மின் கேபிள் புதைக்கும் பணி விரைவில் துவக்கம்: முதல் கட்டமாக 7 பீடர்களில் நடைபெறும்| Dinamalar

மின் கேபிள் புதைக்கும் பணி விரைவில் துவக்கம்: முதல் கட்டமாக 7 பீடர்களில் நடைபெறும்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
மின் கேபிள், புதைப்பு, பணி, துவக்கம்

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் மின்சார கேபிள் புதைப்பதற்காக பூர்வாங்கப் பணிகள் துவங்கியுள்ளன. கடந்த 2011ம் ஆண்டு வீசிய 'தானே' புயலினால் கடலுார் மாவட்டம் சின்னாபின்னமானது.
மாவட்டம் முழுவதும் 25 ஆயிரம் மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள், ெஹச்.டி., துணை மின்நிலைய உயரழுத்த கோபுரங்கள் சாய்ந்து மின்தடை ஏற்பட்டது. மாவட்டத் தலைநகரில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கே கூட மின்சாரம் இல்லாதால் அரசுக்கு தகவல் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது. தினமும் 5000 மின் ஊழியர்கள் உழைப்பினால் 2 மாதத்திற்கு பின்னர் தான் கடலுார் மாவட்டத்தில் மின்சாரம் கிடைத்தது.
இந்த அவலம் மீண்டும் ஏற்படக் கூடாது என்பதாலும், இயற்கை சீற்றங்கள் அடிக்கடி பாதிக்கூடிய கடலுார், நாகப்பட்டினத்தில் பூமிக்கடியில் மின்சார கேபிள் புதைப்பதற்காக உலக வங்கி உதவியுடன் 800 ரூபாய் மதிப்பில் திட்டமிடப்பட்டது.
இதில் கடலுார் நகரம், நாகப்பட்டினத்தில் வேளாங்கண்ணி பகுதியில் மின்சார கேபிள்கள் புதைக்க திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது. இப்பணிகள் விரைந்து முடிக்க தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது.
பூமிக்கடியில் 4 அடி ஆழத்தில் புதைத்து அதற்குமேல் பாதுகாப்புக்காக செங்கல் தடுப்பு கட்டப்பட வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலையில் நீண்ட துாரம் இதை தடையின்றி செய்ய முடியுமா என்பதில் சர்ச்சை எழுந்துள்ளது.
இதனால், கடந்த முறை டெண்டர் கோரியும் எடுக்க ஆளில்லாமல் போனது. தற்போது 2வது கட்டமாக டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதில் கடலுார் மாவட்டத்தில் முதல் கட்டமாக 7 பீடர்களுக்கு பதிலாக கேபிள் புதைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. சுத்துக்குளம், சிப்காட், ஆல்பேட்டை உட்பட 7 பீடர்களில் இந்த பணி நடைபெற உள்ளது.
இப்பணிகளை கண்காணிக்க மின்வாரிய உதவி இயக்குனர் மற்றும் உதவி பொறியாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். விரைவில் கேபிள் புதைக்கும் பணி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.