செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் மோடி Dinamalar
பதிவு செய்த நாள் :
செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் மோடி

புதுடில்லி: அமெரிக்காவில் இருந்து வெளியாகும், 'டைம்' இதழ் வெளியிட்டுள்ள, உலகின், 100 மிகுந்த செல்வாக்கு உள்ளவர்கள் பட்டியலில், இந்தியாவில் இருந்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும், 'பேடிஎம்' நிறுவனர் விஜய் சேகர் சர்மா இடம் பெற்று உள்ளனர்.

டைம் இதழ் ஒவ்வொரு ஆண்டும், உலகின், செல்வாக்கு மிகுந்த 100 பேரின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதற்காக, இதழின் ஆசிரியர்கள் குழு, மிகப் பெரிய பட்டியலை வெளியிடும். வாசகர்கள் அளிக்கும் ஓட்டு களின்அடிப்படையில், 100 பேர் பட்டியலை ஆசிரியர் குழு இறுதி செய்யும்.கடந்த, 2015ல் வெளியான பட்டியலில் பிரதமர் மோடியின்

பெயர் இடம்பெற்றது. அவர் குறித்த குறிப்பை அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா எழுதி யிருந்தார். கடந்த, 2016ல், ரிசர்வ் வங்கி கவர்னராக

 செல்வாக்கு, மிக்கவர்கள், பட்டியல், மோடி

இருந்தக ரகுராம் ராஜன், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, நடிகை பிரியங்கா சோப்ரா, கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி

Advertisement

சுந்தர் பிச்சை, மின்னணு வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனர்கள் பின்னி பன்சால், சச்சின் பன்சால்ஆகியோர் இடம் பெற்றனர்.

இந்த நிலையில், 2017ம் ஆண்டுக்கான, 100 செல் வாக்கு உள்ளோர் பட்டியலை, டைம் பத்திரிகை நேற்று வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் இருந்து, பிரதமர் மோடி மற்றும், மின்னணு முறையில் பணம் செலுத்தும் 'மொபைல் ஆப்'பான'பேடிஎம்' நிறுவனர் விஜய் சேகர் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அவரது மகளும், ஆலோசகருமான இவான்கா டிரம்ப், அவருடைய கணவர் ஜாரெட் குஷ்னர், சீன அதிபர் ஜி ஜின்பிங், வடகொரிய தலைவர் கிம் ஜாங்க் உன் உள்ளிட்டோர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.


Advertisement

Advertisement

மேலும் முதல் பக்க செய்திகள்:



வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
27-ஏப்-201714:34:46 IST Report Abuse

Malick Rajaஅட்டையை தூக்கி மெத்தையில் போட்டால் . நாயை குளிப்பாட்டி நடுவில் வைத்தால் ..குறங்குகையில் பூமாலை ..அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம் .. போன்ற பழமொழிகளையும் வாசகர்கள் மட்டும் நினைவு கொள்ளலாம் ..

Rate this:
Rajasekar - trichy,இந்தியா
21-ஏப்-201720:13:04 IST Report Abuse

Rajasekarமோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டம் இதுதான். இன்னும் நிறைய சொல்லுவாங்க

Rate this:
Kumar - chennai  ( Posted via: Dinamalar Android App )
21-ஏப்-201717:06:08 IST Report Abuse

KumarPls do read the comment in Time magazine about Modi...Yes..He s part of top 100 most influential person...not the positive influence.... whoever's proud about this achievement..pls do read the Time magazine message about Modi ACH to get in to that list

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
21-ஏப்-201716:46:42 IST Report Abuse

K.Sugavanamசேனா அதிபர் ஜின் பின்.வடகொரியாவின் கிம் ஜோங் உன் னுடன் அந்த பட்டியலில் மோடி ஜி..வேணுமா இது...

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
21-ஏப்-201715:38:40 IST Report Abuse

Nallavan Nallavanதனது முடிவுகளால் எத்தனை பேரின் தலையெழுத்தை மாற்றி விடுகிறார் அதற்காக அதிக அதிகாரம் படைத்தவர் என்பதால் பெயர் வந்திருக்கிறது ....

Rate this:
raja - nagercoil,இந்தியா
21-ஏப்-201714:48:21 IST Report Abuse

rajaNomination is 100. He is one of the nominee. Out of 100, he is the least popular (zero vote)

Rate this:
Padmanaban Jayakrishnan - singapore,சிங்கப்பூர்
21-ஏப்-201713:49:57 IST Report Abuse

Padmanaban Jayakrishnanநேற்றுவரை மோடி பெயர் இந்த லிஸ்ட்ல இல்லை என்பதே பிற பத்திரிக்கைகள் தந்த தகவல்.

Rate this:
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
21-ஏப்-201713:40:33 IST Report Abuse

N.Kaliraj ஒரு சாதாரண டீ கடையில் துவங்கி இன்று.......அப்பப்பா இது மிகப் பெரிய சாதனைதான்....

Rate this:
rajarajan - bangalore,இந்தியா
21-ஏப்-201713:36:12 IST Report Abuse

rajarajanமோடி பிரபலமானவர்தான் எதில் என்றால் நடிகைகளை மட்டுமே பார்க்கும், செல்பி மோகம் உள்ள, விவசாயிகளை பார்க்க மறுக்கும், ஏழைகளை கண்டால் முகத்தை மறைக்கும், முன்னுக்கு பின் முரணாக பேசும், அதிகாரிகளை வைத்து எதிர்கட்சிகளை பயமுறுத்தும் வகையில் .

Rate this:
கெளதம் - Madurai,இந்தியா
21-ஏப்-201720:59:57 IST Report Abuse

கெளதம்பொறுப்பேற்ற குறைந்த நாட்களுக்குள் கின்னஸ் புத்தகத்தில் பெயர் வருமளவிற்கு அதிகமான நாடுகளை சுற்றிபார்த்த பிரதமர் என்பதை விட்டு விட்டீர்களே...

Rate this:
victor - Chennai,இந்தியா
21-ஏப்-201712:14:34 IST Report Abuse

victorஇப்படி பேசி பேசியே பத்திரிக்கைகள் நாட்டை அழிப்பதும் தீவிரவாதமே.

Rate this:
மேலும் 22 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
மேலும் செய்திகள்