தாமதமாக வந்த அமைச்சர்கள் பேச்சை புறக்கணித்த மக்கள்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாமதமாக வந்த அமைச்சர்கள் பேச்சை புறக்கணித்த மக்கள்

Added : ஏப் 20, 2017 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
தாமதமாக வந்த அமைச்சர்கள் பேச்சை புறக்கணித்த மக்கள்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வாலிநோக்கத்தில் அரசு உப்பு நிறுவனத்தின், சுத்திகரிப்பு இயந்திர துவக்க விழாவிற்கு அமைச்சர்கள் நான்கு மணி நேரம் தாமதமாக வந்தனர். இதனால் காத்திருந்த மக்கள் அவரது பேச்சை புறக்கணித்து சென்றனர்.

வாலிநோக்கத்தில் அரசு உப்பு நிறுவனம் உள்ளது. இங்கு டாடா டிரஸ்ட் பங்களிப்புடன் 5.65 கோடி ரூபாயில் உப்பு சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா காலை 11:30 மணிக்கு நடக்கும், என தெரிவித்திருந்தனர். அமைச்சர்கள் எம்.சி.சம்பத், மணிகண்டன் பங்கேற்றனர்.

காத்திருந்த தொழிலாளர்கள் : உப்பு நிறுவனத்தில் பணியாற்ற காலை 4:30 மணிக்கு வந்த தொழிலாளர்கள் பணியை காலை 7:00 மணிக்கு முடித்துவிட்டனர். இவர்களை அமைச்சர்களின் வருகைக்காக அதிகாரிகள் காத்திருக்க வைத்தனர் வேறு வழியின்றி 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காலை உணவு சாப்பிடாமல் காத்திருந்தனர்.

அமைச்சர்கள் தாமதம் : அமைச்சர் எம்.சி. சம்பத் சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய விமானம் தொழில் நுட்ப கேளாறு காரணமாக தாமதமாகியது. தாமதமாக வந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் எம்.சி. சம்பத்தும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனும் மதியம் 1:25 மணிக்கு நிகழ்ச்சிக்கு வந்தனர். பின் அதிகாரிகள், கலெக்டர், எம்.எல்.ஏ., பேசிய பின் அமைச்சர்கள் பேசினர்.

புறக்கணிப்பு : மதியம் 2:15 மணிக்கு அமைச்சர் சம்பத் பேசினார். பசியால் தவித்த தொழிலாளர்கள், அப்பகுதி மக்கள் காலையில் இருந்தே சாப்பிடாமல் இருந்ததால், அமைச்சர் பேச்சை புறக்கணித்து எழுந்து வீட்டிற்கு சென்றனர். அதிர்ச்சியடைந்த அமைச்சர் வேறு வழியின்றி தனது பேச்சை முடித்துக் கொண்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
26-ஏப்-201723:15:04 IST Report Abuse
Sundar Good lesson.
Rate this:
Share this comment
Cancel
Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா
21-ஏப்-201720:21:54 IST Report Abuse
Mohan Sundarrajarao வி. ஐ. பீ . culture - ஒழிக்க வேண்டும் என்று நேற்றுதான் மோதி அவர்கள் சொன்னார்கள்.
Rate this:
Share this comment
Cancel
karunchilai - vallam,இந்தியா
21-ஏப்-201715:13:13 IST Report Abuse
karunchilai அடைத்து வைத்த அதிகாரிகள் ஏன் உணவுக்கும் நீருக்கும் ஏற்பாடு செய்யவில்லை? மாவட்ட ஆட்சியர் மன்னுபுக் கேட்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
21-ஏப்-201707:44:03 IST Report Abuse
Rajendra Bupathi பல்லு புடிங்கியும் இன்னும் பழைய கெத்துலேதான் எல்லாம் இருக்குதுங்க?
Rate this:
Share this comment
karunchilai - vallam,இந்தியா
21-ஏப்-201715:18:19 IST Report Abuse
karunchilaiநாத்தம் போகாது....
Rate this:
Share this comment
karunchilai - vallam,இந்தியா
21-ஏப்-201715:18:58 IST Report Abuse
karunchilaiமனிதத் தன்மை அற்ற விகிதத்தில் மாவட்ட நிர்வாகம் நடந்துகொண்டுள்ளது. கண்டிக்கத்தக்கது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை