ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் | ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம்

Added : ஏப் 21, 2017 | கருத்துகள் (60)
Advertisement
ரவிசங்கர், பேச்சுக்கு, தீர்ப்பாயம் கண்டனம்

புதுடில்லி: டில்லியில் யமுனை நதிக் கரையில், வாழும் கலை அமைப்பு நடத்திய நிகழ்ச்சி தொடர்பாக, மத்திய அரசையும், பசுமை தீர்ப்பாயத்தையும் குறைகூறும் வகையில், கருத்து தெரிவித்துள்ள அந்த அமைப்பின் தலைவர், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பேச்சுக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ரூ. 42 கோடி சேதம் : வாழும் கலை அமைப்பின் சார்பில், டில்லி, யமுனை நதிக் கரையில், கடந்த ஆண்டு, சர்வதேச கலாசார, யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியால், யமுனை நதி மாசடைந்துள்ளதாக, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட நிபுணர் குழுவும் இதை உறுதி செய்துள்ளது. நிகழ்ச்சி மூலம், 42 கோடி ரூபாய் மதிப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர் குழு கூறியுள்ளது.இந்த நிலையில், இது தொடர்பாக சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்த ரவிசங்கர், 'இந்த நிகழ்ச்சிக்கு மத்திய அரசும், தேசிய பசுமை தீர்ப்பாயமும் அனுமதி அளித்தன. 'அதன்படியே நிகழ்ச்சி நடந்தது. யமுனை நதிக் கரையில் ஏதாவது சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அதற்கு இவையே பொறுப்பு. நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்திருக்க வேண்டியதுதானே' என்று பேசியுள்ளார்.

இதை, வழக்கு தொடர்ந்துள்ளோர், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் குறிப்பிட்டுள்ளனர். 'ரவிசங்கரின் பேச்சு, வாழும் கலை அமைப்பின் இணையதளத்திலும், அவருடைய, 'பேஸ்புக்' சமூக தளத்திலும் வெளியாகிஉள்ளது. அவர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும்' என, மனுதாரர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.

அதிகாரம் கொடுத்தது யார்? : அதைத் தொடர்ந்து, நீதிபதி சுதந்திர குமார் தலைமையிலான, தேசிய பசுமை தீர்ப்பாய அமர்வு கூறியதாவது:ரவிசங்கரின் பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது. உங்களுக்கு கொஞ்சம்கூட பொறுப்பில்லையா? இவ்வாறு பேசுவதற்கு உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைக்கிறீர்களா?இவ்வாறு அமர்வு கடும் கண்டனம் தெரிவித்தது.இதற்கிடையில், வாழும் கலை அமைப்பின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

'நிபுணர் குழுவின் அறிக்கையில் எங்களுக்கு உடன்பாடில்லை. அதை நிராகரிக்க வேண்டும்' என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 'வழக்கில் தொடர்புடையோர், இது தொடர்பாக, இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும்' என்று கூறி, வழக்கின் விசாரணையை, மே, 9க்கு ஒத்திவைத்தது, தேசிய பசுமை தீர்ப்பாயம்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நாதஸ் - Colarado,யூ.எஸ்.ஏ
21-ஏப்-201714:04:07 IST Report Abuse
நாதஸ் இவன் மட்டும் இப்படி இல்லை இன்னொரு kd இருக்கிறான்
Rate this:
Share this comment
Cancel
21-ஏப்-201713:38:44 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இதுபோன்று வெளிநாட்டு கைக்கூலிகளாக NGO களின் முகத்திரை கிழியுங்கள். NGO என்ற பெயரில் இந்த நாட்டுக்கும் , இந்து மதத்திற்கும் குடைச்சல் கொடுக்கும் இவர்களை இனியும் சகித்து கொண்டிருந்தால் விளைவுகள் மோசமாக அமையும்.
Rate this:
Share this comment
Cancel
N.K - Hamburg,ஜெர்மனி
21-ஏப்-201713:32:13 IST Report Abuse
N.K நிறுவனமயம் ஆக்கப்பட்ட ஆன்மிகம் மிகவும் ஆபத்து. ரவிஷங்கரும் ஜக்கிவாசுதேவும் அதைதான் செய்துகொண்டிருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Rajanbabu Iyer - Pune,இந்தியா
21-ஏப்-201717:24:56 IST Report Abuse
Rajanbabu Iyerநிறுவன மயம் ஆக்கப் பட்ட அரசியல் இயக்கம் பெரும் நாசம் இல்லையோ ?...
Rate this:
Share this comment
N.K - Hamburg,ஜெர்மனி
21-ஏப்-201719:35:49 IST Report Abuse
N.Kநிச்சயமாக அதுவும் நாசம் தான். ஆன்மிகம், அரசியல், கல்வி மற்றும் மருத்துவம் இவற்றில் வியாபாரம் கலக்கவே கூடாது...
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
21-ஏப்-201713:06:01 IST Report Abuse
Pasupathi Subbian கடவுள் வியாபாரி. உடலால் உழைத்து பிழைக்க முடியாதவன் எல்லாம், கடவுளை விற்று பிழைக்கின்றார். எதோ இவர்கள் தெய்வ பிறப்பு போல நினைத்துக்கொண்டு, மக்கள் இவர்கள் காலில் விழுவதும், ராஜ குருவை போல, இவர்கள்ஆ ட்சியாளர்களை தங்கள் விருப்பம்போல வளைப்பதும், வேடிக்கையாக இருக்கிறது. இறைவன் அனைத்திலும் உள்ளான், கடமையை செய், கடவுளை நினை. என்பது மட்டுமே கட்டளை என திருமூலர் திருமந்திரத்தில் கூறியுள்ளார். ஆனால் இவர்களோ தாங்களே கடவுள், தாங்கள் கூறுவதே வழிபாடு, ஆடுகிறார் ஒருவர், பாடுகிறார் ஒருவர், நடிக்கிறார் ஒருவர், இதுதான் இறைவணக்கமா? இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது இறைவழி காண்பிக்க, முட்டாள் மக்கள், எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று பைத்தியம் போல அலைகின்றனர். செய்யும் பாவத்தை தீர்க்க , குறுக்குவழி, இந்த வியாபாரிகள் காண்பிப்பதாக எண்ணுகின்றனர், செத்த பிணமும் , நட்ட கல்லும் இவர்களுக்கு கடவுளாக காட்சி அளிக்கிறது. நேர்மை, உண்மை , வாய்மை புறந்தள்ளிவிட்டு, அனைத்து அசம்பவமும் நடத்தி சித்து வேலைகளினால் மக்களை வசப்படுத்தி , தங்களை மேம்படுத்திக்கொள்கின்றனர் இந்த கடவுள் வியாபாரிகள்.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
21-ஏப்-201712:54:03 IST Report Abuse
Nallavan Nallavan உண்மையான குரு என்பவர் மக்களைத் தேடித் போகமாட்டார் .... மக்கள்தான் அவரிடம் வரவேண்டியிருக்கும் - ராமகிருஷ்ண பரமஹம்சர் .....
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
21-ஏப்-201712:46:23 IST Report Abuse
Nallavan Nallavan All true saints are also known for "some" period of Sadhana towards enlightenment. Swami Vivekananda / Swami Shivananda / Ramakrishna / Yogananada and ALMOST ALL eminent saints have medidated in seclusion for few years before returning to preach in the world at their guru's orders. Ravi Shankar has never been known to undergo any substantial period of penance/meditation. Ravi Shankar was involved right from his teenage days with Mahesh Yogi into this business of money and schools when he seems to have been kicked out by him after 2-3 years. All true saints are also known as power factories, producing real saint disciples. Ramakrishna had many true eminent disciples, Krishna had many, Vivekananda had many eminent disciples, Yogananda had many, Lahiri Mahasaya had many. Guru Nanak had many but Ravi Shankar has none, NOT EVEN ONE, worthy illustrious disciple, worth mentioning by name. Only because the guru, Ravi Shankar, doesn't carry within himself the spiritual current/power which can be transmitted to any deserving disciples. Sure, it's good thing that your organization, spiritual or not, does some social work - it may be true service or may be just to show off but it still doesn't make you a true saint, just a good person or a charlatan as the case may be.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
21-ஏப்-201712:41:20 IST Report Abuse
Nallavan Nallavan ஒரு முன்னாள் ஐ.ஐ.டி. மும்பை மாணவர் இவரைப்பற்றிச் சொல்லியிருந்த கருத்தைப் படித்தேன் .... எனக்கும் அதில் உடன்பாடுண்டு .... SS Ravi Shankar just seems to be another wannabe hindu saint caught in the snares of ILLUSION/MAYA, I don't think he is a SAINT GURU or even a simple YOGI. He may or may not be a good person, may or may not be a charlatan, may or may not be a social worker, but he doesn't seem to be a hindu saint/yogi from any angle. If you are hoping to find a true GURU in Ravi Shankar, you'll be more than mistaken. If your aim is to make real spiritual progress, you will be better advised to instead pray sincerely everyday to the God within yourself to help you find a self-realized guru. Don't be deluded by the power/aura of money around the jet-setting saints. There are still many truly self-realized gurus in organizations like the Shankaracharyas, the Ramakrishna Mission/Math, the Sivananda's Divine Life Society etc. And remember, the ures repeatedly instruct to test the guru in many ways before settling to adopt the guru as your own. Now, read on, WHY I say so about Ravi Shankar. The aim is not to insult him, since God manifests in all creatures, but only to separate the truth from the non-truth. And I am not associated with either Ravi Shankar or any other religious organization.
Rate this:
Share this comment
N.K - Hamburg,ஜெர்மனி
21-ஏப்-201719:37:44 IST Report Abuse
N.Kமிகவும் சரியான வாதம். வாதம் என்று கூட சொல்லமுடியாது. இது தான் உண்மை...
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
21-ஏப்-201710:58:26 IST Report Abuse
Nallavan Nallavan இதனால் விளங்குவது என்ன ???? நிகழ்ச்சி நடத்தியவர்களுக்கும் மாசடைவது குறித்த அக்கறை இல்லை .... அத்துடன் அலட்சியமும் கூட ..... அதை அனுமதித்த அறிவிலிகளுக்கும், அனுமதி கேட்டு விண்ணப்பம் வந்த பிறகு இதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று ஆராயுமளவுக்குப் புத்தி இல்லை ..... They are blockheads
Rate this:
Share this comment
J-Gun - chennai,இந்தியா
21-ஏப்-201716:59:53 IST Report Abuse
J-Gunகூவத்தை நாறடித்த கூறுகெட்ட திராவிட கழகங்களின் செயலை எதிர்த்து ஏன் யாரும் வழக்கு தொடரவில்லை....
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
21-ஏப்-201710:50:37 IST Report Abuse
S.Baliah Seer மன்னிக்கவும் கம்ப்யூட்டர் கோளாறு .அதனால் மீண்டும் எழுதுகிறேன்.ஒரு சினிமா படத்தில் கேடி ஒருவன் கூறுவான்:திருந்து திருந்து என்கிறீர்களே ?அப்படீன்னா என்ன?ரவிசங்கர் அமைப்புக்கு பெயர் வாழும் கலை.அது யமுனா நதிக்கரையில் நடத்திய நிகழ்ச்சியால் யமுனா நதி மிகவும் மாசு பட்டிருக்கிறது.இப்போ அதே ரவுடி ரவிசங்கரை கேட்கிறான்:வாழும் கலை வாழும் கலை என்கிறீர்களே அப்படீன்னா என்ன?
Rate this:
Share this comment
Renga Naayagi - Delhi,இந்தியா
21-ஏப்-201713:23:28 IST Report Abuse
Renga Naayagiமரியாதை இல்லாம எழுதலாமா ...கூவம் ஓடும் சென்னையில் இருப்பதால் இப்படி தான் எழுத வருமா .....
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
21-ஏப்-201710:39:16 IST Report Abuse
S.Baliah Seer ஒரு சினிமா படத்தில் கேடி ஒருவன் சொல்வான்:திருந்து திருந்து என்கிறீர்களே ?அப்படீன்னா என்ன ? ரவிசங்கரின் அமைப்புக்கு பெயர் வாழும் கலை.அதன் சார்பில் நடந்த கலை நிகழ்ச்சியால்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை