சசி குடும்பம் நாடகம்: இ.பி.எஸ்., தந்திரம்! இரட்டை இலை சின்னத்திற்கான ஏமாற்று வேலை Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சசி குடும்பம் நாடகம்: இ.பி.எஸ்., தந்திரம்!
இரட்டை இலை சின்னத்திற்கான ஏமாற்று வேலை

இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற, இடைத் தரகர் மூலம் மேற்கொண்ட முயற்சி, தோல்வி அடைந்ததால், சசிகலா குடும்பம் கட்சியை விட்டு விலகுவது போல நடித்து, அ.தி.மு.க.,வினரையும், மக்களையும் ஏமாற்ற, இ.பி.எஸ்., தரப்பினர் போட்ட தந்திரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சசி, குடும்பம்,  நாடகம், இ.பி.எஸ்.,, தந்திரம்!,இரட்டை, இலை, சின்னம், ஏமாற்று ,வேலை

தேர்தல் அறிவிப்பு


அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என, அறிவிக்கக் கோரி, பன்னீர் அணி சார்பில், தேர்தல் கமிஷனில், மனு கொடுக்கப்பட்டது. இம்மனு மீதான விசாரணை துவங்கும் முன், ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இரு அணியினரும், இரட்டை இலை சின்னம் கேட்டதால், அது முடக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என்ற மனுவை விசாரிக்கும்படி, பன்னீர்
அணியினர் வலியுறுத்தினர்.

இந்நிலையில், இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக, தேர்தல் கமிஷனர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக, இடைத்தரகர் சுகேஷ் சந்தர் என்பவனை, டில்லி போலீசார் கைது செய்தனர்.அவன் கூறிய தகவல்படி, லஞ்சம் கொடுக்க முயன்றதாக, தினகரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கால், இரட்டை இலை சின்னம், சசிகலா அணிக்கு கிடைப்பது சிக்கலாகி உள்ளது.


அ.தி.மு.க., சட்ட விதிகளின்படி, சசிகலா பொதுச் செயலராக தேர்வு செய்யப்படவில்லை. எனவே, அவரது தேர்வும் செல்லாது என, அறிவிக்க வாய்ப் புள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்டால், பன்னீர் அணி கை ஓங்கும். பன்னீர் அணி கை ஓங்கினால், சசிகலா குடும்பம் கட்சியை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். இதை தவிர்க்க,தேர்தல் கமிஷன் முடிவை அறிவிப்பதற்கு முன், இணைப்பு நாடகத்தை அரங்கேற்ற பார்க்கின்றனர்.

சின்னம் கிடைத்த பின், தங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.,க் கள் உதவியுடன், மீண்டும் கட்சியை கைப்பற்ற லாம் என, சசிகலா குடும்பத்தினர் திட்டமிட்டுள்ள னர். எனவே, சசிகலா குடும்பத்தினர் சொல்லி தந்த படி, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் செயல்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதை உறுதிப் படுத்தும் வகையில், தினகரன் குடும்பத்தை, கட்சி யில் இருந்து நீக்குவதாக அறிவித்த னர். ஆனால், சசிகலா குறித்து, வாய் திறக்க வில்லை. அமைச்சர் கள் ஒதுங்கும்படி கூறியதால், கட்சி பணிகளில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக, தினகரன் கூறினார். ஆனால், துணை பொதுச் செயலர் பதவியை, ராஜினாமா செய்ய மறுத்து விட்டார்.
சசிகலா, தினகரன் ஆகியோர், தங்களுடைய பதவி யில் தொடரும் நிலையில், அவர்களை ஒதுக்கி விட்டோம் எனக் கூறி, பன்னீர் அணி யினரை பேச்சுக்கு அழைப்பது, ஏமாற்று வேலை என்பது உறுதியாகி உள்ளது. மேலும், முதல்வர் பழனி சாமிக்குஆதரவு அளிப்பதாகக் கூறும் எம்.எல்.ஏ.,க் கள் தொடர்ந்து, தினகரனை சந்தித்து வருகின்றனர்.

நிதி நிலைமை மோசம்


சசிகலா தம்பி திவாகரன் மகன் ஜெய் ஆனந்த், 'நாங்கள் கூறியதைத் தான், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் செய்துள்ளனர்; சற்று தாமதமாக செய்துள்ளனர்' எனக் கூறியிருப்பதும்,

Advertisement

சந்தேகத்தை அதிகப்படுத்தி உள்ளது. தற்போதைய சூழலில், அரசு செயலிழந்து உள்ளது. 'டாஸ்மாக்' மூடலால், வருவாய் கணிசமாக குறைந்துள்ளது. அதை சரிக்கட்ட, அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

இன்னொரு பக்கத்தில், அமைச்சர்கள் மீது வழக்குகள் பாய்ந்தபடி உள்ளன. வருமான வரி சோதனைக்குள்ளான, அமைச்சர் விஜய பாஸ்கர், பதவியை ராஜினாமா செய்ய மாட் டேன் என்கிறார். அவரை விலக்க, முதல்வரால் முடியவில்லை. அவருக்கு, தினகரன் ஆதரவாக உள்ளார்.

அரசின் நிதி நிலைமை மிகவும் மோச மடைந்துள்ளது. வருவாயை பெருக்க, அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. கட்சி பிரச்னைகளை தீர்ப்பதற்கே, முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு நேரம் போத வில்லை.
இந்நிலையில், கட்சி இணைப்பு நாடகத்தின் பின்னணியில், சசிகலா குடும்பம் இருப்பதை அம்பலப்படுத்தி, பழனிசாமி தந்திரத்தை, பன்னீர் அணியினர் முறியடித்துள்ளனர். இதனால், இணைப்பு சாத்தியமா என்றும் தெரியவில்லை. இதே நிலை நீடித்தால், ஆட்சி கவிழும் வாய்ப்புள்ளதாக, அ.தி.மு.க., வட்டாரத்தில் பேசப்படுகிறது.
-நமது நிருபர்-


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bairava - madurai,இந்தியா
22-ஏப்-201702:21:19 IST Report Abuse

bairava இது போன்ற துரோக நாடகத்திற்கு பரம ரசிகர்கள் தமிழக மக்கள் மட்டுமே ஆகவே இவனுங்க எல்லாம் இன்னும் தமிழர்களை ஏமாற்றி பட்ட நாமம் போட நடிக்குறானுங்க,,,மக்கள் பிரச்சினையை தீர்க்க இங்கு ஒரு அரசு இல்லை ஆட்சி இல்லை இது ஒரு வெட்கக்கேடு ஆட்சியை காப்பாற்றவும் கட்சியை காப்பாற்றவும் சின்னத்தை காப்பாத்தறவனும் போராடுருவனும் இருக்குறானுங்க

Rate this:
baskeran - london,யுனைடெட் கிங்டம்
21-ஏப்-201722:51:46 IST Report Abuse

baskeranஜெயலலிதாவே சசிகலா& குடும்பம்பத்தை முழுமையாக விலக்கிவைக்கவில்லை . காரணம் அவர்கள் பக்கபலமாகவும் அதிரடிஅரசியலுக்கு துருப்புசீட்டாகவும் பயன்பட்டார்கள் . அதற்கான லாபத்தை அனுபவித்தார்கள் இன்று கஷ்டத்தையும் அனுபவிக்கிறார்கள் . அவர்கள் அதிமுக வுக்கு தேவையா இல்லயா என்பதை அதிமுகவின் கடைசி தொண்டந்தான் முடிவு செய்ய வேண்டும் பதவி வெறிபிடித்த பண்ணீரோ அல்லது பழனியோ அல்ல

Rate this:
Suresh Ulaganathan - Bangalore,இந்தியா
21-ஏப்-201719:49:21 IST Report Abuse

Suresh Ulaganathanஏன் டாஸ்மாக் கடைகளை ஒவ்வவாறு M L A வீட்டுஅருகில் வைக்க வேண்டியது தானே. ஏன் மக்கள் வசிக்கும் இடத்தில வைக்கிறார்கள். 122 M L A க்கள் இன்னும் சசிகலாவுக்கு தான் ஆதரவு தருகிறார்கள். உதாரணமாக டாஸ்மாக் கொள்முதல் சசிகலா குடும்பம் தான் வணிகம் நடத்துகிறார்கள். உண்மையாக இவர்கள் சசிகலாவை நீக்கிவிட்டதாக என்று சொன்னால் டாஸ்மாக் கடைகளை நெடுஞ்சாலைகளில் இருந்து அகற்றிவிட்டு ஏன் மீண்டும் ஊருக்குள்ளே ஏன் துவங்கவேண்டும்.? சசிக்கு இன்னும் இவர்கள் பணத்தை கோடி கோடியாக சம்பாதித்து கொடுக்கிறார்கள் என்று தான் அர்த்தம்.

Rate this:
Suresh Ulaganathan - Bangalore,இந்தியா
21-ஏப்-201719:26:59 IST Report Abuse

Suresh Ulaganathanஜெயலலிதா யாரை எங்கே வைக்க வேண்டும் என்று நன்றாக தெரியும். அதனால் தான் அவர் பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் பதவியை தந்தார் உயிரோடு இருக்கும்போதே . முன்னர் சசிகலாவின் ஆதரவு 122 பேர் தற்போது மனம் மாறினார்கள் என்றால் நம்ப முடிய வில்லை. கூவத்தூரில் ஆட்டம் போடும்போது தெரிய வில்லையா ? தற்போது பதவி என்றவுடன் ஏதோ யேசுநாதரை போல் நடிக்கிறார்கள். இந்த 122 பேரும் மக்களால் நிராகரிப்பு படுவார்கள் ஒருவேளை நகராட்சி தேர்தல் நடந்தால். அதனால் தான் இவர்கள் ஒபிஸ் பக்கம் பேச துவங்கி உள்ளனர். இதில் சின்னம் ஒன்றும் இல்லை. விஜயபாஸ்கர் கதை என்ன ஆனது. மேலும் 3 அமைச்சர்கள் என்ன ஆனார்கள் 85 கோடி விஷயத்தில் .இவர்கள் அனைவரும் 10 தினத்திற்கு முன்பு தினகரனை அண்டி உள்ளனர். தற்போது எங்கே தாங்களும் சோதனை வந்து விடுமோ என்று பயந்து கொண்டு ஓர் அணி என்று கோஷம் போடுகிறார்கள்.

Rate this:
Pasupathi Subbian - trichi,இந்தியா
21-ஏப்-201719:22:52 IST Report Abuse

Pasupathi Subbianஜெ ஆட்சி செய்ய ஆரம்பித்த பிறகு. இந்த மறைமுக ஊடுருவல் ஆரம்பித்து விட்டது. ஜெ பெயரால் இந்த கொள்ளைக்காரர்கள் தமிழகத்தை சுருட்ட ஆரம்பித்தனர். எங்கும் நீக்கமற இவர்கள் நிறைந்து , அட்டைகள் போல ரத்தத்தை உறிஞ்ச ஆரம்பித்துவிட்டனர். ஒரு சமயம் இவர்கள் செய்த அதிகப்படி கலாட்டாவால் , ஊழல் புகாரில் சிக்கி, ஜெ சிறை செல்ல நேர்ந்தது. அப்பொழுதும் அடங்காமல் இவர்கள் சுற்றி சுற்றி வந்து இயற்க்கை வளங்களை கொள்ளையடிப்பது என்பது முதல். சாராய வியாபாரம் வரை அனைத்திலும் வியாபித்தனர். ஜெயின் மறைவு இவர்களுக்கு இருந்த ஒரே திரையையும் நீக்கி, இப்பொழுது முழு மூச்சுடன், உத்வேகத்துடன் , தமிழக அரசின் ஒரே அங்கீகரிக்கப்பட்ட கொள்ளைக்காரர்கள் என்று வர துடிக்கின்றனர். மத்தியை ஆளும் பி ஜெ பி அரசு , தனது முயற்சியை தமிழகம் பக்கம் திருப்பவே இல்லை. அதற்க்கான சூழ்நிலை இல்லை, சந்தர்ப்பமும் இல்லை என்று தெரிந்ததும், தமிழகம் என்று ஒன்று உண்டு என்பதையே மறந்துவிட்டனர். பாவம் மக்கள் இலவசங்களுக்கு, எம்ஜிஆர் அவர்கள் மேல் இருக்கும் பற்றுதலும், கருணாநிதி அவர்கள் மேல் வந்த வெறுப்பாலும், கிடைத்த ஒரு சில காசுக்காகவும் , ஜெயலலிதா அவர்கள் மட்டுமே தமிழகத்தை காப்பாற்ற வந்த தேவதை என்ற உருவாக்கத்திலும் , நடந்த சட்ட மன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக குத்தி தீர்த்துவிட்டனர். பாவம் பி ஜெ பி அது இருந்த இடம் கூட புல் விளையாமல் போயிற்று. இப்போது அதே கொள்ளையர்கள் , தங்களின் பண பலத்தை வைத்துக்கொண்டு , அரசு அதிகாரிகளை வளைத்தும், பதவியில் இருப்பவர்களை வளைத்தும் , ஆட்சியை கைப்பற்ற துடிக்கின்றனர். ஓட்டு போட்ட நமக்கோ , நாம் செய்த தவறை பற்றிய கவலையோ, அல்லது பொறுப்போ இல்லாமல், விரட்டி விட்டோமே அந்த பி ஜெ பி இந்த கூக்குறையை செய்கிறது என்று நமக்கு நாமே ஆறுதலை தேடிக்கொள்கிறோம். நமது தவறை என்றுமே நாம் ஒத்துக்கொள்வது இல்லை என்பதே உண்மை.. நினைத்து திருந்தப்போவதும் இல்லை. அன்று மொழி உணர்வில் ஒரு கொள்ளை கும்பல், அடுத்து வீர வசந்தத்தில் வேறு ஒரு கொள்ளை கும்பலை ஆட்சிக்கு கொண்டுவந்தோம், தவறு நம்முடையதே. இதில் அடுத்தவரை குறை கூற நமக்கு யோகியதை கிடையாது.

Rate this:
நரி - Chennai,இந்தியா
21-ஏப்-201721:05:53 IST Report Abuse

நரிமுடிவாக என்னதான் சொல்லுகிறீர்கள்...

Rate this:
krishna - cbe,இந்தியா
21-ஏப்-201718:52:18 IST Report Abuse

krishnaஆக மொத்தத்தில் இந்த இரு அணிகளின் குடுமி பிடி சண்டையில் பாதிக்க படுவது தமிழக மக்கள் மட்டுமே.அதிகாரத்தை யார் கைபற்றுவது என்பதில் குறியாக உள்ளனர்.மக்களின் பாடு திண்டாட்டம் தான்.இவர்கள் அனைவரும் ஜெயலலிதாவின் தயவில் பதவிக்கு வந்து இப்போது கோடிகளில் புரள்கின்றனர்.கூவத்தூரில் கும்மாளம் அடித்தனர்.

Rate this:
sudharshana - chennai,இந்தியா
21-ஏப்-201718:41:48 IST Report Abuse

sudharshanaஇந்தியா என்ன உலகமே தமிழ்நாட்டு அரசியலை பார்த்து சிரிக்கிறது... இவர்களோ யாரோ எக்கேடு கேட்டு போங்கடா,, என்று தாங்கள் செய்வதை மட்டுமே செய்கிறார்கள். ஆனால் அரசு செயல் படாமல் செக்ரட்டரியாட்டில் அவரவர் சீட்டில் உட்கார்ந்து பேசிவிட்டு அதோடு நாள் முடிந்துவிடுகிறது.

Rate this:
Kalyani S - Ranipet,இந்தியா
21-ஏப்-201713:29:59 IST Report Abuse

Kalyani Sஇதே நிலை நீடித்தால், ஆட்சி கவிழும் வாய்ப்புள்ளதாக, அ.தி.மு.க., வட்டாரத்தில் பேசப்படுகிறது............... அப்படீன்னா ஓபிஎஸ் முதல்வர் கனவு டமாலா....................

Rate this:
நரி - Chennai,இந்தியா
21-ஏப்-201716:08:17 IST Report Abuse

நரிஓ பி எஸ் முதல்வர் ஆவதைவிட ...ட்ராபிக் ராமசாமி முதல் ஆகலாம்...

Rate this:
karunchilai - vallam,இந்தியா
21-ஏப்-201712:28:58 IST Report Abuse

karunchilaiகுடும்பத்திலில் பல புற்றீசல்கள் உள்ளன. ஒன்று மாற்றி ஒன்று தலைமை ஏற்கத் தலைத்தூக்கும், உதாரணமாக, வெங்கடேஷ்,ராவணன்,திவாகரன், .... நீ... ண்டு கொண்டே... போகும்

Rate this:
Santhosh Gopal - Vellore,இந்தியா
21-ஏப்-201711:34:26 IST Report Abuse

Santhosh Gopalதேச நேசன் அவர்களே, உங்களுக்கு அரசியல் புரியவில்லை. அதாவது 122 MLA க்கள், 30 க்கும் மேற்பட்ட MP க்கள், 80 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட கட்சி குழு உறுப்பினர்கள் ஆதரவு இருந்தும் ஏன் 12 MLA க்கள் வைத்துள்ள OPS காலில் விழுகிறார்கள் என்று உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. EPS க்கு இத்தனை பேர் ஆதரவு இருந்தும் இரட்டை இலையை முடக்கினார்கள். சொல்ல போனால் EPS க்கு தான் இரட்டை இலை கொடுத்திருக்க வேண்டும் ஆனால் பாஜக வின் நிர்பந்தத்தால் தேர்தல் கமிஷன் இலையை முடக்கியது. இனிமேலும் 122 MLA க்கள், 30 MP க்கள் 80 சதவிகிதம் உறுப்பினர்கள் ஆதரவு இருந்தும் மத்திய அரசு கொடுக்கும் நிர்பந்தம் காரணமாக தேர்தல் கமிஷன் இரட்டை இலையை மீண்டும் முடக்கலாம் என்ற காரணத்தால் இரு அணிகளும் இணைந்தால் தான் மீண்டும் இரட்டை இலை கிடைக்கும் என்பதால் தான் இணைய பேச்சுவார்த்தை. மேலும் இப்போது OPS பாஜக வின் கட்டுப்பாட்டில் உள்ளார், அதனால் இரட்டை இலை சின்னம் EPS க்கு கிடைப்பது மிகவும் கடினம் தான் என்பதால் தான் இத்தனை பேச்சுவார்த்தைகளும். நீங்கள் தொலைகாட்சிகளில் விவாத மேடைகளை பாருங்கள், அதில் தான் இந்த விவரத்தை நான் தெரிந்து கொண்டேன்.

Rate this:
kc.ravindran - bangalore,இந்தியா
21-ஏப்-201712:43:13 IST Report Abuse

kc.ravindranஉங்களுடைய கணிப்பு ஒருவிதத்தில் சரி. ஆனால் பிஜேபி நிர்பந்தம் காரணத்தினால்தான் இஇ முடக்கப்பட்டது என்பது ஒத்துக்கொள்ள முடியாத ஒன்று. நான் இதை வேறு விதமாக பார்க்கிறேன். சட்ட சபை கலைக்க நேரிடுமேயானால் (அதாவது இப்போது உள்ள mla களின் எண்ணிக்கை தினகரனின் சப்போர்ட்டர்ஸ் களும் சேர்ந்தது) தினகரன் வேறு கட்சி ஆரம்பிப்பார். சின்னம்மா கண்டும் காணாமல் சில நாட்கள் ஒதுங்கியிருப்பார் அப்போது இப்போதுள்ள கும்பல் மூன்று பிரிவுகளாக ரூபம் கொள்ளும். சட்ட சபைக்கு தேர்தல் வரும் நேரத்தில் இவர்களில் யார் முந்தி கொள்கிறார்களோ அவர்களுடன் பிஜேபி பின்துணையாக நிற்கும்....

Rate this:
21-ஏப்-201715:00:25 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்சந்தோஷ் , ஜெயா டீவியை மாட்டும் பார்த்தால் இப்படித்தான் தோன்றும். 80 % தொண்டர்கள் ஆதரவு EPS க்கு உண்டு என்று சொல்வதில் இருந்தே உங்களின் அறியாமை தெரிந்துவிட்டது. EPS இடம் இருப்பது MLA கள் மட்டுமே அவர்கள் பணத்தால் கட்டுப்பட்டு இருக்கிறார்கள். கட்சியில் உள்ள தலைகள் மக்களின் மனநிலை புரிந்து OPS பக்கம் நிற்கிறார்கள். அதனால் தான் EPS கூட்டம் மண்டியிடுகிறது. இதுவும் ஒரு நாடகம் போன்று தான் தெரிகிறது ஏனென்றால் தினகரன் , சசி இன்னும் ராஜினாமா செய்ய சொல்லவில்லையே....

Rate this:
எல்.கே.மதி - Lalgudy,இந்தியா
21-ஏப்-201716:59:21 IST Report Abuse

எல்.கே.மதிஜெயா டீவியை மாட்டும் பார்த்தால் இப்படித்தான் தோன்றும் என்று வாசகர் அண்ணாமலை ஜெயராமன் குறிப்பிட்டுள்ளார். இது தவறு. "ஜெ'யைத்தான் புதைத்து விட்டாகளே. இப்போதுள்ள டி.வி. ஆயா டிவிதான் (J...AYA டிவி தானே?) அடிமை அறிவு வளர, ஆயா டிவி.பாருங்கள். உண்மை உலகச் செய்தியைப் படிக்க புரட்சித்தலைவர் நமது டாக்டர் எம்ஜியார் நாளிதழை மட்டுமே படியுங்கள்......நீங்கள் உருப்பட்டுவிடுவீர்கள்...

Rate this:
Tamil Fan - Chennai,இந்தியா
27-ஏப்-201716:30:44 IST Report Abuse

Tamil Fanசந்தோஷ், தொண்டர்கள் 99.99% மாபியா கும்பலுக்கு ஆதரவு கெடையாது.. பணத்திற்காக சிலரும் உங்களை போன்று அறையமையால் சிலர் மட்டும் அவர்களுக்கு சப்போர்ட்.... பனீர் வேண்டாம் என்றல் மாபியாவை தவிர வேறு ஒருவரை தேர்ந்தேடுங்கள் ... இப்பொடிக்கு வேறு யாரும் இல்லை.. புரிந்துகொள்ளுங்கள் ... MGR இறந்த பொழுது அம்மாவும் ராஜிவ் காந்தி கட்டுப்பாட்டில் தான் இருந்தார் என்றல் ஒப்புக்கொள்வீர்களா .... இது போன்ற சந்தர்ப்பங்களில் தன்னை முன்னிலை படுத்த மதிய அரசின் உதவி தேவை.... Congress or BJP.... இதுவும் கடந்து போகும் .. உங்களை போன்றோர்கள் சற்று அமைதையா இர்ருங்கள்.... என்னை போன்று. ........ AIADMK தொண்டன் ......

Rate this:
மேலும் 48 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement