சுழல் விளக்கை அகற்றினார் முதல்வர் பழனிசாமி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சுழல் விளக்கை அகற்றினார் முதல்வர் பழனிசாமி

Added : ஏப் 20, 2017 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சுழல் விளக்கை அகற்றினார் முதல்வர் பழனிசாமி

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியை பின்பற்றி, முதல்வர் பழனிசாமி, தன் காரில் இருந்த, சிவப்பு நிற சுழல் விளக்கை அகற்றினார்.

வண்ண சுழல் விளக்குகளை, முக்கிய பிரமுகர்களின் வாகனங்களில் பொருத்துவது தொடர்பாக, மத்திய மோட்டார் வாகன சட்டத்தில், மே, ௧ முதல், திருத்தங்கள் கொண்டு வரப்பட உள்ளன.
அதன் அடிப்படையில், பிரதமர் மோடி, தன் வாகனத்தில் இருந்த வண்ண சுழல் விளக்கை, நேற்று முன்தினம் அகற்றினார். அதை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அரசு வாகனங்களில், வண்ண சுழல் விளக்குகளை அகற்றுவதற்கு முன்னோடியாக, தலைமை செயலகத்தில், முதல்வர் பழனிசாமி, தன் அரசு வாகனத்தில் பொருத்தப்பட்டு இருந்த, சிவப்பு வண்ண சுழல் விளக்கை, தானே அகற்றினார்.

முதல்வர் கூறியதாவது: அமைச்சர்களும், தங்களின் கார்களில் உள்ள, சுழல் விளக்குகளை அகற்றிவிடுவர். உயரதிகாரிகள் கார்களிலும், சுழல் விளக்குகள் அகற்றப்படும். தமிழகத்தில், குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்கு, தேவையான நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. ஏரிகள், குளங்கள் துார்வாரப்படுவதற்காக, குடிமராமத்து பணிகள் துவக்கப்பட்டு உள்ளன. இதற்காக, 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இப்பணிகள் நிறைவு பெறும் போது, குடிநீர் பிரச்னை தீர்ந்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prasath Prasanna - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
21-ஏப்-201717:34:47 IST Report Abuse
Prasath Prasanna இது ஒரு செய்தின்னு நீங்க போடுறீங்க ,நாட்டுல எவ்வளவு பிரச்சனைகள் இருக்கு அத போடுங்க . அவரு எப்போதுமே காரு கதவை திறந்து தான் கருக்குள்ள போவாரு இதையும் செய்தியை போட்ட உங்க நியூஸ் பேப்பர் ரொம்ப பிரபலமாகும் - நன்றி
Rate this:
Share this comment
Cancel
MUTHU - chennai,இந்தியா
21-ஏப்-201714:53:27 IST Report Abuse
MUTHU hope they will not mention this in accomplishments during there party period for next election also tell them that car has 6 Horn which is more enough to noise pollution and harm to public, tell them to reduce.
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
21-ஏப்-201710:21:10 IST Report Abuse
Darmavan இதெல்லாம் ஒரு 'ஸ்டண்ட்' வேலை .மக்களை ஏமாற்றுவதற்காக செய்வது இவர்கள் உண்மையாகவே எளிமையானவர் என்றால் பொது சொத்தை கொள்ளையடிப்பதை நிறுத்தவேண்டும்.வோட்டு வங்கியை விட மக்களுக்கு எது நல்லதோ அதை செய்ய வேண்டும்.எல்லாமே திருடர்கள் அரசியலில் மக்கள் சிர்ஹி பார்த்து ஏமாந்து விடக்கூடாது.
Rate this:
Share this comment
Cancel
A shanmugam - VELLORE,இந்தியா
21-ஏப்-201709:23:37 IST Report Abuse
A shanmugam நாட்டுக்காக வாழம, நாடு மக்களுக்கும் தொண்டு செய்யாத சிம்ம சொப்பனத்தில் "பந்தா" காட்டும் மந்திரிமார்களை தமிழக மக்கள் ஒரு காலும் அனுமதிக்க கூடாது.
Rate this:
Share this comment
Cancel
Amirthalingam Sinniah - toronto,கனடா
21-ஏப்-201707:22:25 IST Report Abuse
Amirthalingam Sinniah சிவப்பு சூழல் விளக்கு, காமராஜர் அவர்களால் பிடுங்கி. எறியப்பட்ட்து. மோடி சொன்னதாக இப்பொழுது . செய்கிறார்கள். என்ந . திடடம் நீங்கள் கொண்டுவந்தால் இந்த திடத்தின் பின்னணியில் காமராஜரின் திட்ட்ங்கள் இருக்கும் என்பதை எல்லா . கட்சியினரும் நன்கு . புரிந்துகொள்ளவேண்டும்.
Rate this:
Share this comment
நரி - Chennai,இந்தியா
21-ஏப்-201716:04:15 IST Report Abuse
நரிகாமராஜ் அவர்களை இப்போது இருக்கும் அரசியல்வாதிகள் பின்பற்ற முடியும் என்று நினைக்கிறீர்களா...
Rate this:
Share this comment
நரி - Chennai,இந்தியா
21-ஏப்-201716:06:10 IST Report Abuse
நரிவாகனத்தில் இருக்கும் கொண்டையா முக்கியம்....ம்ம்ம்ம் ...உங்கள் மீதுள்ள அழுக்கை துடையுங்கள்...
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
21-ஏப்-201704:58:18 IST Report Abuse
Kasimani Baskaran தூர் வாருவது என்பது தண்ணீர் இருக்கும் பொழுது செய்தால் ஆவணங்கள் மூலம் செய்தால் மட்டும் போதுமானது என்ற உயர்ந்த தத்துவத்தின் அடிப்படையில் இயங்கும் இவர்களை என்னவென்று சொல்வது... தமிழனுக்கு இணை தமிழன்தான்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை