கவர்னர் மாளிகையில் அவ்வையார் சிலை: வித்யாசாகர் ராவ் பேட்டி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கவர்னர் மாளிகையில் அவ்வையார் சிலை: வித்யாசாகர் ராவ் பேட்டி

Added : ஏப் 20, 2017 | கருத்துகள் (3)
Advertisement
கவர்னர் மாளிகையில் அவ்வையார் சிலை: வித்யாசாகர் ராவ் பேட்டி

சென்னை: ''சென்னையில் உள்ள, கவர்னர் மாளிகை வளாகத்தில், அவ்வையார் சிலை மற்றும் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும்,'' என, தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் தெரிவித்தார்.

156 ஏக்கர் பரப்பு : சென்னை, கிண்டி யில், ராஜ் பவன் என அழைக்கப்படும், கவர்னர் மாளிகை, 156 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. இங்கு கவர்னர் தங்கும் மாளிகை; ஜனாதிபதி, பிரதமர், வெளிநாட்டு பிரதி நிதிகள் வந்தால், தங்கு வதற்கான மாளிகைகள் உள்ளன. மாளிகைகளை
சுற்றி, பச்சை போர்வை போர்த்தியது போன்று காட்சி அளிக்கும், புல்வெளிகள் அமைந்துள்ளன.
வளாகத்தில், 698 புள்ளிமான்கள், 198 அரிய வகை மான்கள், சுற்றி வருகின்றன; அரிய வகை குரங்குகளும் உள்ளன. பொதுமக்கள், வெள்ளி, சனி, ஞாயிறு என, வாரத்தில் மூன்று நாட்கள், மாளிகையை பார்வையிட, கவர்னர் வித்யாசாகர் ராவ் அனுமதி அளித்துள்ளார். இதற்கு, www.tnrajbhavan.gov.in' என்ற இணையதளத்தில், 25 ரூபாய் செலுத்தி, முன்பதிவு செய்ய வேண்டும். பொதுமக்கள், பேட்டரி கார் மூலம், சுற்றிப் பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.

பார்வையிட அனுமதி : இது குறித்து, கவர்னர் வித்யாசாகர் ராவ் கூறியதாவது: ராஜ் பவனில், திருவள்ளுவர், அவ்வை யார் சிலைகள் விரைவில் நிறுவப்படும். சிலைகளில் உள்ள சுவடியில், நாம் எழுதினால், அதன் ஒலி வடிவம் நமக்கு கேட்கும். நாட்டில், முதலாளித்துவமும், பொதுவுடைமையும் வளர்ந்த அளவுக்கு, சுற்றுலாத் துறை வளரவில்லை. உலக யோகா தினத்தை முன்னிட்டு, மும்பை ராஜ்பவனில், பொதுமக்களுக்கு அனுமதி அளித்தேன். அப்போது, அவர்கள் அடைந்த மகிழ்ச்சியை உணர்ந்து, தொடர்ந்து பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளித்தேன்.
அனுமதி அளித்த மறுநாள், மும்பை கோடீஸ்வரர் ஒருவர், முன்பதிவு செய்து பார்வையிட வந்தார்; அவரும், ராஜ் பவன் ஊழியர்களும் மகிழ்ந்தனர். அதனால் தான், தமிழக ராஜ் பவனிலும், பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரு நாட்களில், 136 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இது, எல்லாருக்குமான சொத்து. இதை பார்க்க முடியுமா என்ற எண்ணத்தில் இருந்தோரின் ஏக்கம் தீரும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S Rama(samy)murthy - karaikudi,இந்தியா
21-ஏப்-201718:29:34 IST Report Abuse
S Rama(samy)murthy அவ்வையார் சிலை , திருவள்ளுவர் சிலையினை வைப்பதால் , அதனை பார்க்கும் பொழுது நாம் அவர் சொல்லப்பட வாழவேண்டும் என எண்ணம் தோன்றலாம் .சுபராம காரைக்குடி
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
21-ஏப்-201717:41:39 IST Report Abuse
Endrum Indian ஜெயலலிதாவின் சிலை எம்.ஜி.ஆர். சிலை வைப்பதிலிருந்து விடுதலை கிடைத்து விட்டது, அவ்வையாரும், திருவள்ளுவரும் வந்து விட்டதால்.
Rate this:
Share this comment
Cancel
kandhan. - chennai,இந்தியா
21-ஏப்-201713:27:37 IST Report Abuse
kandhan. முதலில் கவர்னர் அவர்களை பொதுமக்கள் குறை கேட்கும் நாட்களை சொல்லுங்கள் ,ஆட்சியாளர்கள் செய்ய தவறிய கடமைகளை வாரத்தில் மூன்று நாட்கள் மக்களை நேரிடையாக சந்தித்தால் தமிழக மக்களின் நிலை புரியும் செய்வீர்களா ???கந்தன் சென்னை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை