50 லட்சம் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு 'ரெடி' | 50 லட்சம் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு 'ரெடி' | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

50 லட்சம் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு 'ரெடி'

Added : ஏப் 21, 2017 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
50 லட்சம், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு, 'ரெடி'

தமிழகத்தில் இதுவரை, 50 லட்சம், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் தயாராகி உள்ளன.

தமிழகத்தில், காகித ரேஷன் கார்டுக்கு பதில், ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி, ஏப்ரல், 1ல் துவங்கியது. சென்னை, ஆர்.கே.நகரில், 12ல் இடைத்தேர்தல் நடக்க இருந்ததால், தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்தது. இதனால், சென்னை தவிர்த்த மற்ற மாவட்டங்களில், ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு வந்தது. நேற்று வரை, 50 லட்சம் கார்டுகள் அச்சிடப்பட்டு, ரேஷன் கடைகளுக்கு, சப்ளை செய்யப்பட்டுள்ளன. அதில், 11 லட்சம் கார்டுகள், மக்களுக்கு வழங்கப்பட்டன.

இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஸ்மார்ட் கார்டு வாங்கிய பலர், அதில் பிழை இருப்பதாக தெரிவித்தனர். அதற்கு, 'ஆதார்' கார்டில் உள்ள பிழையே காரணம். எனவே, பிழையில்லாமல், ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட இருக்கிறது. இதனால், ரேஷன் கார்டுதாரர்கள், ஸ்மார்ட் கார்டு வாங்குவதற்கு முன், www.tnpds.gov.in என்ற இணையதளத்துக்கு சென்று, தங்கள் மொபைல் போன் எண்ணை பதிவு செய்து, பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்கள் சரியாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

தயார் நிலையில் 50 லட்சம் ஸ்மார்ட் ரேஷன் கார்டு

அனைத்து விபரமும் சரியாக இருந்தால், அந்த கார்டு அச்சாகி இருக்கும். அதன் விபரமும், அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கும். விபரங்கள் சரியில்லாமல் இருப்பவர்கள், அதை சரி செய்ததும், கார்டு அச்சுக்கு அனுப்பப்படும். எனவே, இணையதளத்துக்கு சென்று, அந்த விபரங்களை அனைவரும் சரிபார்த்து கொள்ள வேண்டும், என்றார்

சென்னையில் இன்று துவக்கம்: சென்னையில், 20.10 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. அதில், எட்டு லட்சம் கார்டுதாரர்கள் மட்டுமே, அனைத்து உறுப்பினர்களின், 'ஆதார்' விபரங்களையும் வழங்கியுள்ளனர். 12 லட்சம் கார்டுதாரர்கள், ஒன்று அல்லது இரண்டு பேரின் ஆதார் விபரங்களை வழங்கிஉள்ளனர். சென்னையில், முழு ஆதார் விபரமும் வழங்கியவர்களுக்கு, இன்று முதல், ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட இருக்கிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajathiraja - Coimbatore,இந்தியா
21-ஏப்-201713:47:11 IST Report Abuse
Rajathiraja நம் நாட்டில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு உள்ள பெரிய பிரச்சனையே முகவரி மாற்றம் செய்யும் பொழுது ஒவொரு அரசு அலுவலகங்களாக ஏறி அங்குள்ளவர்களுக்கு கப்பம் கட்டி முகவரியை மாற்றுவதற்குள் பாதி ஆயுள் முடிந்துவிடும். இந்த பிரச்சனையை போக்க மத்திய அரசு ஆதார் மூலம் பெயர் மற்றும் முகவரி மாற்றங்களை எளிமையாகவேண்டும். ஆதார் உடன் ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை, வாங்கி கணக்கு, ஓட்டுநர் உரிமம் மற்றும் அனைத்தையும் இணைத்து, திருத்தும் தேவைப்படும்பொழுது ஆதாரில் மட்டும் மாற்றினால் மற்ற அனைத்தும் ஆதாரின் உள்ள விவரங்களின் படி அனைத்தும் மாறிவிடவேண்டும். இதன்மூலம் அரசு அலுவலகங்களில் ஊழல் குறையும், நலத்திட்டங்களில் நடக்கும் தவறுகள் குறையும் சமூக விரோத செயல்களும் குறையும். ஆனால் நிரந்தர ஆதார் மையம்கள் அமைக்கப்படவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Rajathiraja - Coimbatore,இந்தியா
21-ஏப்-201713:30:15 IST Report Abuse
Rajathiraja நான் வாங்காத பொருளுக்கும் வாங்கியதாக sms வந்தது. இது ரேஷன் கடைக்காரரின் கொள்ளை. எனவே ஆப் மூலம் எனக்கு தேவை இல்லாத பொருட்களை நீக்கிவிட்டேன். அனைவரும் இதுபோல் உங்களுக்கு வாங்க விருப்பம் இல்லாத பொருட்களை ஆப் மூலம் தெரிவித்து விட்டால் ஊழலை நாமும் தடுக்கமுடியும்.
Rate this:
Share this comment
Cancel
karunchilai - vallam,இந்தியா
21-ஏப்-201712:58:09 IST Report Abuse
karunchilai தஞ்சையில் இன்னும் OTP வழங்கப்படவில்லை . முறையான அதில் DSO / கடைகளில் கிடைப்பதில்லை. கணினியிலும் உதவி கிட்டுவதில்லை.
Rate this:
Share this comment
Cancel
profaksmec - Chennai,இந்தியா
21-ஏப்-201710:36:30 IST Report Abuse
profaksmec Worst service of TN government. I uploaded my photo few days back. It could not be seen today in the website.Apart from that I tried to call the two numbers given - 1967 and also 1800-425-5901. Calls are not connected at all. Service is as bad as the TN government.
Rate this:
Share this comment
Cancel
Tamil V - Tamil Nadu,இந்தியா
21-ஏப்-201709:38:43 IST Report Abuse
Tamil V "12 லட்சம் கார்டுதாரர்கள், ஒன்று அல்லது இரண்டு பேரின் ஆதார் விபரங்களை வழங்கிஉள்ளனர்." - எங்கோ இடிக்குதே . இதை இந்த துறை உடனே கவனிக்க வேண்டும். பல பெயரில் கார்ட் வைத்திருப்பவர்ளுக்கு சரியான திட்டம் . .
Rate this:
Share this comment
karunchilai - vallam,இந்தியா
21-ஏப்-201713:05:11 IST Report Abuse
karunchilaiபலமுறை ஆதார் எண் அளித்தாலும் அதிவேற்றம் செய்யாடுவதில்லை. மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள்....
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
21-ஏப்-201708:23:25 IST Report Abuse
K.Sugavanam எல்லா தவறுகளுக்கும் மக்களையே காரணம் சொல்லுங்க..
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-ஏப்-201708:19:19 IST Report Abuse
Srinivasan Kannaiya ரேஷன் கார்டு கொடுப்பதில் கடைக்காரர்கள் அடிக்கும் கொள்ளை எவ்வளவு....
Rate this:
Share this comment
Cancel
Jey Kay - jeykay@email.com - Melbourne,ஆஸ்திரேலியா
21-ஏப்-201704:37:54 IST Report Abuse
Jey Kay - jeykay@email.com இன்று, ஆதார் எண் நாட்டில் தேசிய அடையாளமாக மாறி வருகிறது. இவ்வளவு ஆண்டுகளாக நாடெங்கும், ரேஷன் கார்டுகள் எவ்வித சான்றும் இன்றி, சரிபார்ப்பும் இன்றி வழங்கப்பட்டு வந்தது.தற்போது ஆதார் எண்ணை, ரேஷன் கார்டு உடன் இணைத்து, ஆராயப்பட்டதில், நாட்டில், 1.6 கோடி ரேஷன் கார்டுகள் போலியானவை என்பது தெரிய வந்துள்ளது. அவற்றை நீக்குவதற்கான பணி நடந்து வருகிறது.இந்த நடவடிக்கை காரணமாக, 10 ஆயிரம் கோடி ரூபாய் மானியம், ஒவ்வொரு ஆண்டும் தேவையில்லாமல் வழங்குவது தடுக்கப்பட்டுள்ளது. 2016 - 2017ல், தமிழக ரேஷன் கார்டுகள் எண்ணிக்கை, 2.04 கோடி. அவற்றில், ஆதார் எண்ணை பதிவு செய்ய வலியுறுத்தப்பட்டது அதை ஏற்று, 1.81 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் பதிவு செய்து உள்ளனர்.அவற்றை ஒப்பிட்டதில், 15 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் கண்டு அறியப்பட்டு அவை நீக்கப்பட்டு விட்டன இது, தமிழகத்திற்கு பெரும் தானிய சேமிப்பை ஏற்படுத்தியுள்ளது. போலி ரேஷன் கார்டுகள் நீக்கம் செய்யப்பட்ட காரணத்தால், ஒவ்வொரு ஆண்டும், தமிழக அரசுக்கு, 4.5 லட்சம் டன் உணவுப் பொருட்கள் மிச்சமாகும் என, கணக்கிடப்பட்டுள்ளது.இதுபோல், மத்திய அரசு வினியோகிக்கும் எல்லா திட்டங்களிலும், ஆதார் எண் பொருத்தி உண்மை தன்மையை பரிசோதிக்க வேண்டும். நேர்மையான எந்த இந்திய பிரஜையும், ஆதார் எண் அட்டை காட்ட வெட்கப்பட வேண்டாம் இது ஒவ்வொருவரின் கடமை. அரசின் திட்டத்தை சட்டத்திற்கு புறம்பாக அனுபவித்தவர்கள் தான் அரசை குறைகூறிக்கொண்டும், இது நடைமுறைக்கு ஒத்துவராது என்று சப்பைக்கட்டு கட்டிக்கொண்டிருப்பர். எதிலும் குற்றம் காண்பவராகளை பற்றி கவலை படாமல் நாட்டின் முன்னேற்றத்தில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். பின்குறிப்பு மேற்கூறிய புள்ளிவிவரம் முந்தய தினமலர் பதிவிலிருந்து சுட்டது தான்
Rate this:
Share this comment
sivaguru - chennai,இந்தியா
21-ஏப்-201710:33:56 IST Report Abuse
sivaguruசுட்டது தான்......
Rate this:
Share this comment
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
21-ஏப்-201703:12:06 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN நன்றி......எல்லாமே ஸ்மார்ட் தான்.>>>>>>நல்ல திட்டம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை