லங்கா கார்னருக்கு 'தண்ணி!':தேங்கும் சிக்கலுக்கு ரூ. ஒரு கோடி செலவிட்டு தீர்வு காண்கிறது மாநகராட்சி| Dinamalar

லங்கா கார்னருக்கு 'தண்ணி!':தேங்கும் சிக்கலுக்கு ரூ. ஒரு கோடி செலவிட்டு தீர்வு காண்கிறது மாநகராட்சி

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
லங்கா கார்னருக்கு 'தண்ணி!':தேங்கும் சிக்கலுக்கு ரூ. ஒரு கோடி  செலவிட்டு தீர்வு காண்கிறது மாநகராட்சி

கோவை:மழையில் கோவை அரசு மருத்துவமனை பகுதியில், சிக்கிக் கொள்ளும் கோவைவாசிகளால், அப்போது லங்கா கார்னரில் என்ன நடக்கும் என்பதை அத்தனை எளிதாக மறந்து விட முடியாது. கழிவுநீரும் மழை நீரும், குளமாக தேங்கும் லங்கா கார்னர் பாலத்தின் அடியில், கொட்டும் மழையில் நோயாளியுடன் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று சிக்கிய நாளையும் எவராலும் அத்தனை எளிதில் மறந்து விட முடியாது. இந்த நீண்டகால பிரச்னைக்கு தீர்வு காண முன் வந்துள்ளது மாநகராட்சி.
கோவையில் மழை பெய்யும்போது, டவுன்ஹால், கூட்ஸ் ெஷட் ரோடு, ஸ்டேட் பேங்க் ரோடு பகுதிகளில் இருந்து வழிந்தோடி வரும் தண்ணீரும், சாக்கடை கால்வாயில் இருந்து நிரம்பி வழியும் கழிவு நீரும் கலந்து, லங்கா கார்னர் பாலத்தில் இடுப்பளவுக்கு தேங்குகிறது. வாகனங்களில் செல்வோர், தண்ணீரில் சிக்குகின்றனர். இவ்வழித்தடத்தில் வாகன போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.இதற்கு முன் கனமழை பெய்தபோது, தீயணைப்புத்துறை அலுவலகம் மற்றும் அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. ஒவ்வொரு முறையும், கழிவு நீர் உறிஞ்சும் லாரி அனுப்பி, உறிஞ்சி எடுக்கப்படுகிறது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, மாநகராட்சி பொறியாளர்கள் தரப்பிலும், கட்டுமானத்துறை வல்லுனர்களிடமும் ஆலோசிக்கப்பட்டது.இறுதியாக, தண்ணீர் வழிந்தோடி வரும் பாதையில் கல்வெட்டு பாலம் கட்டி, மேற்பரப்பில், இரும்பு கிரில் பதிக்க யோசனை தெரிவிக்கப்பட்டது. கனரக வாகனங்கள் சென்றாலும் பாதிப்பு ஏற்படாத வகையில், தண்ணீர் மட்டும் வழிந்தோடிச் செல்லும் வகையில், தரத்துடன் இரும்பு கிரில் பதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
முதல்கட்டமாக, லங்கா கார்னர் அருகே, திருச்சி ரோட்டில் அரசு மருத்துவமனை எதிரே, ரோட்டை தோண்டி, வாலாங்குளத்தில் இணைக்கும் வகையில் கல்வெட்டு பாலம் கட்டப்படவுள்ளது. அடுத்த கட்டமாக, ஸ்டேட் பாங்க் ரோட்டில் தீயணைப்பு துறை அலுவலகம் எதிரே பாலம் கட்டப்படவுள்ளது. மேற்பரப்பில் கான்கிரீட் சிலாப் போடுவதற்கு பதிலாக, இரும்பு கிரில் அமைக்கப்படவுள்ளது.
இதுதவிர, கலெக்டர் அலுவலகம் முதல் லங்கா கார்னர் வரை மழை நீர் வடிகால் கட்டப்படும். இதில், ஸ்டேட் பாங்க் வரை மழை நீர் வடிகால், 6 அடி அகலத்தில் உள்ளது. அதன்பின், லங்கா கார்னர் வரை, 2 அடியாக சுருங்கி இருக்கிறது. இதை புதுப்பித்து அகலமாக கட்டுவதற்கு, 69 லட்சம் ரூபாய், கல்வெட்டு பாலம் கட்டுவதற்கு, 22 லட்சம் ரூபாயை மாநகராட்சி ஒதுக்கி உள்ளது.ரோட்டை தோண்டி கல்வெட்டு பாலம் கட்ட வேண்டுமெனில், நெடுஞ்சாலைத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். வாகன போக்குவரத்தை வேறு வழித்தடத்தில் மாற்றி விட வேண்டும். இதுதொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகள், போக்குவரத்து போலீசாருடன் விவாதித்து, அரசு மருத்துவமனை முன், கள ஆய்வு மேற்கொண்டனர். திருச்சி ரோட்டில் வரும் வாகனங்களை, அரசு கலைக்கல்லுாரி ரோட்டில் திருப்பி விடவும், டவுன்ஹால் வழியாக வரும் வாகனங்களை கூட்ஸ் ெஷட் ரோட்டில் திருப்பி விடவும் போலீசார் சம்மதித்தனர்.
அரசு கலை கல்லுாரி ரோட்டின் இருபுறமும், எப்போதும் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும். வர்த்தக நிறுவனங்களுக்கும், கோர்ட்டுக்கும் வந்து செல்வோர் ஏராளம். இவ்வழியாக அதிகப்படியான வாகனங்களை திருப்பி விட்டால், போக்குவரத்து ஸ்தம்பிக்க வாய்ப்பு இருக்கிறது.
தாமதம் வாடிக்கை
மாநகராட்சி தரப்பில் ஒரே மாதத்தில் பணியை முடித்து தருவதாக உறுதி கூறியுள்ளனர். எந்தவொரு பணியையும் குறிப்பிட்ட காலத்துக்குள் மாநகராட்சி செய்து முடிப்பதில்லை. குழியை தோண்டும்போது, குடிநீர் குழாயை உடைப்பர்; தண்ணீர் வீணாகும். அதற்கான வேலையை செய்வதற்கு ஒரு வாரமாக்குவர். பின், தொலைதொடர்புத்துறை ஒயர்களை நாசமாக்குவர். அத்துறையை சேர்ந்தவர்கள், ஒயர்களை மாற்று வழித்தடத்தில் கொண்டு செல்வர்.
இத்திட்டத்துக்காக, ஏறத்தாழ ஒரு கோடி ரூபாய் வரை செலவழிக்க இருக்கின்றனர்.அவசர அவசரமாக பணியை துவக்குவதற்கு முன், பயன் இருக்குமா என்பதை, அனைத்து துறையினரிடமும் ஆலோசித்து செய்வதே, சாலச்சிறந்தது; இல்லையெனில், மக்களின் வரிப்பணம் வீணாகி விடும். ஏனெனில், 10 ஆண்டுகளுக்கு முன், அவிநாசி ரோடு பாலத்துக்கு கீழ் தண்ணீர் தேங்குவதை தவிர்க்க, இதே முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பல லட்சம் செலவழித்தும், பயனளிக்கவில்லை என்பதை, உயரதிகாரிகள் உணர வேண்டும்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.