தனுஷ்கோடியில் சூறாவளி : சுற்றுலா பயணிகளுக்கு தடை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனுஷ்கோடியில் சூறாவளி : சுற்றுலா பயணிகளுக்கு தடை

Added : ஏப் 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
தனுஷ்கோடியில் சூறாவளி : சுற்றுலா பயணிகளுக்கு தடை

ராமேஸ்வரம்: தனுஷ்கோடியில் வீசும் சூறாவளியால், கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு, ராட்சத
அலைகள் எழுவதால் கடலில் சுற்றுலாப் பயணி கள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.
45 கி.மீ., வேகத்தில்ராமேஸ்வரம் தீவில், கடந்த மூன்று நாட்களாக வீசிய தென் மேற்கு பருவக் காற்று, நேற்று தீவிரமடைந்து மணிக்கு, 45 கி.மீ., வேகத்தில் வீசியது. இதனால், தனுஷ்கோடி தெற்கு கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு முகுந்தராயர் சத்திரம், அரிச்சல்முனை கடற்கரையில், 15 அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் எழுந்தன. நாட்டு படகில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல், படகுகளை தனுஷ்கோடி வடக்கு கடற்கரையில் நிறுத்தினர். புதிய தேசிய சாலையில் கடைசி பகுதி யில் பாராங்கல் தடுப்பு சுவரில், 200 மீட்டர் துாரத்திற்கு ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக மோதின. முகுந்தராயர் சத்திரம் கடற்கரையில், ராட்சத அலையின் விபரீதம் தெரியாமல் உற்சாக குளியல் போட்டு விளையாடிய சுற்றுலாப் பயணிகளை போலீசார் வெளியேற்றி, குளிக்க தடை விதித்தனர். இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

கடலுக்கு போகாதீங்க! : வரும், 22 வரை ராமேஸ்வரம் தீவில், 42 முதல், 45 கி.மீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக் கூடும். தனுஷ்கோடி, பாம்பன் தெற்கு கடல் கொந்தளிப்புடன் ராட்சத
அலைகள் எழும். இதனால், நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என, மீன்வளத் துறையினர் அறிவுறுத்தினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை