51.56 லட்சம் பழைய ரூபாய் நோட்டுகள் காரைக்குடியில் பறிமுதல்: 6 பேர் கைது| Dinamalar

51.56 லட்சம் பழைய ரூபாய் நோட்டுகள் காரைக்குடியில் பறிமுதல்: 6 பேர் கைது

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
51.56 லட்சம் பழைய ரூபாய் நோட்டுகள் காரைக்குடியில் பறிமுதல்: 6 பேர் கைது

காரைக்குடி: காரைக்குடியில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர். 51.56 லட்சம் பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மதுரை, தெற்குவாசல் மஞ்சனக்கார வீதியை சேர்ந்தவர் உதயகுமார். இவரும், அவனியாபுரம் கார்த்திகேயனும்,44, தங்களிடம் உள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை கமிஷன் கொடுத்து மாற்ற நேற்று காரைக்குடி வந்தனர். அவர்கள் 51 லட்சத்து 56 ஆயிரத்து 500 பழைய ரூபாய் நோட்டுகளை முத்துப்பட்டணம் முதல் வீதியை சேர்ந்த ராமசாமி,52, சத்தியமூர்த்தி நகர் சுப்பிரமணியன்,51, கழனிவாசல் கிஷோர், வரதராஜனிடம், 40, கொடுத்தனர். அவர்கள் 6 பேரையும் டி.எஸ்.பி., கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த பழைய ரூபாய் நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட கிஷோர், ஏற்கனவே பணம் பரிமாற்றும் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். வரதராஜன் தனியார் கல்லுாரியில் உடற்கல்வியியல் பேராசிரியராக உள்ளார்.

ரூ.2.57 கோடி அபராதம்: போலீசார் கூறுகையில், 'மார்ச் 31க்கு பின் பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் 5 மடங்கு அபராதம் விதிக்கப்படும். அதன்படி 2.57 கோடி ரூபாய் அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது,' என்றனர்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Rangarajan - Tiruchengode,இந்தியா
21-ஏப்-201717:10:34 IST Report Abuse
Srinivasan Rangarajan திரு ஞானம் கருத்தை நான் ஆதரிக்கிறேன் ..இன்னொரு ஆபத்தும் உள்ளது...வேண்டாதவர்கள் (போலிஸிக்கு) வீட்டில் இந்த பழைய நோட்டுக்களை வைத்து கஞ்சா கேஸ் போல போடலாம்..ஒருவிதமான போலிஸ்ராஜ் நோக்கி இந்தியா செல்கிறதா?
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
21-ஏப்-201715:36:15 IST Report Abuse
Nallavan Nallavan சிவகங்கைச் சின்னப்பையன் கொடுத்து அனுப்பியிருக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
21-ஏப்-201704:42:03 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN கைது செய்ய மட்டுமே துணிவு>>>>> ஆனால் தண்டனை அளிக்க >>>>இல்லை..அதுதாங்க சட்டம். ஓர் இருட்டறை என்றார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
21-ஏப்-201702:11:29 IST Report Abuse
Gnanam பழைய செல்லாத ருபாய் நோட்டுகள் இனி குப்பைக்குத்தான் சமம். அதை கணக்கிட்டு ஏன் மக்களை குழப்புகிறீர்கள்? அது இருந்தால் என்ன, இல்லாவிட்டால்தான் என்ன? வைத்திருப்பவர்கள் அதனை பொக்கிஷமாக கருதி வைத்திருக்கட்டுமே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.