நீங்கள் வர்த்தக நிறுவனம் நடத்தவில்லை; பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., குட்டு | நீங்கள் வர்த்தக நிறுவனம் நடத்தவில்லை; பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., குட்டு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

நீங்கள் வர்த்தக நிறுவனம் நடத்தவில்லை; பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., குட்டு

Added : ஏப் 21, 2017 | கருத்துகள் (21)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
நீங்கள் வர்த்தக நிறுவனம் நடத்தவில்லை, பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., குட்டு

புதுடில்லி: ‛‛நீங்கள் பள்ளிகளை நடத்துகிறீர்கள் வர்த்தக நிறுவனங்களை அல்ல'' என பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., குட்டு வைத்துள்ளது.

இந்தியா முழுவதும் சுமார் 20 ஆயிரம் சி.பி.எஸ்.இ.,பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. சி.பி.எஸ்.இ., மற்றும் என்.சி.இ.ஆர்.டி.,யின் கீழ் இயங்கும் பள்ளிகளில் நோட்டு புத்தகங்கள், சீருடை, புத்தகப்பை, காலணிகள் உள்ளிட்டவற்றை பள்ளி வளாகத்தில் உள்ள கடைகளிலோ அல்லது வெளியில் உள்ள குறிப்பிட்ட கடைகளிலோ தான் வாங்க வேண்டும் என பள்ளி நிர்வாகத்தினர் கட்டாயப்படுத்துவதாக சி.பி.எஸ்.இ., புகார்கள் குவிந்தது.


கல்வி நிறுவனங்கள் வர்த்தக நிறுவனங்கள் அல்ல:சிபிஎஸ்இ

எச்சரிக்கை


இதையடுத்து பள்ளி நிர்வாகத்திற்கு சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை அறிக்கை ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் ‛‛சி.பி.எஸ்.இ.,யின் கீழ் இயங்கும் பள்ளிகள் சமூக முன்னேற்றத்திற்கான சேவையின் அடிப்படையிலேயே இயங்க வேண்டும் எனவும், அதை வைத்து வர்த்தகம் செய்ய கூடாது என்ற விதிமுறை உள்ளது.

ஆனால் பல பள்ளிகளில் மாணவர்களுக்கான நோட்டு புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், புத்தகப்பைகளை பள்ளி வளாகத்தில் இயங்கும் கடைகளிலோ, வெளியில் இயங்கும் குறிப்பிட்ட கடைகளிலோ வாங்க பெற்றோரை பள்ளி நிர்வாகம் வற்புறுத்தி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதை பள்ளி நிர்வாகம் உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் பள்ளிகள் சி.பி.எஸ்.இ., அங்கிகாரத்தை இழக்க நேரிடும்'' என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த பிரச்னை தொடர்பாக இதற்கு முன்னரும் பல முறை சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை விடுத்தும் பள்ளிகளில் இந்த முறை தொடர்ந்து வருவதாகவும், இந்த முறைதான் அங்கிகாரம் ரத்து செய்யப்படும் என கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
21-ஏப்-201717:53:41 IST Report Abuse
Endrum Indian அரசியல் - சேவை என்பது வியாபாரம் ஆகிவிட்டது கல்வி - சேவை என்பது வியாபாரம் ஆகி விட்டது மருத்துவம் - சேவை என்பது வியாபாரம் ஆகி விட்டது. என்.ஜி.ஓ. - சேவை என்பது வியாபாரமாகி விட்டது. மதம் - சேவை என்பது வியாபாரமாகி விட்டது. தாய் - சேவை (வாடகைத்தாய்) வியாபாரமாகி விட்டது. எல்லாமே வியாபாரமாகி விட்டால் எங்கு செல்வர் சாதாரண மக்கள். ஓ நாராயண தண்டமா பார்த்ததுண்டு இராதே சடுதியில் வந்து இதை முடிவுக்கு கொண்டு வா.
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
21-ஏப்-201716:45:27 IST Report Abuse
g.s,rajan Schools and colleges are minting money directly as well as indirectly right from the Kinder Garden,even at the Pre Kinder Garden it self..If this day light robbery continues definitely in Future E learning will definitely come and everyone could learn from the home,hence the initial investment is exorbitant. G.s.rajan, Chennai.
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
21-ஏப்-201714:58:04 IST Report Abuse
Lion Drsekar அரசு ஊழியர் நீங்கள் சர்வாதிகாரிகள் போல் இயங்கிக்கொண்டு வருகிறீர்கள், முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் மக்களின் வரிப்பணத்தில் வேலை செய்யும் சேவகர்கள், மக்கள் அடிமை இல்லை, நீங்கள் முதல் போடாமல் வேலைக்கு வந்து பல லட்சம் கோடி என்று பணம் போட்ட முதலாளிகளிடம் மரியாதையாக நடக்க கற்றுக்கொள்ளுங்கள், யாரும் யாருக்கும் அடிமை இல்லை, நீங்கள் எங்களுக்கு வேலை செய்ய நியமித்திருக்கிறோம், ஆகவே முதலில் ஆணை இடுவதை தவிர்த்து மனித நேயத்துடன் வேண்டிக்கொள்கிறோம், என்று மரியாதையுடன் கடிதம் எழுத கற்றுக்கொள்ளுங்கள், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால் உங்களுக்கு விலைபோகும், உங்களின் சர்வாதிகாரப்போக்கை நீங்கள் என்றால் இந்த அரசு நிர்வாகம் இதேபோன்று சேவை மனப்பான்மையில் செயல்படுகிறீர்களா? பேருந்து, இரயில் இவைகளில் எத்தினை பேர் பயணிக்கலாம் , ஆனால் இன்று இதில் எத்தினை பயணிகள் திணிக்கப்படுகின்றன, சட்டத்திற்குப் புறம்பாக இயங்கும் உங்களுக்கு யார் ஆணையிடுவது? இதே போன்று ஒவ்வொரு துறையும் எடுத்துக்கொண்டால் உங்கள் வண்டவாளம் வெளிவரும், பிறகு நீங்கள் அரசு வேலையே வேண்டாம் சாமி என்று கோயம்பேட்ட்டில் சென்று வேலை செய்யவேண்டி வரும், இளைஞர்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்று நினைக்கவேண்டாம், அவரால் வெளி உலகு அறியாவண்ணம் நீங்கள் பன்னிரண்டு ஆண்டுகள் படிப்பு படிப்பு என்று அவர்களின் மூளையை சலவை செய்து பொது அறிவு என்று ஒன்றே இல்லாமல் செய்து கொண்டு வருகிறீர்கள், இன்று இணையத்தளம் மற்றும் பத்திரிக்கை, ஊடகங்கள் அவர்களின் கண்களைத் திறக்க ஆரம்பிட்டுட்டு விட்டன, ஆகவே உங்கள் ஆணவ போக்கை மாற்றிக்கொள்ளுங்கள் இல்லையென்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம், மரியாதையா நடந்து கொள்ளுங்கள், மனித நேயத்துடன் நடந்து கொள்ளுங்கள், இது போன்ற ஆணை, இதெல்லாம் முடுயலில் உங்களுக்குள் போட்டு ஒரு முன்னதாரணமாக வாழ்ந்து காட்டுங்கள், தலையார் பள்ளிகளுக்கு வாக்காளத்தை வாங்கவில்லை, என்னவோ கடுமையான எச்சரிக்கையாமே ?? நீதிமன்றம் எதற்கு இருக்கிறது, வழக்கு தொடர்ந்தால் உங்கள் வேலையே போகும், நீங்கள் உண்மையிலேயே நல்லவர்களாக இருந்தால் குறைந்த விலையில் அனைத்தையும் அந்த அந்த பள்ளிகளுக்கு கொடுக்கலாமே? நல்லது செய்ய தெரியாது, ஆனால் குறை கூற தெரியும், மக்களை அவமானப்படுத்த தெரியும், ஆணவத்துடன் திரிய தெரியும், மனித நேயத்தை தொலைத்த உங்களுக்கு வருகிறது சோதனைகள், பொறுத்து இருங்கள் , நீதிமன்றத்தில் வழக்கு உங்களுக்கு ஒரு குட்டு வைக்க ஆவண செய்கிறோம், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
shankar - chennai,இந்தியா
21-ஏப்-201714:05:05 IST Report Abuse
shankar ஆமா உங்க நிர்மலா சீதாராமனே எங்கள் நாட்டில் கல்வி ஒரு வியாபாரம் ஆதலால் பன்னாட்டு நிறுவனங்கள் போல கல்வி நிறுவனங்களை தொடங்க முதலீடு செய்ய வாருங்கள் என்று அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த எச்சரிக்கை ஒரு வெத்து வேட்டு அவ்வளவுதான்.
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
21-ஏப்-201714:01:37 IST Report Abuse
Pasupathi Subbian இதைத்தான் தும்பை விட்டுவிட்டு வாலை பிடிப்பது என்று கூறுவார்கள். கல்வியை அரசு கொடுக்கவேண்டும். மற்றவற்றை தனியார் கொடுக்கவேண்டும். அத்தியாவசிய துறையில் கல்வி அவசியம் சேர்க்கப்படவேண்டும் .ஆனால் இங்கோ அரசு இலவசங்களை கொடுப்பதும், வியாபாரத்தை ஈடுபடுவதும் தங்களின் தலையாய கடமையாக கொண்டு உள்ளது. இந்த தனியார் கல்வியை சேவையாக பார்க்காமல், லாபம் ஈட்டும் தொழிலாக பார்க்கின்றனர். இதனால் கல்வி மேம்பாடு அடைவது , கடினம்.
Rate this:
Share this comment
Cancel
pollachipodiyan - pollachi,COIMBATORE.,இந்தியா
21-ஏப்-201712:00:26 IST Report Abuse
pollachipodiyan கல்வித்தரம் உயர அமைக்கப்பட்ட பள்ளிகள் ,நிர்வாகிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த வழி செய்யும் வர்த்தக நிறுவனங்கள் ஆகி விட்டன. கல்வி நிலையம் ஆரம்பிக்க அனுமதி கோருபவரும் ஒரு இளநிலை கல்வி ஆசிரியர் தகுதி தேர்வில் தேறி இருக்க வேண்டும் எனும் சட்டம் கொண்டு வர வேண்டும்.எங்கோ, ஏதோ ஒரு பணி செய்பவர் தமக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி,ஒரு தொழிச்சாலை ஆரம்பிப்பது போல் ஆரம்பித்து விடுகிறார். இவருடன் வியாபாரிகளும் கூட்டு.பள்ளித் தாளாளருக்கு தன பள்ளியில் நடைமுறையில் இருக்கும் பாடத்திட்டத்தைப் பற்றி தெரிவது அபூர்வம். தரமான ஆசிரியர்கள் இல்லை என குறை கூற முடியாது. ஏனெனில் அங்கு பணி புரியும் அவரின் உறவினர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களின் விருப்பப்படிதான் பாடங்களை நடத்த வேண்டி உள்ளது. புதிதாக ஆசிரியப்பணிக்கு வருபவரை அலைக்கழித்து இம்சிக்கிறார்கள். அஞ்சல் வழியாகப் படித்தவர்களுக்கும் திறமை உண்டு என்பதை மறுத்து -கரெசா=என இழிவாக பார்க்கிறார்கள். கல்லூரியில் படித்து வரும் ஆசிரியர்கள் "அறம்" என நினைத்துக்கொண்டு 'அரம்" என எழுதுகிறார்கள்.சொன்னால் " கரசா"என ராகம் பாடுகிறார்கள்.பின்னர் எப்படி கல்வியின் தரம் உயரும்? பிற மதத்தினர் நடத்தும் பள்ளிகளில் அவர்களின் மத வழிபாட்டுக்கே முக்கியத்துவம்.பிற மாநில மொழியினர் நடத்தும் பள்ளிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தே பாடுவது இல்லை.இதில் தமிழைப்பற்றியும்,தமிழ்நாட்டினரைப் பற்றியும் விமர்சனங்கள் சொல்லி மாளாது. தமிழ் கற்றுத்தருவதும் இல்லை. அம்மாநில நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களை பள்ளியில் வாங்கியே ஆக வேண்டும்- எல்லா பொருட்களும் இரண்டு விலை. இப்படி இருந்தால் தமிழ்நாட்டு மாணவர்கள் எப்படி தேசிய அளவில் நடக்கும் போட்டித்தேர்வில் வெற்றி பெறுவார்கள். நாம் மாற வேண்டும், கல்வி முறையை மாற்ற வேண்டும், அனைத்துப் பள்ளிகளிலும் தமிழக அரசு சார்பில் தமிழர் ஒருவரை உதவி,மற்றும் கூடுதல் கண்காணிப்பாளராக நியமிக்க வேண்டும், தரம் தாழ்ந்தால் பணி பறிக்கப்படும் எனும் பயம் இருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
suresh kumar - Salmiyah,குவைத்
21-ஏப்-201711:15:52 IST Report Abuse
suresh kumar ஹெல்மெட் போட்ட தலையில் குத்துவதால், தலைக்கு ஒன்றும் நோகாது
Rate this:
Share this comment
Cancel
rukmani -  ( Posted via: Dinamalar Android App )
21-ஏப்-201711:07:11 IST Report Abuse
rukmani ada adhu paravayillai.. thevaiyillamal extra activities nu daily after school hours retain panni pasanga & teachers 2 perayum vaati yedukaraanga. adukku thania fees vera collection nadakaradhu
Rate this:
Share this comment
Cancel
இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா
21-ஏப்-201710:46:18 IST Report Abuse
இடவை கண்ணன் சரியான அறிவுறுத்தல்....இதே மாதிரி சில பள்ளிகள் இன்னமும் பள்ளியின் பல்வேறு கட்டணங்களுக்கு காசாகவோ இல்லை காசோலையாகவோ கட்ட சொல்லுகிறார்கள்....நெட் பாங்கிங் மூலம் கட்டணங்களை கட்ட பள்ளிகள் ஏற்பாடு செய்ய அறிவுறுத்தணும்......
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
21-ஏப்-201710:24:00 IST Report Abuse
S.Baliah Seer .சி.பி.எஸ். இ பள்ளிகள் சமூக முன்னேற்றத்திற்கான சேவையின் அடிப்படையிலேயே இயங்க வேண்டும்.வர்த்தக ரீதியாக இயங்க கூடாது என்று கூறும் சி.பி.எஸ்.இ தனியார்களிடம் பள்ளிகளை ஒப்படைத்து விட்டு கூப்பாடு போடுவது நகைக்க வைக்கிறது.ஐஐடி,கேந்த்ரா வித்தியாலயம் போன்றவை அரசாங்க கட்டுப் பாட்டில் மிக திறமையாக இயங்கும்போது சி.பி.எஸ்.இ -பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைத்தது கல்வியை வியாபாரமாக்கவேஅங்கீகாரம் ரத்து என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை