பிழைப்பை தேடி...: வெளிமாநிலங்களுக்கு மதுரை விவசாய தொழிலாளர்கள்: வறட்சியால் 80 சதவீதம் பேர் வேலை இழப்பு| Dinamalar

பிழைப்பை தேடி...: வெளிமாநிலங்களுக்கு மதுரை விவசாய தொழிலாளர்கள்: வறட்சியால் 80 சதவீதம் பேர் வேலை இழப்பு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
பிழைப்பை தேடி...: வெளிமாநிலங்களுக்கு மதுரை விவசாய தொழிலாளர்கள்:  வறட்சியால் 80 சதவீதம் பேர் வேலை இழப்பு

பேரையூர், மதுரை மாவட்டத்தில் வறட்சியால் விவசாய தொழிலாளர்கள் வேலை இழந்து வருவாயின்றி தவிப்பதால், வேலை தேடி வெளி மாநிலங்களுக்கு செல்கின்றனர்.கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டது. இதனால் கண்மாய், குளங்கள் கோடை காலத்திற்கு முன்பே வறண்டதால் விவசாயம் முற்றிலும் முடங்கியுள்ளது.
குறித்த பருவத்தில் சாகுபடி செய்ய வேண்டிய பயிர்களை நடவு செய்ய முடியாமல் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.கிணற்று பாசனம் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் சாகுபடி செய்த பயிர்கள் தண்ணீரின்றி கருகி கடும்
நஷ்டத்தை ஏற்படுத்தியது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் கிணற்றில் போதிய தண்ணீர் கிடைக்காமல் வறட்சி பாதித்த பகுதிகள் அதிகரித்துள்ளன.கடந்த இரு மாதங்களாக முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் உச்சத்தை அடைந்துள்ளது. இன்னும் 'கத்திரி' வெயிலில் நிலைமை மோசமாகுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. ஓராண்டாக பருவமழை பெய்யாததால் விவசாய பணிகள் எதிர்பார்த்த அளவு நடக்கவில்லை. மானாவாரி பயிர்கள் கருகி கடும் நஷ்டத்தை கொடுத்தது.முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளதால் பெரும்பாலானவர்களுக்கு இப்பணிகள் மூலமே வருவாய் கிடைத்து வருகிறது. நடவு பணியில் துவங்கி பராமரித்தல், அறுவடை வரை கூலியாட்களை கொண்டு பணிகள் நடப்பதால் பலர் வேலை வாய்ப்பு பெற்றனர். ஆண்டுதோறும் பல்வேறு பருவங்களில் மாறுபட்ட பயிர்கள் சாகுபடி செய்ததால் தொடர்ந்து வேலை கிடைத்தது. இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் கடும் வறட்சியால் விவசாயம் முடங்கி 80 சதவீதம் விவசாய தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து தவிக்கின்றனர். அவர்களின் ஜீவாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வேறு வழியின்றி ஊரக வேலை உறுதி திட்ட பணிகளை செய்யும் நிலைக்கு
தள்ளப்பட்டுள்ளனர். இப்பணிகள் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதால் வறுமைகோட்டுக்கு கீழே
உள்ளவர்களின் நிலை பரிதாபமாகி விட்டது. இதனால் வேலை தேடி வெளிமாநிலங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாய கூலி தொழிலாளர்களின் நலன் காக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.