தம்பிதுரை அடுத்தடுத்து சந்திப்பு | தமிழக கவர்னர் மற்றும் முதல்வருடன் தம்பிதுரை அடுத்தடுத்து சந்திப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக கவர்னர் மற்றும் முதல்வருடன் தம்பிதுரை அடுத்தடுத்து சந்திப்பு

Added : ஏப் 21, 2017 | கருத்துகள் (42)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
A.D.M.K,Governor,Thambidurai,அ.தி.மு.க,ஆளுநர்,கவர்னர்,தம்பிதுரை

லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, நேற்று, தமிழக கவர்னர் மற்றும் முதல்வரை, அடுத்தடுத்து சந்தித்து பேசியது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


அடுத்தடுத்து சந்திப்பு:


தமிழகத்தில், ஆளுங்கட்சியான, அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்டுள்ளது; அதை ஒன்றிணைக்க, முயற்சிகள் நடந்து வருகின்றன. இம்முயற்சி பலன் அளிக்குமா; இரு அணிகளும் இணைந்தால், முதல்வர் பதவியில் பழனிசாமி தொடர்வாரா அல்லது முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், புதிய முதல்வராக பொறுப்பேற்பாரா என, பட்டிமன்றம் நடந்து வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்று காலை, 11:00 மணிக்கு, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, ராஜ்பவன் சென்று, கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார்.


பரபரப்பு:


இது குறித்து, அவர் கூறுகையில், ''நான் மரியாதை நிமித்தமாக கவர்னரை சந்தித்தேன்; அவர் என் நண்பர். இதில், அரசியல் முக்கியத்துவம் இல்லை,'' என்றார். பின், தம்பிதுரை, அங்கிருந்து தலைமை செயலகம் சென்றார்; முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசினார். தமிழக அரசியல் நிலவரம் குறித்து, கவர்னரிடம் பேசிவிட்டு, அவர் கூறிய தகவலை, முதல்வரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. கவர்னர் மற்றும் முதல்வரை, அவர் அடுத்தடுத்து சந்தித்தது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-நமது நிருபர்-

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
21-ஏப்-201717:29:56 IST Report Abuse
Endrum Indian அடிக்கடி சந்திக்கின்றார் என்றால் ஆட்சி முடிவுக்கு வந்து விட்டதா? அதை கடைசி சிலிண்டர் ஆக்சிஜென் குடுத்து உயிருடன் வைத்திருக்க எடுக்கும் முயற்சிகளா இவை????? இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Rangarajan - Tiruchengode,இந்தியா
21-ஏப்-201717:18:37 IST Report Abuse
Srinivasan Rangarajan இந்த ஆட்டமெல்லாம் ஜனாதிபதி தேர்தல் முடியும் வரைதான் ..அப்புறம் எல்லாரும் துண்டை காணோம் துணியை காணோம் என ஓடப்போகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
Sundar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-ஏப்-201714:39:28 IST Report Abuse
Sundar He tries to project himself as a important VIP wherein no body support him. He is dummy piece.
Rate this:
Share this comment
Cancel
kumar - chennai,இந்தியா
21-ஏப்-201714:14:10 IST Report Abuse
kumar இவருடைய பதவி பெயர் துணை சபாநாயகர்,மத்திய அரசாங்கம். வேலை என்னவோ தமிழ்நாட்டில் அரசியல் பேசுபவர்
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
21-ஏப்-201712:47:46 IST Report Abuse
Pasupathi Subbian என்னன்னவோ கணக்கு போடுகிறார், யார் யாரையோ கூப்பிட்டு பேசுகிறார், எவ்வளவோ தகுடுத்திதம், பொய் , புரட்டு , ஆள் மாறாட்டம் என்று தாயிடம் குடித்த பால் வெளிவரும் அளவுக்கு முயற்சி செய்கிறார். ஆனால் முடிவோ எதிர்பாராத மாதிரி உள்ளது .
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
21-ஏப்-201711:59:12 IST Report Abuse
Nallavan Nallavan \\\\ அவர் என் நண்பர். இதில், அரசியல் முக்கியத்துவம் இல்லை,'' என்றார்.//// இது கவர்னருக்குத் தெரியுமா ????
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
21-ஏப்-201711:58:48 IST Report Abuse
Nallavan Nallavan \\\\ அவர் என் நண்பர். இதில், அரசியல் முக்கியத்துவம் இல்லை,'' என்றார். //// எப்படி ???? "மோதி எனது நண்பர்" -ன்னு அவரு பிரதமர் பதவி வேட்பாளர் ஆன பொறவு கலைஞரு சொன்னாரே, அதே மாதிரியா ????
Rate this:
Share this comment
Cancel
vikky - Singapore,சிங்கப்பூர்
21-ஏப்-201709:56:38 IST Report Abuse
vikky தொம்பிதுரை மைண்ட் வாய்ஸ் , " எல்லாரும் பாத்துக்கோங்க நானும் ரவுடி தான் "
Rate this:
Share this comment
Cancel
Thangaraj S - Kanchipuram,இந்தியா
21-ஏப்-201708:50:30 IST Report Abuse
Thangaraj S தனது தொகுதி பிரச்சனை சம்பந்தமாக பேசியிருக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
21-ஏப்-201708:27:11 IST Report Abuse
Veeraiyah (இந்திய பிரதமராக ஆசை) தான் வகிக்கும் பதவிக்கு மதிப்பு கொடுத்து அரசியல் செய்யாமல் இருக்க முடியாதா, படித்தவரா இவர் இல்லை கலர் காகிதம் பெற்றவரா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை