அரசு பதவிகள் ரூ.30 லட்சம் வரை ஏலம்? அமைச்சர் பெயரில் நடந்தது அம்பலம் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அரசு பதவிகள் ரூ.30 லட்சம் வரை ஏலம்?
அமைச்சர் பெயரில் நடந்தது அம்பலம்

கோவை: தமிழக பதிவுத் துறையில், சார் - பதிவாளர்களுக்கு, 'டிரான்ஸ்பர்' வழங்குவதாக கூறி, அமைச்சர் பெயரில், 10 முதல், 30 லட்சம் ரூபாய் வரை, பேரம் பேசப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முதல்வர், நடவடிக்கை எடுக்காவிடில், பேரம் பேசிய தொலைபேசி உரையாடலை வெளியிடுவோம் எனவும், எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு, பதவி,ரூ.30 லட்சம், வரை, ஏலம்?,அமைச்சர், பெயரில் நடந்தது, அம்பலம்

இடமாறுதல்


தமிழக பதிவுத் துறையின், ஒன்பது மண்டலங் களில், 50 மாவட்ட நிர்வாக பதிவாளர்கள், 50 மாவட்ட தணிக்கை பதிவாளர்கள், 572 சார் - பதிவாளர்கள் பணியாற்றுகின்றனர்.இவர்களில், மூன்றாண்டு பணி முடித்தோர், ஆண்டு தோறும், மே மாதத்தில், பொது இடமாறுதல் செய்யப்படுவது வழக்கம். இதன்படி, அடுத்த மாதத்தில், இடமாறுதல் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இந்நிலையில், தமிழக வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர், வீரமணியின் உதவியாளர் எனக் கூறி, ஒன்பது மண்டல அலுவலகங்களையும் போனில் தொடர்பு கொண்டு, ஒருவர் பேசியுள்ளார்.

அப்போது, 'உங்கள் எல்லைக்குள் பணியாற்றும், சார் - பதிவாளர்களின் பெயர், அவர்கள் பணியில் சேர்ந்த தேதி, தொலைபேசி எண் களை, மாவட்ட வாரியாக தயாரித்து, எனக்கு, இ - மெயில் மூலம் அனுப்பி வையுங்கள்' என,

கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார். இதன்படி அனைத்து சார் - பதிவாளர்களின் பட்டியலும், அந் நபரின் பார்வைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.

இதையடுத்து, இரு நாட்களுக்கு முன், சென்னை யில் இருந்து, சார் - பதிவாளர்கள் சிலரை போனில் தொடர்பு கொண்டு பேசிய அந்த நபர், 'உங்களை இடமாற்றம் செய்வதற்கான உத்தரவு தயாராகிறது; உங்களுக்கான மாற்று இடத்தைதேர்வு செய்து விட்டு, என்னை தொடர்பு கொள்ளுங்கள்' என கூறியிருந்தார். மேலும், 'விருப்பமான இடமாக இருப்பின், அதற்கு இவ்வளவு லட்சம் ரூபாய் தர வேண்டும்' என, நேரடியாகவே பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக, பதிவுத்துறை ஐ.ஜி., அலுவலகத் தில், சார் - பதிவாளர்கள் விசாரித்த போது, 'நேர்மை யான முறையில் மட்டுமே, இடமாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்படும்; லஞ்சம் கொடுத்தால், ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என, கடுமையான எச்சரிக்கையுடன் பதில் வந்துள்ளது. இதனால், என்ன செய்வது என தெரியாமல், சம்பந்தப்பட்டவர் கள் புலம்பி வருகின்றனர்.
மாவட்ட தணிக்கை பதிவாளர் ஒருவர் கூறியதாவது:

பதிவுத் துறையில் சமீபகாலமாக லஞ்சம், ஊழல் அதிகரித்து விட்டது. உதவியாளர்களுக்கு, சார் - பதிவாளர் பதவி உயர்வு அளிப்பது தொடர்பான பட்டியல், கடந்த ஆண்டே தயாரான போதிலும், அரசியல் அழுத்தம் காரணமாக, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கோடிக்கணக்கில் பேரம்


தற்போது, சார் - பதிவாளர்கள் இடமாற்றத்திலும், கோடிக்கணக்கில் பேரம் பேசப்படுகிறது. தமிழக அளவில், தற்போது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களிலுள்ள, சார் - பதிவாளர் பதவிகளுக்கு, 30 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசப்படுகிறது.கோவை, திருப்பூர், மதுரை மற்றும் சேலத்தில், சார் - பதிவாளர் பதவிகள்,

Advertisement

20 - 30 லட்சம் வரையும், பிற இடங்களில் உள்ள பதவி கள் அதிகபட்சமாக, 10 லட்சம் ரூபாய் வரையும் பேசப்படுகின்றன.
யார், அதிக தொகை கொடுக்கின்றனரோ, அவர்களுக்கே இடமாறுதல் கிடைக்கும் என்ற நிலை, சில ஆண்டுகளாகவே உள்ளது. லட்சக்கணக்கில் பணம் கொடுத்து இடத்தைப் பிடிக்கும் சார் - பதிவாளர்கள், ஓராண்டிற்குள், இரு மடங்கு சம்பாதிக்க முனைகின்றனர். இதனால், மக்களை பிழிந்து, பணம் சம்பாதிக்க பலரும் துணிகின்றனர்.

டிரான்ஸ்பருக்கு லஞ்சம் தராவிடில், 'வருமான மற்ற' ராமநாதபுரம், அரியலுார், புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களுக்கு துாக்கி அடித்து விடுவர்; இதற்கு பயந்தே, சிலர் அரசியல் அழுத் தங்களுக்கு பணிந்து, பணம் தருகின்றனர். இந் நிலையில், அமைச்சரின் உதவியாளர் என கூறிய நபர், சார் - பதிவாளர் களிடம் பேரம் பேசியுள்ளார்.
இதை போனில் பதிவு செய்த அதிகாரி ஒருவர், முதல்வர் அலுவலகத்திற்கு, ஒரு சங்கத்தின் மூலமாக புகார் அனுப்பினாார். அதில், உரிய நடவடிக்கை எடுக்காவிடில், 'பேரம் பேசிய ஆடியோ'வை வெளியிடுவதாக, அந்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
AM FAROOK - chennai,இந்தியா
23-ஏப்-201722:37:50 IST Report Abuse

AM FAROOKதமிழகத்தில் லஞ்ச லாவண்யம் தலை விரித்தாடுகிறது. வாக்களித்த மக்களோ செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். அரசு வேலைக்கு மற்றும் இடமாற்றம் செய்வதற்கு லஞ்சம் கொடுத்து சேர்வதால் தான் நாட்டின் பொருளாதாரம் மிக மோசமானதாக இருக்கிறது. முதலில் அரசியல்வாதிகள் மற்றும் IAS அதிகாரிகள் மற்றும் அரசுகடை நிலை ஊழியர்கள் வரை நேர்மையை கடைபிடிக்க கடுமையான சட்டங்கள் ஏற்றி நேர்மையற்றவர்களை உடன் நிரந்தர பணி நீக்கம் செய்யவேண்டும் அப்படி செய்தால் தான் நாடு முன்னற்றம் அடையும். யார் இதை செய்வார்கள் என மக்கள் மனவேதனையுடன் இருக்கிறார்கள்

Rate this:
bairava - madurai,இந்தியா
22-ஏப்-201701:32:47 IST Report Abuse

bairava இது போன்ற செய்திகளை படிக்கவே அசிங்கமாக இருக்கிறது இதை எப்புடிதான் ....? இப்போதுள்ள தமிழர் நாட்டில் மாபியாவும் ,,பாசிசமும் ஆட்சி செய்தால் அரசு வேலை எப்புடி திறமையானவர்களுக்கு கிடைக்கும் குண்டர்களுக்கும் ரௌடிகளுக்கும் பணக்காரர்களுக்கும் மட்டுமே கிடைக்கும் அப்போ அரசு வேலை வாய்ப்பு அமைப்பு எதற்கு அத மூடிவிட்டு எல்லாத்தையும் ஏலம் விட்டே பொழப்பு நடத்தலாமே..விளங்கும் .இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போவது உறுதி

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
21-ஏப்-201717:07:31 IST Report Abuse

Endrum Indianஒரு சாதாரண இட மாற்றத்திற்கு 30 லட்சம் கொடுக்கும் ஒருவன், அதற்கப்புறம் சும்மா இருப்பானா, இந்த 30 லட்சம் அவனை 30 லட்சம் இடங்களில் உடலில் அரித்தெடுக்க ஊழல் செய்வான் 30 கோடி வருமானம் வருவதற்காக, இப்படித்தான் நாசமாகின்றது நமது சிஸ்டெம்.

Rate this:
Lion Drsekar - Chennai ,இந்தியா
21-ஏப்-201716:59:32 IST Report Abuse

Lion Drsekarஇன்றைக்கு அரசு ஊழியர்கள் கட்சிக்காரர்களின் வாயிலாக மட்டுமே வேலைக்கு சேர்க்கப்படுகின்றன என்பது 1957 முதல் அமுல்படுத்திக்கொண்டு வரும் எழுதாத சட்டம், பணம் ஒன்றே தகுதி, பத்திரிக்கை, ஊடகங்கள் மற்றும் கொடுப்பவர்கள், கொடுத்து ஏமாந்தவர்கள் சாட்சி, வந்தே மாதரம்

Rate this:
21-ஏப்-201715:57:29 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்ஆட்சி என்று ஒன்று நடக்கும்போதே வசூல் களைகட்டும். இப்போது சொல்லவேண்டாம் எப்படியெல்லாம் புரளி கிளப்பி விட்டு வருமானம் பார்க்கலாம் என்று திருட்டு கூட்டம் திட்டம் போட்டு திருடும்

Rate this:
ravi - chennai,இந்தியா
21-ஏப்-201712:30:41 IST Report Abuse

raviஎல்லா லஞ்ச ஊழல் சொரிப்பசங்களும் ஒழியுங்கப்பா - நீங்க அடங்கமாட்டீங்க ரௌடி கூட்டங்களா

Rate this:
Roopa Malikasd - Trichy,இந்தியா
21-ஏப்-201711:23:35 IST Report Abuse

Roopa Malikasd'நேர்மை யான முறையில் மட்டுமே, இடமாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்படும் லஞ்சம் கொடுத்தால், ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' - நேர்மையை பத்தி இவனுங்க பேசனாருவோ. சமீபத்துல நான் வாங்கிய நிலத்தை பதிவு செய்ய சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றிருந்தேன் . அங்க இருக்குற பதிவாளர் (இந்த லட்சணத்துல ஏன் பள்ளியில் சக வகுப்பு மாணவன் ) லஞ்சத்தை மறைமுகமாக பெற்றுக்கொண்டதோடு அல்லாமல் , உங்கள எங்கேயோ பாத்த மாதிரி இருக்கே என்று கபட வேடமும் போட்டான். இவனுங்களுக்கு எல்லாம் மிகவும் தைரியம், யார் என்ன செய்துவிடுவார்கள் என்று.

Rate this:
ரத்தினம் - Muscat,ஓமன்
21-ஏப்-201710:58:20 IST Report Abuse

ரத்தினம்ஊழல் ஆரம்பமானது அரசியல் வாதிகளிடமிருந்து தான். திராவிட கட்சிகளின் 50 ஆண்டு சாதனை இது தான். அரசு அதிகாரிகள் அதற்கு உடந்தை. நேர்மையான அதிகாரிகள் நியமிக்கப்பட்டால் வழி பிறக்கும். ஆதியநாத் யோகி மாதிரி நல்ல அரசியல் வாதிகளை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்

Rate this:
chinnamanibalan - Thoothukudi,இந்தியா
21-ஏப்-201710:55:52 IST Report Abuse

chinnamanibalanபத்திர பதிவு துறையில் மட்டுமல்ல தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் இதே நிலைதான்.தமிழகத்தில் லஞ்ச லாவண்யம் தலை விரித்தாடுகிறது.வாக்களித்த மக்களோ செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

Rate this:
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
21-ஏப்-201710:20:46 IST Report Abuse

Agni Shivaதமிழகம் தான், திருட்டு முன்னேற்ற கழகங்களிடம் ஐம்பது ஆண்டு குத்தகைக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டு உள்ளதே. மட்டுமின்றி ஒவ்வொரு தமிழனுக்கும் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை 500 ரூபாயும், ஒரு பொட்டலம் பிரியாணியும், ஒரு குவாட்டர் பாட்டிலும் கொடுக்கிறார்களே.பின் ஏன் இந்த கொதிப்பு? ஐம்பது ஆண்டுகளாக தொடர்ந்து வரும் இந்த நடைமுறையை மாற்றுவதற்கு யார் முயன்றாலும் தமிழர்கள் ஒன்றுபட்டு அதை முறியடிப்பார்கள். இதை தடுக்க மத்திய அரசு முயன்றால் தலைநகரிலேயே நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.

Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement