பக்குவமில்லாதவராக பேசுகிறார். இப்படி அவ மானப்படுத்திவிட்டு, எப்படி பேச்சுக்கு கூப்பிட முடியும்? மூன்றாம் தர அரசியல்வாதி போல, ஜெயகுமார் பேசுகிறார். பேச்சுக்கு தயார் எனக் கூறி, மக்கள் செல்வாக்கு இல்லாதவர்களாக உள்ளவர்கள், தொண்டர்களை இழுக்க முயற்சிக்கின்றனர்.

'ஏற்கனவே ஊழலில் மலிந்துள்ள, அவர்களோடு சேர்ந்து விடாதீர்கள்' என, எங்களிடம் தொண்டர் கள் கூறுகின்றனர். தற்போது, ஜெ., இல்லை. கருணாநிதி, வயது முதிர்ச்சி காரணமாக, அரசியல் ஈடுபாடு இல்லாமல் உள்ளார்.

இத்தகைய சூழலில், தமிழக அரசியலில் வெற்றிடம் நிலவி வருகிறது. வெற்றிடத்தை நிறைவேற்றக் கூடிய நிலையில், பன்னீர் செல் வம் வந்து கொண்டிருக்கிறார். அதனால், ஊழல் சாம்ராஜ்யத்தோடு பேச்சு நடத்த வேண்டாம் என, தொண்டர்கள் வற்புறுத்துகின்றனர்.

பழனிசாமி, சசிகலா தயவால் முதல்வரானார். சசிகலா குடும்பத்தின் முதல்வராகவே உள்ளார். எங்களுக்கு எழும் சந்தேகம், சசிகலா குடும்பத்திற்குள் உள்ள குடுமிப்பிடி சண்டை யில், தினகரன் முதலாவதாக வந்தார். அவரை வெளியேற்ற, சசிகலா, அவரது கணவர் நடராஜன், தம்பி திவாகரன் ஆகியோர் கூட்டு சேர்ந்து, இவர்களை பகடை காயாக்கி, நாடகத்தை அரங்கேற்றுகின்றனர்.

பேச்சு நடக்காது


இந்த அரங்கேற்றம் மூலம், அ.தி.மு.க., தொண்டர்கள் முதுகில், சசிகலா குடும்பம்

Advertisement

குத்துவதற்கு, பழனிசாமி உறுதுணையாக இருந்துவிடக் கூடாது. நாங்கள், மக்களை சந்திக்க தயாராக உள்ளோம். மக்கள், எப்போது தேர்தல் நடந்தாலும், முதல்வராக, பன்னீர் செல்வத்திற்கு ஓட்டளிக்க தயாராகிவிட்டனர்.

எனவே, கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், பேச்சு நடைபெறாது. அவர்களுக்கு பயம் வந்து விட்டது. பேச்சு நடத்தினால், எம்.எல்.ஏ.,க்கள் எல்லாரும், 'பன்னீர்செல்வம் தான் முதல்வராக வேண்டும்' எனக்கூறி விடுவர்; அனைத்து, எம்.எல்.ஏ.,க்களும் இங்கு வந்துவிடுவர். ஜெய குமார், முதல் நாளில் கூறும் போது, தினகரன் குடும்பத்தை நீக்கி வைப்பதாகக் கூறினார். ஆனால், சசிகலா பெயரை கூறவில்லை. எங்க ளுக்கு வரும் செய்திகள், தற்போது நடப்பது நாடக மாக இருக்குமோ என்றசந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

வாய்ப்பை இழக்கின்றனர்


தர்ம யுத்தம் துவங்கிய போது வைத்த கோரிக் கைகளை நிறைவேற்றினால், இருதரப்பு பேச்சு உறுதியாக நடைபெறும். இல்லையென்றால், அவர்கள் தான் வாய்ப்பை இழக்கின்றனர். கோரிக்கை நிறைவேற்றப்படாத போது, குழு அமைக்க முடியாது.வருமான வரி சோதனை காரணமாக, அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்திருக்க வேண்டும். அவர் மீது, முதல்வர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். யாரோ ஒருவர், இவர்களை இயக்கிக் கொண்டி ருக்கிறார். அதனால், முதல்வரால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

'எந்த நிபந்தனையும் நாங்கள் விதிக்கவில்லை!'


பன்னீர் அணி நிபந்தனைகள் குறித்து, மூத்த அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், நேற்று, சென்னை, தலைமை செயலகத்தில், முதல்வர் பழனிசாமிதலைமையில் ஆலோசனை நடத்தினர். அதன்பின், எம்.பி., வைத்திலிங்கம் கூறியதாவது: எங்கள் தரப்பில், பேச்சு நடத்த குழு அமைக்கப் பட்டு உள்ளது. பேச்சுக்கு தயாராக உள்ளோம். நாங்கள், எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. எங்களுடைய ஒரே எண்ணம், அனைவரும் ஒன்றிணைந்து, ஜெ., ஆட்சியை, நான்கு ஆண்டுகள் தொடர வேண்டும்; கட்சியின் சின்ன மான, இரட்டை இலையை திரும்பப் பெற வேண்டும்.

ஒன்றுபட்டு செயல்பட, பேச்சுக்கு தயாராக உள்ளோம். ஜெ., மரணத்தின் போது, பன்னீர் செல்வம் முதல்வராக இருந்தார். அவர் நினைத் திருந்தால்,விசாரணை கமிஷன் அமைத்தி ருக்கலாம்.இது தொடர்பான, பொது நல வழக்கு நிலுவையில் உள்ளது. நீதிமன்ற தீர்ப்பு வந்த தும், அதை செயல்படுத் துவோம். எங்கள் மத்தி யில், எந்த குழப்பமும் இல்லை. சிலர் பேசும் போது, சில வார்த்தைகள் தவறாக வந்திருக் கலாம்; அதை யாரும் பெரிதுபடுத்தக் கூடாது.

தேர்தல் கமிஷனில், முதலில் வழக்கு போட்டது அவர்கள் தான். எனவே, அவர்கள் தான் வாபஸ் பெற வேண்டும். எந்த நாடகமும் இல்லை. அவர்களை விலகும்படி வற்புறுத்தி னோம். மகிழ்ச்சியோடு ஒதுங்கிக் கொள்வதாக, தினகரன் அறிவித்துவிட்டார். பொதுச் செயலர், துணை பொதுச் செயலர் நியமனம்தொடர்பான, அத்தனை கேள்வி களும், தேர்தல் கமிஷனில் நிலுவை யில் உள்ளன. தேர்தல் கமிஷனில் முடிவு காணப்பட்டதும், அனைத்து நடவடிக் கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Advertisement

Advertisement

மேலும் முதல் பக்க செய்திகள்:



வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA.THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
22-ஏப்-201719:03:58 IST Report Abuse

SIVA.THIYAGARAJANஅணிகள் ஒன்று பட்டு வராது. ஆளுநரிடம் ஆட்சியை ஒப்டைக்கனும்.

Rate this:
SANKAR - calgary,கனடா
21-ஏப்-201722:44:27 IST Report Abuse

SANKAR"TOO MANY COOKS SPOIL THE SOUP" என்று சொல்வார்கள்.. அது போல OPS அணியில் ஆகட்டும் அம்மா அ தி மு க கட்சியின் தரப்பில் இருந்து ஆகட்டும் ஆளாளுக்கு ஒரு கருத்து சொல்லி கொண்டிருக்கிறார்கள்...தலை இருக்க வால் ஆடுவதை பார்த்தால் பன்னீரின் கட்டுப்பாட்டில் அவர் கட்சி இல்லை என்று தெரிகிறது...

Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
21-ஏப்-201717:59:36 IST Report Abuse

A.George AlphonseThe EPS side won't accept the demands of OPS at any cost and they need the support of Sasikala and her family for their survival in the party and remain in posts and power for another 4 years without any problem. This woman Sasikala won't resign or leave the party along with her family members like" Rushi Kanda Cat "who runs around the Uri. She has enjoyed her whole life like a VVIP during the tenure of Jayalalithaa and now she won't sacrifice all those enjoyments and privileges for the sake of the Katchi and Aatchi. The EPS side MPs,Ministers and MLAs are only acting drama daily in order to get the Symbol of Two Leaves by such union drama and dialogues with OPS side.Finally both the side won't and never come into understanding and get United and the party will be vanished and disappeared from Tamil nadu politics once for all.The names of MGR and Jayalalithaa are also forgotten by our people gradually in future. Any time the present government will be collapsed and in next assemply election one great,strong,Dianamic, able and well experienced, humble and noble person will become as our CM from any other political parties other than DMK and AIADMK parties to take our state towards various development fields near future. Now the God is in search of such person and definitely and surely He will send him or provide him to our state in coming days.

Rate this:
s t rajan - chennai,இந்தியா
21-ஏப்-201717:30:16 IST Report Abuse

s t rajanகுடும்பக் கொள்ளைக்கு வித்திட்ட கட்சி காங்ரஸ். அதில் முங்கித் திளைப்பது தி(ரு).மு.க. தென்னகத்தில், முலயாமின் சுயநல பார்ட்டி (SP) வடக்கில். கொள்ளைக் குற்றவாளி லல்லு முட்டாள் மனைவியை முதல்வராக்கி பள்ளி செல்லா மகன்களை மந்தி(ரி)யாக்கிய சாணக் கொள்ளை மஹான். ஏன் எற்காக நம் "உச்ச" நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் இவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இதற்கொரு நிரந்தர முடிவு காண வேண்டாமா?

Rate this:
Thamizhan - Tamizhnadu,இந்தியா
21-ஏப்-201717:29:41 IST Report Abuse

Thamizhanஅதிமுக பன்னீர் அணியில் ஒருத்தனாவது ஆம்பளையா இருந்த தனியா தேர்தலில் போட்டியிட்டு முதலில் வெற்றி பெறுங்கள் பிறகு கட்சியை இணைப்பது பற்றி பேசலாம் .ஜெயலலிதாவின் கால் செருப்பை நக்கிய நக்கிகள் என்பது உலகிற்க்கே தெரியும் போங்கடா டேய் .எனக்கு தனிப்பட்ட முறையில் இப்படி பேசி மக்களை முட்டாள் ஆக்க நினைக்கும் ம பா பாண்டியராஜன் மற்றும் கே பி முனுசாமி என்கிற உருப்படாக்கூடி போதும் இந்த அணியை வெட்டி சாய்க்க .எப்படி வெட்டி வேத்தா பேசுறாங்கய்யா .பழனிசாமி அணி சசிகலா மற்றும் அவரது குடும்பம் இல்லாமல் தேர்தலில் போட்டி இட்டால் வெற்றிக்கனி நிச்சயம் .பன்னீர் அணி ஒரு கூமுட்டை மடையர்கள் அடங்கிய மக்களையோ ஏமாற்றி பிழைக்கும் கூட்டம் .என் நேரத்தை வீணாக்கிவிட்டதாக எண்ணுகிறேன் .

Rate this:
skandh - chennai,இந்தியா
21-ஏப்-201717:18:38 IST Report Abuse

skandhஎடப்பாடி அணியினர் தெளிவாக சசிகலா, தினகரனை ஒதுக்கியாச்சு. ராஜினாமாவை வாங்குன்னா என்ன? ராஜினாமாவை கேபீ முனுசாமியை அனுப்புங்கள் வாங்கி வரட்டும். சசிகலாவை யார் நீக்குவது. இடப்படியா? ஜெயகுமாரா? செங்கோட்டையனா? யாருக்கு அந்த அதிகாரமிருக்கு, யாரிடமிருக்கோ அவரிடம் போய் கேட்க சொல்லு அர்த்தமில்லாமல் பேசும் கே பீ முனுசாமியை...கே பீ முனுசாமியை எல்லாம் பேச சொன்னாள் அடாவடித்தனம் தான் அதிகரிக்கும். இந்த ஜாதி வெறிநாய் கட்சியை விட்டே வெளியேற்றமும்.

Rate this:
Rajasekar - trichy,இந்தியா
21-ஏப்-201716:20:22 IST Report Abuse

Rajasekarஇதுவரை நடந்த ஊழல் அரசியல் போதும். இனிமேல் அமைச்சர்கள், MLA , கௌன்சிலோர் உள்பட யாரும் ஊழல் செய்ய விட கூடாது. அப்படி நடந்தால் பொதுமக்கள் அவர்களை சுற்றி வளைத்து நாக்க பிடுங்கிறமாதிரி கேள்வி கேட்ட வேண்டும். அதெற்கு பொதுமக்கள் ஒன்று சேர வேண்டும். கோர்ட் அப்புறம் கேட்கட்டும்.

Rate this:
Meenu - Chennai,இந்தியா
21-ஏப்-201715:43:20 IST Report Abuse

Meenuஇந்த கூட்டத்தில் இருப்பவர்கள் எவரும் எந்த பதவிக்கும் ஆசைப்படுபவராக தெரியவில்லை

Rate this:
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
21-ஏப்-201715:19:57 IST Report Abuse

தமிழர்நீதி சொந்தமாக யோசிக்க அனுமதிக்காமல் கூனர்களாக வைத்திருந்தார் ஜெயா இந்த இரு அணிகளை சேர்ந்தவர்களை . அவர் போய் சேர்ந்தபிறகு ,சசி இவர்களை கூனர்களாக வைத்திருந்தார் . இவர்கள் நல்லநேரம் சசி ஜெயா சமாதி போனதிலிருந்து சனி பிடித்து , கவர்நர், மோடி , உச்சநீதிமன்ற தீர்ப்பு என்று சசியை தூக்கிப்போட்டது . இப்போது இந்த பொம்மைகளை ஆட்டுவித்த இரு கொள்ளையர்கள் இல்லாததால் , கொள்ளைப்பங்கு கொடுக்காமல் அள்ளிக்கொள்ள ஆட்சியை பிடித்து வைத்துள்ளார்கள் . கேவலம் , ஆள்வது உலகநாடுகளிலில் ஓட்டுபோட்டவர்களுக்கு தொண்டு செய்திட .இங்குமட்டும் ஆள்வது கொள்ளையடிக்க என்று , போட்டி பலமாக இருக்கு . இவர்கள் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்கள் . எல்லோரும் சொல்வார்கள் AIADMK வில் அடிமட்ட தொண்டன் அமைச்சர் ஆவான் என்று . இப்போது தெரிகிறதா அடிமட்ட தொண்டன் அமைச்சர் ஆகி திருடுவான் , தலைமை கொள்ளையர் இல்லாவிட்டால் திமிறுவான் என்று . இவர்கள் ஊறிய குட்டை உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி , கொள்ளைக்கு வடிவமிக்கப்பட்ட கட்சி உறுப்பினர்கள் .

Rate this:
kumar - chennai,இந்தியா
21-ஏப்-201714:05:22 IST Report Abuse

kumarதிரு OPS அவர்கள் தற்பொழுது எடுக்கும் தர்மம் யுத்தம் போற்ற தக்கதே. அதிமுகவின் வரலாறை சுமார் 40 வருடங்களாக கொன்று கவனித்து வருகிறேன். 1977 முதல் 1987 வரை திரு MGR அவர்கள் இந்திரா காந்தியின் தலைமையோடும் மொரார்ஜி தேசாய் தலைமையோடும் நல்ல உறவை கொண்டிருந்தார் மத்திய அரசோடு அனாவசியமாக மோதியதே இல்லை. தமிழ்நாட்டுக்கு ஒரு குறையும் இல்லை. மேடம் ஜ்ஜ் வந்தபிறகுதாஹ்ன் தான்தோன்றி தனமாக மத்திய அரசோடு மோத ஆரம்பித்தார். ஆனால் ஒன்றும் கிழிக்க முடியவில்லை, எல்லோரிடம் பகைமைதான்.ஆதலால் திரு OPS அவர்கள் , திரு MGR அவர்கள் வழி சென்று பிஜேபி யை ஆதரித்து ஒரு நல்ல அதிமுக வகை இருக்க வேண்டும் சசிகலா என்ற நச்சு பாம்பு ஆதரிக்கும் எடப்பாடி அதிமுக தமிழ்நாட்டுக்கு வேண்டவே வேண்டாம்

Rate this:
Ganesh - chennai,இந்தியா
21-ஏப்-201715:37:12 IST Report Abuse

Ganeshமிக அழகாக சொன்னீர்கள். மத்திய அரசுடன் அகங்காரம் பார்க்காமல் நாம் வளைந்து கொடுக்க வேண்டும். OPS is good in getting things done by surrendering. We need a person like him to develop TN....

Rate this:
Rajasekar - trichy,இந்தியா
21-ஏப்-201716:01:04 IST Report Abuse

Rajasekarபிஜேபி தமிழ்நாட்டில் ADMK முதுகில் உட்கார்ந்து நன்றாக சவாரி செய்யும். அப்புறம் கட்சி வளர்ந்த பிறகு கழட்டிவிடும். ஏற்கனவே நடந்துகொண்டிருக்கிறது தெரியாதா?...

Rate this:
மேலும் 47 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
மேலும் செய்திகள்