எம்.எல்.ஏ.,க்கள் இடையே கருத்து வேறுபாடு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
எம்.எல்.ஏ.,க்கள் இடையே கருத்து வேறுபாடு

சென்னை: அ.தி.மு.க.,வின் இரு அணிகள் இணைவது தொடர்பாக, எம்.எல்.ஏ.,க்கள் இடையே, கருத்து வேறுபாடு நிலவுகிறது.

 எம்.எல்.ஏ.,க்கள், இடையே, கருத்து, வேறுபாடு

முதல்வர் மற்றும் மூத்த அமைச்சர்கள், பேச்சு நடத்தி, பன்னீர் அணியை இணைக்க முயற்சித்து வருகின்றனர். இதற்கு, தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், இருதரப்பு, எம்.எல்.ஏ.,க்கள் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

தவறில்லை


சசி ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் கூறியதாவது:
குணசேகரன்: அ.தி.மு.க., நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, தியாகம் செய்ய, அனை வரும் தயாராக உள்ளோம்.

இருதரப்பிலும், உட்கார்ந்து பேச வேண்டும். ஆளாளுக்கு, 'டிவி' பேட்டி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ஜெ., மறைவு குறித்து விசாரிக்க, நீதி விசாரணை வைப்பதில்தவறில்லை. தவறு யார் செய்தாலும், நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதி விசாரணையை ஏற்றுக் கொள்வோம். அ.தி.மு.க., என்பது ஒரு குடும்பம்; குடும்ப சண்டையை வெளியில் பேசக் கூடாது.

தங்க தமிழ்செல்வன்: தினகரன் செயலை பாராட்டுவதை விட்டு, தவறு கண்டுபிடிக்கின்றனர். இவர்களிடம் எப்படி நியாயம் இருக்கும்?

'கட்சி பாதிக்கப்படக் கூடாது; என்னால் பிளவுபடக் கூடாது என்பதால், ஒதுங்குகிறேன்' என, தினகரன் அறிவித்தார்; அதை அனைவரும் பாராட்டுகின் றனர். அவரை இன்னும் குற்றம் கூறிக்கொண்டி ருந்தால், இணைப்பு அவசியம் இல்லை. அவர்கள் தான்கட்சியை விட்டு விலகினர்.

இரட்டை இலை வேண்டும் என நினைத்தால், நேரில் வந்து பேசட்டும். பிரிந்து சென்றவர்கள் தான் இறங்கி வந்து பேச வேண்டும். ஜெ., மறைவில் மர்மம் இருப்பதாக, இன்னும் குற்றச்சாட்டு
கூறினால், உள்நோக்கத்தோடு செயல்படுவ தாகத் தெரிகிறது.

Advertisement


நீதி விசாரணை


என்னை பொறுத்தவரை, நீதி விசாரணை வேண்டும். ஜெ., மறைவுக்கு பின், 60 நாள் முதல்வராக இருந்தவர் பன்னீர்செல்வம். டில்லி, 'எய்ம்ஸ்' டாக்டர்கள் வந்தனர்; சிங்கப்பூர், லண்டன் டாக்டர்கள் வந்தனர். அனைவரையும் விசாரணைக்கு அழைக்க வேண்டும். எய்ம்ஸ் டாக்டர்களை அனுப்பிய, பிரதமரையும் விசாரணைக்கு அழைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sukumaran Sankaran Nair - Taiping (Perak).,மலேஷியா
22-ஏப்-201700:45:39 IST Report Abuse

Sukumaran Sankaran Nairயாருக்காக இந்த அரசாங்கம் ? மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அவர்கள்,நாட்டு மக்களை பாதுகாப்பதற்கும் ,அவர்கள் நலனபிவிருத்திக்கும்,முன்னேற்றத்திற்குமான திட்டங்களை தீட்டி சேவையாற்றுவதற்கு மக்கள் சாசனப்படி உறுதி மொழி எடுத்துக் கொண்டவர்கள். இது கட்சி வாரியான அரசியல் அமைப்பால் ஆனதால் இன்று ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும்படியான சூழ்நிலை. அரசாங்கம் அமையக் காரணமான மக்களை மறந்து விட்டு, தலைவர்கள் தங்கள் சுயநலத்திலேயே கண்ணும் கருத்துமாக இருந்து ஆட்சியை ஆட்டம் காண வைத்து,கேவலப்படுத்திக கொண்டிருக்கிறார்கள் . நல்லாட்சி முறைக்கு,இந்த பிளவு படுத்தும்,தந்திரங்களையும்,சூழச்சியுமான பரப்புரைகளை தங்கள் வாக்கு சாதுரியத்தால் ,தேர்தல் யந்திரங்களைப் பயன்படுத்தி வெற்றி பெறும் இவர்களால் இனி ஏமாறுவதில் எந்த பிரயோசனமும் கிடையாது. ஊடகங்கள்,உண்மையான ,நன்மையும,அமைதி நிலவும் படியான நம்பிக்கையூட்டும் தகவல் சாதனங்களாக மாற்றம் காணவில்லை.கூட்டுப் பொறுப்பு வகிக்கும் நல்லாட்சி முறைக்கு, சமநீதி பரிபாலனம்,முறையான எல்லோருக்குமான கட்டாயக்கல்வி முறை,ஆண் பெண் சமத்துவம்,ஏற்ற தாழ்வற்ற பொருளாதார ஊழலற்ற நிதி சீரமைப்பு, சமூக சமய நல்லிணக்கம், இவைகளுக்கு முதன்மையான அத்திவாரமாக விளங்கும் ஒற்றுமை, சுகாதாரம் போன்றவையாகும். கூட்டுத்தலைமை உருவாக கடமை ,தியாக உணர்வுடனான தொண்டர்கள் திரண்டெழ முன் வரவேண்டும்.Light of Guidance என்ற வழிகாட்டி நூலில்,நீதித்துறை,சட்ட ,நிர்வாக அமைப்பு (Judicial ,Legislative Administrative பெர்ஸ் அதிகாரம் கொண்ட உலகளாவியதான பொது நல அரசு அமையும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கின்றது.

Rate this:
Sundeli Siththar - North Carolina,யூ.எஸ்.ஏ
21-ஏப்-201721:34:53 IST Report Abuse

Sundeli Siththarசசிகலா, தினகரன், வெங்கடேஷ், விஜயபாஸ்கர், அப்போல்லோ டாக்டர்கள், எய்ம்ஸ் டாக்டர்கள், OPS என்று எல்லோரையும் விசாரணைக்கு உட்படுத்தலாம்... OPS அவர்களது மடியில் கனமில்லை என்பதால் விசாரணை கேட்கிறார்... சசிகலா தரப்பு பூச்சாண்டி காட்டுவதைப் பார்த்தால் வழியில் பயம் உள்ளதோ என்று தோன்றுகிறது... எய்ம்ஸ் அறிக்கையும், அப்போல்லோ அறிக்கையும் வெளிவந்தபோது OPS முதல்வரல்ல... அந்த இரு அறிக்கைகளிலும் முரண்பாடு உள்ளதால் விசாரணை கேட்கிறார்.. அதில் தவறு என்ன இருக்கிறது? முன்னாள் முதல்வர் அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கு தமிழக அரசு கிட்டத்தட்ட 75 நாட்களுக்கு அந்த மருத்துவமனை 80 கோடிகளுக்கு மேல் கேட்டுள்ளது... அதாவது நாள் ஒன்றிற்கு 1 கோடி ரூபாய்... எனவே.. அவருக்கு அளித்த சிகிச்சைப் பற்றி விசாரணை கேட்பதில் தவறில்லையே...

Rate this:
Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ
21-ஏப்-201718:09:11 IST Report Abuse

Maverickதேங்காய் செல்வன் எப்படி பேசுறாரு பார்தீங்கல்லா....?...இவருக்கு ஒட்டு போட்டவனை என்ன செய்ய்யலாம்...?

Rate this:
21-ஏப்-201718:05:47 IST Report Abuse

பிரபு.பல்லடம்தமிழ்நாட்டு மக்களை வழி நடத்த நல்ல தலைமை இப்பொழுது இல்லை. செயலபடாத அரசை உடனே கலைக்க வேண்டும்

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
21-ஏப்-201717:09:40 IST Report Abuse

Endrum Indianதேர்தல் கமிஷன் உடனே இந்த 122 + 12 எம்.எல்.ஏ க்களின் பதவியை ரத்து செய்யவேண்டும் அதிரடியாக.

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
21-ஏப்-201709:19:19 IST Report Abuse

K.Sugavanamஇன்னும் எத்தனை நாள் இந்த நாடகம்?

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
21-ஏப்-201709:17:05 IST Report Abuse

balakrishnanஅ.தி.மு.க மந்திரிகள், எம்.பி க்கள் எல்லாமே சுயநலவாதிகள், அந்த அம்மா இருந்த வரை வாயே திறக்க்காமல் இருந்துவிட்டு, அவங்க மண்டைய போட்டவுடனேயே ஆரம்பிச்சுட்டாங்க, எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பனும், புதிதாக தேர்தல் நடத்தணும்

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-ஏப்-201709:08:00 IST Report Abuse

Srinivasan Kannaiyaஎல்லாம் முக்கியத்துவம் போய் விடும்... தனி ஆவர்த்தனம் நல்லது என்று நினைக்கிறார்கள் போல உள்ளது...

Rate this:
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
21-ஏப்-201708:20:43 IST Report Abuse

Rajendra Bupathiதடி எடுத்தனவெல்லாம் அ தி மு க வு ல தண்டல் காரன் தான்

Rate this:
Appan - London,யுனைடெட் கிங்டம்
21-ஏப்-201708:11:35 IST Report Abuse

Appanஇந்த அதிமுக அரசியல்வாதிகள் என்ன நினைத்து கொண்டு இருக்கிறார்கள்..?. ஜெயா உடம்புக்கு சரி இல்லாமல் ஆஸ்பத்திரியில் இருந்து செத்தார்.. இதனால் கடந்த 6 மாதமாக தமிழக அரசு செயல்படவில்லை... எல்லோரும் அம்மா ..அம்மா என்று கோவில் குளம் போவது. ஆஸ்பத்திரி வாயிலில் தவம் கிடப்பது, கோஷம்போடுவது.. இது தான் அதிமுக எம்.எல் ஏ க்கள் செய்தார்கள்.. இவர்களுக்கு ஜெயா தான் முக்கியமா..?.தமிழக மக்கள் இல்லையா..?. எல்லோரும் ஜெயாவிற்கு லாயல்ட்டி காட்டுவதில் தான் முந்தி கொண்டு செயல்களை செய்தார்கள்.. யாராவது தமிழகம் என்ன நிலையில் உள்ளது என்று சிந்தித்தார்களா .?. எல்லோரும் சொந்த நலம் கருதி பதவிக்காக காவடி தூக்கினால் நாடு என்ன ஆகும் .?., இதை பார்க்க வேண்டிய கவர்னர் என்ன செய்தார்..? அவரும் அதிமுக கும்பலோடு கும்பலாக , விடுமுறைக்கு சென்னை வந்து செல்கிறார்..தமிழகத்தில் என்ன நடக்கிறது.?.அதிமுக இந்த குடும்ப சண்டையை நிறுத்தி நாட்டை நல்லா ஆள வேண்டும் ..இல்லை கவர்னர் அதிமுகவை டிஸ்மிஸ் பண்ணி தேர்தல் நடத்த வேண்டும்..எப்போதும் அம்மா சின்ன அம்மா தினகரன்..இது தான் தமிழகமா.. ?மக்களின் பொறுமைக்குஒரு எல்லை உண்டும்..

Rate this:
R Sanjay - Chennai,இந்தியா
21-ஏப்-201710:49:08 IST Report Abuse

R Sanjayயாராவது ஏதாவது வீதியில இறங்கி வந்து ஒரு கேள்வி கேட்டு போராட்டம் பண்ணா ஒரே போலீஸ் தடியடித்தான். மக்கள் என்ன செய்வார்கள்? ஜல்லிக்கட்டு போல கூட்டம் கூடவேண்டும் இதை எதிர்த்து. இதற்க்கு எல்லாம் காரணம் அதிமுக அரசை டிஸ்மிஸ் செய்யாத மத்தியஅரசு சொல்பேச்சு கேட்டு நடக்கும் கவர்னர் அவர்கள். மத்திய/மாநில அரசுக்கு இங்கு எல்லாமே ஆதாயம் தான். மக்களை யார் ஆண்டால் என்ன, விவசாயிகள் பிரச்சனை, காவிரி பிரச்சனை, தண்ணீர் பஞ்சம், லஞ்சம், ஊழல், மணல் கொள்ளை, VIP கலாச்சாரம், நியாயமான டெண்டர்கள், கருப்பு பணம் பதுக்குதல், காவல்துறை அநியாயங்கள் எல்லாம் தீர்வு கிடைத்து விடுமா என்ற ஒரு எண்ணம் மக்களுக்கு இருக்கிறது. இப்போதைக்கு தமிழகத்திற்கு உத்திரபிரதேச முதல்வர் யோகி போன்ற ஒருவரே. தற்போதைய தமிழக அரசியல்வியாதிகள் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்....

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement